வியாழன், 2 செப்டம்பர், 2010

பசியின் திடீர் கரிசனமும்...இந்து அடிப்படைவாதிகளின் கூச்சலும்

பசி...நாட்டு மக்கள் பசியில் வாடிக்கிடப்பதில் உலகச்சாதனை படைத்துக் கொண்டிருக்கும் பொழுது இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கும்….பசி அதாங்க ப.சிதம்பரம்,,,,,

பழங்குடியின மக்களை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் என்றார்...ஆம் என்றனர் இந்து மத அடிப்படைவாதிகள்

ஈழ போராளிகளை தீவிரவாதிகள் என்றார்….ஆம் என்றனர் இந்து மத அடிப்படைவாதிகள்..

இந்தியாவில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு இஸ்லாமியர்கள்தான் காரணமென்று ஊடகங்கள் பரப்பின…..அப்பொழுதும் ஆமாமென்று அவசர அவசரமாய் தலையாட்டின இந்த அடிப்படைவாத அமைப்புகள்…(இவர்கள்தான் பரப்பினார்கள் என்பது வேறு செய்தி)

காசுமீரில் நடக்கும் நியாயமான போராட்டத்தையும் கொச்சைப்படுத்தியது பசியை உள்ளடிக்கிய காங்கிரசு அரசு ஆமோதித்தனர் இந்த இந்து அடிப்படைவாத அமைப்புகள்.

ஆனால், .சிதம்பரம் காவி தீவிரவாதம் என்ற சொல்லை பயன்படுத்தியவுடன் கொதித்தெழுகின்றனர். ஆர்.எஸ்.எஸ் மீது அபாண்டமாக பழி சுமத்தப்படுவதை ஆதரிக்க முடியாது என்று மக்களைவிலேயே தெரிவிக்கின்றனர். தீவிரவாதம் மதம் கடந்தது, தீவிரவாதத்திற்கு நிறம் கிடையாது என்று வேறு விளக்கம் கொடுக்கின்றனர்(இணைப்பு).

இந்த அடிப்படை வாதிகளின் தேச பக்தியின் லட்சணத்தை உலகுக்கு அறிவிக்க……நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்சல் குருவை சிறிதும் தாமதமில்லாமல் தூக்கிலிட சொல்லி கூக்குரலிடுகின்றனர்அவருடைய மேல் முறையீடு….நாடாளுமன்ற வளாகம் குறித்து நியாயமாக ஐயங்கள் குறித்தெல்லாம் கவலைப்படாமல் தங்களை தேசபக்தர்களாக புனைய முனைகின்றனர்

இதே தேசபக்தர்கள்தான் ,

பிரக்யா சிங், புரோகித் போன்ற மாலேகான் குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்டவர்களாக கைது செய்யப்பட்ட பொழுது அது போலியான நடவடிக்கை என்று குரலெழுப்பினர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

குஜராத் ஹிட்லர் மோடிக்கு ஆதரவாக குரலெழுப்புகின்றனர்….

இந்து மத அடிப்படைவாதத்தின் கோர முகம் மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு இயக்கங்கள், சிறுபான்மை இயக்கத்தினர் மூலமும் கர்கரே, முஷ்ரீப் போன்ற நேர்மையான அதிகாரிகளின் மூலமும் வெளிப்பட்டு வரும் சூழலில்….

ஈழத்திற்கு செய்யப்பட்ட துரோகத்தால் தமிழகத்தில் நிகழ்ந்த எழுச்சிமிகு பிரச்சாரத்தால் தோற்றார்….தமிழக மக்களின் உணர்ச்சியிடம் தோற்றார்….ஆனால், மாண்புமிகு (மான்ஙகெட்ட)இந்திய மக்களாட்சியின் துணை கொண்டு வென்றார்

காங்கிரசை கட்சியின் சார்பாக தோற்றும் வென்று இன்று உள்துறை அமைச்சராயிருக்கும் .சிதம்பரம் காவி தீவிரவாதம் என்ற சொல்லாடலை பயன்படுத்திய தருணத்தை கணக்கில் கொள்ளாமல் அவருடைய அந்த சொல்லாடல்களால் உச்சி குளிர்ந்து போய்விட முடியாது.

