புதன், 9 ஜூன், 2010

போங்கடா நீங்களும்..உங்க அரசியலும்.....த்த்த்தூ

முட்டாள்கள் என்றுமே அறிவாளிகளை தங்கள் தலைமையாக தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாது என்று சொன்ன அறிஞரின் கூற்று இன்றும் தமிழகத்திற்கு பொருந்தி வருகிறது, என்பதை எண்ணி பார்க்கும் போது நம்மால் பெருமை கொள்ளாமல் இருக்க முடியவில்லை...பின்,என்ன? தமிழகத்து பெருமக்களை பற்றி அந்த அறிஞர் அன்றே ஆராய்ச்சி செய்திருக்கிறாரென்றால். நமக்கெல்லாம் பெருமைதானே.........?


சமீபத்திய குமுதம் ரிப்போர்ட்டரில் குஷ்பூவின் அரசியல் வருகையை குறித்து, இன்னொரு நடிகை விந்தியாவிடம் கருத்து கேட்டு இரண்டு பக்கத்துக்கு செய்தி வெளியிட்டுள்ளது, இந்த அக்கறையுள்ள ஊடகம். இதே ஊடகம்தான் கதவை திறக்கச்சொல்லி ரஞ்சிதாவை உள்ளே அனுப்பிய ஊடகம். தமிழக மக்கள் மீது அக்கறை கொண்ட ஊடகம் போல பாசாங்கு காட்டும் இந்த ஊடகம், தமிழகத்தின் தலைவிதியை இந்த நடிகைகளை விட்டால் வேறு யாரும் தீர்மானிக்க முடியாததை போல இவர்களுக்கு கருத்து கேட்கிறது.அந்த பேட்டியில் தங்கத்தாரகை, சமூக நீதி போராளி விந்தியா கருத்துக்களை பார்க்கணுமே, ஒவ்வொன்றும் முத்தங்கள்...மன்னிக்கனும் முத்துக்கள் அதில் குறிப்பிடத்தக்கது...
“திமுக ஆட்சியில்தான் ஆண்களை விட பெண்கள் அதிகம் சாதிப்பதாக குஷ்பு சொல்கிறார். அந்த சாதனை பட்டியலை அவர் சொல்லட்டும் பார்க்கலாம். குறைந்தபட்சம் 500 பக்கம் அவர் சாதனை பட்டியல் வாசித்தால் நாங்கள் அம்மாவின் சாதனையை 1500 பக்கங்களுக்கு வாசிப்போம்”
நாம் இவரது கூற்றை மறுப்பதற்காக இந்த கட்டுரையை இங்கே பதிக்கவில்லை...
கண்டிப்பாக அந்தம்மா பெண்களுக்காக எப்படி போராடியதுன்னு.......
சசிகலாங்கிற பொண்ணை கேட்டா கண்டிப்பா 1501 பக்கத்துக்கு எழுதி கொடுப்பாங்க........
ஆனால், எங்கள் தானை தலைவரை கேள்வி கேட்கும் தகுதி கண்டிப்பாக இந்த விந்தியாவுக்கு கிடையாது.......எங்கள் தலைவனை கேள்வி கேட்கும் ஒரே உரிமை, தகுதி கொண்ட பெண்ணுரிமை போராளி ஜெயலலிதா, தன்னை பாப்பாத்தி என்று சட்டசபையில் அறிவித்த கர்ஜனை செய்த பெண்வேங்கை ஜெயலாலிதாவின் உயிர் பெண்தோழி சசிகலாவுக்குதானே உண்டு...
அந்த கோபத்தில்தான் இந்த பதிவு...
ஒருவேளை சசிகலா தம் தலைவியின் பெருமையை வெளியிட்டால்...சிறப்பு தகவல் உரிமை சட்டத்தின் கீழாவது மனு ஒன்றை தாக்கல் செய்தாவது
எங்கள் தலைவர் பெண்களுக்கு போராடியதை..ராஜாத்தியம்மாள் என்ற பெண்ணிடமோ, கனிமொழி என்ற பெண்ணிடமோ தொகுத்து தமிழ்கூறும் அறிவுதளத்திற்கு அறிவுக்கண்களுக்கு விருந்தாக்குவோம்.......அதற்காக குஷ்புவிடம் புது பயனாளியை சிரமத்திற்கு உள்ளாக்க மாட்டோம் என்று உறுதியளிக்கிறோம்..
நம்ம தலைவரோட பெருமையை பற்றி பிரச்சாரம் செய்த்தில் ஒரு முக்கியமான செய்தி மறந்து போச்சு...அமைதிப்படையில் மணிவண்ணனுக்கு ஜட்டி பிரச்சினையில் மறதி வருமே அந்த மாதிரி மறதி என்பதை நினைவில் கொள்க.........
ஆனால், மண்டையை சொறி சொறின்னு சொறிஞ்சதுல இப்ப நினைவு வந்துடுச்சுப்பா...
அது என்னன்னா,
இந்த வித்யா என்ற பெண்ணுரிமை போராளியையும் அவருக்கு நிகராக அதிமுகவின் எதிர்க்கட்சியில் போராடும் வேங்கை குஷ்புவையும் மறந்தே போய்விட்டோம்...
இவர்கள் தமிழகத்துக்கு சமூக அக்கறையோடு செய்த சேவையையும் மறந்தே போய்விட்டோம்...
அதிலும் குஷ்பு செய்த சேவைக்கு..கோயில் கட்டின..(வாயில கெட்ட வார்த்தைதான் வருது) அறிவாளி தமிழர்களுக்கு மீண்டும் நினைவுப்படுத்த கீழ்க்கண்ட இணைப்புகள்..
அவருக்கு நிகராக திறந்த உள்ளதோடு சேவை செய்த விந்தியாவின் இணைப்பும் கூடவே தந்திருக்கிறோம்....கண்டுகளித்து தங்களின் அறிவை மற்றவர்களும் பெருக்கி கொள்ளவும்
http://www.youtube.com/watch?v=jzHldvxIz3U
http://www.youtube.com/watch?v=3WCIwgDbuQ0&feature=related
இதை பார்த்த நமக்கு தோணுறதெல்லாம்.....கவுண்டமணி ஒரு படத்தில்..
“சொறி புடிச்ச மொன்ன நாயி, அங்க ஓரத்துலபோய் உக்காந்து பிச்சை எடுக்க போகுது ரவுச பாரு” இந்த தங்க தாரைகளை பார்த்து கேட்க தோணாது...
ஏன்னா, நாமதான் அறிவாளிகளாச்சே..
நடிகை ஏன் அரசியலுக்கு வரக்கூடாது..தமிழர்கள் மட்டும்தான் அரசியலுக்கு வரணுமா? என்றெல்லாம் கண்டிப்பாக கேள்வி கேட்டு..மூளைக்கு அறிவுரீதியான குடைசல் கொடுப்போம்...
வாழ்க ஆபாசம்..வளர்க விபச்சாரம்..ஓங்குக பொறுக்கித்தனம்..பெருகுக ஊழல்..வழங்குக இலவசம்னு ஒரு கொள்கை முழக்கத்தோடு..
நாம் அடுத்த கட்டத்துக்கு அரசியலில் பெரும் புரட்சியை உருவாக்குவோம்
தமிழ்நாட்டில் தப்பித்தவறி நியாயமாக கேள்வி கேட்கிறவர்களையும், முட்டாளென்று தூற்றி......
தமிழகத்தை விரைவில் முட்டாள்களின் கூடாரமாக்குவோம்..போங்கடா நீங்களும்..உங்க அரசியலும்.....த்த்த்தூ