வியாழன், 30 செப்டம்பர், 2010

தீர்ப்பு நாள் 30 செப் 2010

29 செப், 2010, இதழின் ஆசிரியருக்கு மடல் என்னும் பகுதீயில் அப்சல் இன்சினியர் (ஹாஜி) என்னும் இஸ்லாமிய நபர் எழுதியதாக மடல் ஒன்றை முதலாவதாக வெளியிட்டுள்ளது.

ஆங்கிலத்தில் வந்திருந்த கடிதத்தின் அதன் தமிழ் மொழியாக்கம் வருமாறு,

“அலகாபாத் நீதிமன்றத்தில் வர இருக்கிற பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு எப்படியாயினும் ஏதாவதொரு சமூகத்திற்கு ஆதரவாகத்தான் இருக்க போகிறது. அப்படி நிகழ்கையில் இந்த பிரச்சினையை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான வாய்ப்பை அது நிராகரிக்கும். இந்த தீர்ப்பினால் ஏற்பட வாய்ப்பிருக்கிற பதட்டத்தினால் ஏற்பட வாய்ப்பிருக்கிற அசம்பாவதங்களை அரசு தனது வலிமையான கரம் கொண்டு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

அதே வேளையில் அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் அமைதியான தீர்வை ஏற்படுத்த தன்னார்வத்தோடு முன்வரவேண்டும். அப்படி ஒரு முயற்சி எடுக்கையில் பாபர் மசூதி மீண்டும் கட்டப்பட முடியாது என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். நாளைய நீதிமன்ற தீர்ப்பு, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வரும் பட்சத்தில் இஸ்லாமிய சகோதரர்கள், தமது மூத்த சகோதரர்களாகிய இந்துக்களுக்கு அளிக்க முன்வர வேண்டும். ஏனென்றால், நூற்றாண்டுகளுக்கு முன்பே மசூதி கட்ட இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட இடமளித்தவர்கள் இந்துக்கள்.”

இப்படி நாட்டாமை தொனியில் இஸ்லாமியர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு, இந்துவின் நடுநிலையை யாரும் கேள்வி கேட்டு விட கூடாது என்பதற்காக, அடுத்த சிறிய மடலில் ஜே.பி.ரெட்டி என்பவர் இந்துக்களை சர்ச்சைக்குரிய அவ்விடத்தை இந்துக்களுக்கு விட்டுதர கோரியிருக்கிறார்.

என்ன ஒரு அயோக்கியத்தனமான சூழ்ச்சியான பதிவு பார்த்தீர்களா?

எதை கொண்டு வந்தாய் நீ இழப்பதற்கு? இன்று உன்னுடையதாக இருந்தது, நேற்று மற்றொருவருடையதாக இருந்தது, நாளை மற்றொருவருடையதாக இருக்கும்.என்று வியாக்யான மசிறுகளை பேசும் இந்துத்வ வாதிகளிடம்தானே இந்த விட்டுக்கொடுத்தலுக்கான அறிவுரையை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி சொல்ல வில்லை பார்ப்பன இந்து.

அதோடு, இந்து சகோதரர்கள், சந்து சகோதரர்கள் என்கிறார்களே? இராமாயணத்தின் இராமன் என்றாவது தன்னை இந்து என்றிருக்கிறானா? இல்லையே? பின் எப்படி இந்த இந்துத்வ அமைப்புகள் இராமனுக்கு வீடு கட்ட, மன்னிக்கவும் கோயில் கட்ட இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.. இந்து என்பவன் யார்? அதை தீர்மானித்துவிட்டல்லவா இஸ்லாமியர்களுக்கு அறிவுரை கூற இவர்கள் புகுந்திருக்க வேண்டும்?

இந்துக்கள் என்று இன்று அடையாளப்படுத்தப்படும் இவர்கள் முப்பாட்டன்கள் செய்த இடிப்புகள்க் கலவரங்கள், உலகத்தில் நிகழந்த மதத்தின் பெயரால் நிகழ்ந்த கலவரங்களுக்கு சற்றும் குறைவானதில்லை பௌத்த, சமண வழி பாட்டு மையங்களை சிதைத்தது, சைவ-வைணவ சண்டைகள்…என்று நீளுமே இவர்களது பட்டியல்….

இது போதாதென்று இன்றளவும் சொந்த மக்களை சேரியில் இருத்தி வைத்துக் கொண்டு, ராமனுக்கு கோயிலை கட்டுறேன், வெங்காயத்தை கட்டுறேன்னு..சொல்லிக் கொன்று... தாழ்த்தப்பட்டவன் தனக்கு இழைக்கப்பட்ட, இழைக்கப்படும் கொடுமைகளை மறந்து இராமன் கோயில் கட்ட வர வேண்டுமென்று ஆள் சேர்க்கும் வேலையை இந்த சந்து அமைப்புகள் செய்கின்றன…தாழ்த்தப்பட்டவர்களை தன் வீட்டில் சேர்க்காதவனோடு இணைந்து கொண்டு இஸ்லாமியர்களை எதிரியாக பாவிக்கும் மனோபாவத்தை வளர்த்தெடுக்கும் வேலையை செய்த பாபர் மசூதி இடிப்பு வழக்கிற்கு இன்று தீர்ப்பு வருகிறது.

தாழ்த்தப்பட்டவர்கள் தமது சகோதரர்களாகிய இஸ்லாமியர்கள் மீது வெறுப்புக் கொள்ளாமல், சாதிய இந்துத்துவ சக்திகளை முறியடிக்கும் பணியில் முற்போக்கு இயக்கங்களோடு இணைந்து பணியாற்றுமாறும், இஸ்லாமிய அன்பர்களுக்கு அரணாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிற அதே வேளையில்..

இஸ்லாமிய அன்பர்கள் இந்நாட்டில் பல்வேறு பிரச்சினைகளை பயங்கரவாதத்தின் வழியாக சந்தித்து வரும் வேளையில், தமது சமூக முன்னேற்றத்தை கொஞ்சம் முற்போக்கு பார்வையோடு நகர்த்த வேண்டும், நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இருக்க, ஏக இறைவனை வழிபடுவதாக கூறிவிட்டு, அல்லாவுக்கு நிகர் இல்லை என்று கூறிவிட்டு, அவனை தவிர யாரையும் வணங்குவதில்லை என்று கூறிவிட்டு வழிபாட்டு தலங்களுக்காக நாம் சண்டை போடலாமா?

இது இந்து பத்திரிக்கையின் அறிவுரை போன்றதல்ல, தோழமையோடு ஒரு பகிர்வு…

அல்லா அனைவரையும் படைத்தானென்றால், அவனுக்கு கோயில் கட்டித்தர வேண்டி அவன் என்றுமே கேட்டிருக்க மாட்டான், அவனுக்கு அது தேவையுமில்லை..நம் மக்கள் நல்வாழ்வு வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டுமோ? அதை செய்வோம், கொஞ்சம் விரைவாக, விரிவாக திட்டமிட்டு செய்வோம்…

இந்துத்வ பயங்கரவாதிகளை பயங்கரவாதத்தினை எதிர்கொள்ள எம்மை போன்ற கடவுள் மறுப்பாளர்களும், பொதுவுடமை வாதிகளும், பெரியரிஸ்டுகளும் உங்களோடு என்றும் இருக்கிறோம், என்பதனையும் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறோம்..