காங்கிரசு என்னும் பேராயக்கட்சி அணுசக்தி ஒப்பந்தத்தை பாரதீய ஜனதா போன்ற எதிர்கட்சிகளோடு இந்தியா என்னும் கூட்டமைப்பின் சார்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ள தருணம் இது. மத உணர்வுகளை உரமாய் வைத்து அரசியல் நடத்துவதை தெரிந்து கொண்ட இவர்களால்அணுசக்தி ஒப்பந்தத்தின் மக்கள் விரோத கூறுகளை அம்பலப்படுத்தவதிலிருந்து சமூக நலன் கருதிகளையும், பொது மக்களையும் திசை திருப்புவதற்கான...நோக்கமாக இருக்குமென ஆழமாக நம்பலாம்

ஏனென்றால், மும்பையில் நடந்த தாக்குதலுக்கு முன்பாக சிவராஜ் பாட்டில் உள்துறை அமைச்சராக இருக்க, இந்து தீவிரவாத்திற்கு பின்புலமாக இயங்கும் சக்திகளின் சதிதிட்டத்தை விளக்கி, அந்த சதி திட்டத்தை முறியடிக்க, முளையிலேயே கிள்ளி எறிய முக்கிய அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட சதிகார அயோக்கியர்களை(காங்கிரசு காரர்களும் உண்டு)கைது செய்வதற்கும், கர்கரேஆதரவு கோரியதாக முஷ்ரீஃப்(கர்கரேயின் காவல் துறையின் நண்பர்) தனது கர்கரேயை கொன்றது யார் என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார்

அதன் பிறகுதான் மும்பை தாக்குதல் நடந்தது அல்லது வலிந்து இங்குள்ள அடிப்படைவாத அமைப்புகளின் உதவியோடு நிகழ்த்தப்பட்டது...அதில் இஸ்லாமியர் அமைப்பு மட்டுமென்று குற்றம் சுமத்துவோர்...தங்களுக்கு இருக்கும் சார்புணர்ச்சியையும், கருத்தியல் வறுமையை சரி பார்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

தாக்குதல் நடந்த நாள் நவம்பர் 26,2008 இல்...கர்கரேயும் கொல்லப்படுகிறார்

தாக்குதல் முடிவடைந்த பின்னர்…. கர்கரேயின் மனைவிக்கு குஜராத் கண்ட மாமனிதன், இந்திய ராஜபக்சே மேன்மைமிகு.மோடி 1 கோடி ரூபாய் வழங்க முன்வந்தார்செருப்பாலடித்தது போல்...மோடிக்கு உண்மையை தான் உணர்ந்திருப்பதை உணர்த்தினார்...கர்கரேயின் மனைவி தனக்கு வழங்கப்பட்ட தொகையை, ரத்தக்கரை படிந்த மோடியிடமிருந்து பெற மறுத்தார்...

மும்பை தாக்குதலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு கர்கரே உள்ளிட்ட காவல்துறையின் படுகொலை நடந்தது....( மும்பை தாக்குதலிலும் இந்து பயங்கரவாதிகளின் பங்கென்ன? என்பதும் ஆழமான தேடலுக்குரியது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வோம்)...தாக்குதல் நடந்து வருகிற நவம்பர் 26 ஆம் நாளோடு 2 ஆண்டுகள் முடிவடையப்போகிறது. இத்தனை காலம் மௌனம் காத்ததின் பிண்ணனி என்ன?

இந்த இரண்டு ஆண்டுகாலமும் சிதம்பரம் என்ன செய்து கொண்டிருந்தார். ராஜிவ் காந்தியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம்..மீண்டும் பதவியேற்றவுடன் என்ன செய்தார்...? (முன்னர் மட்டும் என்ன செய்தார்?) இந்துத்வ பயங்கரவாதத்தை வேரறுக்கவா கிளம்பினார்…. இல்லையே….ஈழத்தின் கருவறுக்கத்தானே கிளம்பினார்.. சிங்கள இனவெறி கூட்டத்தின் பாதுகாவலனாய் திகழ்ந்தார்..

அப்பொழுது, ஈழத்தில் போர் உக்கிரத்தில் இருந்தது.....ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து படுகொலைகளை நடத்தி வந்த நேரமது...வல்லரசு கனவுகளோடு மக்களை ஏய்த்து கொண்டிருக்கும் அரச பிரதிநிதி, ஆசிய பிராந்தியத்தின் தனது ஆதிக்க நலனை நிறுவுவதில் மட்டும் கவனமாக இருந்த அதிகார வர்க்க பிரதிநிதி தமிழர்களுக்கு ஆதரவாக போர் நிறுத்தை ஒரு சுண்டக்காய் நாடான இலங்கையிடம் வலியிறுத்த முடியவில்லை....நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் தமிழகத்தில் எழுந்த எழுச்சியை அடக்க மட்டும் திரைமறைவு வேலைகள அப்பட்டமாக தெரியும் வண்ணம் நடந்தன....

