ஞாயிறு, 17 அக்டோபர், 2010

நீங்கள் மதச்சார்பற்றவரா?

நீங்கள் மதச்சார்பற்றவரா? கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதிலளியுங்கள் என்று பல ஆண்டுகளாக ஒரு மின்னஞ்சல் சுற்றுக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த மின்னஞ்சலில் பல கேள்விகள் வருகின்றன….

====================================================================

உலகம் முழுக்க 52 இஸ்லாமிய நாடுகள் இருப்பதாகவும், எங்காவது இந்துக்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறதா? என்றும்..எங்காவது ஹஜ் பயணத்துக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறதா? என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது….

நமது கேள்வி:

எங்கள் கிராமத்தில் பெரும்பான்மை மக்கள் கும்பிடும் சுடலை, பட்டறையன், ஐயனார்...போன்ற சிறுதெய்வங்களின் நம்பிக்கைக்கு மதிப்பு வழங்கப்படாதுவிடுமுறை கிருட்டிண ஜெயந்திக்கு வழங்கப்படுகிறதே

நாங்கள் ஏன் இஸ்லாமியரை கேள்வி கேட்க வேண்டும்..

இத்தனை ஆண்டுகாலமாக வழிபாட்டுரிமையை மறுத்து, பொதுத்தெருவில் நடப்பதை மறுத்த பார்ப்பனீயம் இன்று சீர்திருத்த இயக்கங்களின் தாக்கத்தால்வழிப்பாட்டுரிமையை மறுக்க முடியாமல், தீண்டாமை வெளிப்படையாக கடைபிடிக்க முடியாமல், ரகசியமாக கடைபிடிக்கிறது

இங்கிருக்கிற இஸ்லாமியன் எவனும் பாபரின் பேரனோ, ஷாஜகான் தம்பியோ கிடையாது, இஸ்லாமியர்களில் பெரும்பான்மையினர்….இம்மண்ணின் மைந்தர்கள்….

அவர்களுக்கு காலம், காலமாக மறுக்கப்பட்ட உரிமைகளுக்கு, வழிபாட்டுரிமைகளுக்கு வடிகாலாக வேற்று மதத்தை தழுவியிருக்கலாம்….அதன் பொருட்டு, இன்னும் ஆயிரம் ஆண்டுகாலம் உரிமைகள் பெறும் அனைத்து தகுதியும் அவனுக்கு உண்டு….எந்த இந்துத்வ பண்டாரத்திற்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லை

====================================================================

85% விழுக்காடு பெரும்பான்மையினருக்கு வழங்கப்படாத சலுகைகள் 15% விழுக்காடு சிறுபான்மையினருக்கு வழங்கப்படுவதை பார்த்து ஏங்குவதை எங்காவது பார்த்த்துண்டா போன்ற கேள்விகள்..

நமது கேள்வி:

இத்தனை ஆண்டுகாலமாக பார்ப்பன பண்டாரங்கள், ஆதிக்க சாதியனரும் அரசு உயர்பதவிகளில் அனுபவித்து வர...தாழ்த்தப்பட்டவர்கள் அங்கும் சிறுபான்மையினராகவே இருந்து வருகின்றனரே……….சிறுபான்மையினர்களுக்கு சலுகை வழங்குவதை குறீத்து நாங்கள் இன்னும் தெளிவாக கவலைப்படவில்லை,…..மெய்யாகவே எம்மக்கள் தெளிவாக கவலைப்படுவார்களேயானால்…. இந்த சிறுபான்மை பெரும்பான்மை பிரச்சினை இந்நாட்டில் வராது…..

இந்திய அரசு உளவுப்பிரிவில் ஒரு தாழ்த்தப்பட்டவரை அடையாளப்படுத்துங்கள்….ஒரு தாழ்த்தப்பட்ட பிரதமரை காண்பியுங்கள்….நடுவண் அரசில் ஒரு தாழ்த்தப்பட்ட பாதுகாப்புதுறை அமைச்சரை காண்பியுங்கள்...

