திங்கள், 28 டிசம்பர், 2009

எங்களை தமிழில் படிக்கவிடு.......இல்லை தமிழில் படிக்க நாடு கொடு

இந்திய என்ற கூட்டு........அவியல்........பொறியல்........

அய்யய்யோ மன்னிச்சுக்கோங்க,...............கொஞ்சம் குழம்பி போய்ட்டேன். இப்படித்தாங்க இந்தியாவை நினைச்சாலே குழப்பாக இருக்கு.........

நான் மராத்திய மாநிலத்தில் வாழும் தமிழன்..........இங்கு ரே ரோடு என்னும் பகுதியில் வாழும் தமிழர்களை சந்திக்கச் சென்றிருந்தேன்..........தமிழர்கள் கொடி கட்டி........ஆமாம் கோமணக்கொடி கட்டி வாழாதது மட்டும்தான் குறை.......

அவர்களோடு உரையாடிய போது அவர்களிடம் வந்த பதில்............

படிக்க வாய்ப்பில்லைங்க............குடிக்க தண்ணி இல்லைங்க..........குளிக்கவும்கூட தண்ணி இல்லைங்க...........பணமிருக்கிறவன் தண்ணி வாங்கு குளிக்கிறான்......... ஆனால், துவைக்கிறதுக்கு துணி வாங்குறதுக்குக்கூட வாய்ப்பில்லை காரணம் பணம்தாங்க.......இவ்வளவு செய்திகள் இல்லைனு சொன்னாலும் எங்களை இப்படி இழிநிலையில் வைத்திருக்கும் இந்தியாவை நேசிக்கிறேங்க............என்ன இருந்தாலும் தாய் நாடு இல்லையாங்கிறான்???????????? ஏதாவது வாயில் வந்திருக்கும்.......ஆனால்,எவ்வளவு முயற்சி செய்தாலும் எச்சிலை தவிர வேறெதுவும் வரவில்லை..........எச்சிலை துப்பிவிட்டு.........தாய் மண்ணே வணக்கம்னு சொல்லிட்டு வந்தேன்.........

வேற்று மாநிலங்களில் புலம்பெயர்ந்து வாழும் தமிழனின் சொல்..........எப்படி.....ஈழ அகதியின் குரலோடு ஒத்துப் போகிறது...குளிக்க நீர் இல்லை.....கல்வி கற்க தமிழில்லை....இந்த நாடு எங்களுடையது என்றால் எங்கள் தாய்மொழியில் படிக்க என்ன தடை?.........தாய்மொழியை மறந்துதான் என்னுடைய நாட்டுப்பற்றை உறுதி செய்ய வேண்டும் என்றால் அப்படி என்ன புடலங்காய் தாய்நாட்டின் மீதான பற்று தேவையிருக்கிறது.........

நீங்கள் பேசுவது பிரிவினைவாதம்......இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்று நாக்கில் முட்டாள்தனத்தை நட்டு வைத்துக் கொண்டு பேசும் அன்பர்களிடம் நாங்கள் கேட்பது இதுதான்........

மராத்திய மாநிலத்தில் மராத்தியில்தான் படிக்க வேண்டும் என்பது சரிதான்........ஆனால், மராத்திய மாநிலத்தில் இந்தியன் என்று அடையாளப்படுத்தப்படும் தமிழன் அவனுடைய தாய்வழிக் கல்வி படிக்க்கூடாது என்றால் ஒன்று மராத்தியம் இந்தியாவில் இல்லை..அல்லது தமிழனுக்கு இந்தியா இல்லை........