போரை நடத்த இலங்கையை வலியிறுத்தச்சொன்னால்..........புலிகளை நோக்கிய இவர் உட்பட்ட இந்திய அதிகார வர்க்கத்தின் விரல்கள் நீண்டது, மீண்டும் ராஜீவ் காந்தி என்னும் மகாமனிதரின் தியாக மரணத்தை வைத்து பிரச்சாரம் நடந்தது. ஆனால், கடைசிவரை அவர் அப்படி என்ன தியாகம் இந்நாட்டின் மக்களுக்காக செய்தார் என்று மட்டும் சொல்லப்படவேயில்லைராஜீவ் கொலையை மறக்க மாட்டோம் ஆனால், நீங்கள் ஈழத்தில் இந்திய இராணுவம் நிகழ்த்திய அட்டூழியங்களை மறந்து இந்திய இறையாண்மையை காப்பாற்ற வேண்டும், ஏனென்றால், இந்தியாவின் இறையாண்மை காங்கிரசின் வீட்டு வாசலில் நிற்கிறது….என்று கூக்குரலிட்டனர், இன்றும் அதையே தொடர்ந்து செய்கின்றனர்

உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சிதம்பரம் மும்பை தாக்குதலின் பொழுது தீவிரவாதத்திற்கு எதிராக சூழுரைத்தார், ஆனால், கர்கரேயின் கொலையின் பின்னிருந்த இந்துத்வ சக்திகள் குறித்து கண்டுகொள்ளவேயில்லைமும்பை தாக்குதல் விசாரணை அவசர, அவசரமாக முடிவடைந்து கொலையின் பின்னிருந்த மர்மங்களை குறித்து நீதிமன்றமும் கேள்வியெழுப்பியது…..ஊடகங்கள் லாவகமாக மறந்தன...ஊடகங்கள் மறைத்ததால் (இணைப்பு) உள்துறை அமைச்சருக்கும் தெரியாமலிருக்குமென்று நாம் நம்பித்தான் ஆகவேண்டும்...அந்த லட்சணத்தில்தான் இந்திய அமைப்பு இருக்கிறது வாசிக்கும் அன்பர்கள் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை

சரி விடுங்கங்க, இப்பொழுதாவது அவருக்கு மக்கள் நலனில் அக்கறை கொண்டாரே, என்று யாராவது தமக்குத்தாமே ஆதரவு சொல்லிக் கொள்வார்களானால்…..

இந்தியர்கள் என்று கூறப்படும்..(அழுத்தம் எமது)..அல்லது பிரச்சாரம் செய்யப்படும் அல்லது நம்பப்படும் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடிக்க சென்று….அழுத்தமான சுண்ணாம்பு கோட்டால் கடலில் போடப்பட்ட கோட்டை வேண்டுமென்றே பேராசையோடு லட்சக்கணக்கான மதிப்புள்ள மீன்களை பிடிக்கும் ஆவலில்...இரு நாட்டின் உறவுக்கு குந்தகம் விளைவிக்க வந்த படுபாவிகள் என்ற ரீதியில் சிதம்பரம் பேட்டியளிக்கிறார்......அவர் கண்டுபிடித்துச்சொன்ன மாபெரும் கண்டுபிடிப்பை பாருங்கள்

எனக்குத் தெரிந்த வரையில் இந்த ஆண்டு ஒரு நிகழ்வு தான் நடந்திருக்கிறது. அதுவும் வருந்தத்தக்கது. இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் ஏற்பட்ட உடன்பாட்டின்படி இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சுடக்கூடாது. இந்த உடன்பாட்டிற்கு பின் ஒரேயொரு நிகழ்வு தான் நடந்திருக்கிறது. அதுபற்றி நாங்கள் இலங்கை அரசிடம் எடுத்துச் சொல்லி, அது உடன்பாட்டை மீறிய செயல் என்றும், இந்திய மீனவர்களை சுடக்கூடாது, கைது செய்து பேச்சுவார்த்தைகள் நடத்தி விடுவிக்கலாம். என்று உடன்பாடு செய்து கொண்டிருக்கிறோம். அதை மீறி இந்த நிகழ்வு நடந்திருக்கிறது. இனி நடக்காது என்று சொல்லியிருக்கிறார்கள்.

என்ன திமிர் இருந்திருந்தால் என் நாட்டின் மீனவனை சுட்டிருப்பான் என்று இந்தியனாகவோ அல்லது என்ன துணிவிருந்தால் என் இனத்தானை சுட்டிருப்பானென்று தமிழனாகவோ கேள்விக்கணை பறந்திருந்தால், இலங்கை அரசுக்கு எச்சரிகை கணை பறந்திருந்தால்....ஆனால், என்ன செய்வது? அந்த மீனவனின் பெயர் கார்த்தி அல்லவே....