பெரும்பான்மை சுரண்டலை பற்றி யார் பேச வேண்டுமென்றே இல்லாமல் போய் விட்டது ...சொந்த நாட்டு மக்களை சுரண்டும் பார்ப்பனீய பனியா வர்க்கத்தை கேட்க துப்பில்லை..இஸ்லாமிர்களை கேள்வி கேட்க வந்துவிட்டனர்

அதோடு, ஏதாவதொரு இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியர் அல்லாத ஒரு நபர் பதவியில் இருப்பதை பார்த்ததுண்டா? என்ற கேள்விகள் வேறு…….

இதற்கு இவர்கள் பாணியில் பதில் சொல்வதானால்...அதற்கு தகுதி திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்….

பார்ப்பன, உயர்சாதி இந்துக்கள், போலியான இந்து மத விசுவாசிகள் யாரும் அரபு நாடுகளில் பணி புரியவில்லையா?

======================================================================

தீவிரவாதிகளுக்கு எதிராக பத்வா அறிவித்த ஒரு மௌலவியை, முல்லாவை காண்பிக்க முடியுமா? என்ற துணைக்கேள்விகள்..

நமது கேள்வி:

இந்திய நாட்டின் பிதா என போற்றும் காந்தியை கொன்ற இந்துத்வ தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு இந்து அமைப்பை காண்பிக்க முடியுமா?

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு காங்கிரசு, பாஜக போன்ற முதனமை இந்திய தேசிய கட்சிகள் வழங்கி வரும் ஆதரவை நாங்கள் அறியாதவர்கள் அல்ல….முதலில் காங்கிரசிடமும், பாஜகவிடமும் கேள்வி கேட்டுவிட்டு எம்மிடம் அந்த கேள்வியை கேட்க வரட்டும்

இந்துத்துவ தீவிரவாதிகளை அம்பலப்படுத்த துணிந்த காரணத்திற்காக, பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும், நேர்மையான அதிகாரியாக, சமரசமில்லாமல் செயல்பட்ட ஒரே காரணத்திற்காக கர்கரே என்னும் அதிகாரியை கொன்ற இந்துத்வ அமைப்புகளா..எம்மிடம் வந்து கேள்வி கேட்பது

குஜராத்திலும், ஒரிஸ்ஸாவிலும் முறையே இஸ்லாமியர்களுக்கு எதிரகவும், கிருத்துவர்களுக்கு எதிராகவும் வன்முறையை தூண்டிய அமைப்புகளை தடை செய்ய கோரிய இந்துத்வ அகிம்சை இயக்கங்களை எங்கும் காணோமே ஏன்?

இந்திய நாட்டின் மிக முக்கிய பிரச்சினை….இந்து சாதிய பயங்கரவாதமும், முதலாளித்துவமும்….இதற்கு எதிராக நாங்கள் நிற்பதை விட்டுவிட்டு,..,...இஸ்லாத்திற்கு எதிராக போராட கிளம்ப முடியாது…

===========================================================

மராட்டியம், கேரளம், பீகார், பாண்டிச்சேரி ஆகிய இந்து பெரும்பான்மையினர் வசிக்கும் மாநிலங்களில் கடந்த காலங்களில் இஸ்லாமியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கஇஸ்லாமிய பெரும்பான்மை ஜம்மு-காஷ்மீரில் ஒரு இந்து முதலமைச்சராக வர முடியுமா?

எமது கேள்வி:

ரொம்ப நாளா இந்த பல்லவியை கேட்டு வருகிறோம்….

ஆமாம் யார்தான் இந்து?

குல தெய்வ வழிபாட்டை உடையவனா?

சைவத்தை பின்பற்றுபவனா?

வைணவத்தை பின்பற்றுபவனா?

எவன் இஸ்லாமியனில்லையோ, கிருத்துவனில்லையோ, பார்சியில்லையோ, யூதனில்லையா? அவனா இந்து…..

இதை எந்த புனித வெஙகாய சாத்திரம் இதை வலியிறுத்துகிறது

விட்டால், யார் மனிதன் என்று கேட்டால்.யார் ஆடில்லையோ, யார் மாடில்லையோ, யார் புலியில்லையோ, யார் பன்றியில்லையோ அவன் மனிதன்னு ஒரு கேனத்தனமான ஒரு விளக்கத்தை கொடுத்தாலும் கொடுப்பார்கள்..

துணிச்சலிருந்தால்..இப்படி மின்னஞ்சல் அனுப்புபவர்கள்….யார் இந்து? என்று தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு அதன் பிரதியை இதுபோன்ற மின்னஞ்சலகளின் பின்னிணைப்பாக அனுப்பவும்

============================================================

1947 இல் இருந்த எண்ணிக்கையைவிட இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும், இஸ்லாமியர்கள் எண்ணிக்கை கூடிவிட்டதாகவும் அந்த மின்ன்ஞ்சல் கூறுகிறது..

நமது கேள்வி: இதே கூட்டம்தானே சாதிவாறி கணக்கெடுப்பை வேண்டாமென்று வலியிறுத்துகிறது, ஏன் துணிச்சலிருந்தால்….மதவாரியான கணக்கெடுப்பிற்கு எதிராகவும் பேசட்டுமே….பேசமாட்டார்கள், காரணம் மதவாரி கணக்கெடுப்பு தங்களின் எண்ணிக்கையை கூட்டி காண்பிக்க இவர்களுக்கு தேவைப்படும், சாதிவாரி கணக்கெடுப்பு, இந்து மதத்தின் சுரண்டலை அம்பலப்படுத்தும்….

கணக்கெடுப்பில் மதமற்றவர்களுக்கு ஒரு பிரிவை ஒதுக்கட்டுமே பார்க்கலாம்…மதசார்பின்மைக்கு ஆதரவாக பேசும் அக்கறை கொண்ட இந்துத்வ மூளைகள் என்றுமே….இதற்கு குரல் கொடுக்காதே? ஏன் அதை செய்வதில்லை..

தாழ்த்தப்பட்டவர்களை வர்ணத்திற்கு அப்பாற்ப்பட்டவர்களக வரையறுத்துவிட்டு,…..நீயும் இந்து, சந்து, பொந்துனு வந்து நிற்கும் இந்த கூட்டம் எம்மை ஏன் வலுக்கட்டாயமாக இந்துமத பிடிக்குள் இழுக்கிறதுபௌத்திஸ்டுகளையும் இப்படியே இணைத்துக் கொண்டு இந்துன்னு தானே கூவி விற்கிறார்கள்..

மதசார்பற்ற அரசு கணக்கெடுப்பில் மதமற்றவர்களுக்கு ஏன் ஒரு பிரிவை வழங்குவதில்லை

60 ஆண்டுகளுக்கும் மேலான விடுதலை இந்தியாவில் கிருத்துவத்தையும், இஸ்லாத்தையும் தழுவியர்களின் எண்ணிக்கையை ஒரு முறை சரிபார்த்தால், இவர்கள் கோரும் இந்து மதத்தின் லட்சணம் தெரிந்துவிடுமேதாழ்த்தப்பட்டவர்களின் முறையான அளவில் விழிப்புணர்வில்லாத்தால்..இன்னும் இந்து மதம் நீடித்திருக்கிறது….இல்லையென்றால்...இந்து மத்த்தின் துகள்கள் இம்மண்ணில் எஞ்சியிருக்காதே..

மேற்கொண்டும் பல கேள்விகள் உண்டு….இந்த கேள்விகளுக்கு முதலில் இந்த பண்டார இந்துக்கள் பதிலளிக்கட்டும்,….பிறகு நாம் நம் நிலையை உரக்க எடுத்து வைப்போம்….

இந்திய இந்து தேசியத்தின் போலித்தனத்தை குறித்த தெளிவான பார்வை பெற தோழர்களுக்கு என் அறிவுக்கு எட்டிய வரையில் நான் பரிந்துரைக்கும் நூல்கள் இரண்டு

1) இந்திய வரலாற்றில் பகவத் கீதை -

2) இந்து இந்தியாஎஸ்.வி.ராஜதுரை