ஆக சிதம்பரத்திற்கு நாட்டுப்பற்றோ, இனப்பற்றோ கிடையாது, இதில் சிதம்பரம் என்று குறிப்பிடுவது, சிதம்பரம் என்ற ஒற்றை மனிதரை மட்டுமல்ல….நாம் தலைவர்களாக பெற்றிருக்கும் அனைத்து தருதலை தலைவர்களையும்தான்...சிறுபான்மையினர்கள், காங்கிரசு, பாஜக என மாறி, மாறி ஏமாந்து திரிவதற்கு பதிலாக, இவர்களை நம்பி, நம்பி விரக்தியடைவதற்கு பதிலாக..இந்தியாவில் ஒடுக்கப்படும் மக்களோடு அணிசேர்ந்து, இந்த ஏமாற்றுக்காரர்களில் போலி மக்கள் பற்றை செருப்பால் அடித்தால்தான்….வேண்டாம் வேண்டாம் செருப்பால் அடித்தும் நம் தலைவர்களுக்கு சுரணை வரவில்லை….துடைப்பம் பயன்படுத்திப்பாருங்கள்

பசிச்ச வயித்துக்கு சோறில்லாமல் திரியும் நம் நாட்டிற்கு பசி போன்ற பசியறியாத தலைவர்கள் இனியும் தேவையா என்று சிந்தியுங்கள்….

======================================================================

ஆனால், தமிழக மீனவர்கள் சிங்கள இனவெறி இராணுவத்தால் கொல்லப்பட்டபொழுதெல்லாம் இந்த அடிப்படைவாதிகளின் விழிகள் எல்லாம் பாகிஸ்தானை நோக்கியே இருந்தது. அவர்கள்தான் இவர்களை பொருத்தவரை தீவிரவாதிகள். அகண்ட பாரதம் என்ற கேனத்தனமான அடிப்படைவாத கனவு தமிழகம் வரை தொடவில்லை..நீளவில்லை...நம்மை அவர்கள் அகண்ட பாரதம் என்ற கனவில் இணைத்துக் கொள்ளவில்லை என்பதில் மகிழ்ச்சிதான் அதே வேளையில், இன்றும் தமிழக பகுதியை இந்தியாவில் வைத்துக் கொண்டேதானே, இந்தியர்கள் என்று கூக்குரலிடுகின்றனர், ஆர்.எஸ்.எஸ் அமைதிபுருசர்கள் தமிழகத்தில் வந்து கூச்சலிடுகின்றனர்..இலங்கை ஒரு தீவிரவாத நாடு என்று இலங்கையை பற்றி ஒரு தீர்மானம் நிறைவேற்றட்டுமேஎதற்கெடுத்தாலும், பாகிஸ்தான், இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று நம்மை பூச்சாண்டி காட்டியே...நமது பிரச்சினையிலிருந்து கவனத்தை திசை திருப்பி விடுகின்றனர்

காவிரி நதி நீர் பிரச்சினையில், முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் என தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படும் பொழுது இந்த இந்துத்வ அமைப்புகளுக்கு சினம் வருகிறதா? வராது? ஏனென்றால் அவர்கள் இந்தியர்கள், இந்துக்கள்………நாம் தமிழர்கள்.

நம் உணர்வுகளை வடநாட்டு அடிப்படைவாத கும்பல் என்னதான் செருப்பாலடித்தாலும்... தமிழர்கள் அசர மாட்டார்கள் இந்து முன்னணி, சந்து முன்னணி என்று பல பெயர்களில் ராமகோபாலன் போன்ற பார்ப்பன பண்டாரர்கள் (கொஞ்சம் மதிப்பு கொடுக்கலாமேன்னுதான்) கூட்டத்திற்கு நாகர்கோவில் போன்ற இடத்தில் கூட்டம் கூடுகிறது தமிழர்கள் அத்தனை தெளிவுள்ளவர்கள்….(இணைப்பு)

எந்த பார்ப்பனீயம் தோள் சீலை போராட்டத்திற்கு அழைத்து சென்றதோ, எந்த பார்ப்பனீயம் இவர்களை தெருவில் நடக்க அனுமதிக்க மறுத்ததோ, காணாமை, தீண்டாமை என்று கொடும் வடிவங்களில் எந்த பரதேசி பார்ப்பனீயம் நம்மை நாம் அதனிடமே சரணடைந்து கிடக்கிறோம்..

இதை நாம கேட்க போனா...இன்னா செய்தாரை ஒறுத்தல் வறுத்தல்னு விளக்கம் சொல்வாய்ங்க

நமக்கேன் வம்புன்னு போக முடியுமா,….முடியாது...மாற்றம் வரவேண்டும்...வரவழைப்போம்

இந்துத்துவ தீவிரவாதத்தை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வது ஏன்!

ஹிந்துத்துவாவிற்கும் புலனாய்வு துறைக்கும் ரகசிய கூட்டணி உண்டா..?

கோவை குண்டு வெடிப்பு சதி ஒரு பொய்யான நாடகம் - இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி!!!

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

"கோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்:நவீன மனுநீதி!"

"கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசாரணையே தண்டனை"

இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான்

பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும

மும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வீட்டில் பயங்கர வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சிக்கின!!