செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

மார்க்ஸ் - ஜென்னி
உன்னுடைய நிரந்தர இருப்புக்காக எனது இதயம் எப்படி ஏங்குகிறது தெரியுமா?ஆசையாலும், மகிழ்ச்சியாலும் எவ்வளவு துடிக்கிறது தெரியுமா? நீ எங்கே செல்கிறாயோ அங்கெல்லாம் எவ்வளவு ஆவலாக பின் தொடர்ந்து செல்கிறது தெரியுமா? நான் உன்னோடு வருவேன் முன்னேறிச் செல். பின்னாலேயே நான் வருவேன் உனது பாதைகளில் உள்ள தடைகளை எல்லாம் அகற்றி, அதை சுகமானதாக்க முடிந்தால் இன்னும் மகிழ்வேன் - ஜென்னி 

அனைவருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டதாகத் தெரிகிறது. இதைப் பற்றி என்ன நினைப்பது? எதிலும் ஒரு தீவிரம் என்பதை நல்லபடியாக எடுத்துக் கொள்வதா? அல்லது நமது லட்சியத்தை அடைய இன்னும் வெகுதூரம் நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்பதா?”- ஜென்னி, மக்கள் மத்தியில் நிலவும் மூடநம்பிக்கைகள் தொடர்பாக…. 

"வாழ்வதற்கும் எழுதுவதற்கும் எழுத்தாளன் சம்பாதிக்க வேண்டும் என்பது உண்மையே. ஆனால், சம்பாதிப்பதற்காகவே அவன் வாழவோ, எழுதவோ கூடாது. எழுத்தாளனுக்கு அவனது எழுத்து கருவி அல்ல. அது தன்னளவிலேயே முடிந்த ஒரு இலக்கு. தேவைப்பட்டால் எழுத்து ஜீவித்திருக்க தனது ஜீவிதத்தையும் அவன் தியாகம் செய்வான்." – மார்க்ஸ்

"மரம் பற்றி சட்டம் இயற்றும் போது இவர்கள் மரத்தைப் பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள். ஒவ்வொரு பொருளியல் பிரச்சினையையும் அரசியல் ரீதியாக தீர்க்க மாட்டேன் என்கிறார்கள். பிரச்சினையை அதன் ஒட்டுமொத்தமான சிவில் சமுதாய நோக்கு மற்றும் ஒழுக்கவியலில் இருந்து தீர்க்க மாட்டேன் என்கிறார்கள்." – மார்க்ஸ்

இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் நிறைவைத் தந்திருக்கிறது கார்ல். சக மனிதனின் உயர்வுக்குப் பாடுபடுபவனே சிறந்த மனிதன். அதுபோன்ற வேலையில் கிடைக்கும் சந்தோஷமும் நிம்மதியும் வேறு எதிலும் கிடைக்காது என்று நீதானே சொல்லியிருக்கிறாய். நாம் இருவரும் அந்த வாழ்க்கையைத்தானே விரும்பி வாழ்ந்திருக்கிறோம். – ஜென்னி

குஷ்பூவின் பெண்ணியம்??????

குமுதத்தின் கயமைத்தனம்தான் குஷ்பூவின் மீதான அவதூறு, அது கண்டிக்கத்தக்கதே. 

அதேவேளையில், ஏற்கனவே ஆணாதிக்க மனநிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்திய ஆண் மனதை மேலும், மேலும் பெண்களை ஒரு பாண்டமாக உருவகம் செய்யும் மனநிலைக்கு தள்ளும் திரைப்படங்கள்தான் இங்கே உருவாகின்றன.

அப்படியான பல திரைப்படங்களில் குஷ்பூவுக்கும் பங்குண்டு. இதே குஷ்பூவுக்கு தன் மீதான அவதூறு குறித்துதான் கோபம் வருகிறதேயொழிய பெண்கள்மீது இந்தியாவெங்கும் ஒடுக்குமுறையை கண்டு கோபம் வரவில்லை..வந்தால் நலமே...

தன்னுடைய கணவரை வைத்து அரைகுறை ஆடையுடன் பெண்களை நடிக்க வைத்து வெளிக் கொண்டு வருகிற திரைப்படம் குறித்து அவருக்கு எந்த குற்றவுணர்வும் கிடையாது.

பத்திரிக்கைகள் நடிகைகளை அரைகுறை ஆடையோடு வெளியிடும் படங்கள் குறித்தும் அவருக்கு விமர்சனம் இல்லை. இவருடைய படங்கள் அப்படி வந்ததும் தொடர்பாகவும் இவர் கவலைப்பட்டிருப்பாரா? அல்லது தன் படம் பத்திரிக்கைகளில் வருவது குறித்து மகிழ்ச்சியடைந்திருப்பாரா?

(குஷ்பூ சுயவிருப்பத்தின் பெயரில்தான் அப்படி நடித்தாரென்று கூறுவதாக நினைத்துக் கொள்ளக்கூடாது. )

கூடங்குளத்தில் நடந்த அரச வன்முறை, அதனூடாக பெண்கள் மீது நிகழ்ந்த வன்முறை குறித்தெல்லாம் குஷ்பூவுக்கு கோபம் வரவில்லை.

இந்தியாவெங்கும் வன்புணர்வுக்குள்ளாகும் பெண்கள் குறித்து இவருக்கு தகவல் கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அதை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அவருக்கு இருப்பதாய் ஊகம் செய்ய இயலவில்லை. (அப்படி ஆர்வம் வந்தால் நன்றுதான்).

குஷ்பூ ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதி கிடையாது என்பதை இந்நேரத்தில் நினைவில் நிறுத்துவோம்..

குறிப்பு: தோழர்கள் என் கருத்தில் ஏதேனும் பிழையிருப்பின் திருத்தவும்.

குமுதத்தின் கயமைத்தனம்- பெரியார், மணியம்மை மீதான அவதூறு


“மணியம்மை ஏதோ சின்னப்பெண் அல்ல. 31 வயது ஆகிறது. திருமணத்தை வெறுத்து இயக்கத் தொண்டில் ஈடுபட்டு வருகிற பெண். அதற்கு 14 வயதில் திருமணம் நடந்திருந்தால், இப்போது பேரக்குழந்தைகள்கூட இருந்திருக்கலாம். மணியம்மை திருமணம் செய்து கொள்ள இஷ்டப்படாததை அவர் தந்தையாரே ஏற்றுக்கொண்டு, திருமணம் செய்யாமல் வைத்திருந்தார். 
ஆகவே, இந்தத் திருமணம், பொருத்தமற்றதோ, அல்லது மணியம்மையை ஏமாற்றும் திருமணமோ அல்ல. மணியம்மை உள்பட யாருக்கும் எந்தவிதமான நிர்ப்பந்தமோ, கஷ்டமோ, துன்பமோ கொடுக்கப்பட்ட திருமணமும் அல்ல. இயக்கத்துக்காக, முன்பெல்லாம் அலைந்ததுபோல் இப்போது என்னால் அலைய உடல் நலம் இடம் கொடுக்கவில்லை. ”

“என்னைப்போல பொறுப்பு எடுத்துக்கொள்ள தக்க ஆள் யார் இருக்கிறார்கள்? எனக்கு நம்பிக்கை உள்ளவர் கிடைக்கவில்லை. ஆதலால் எனக்கு ஒரு வாரிசு ஏற்படுத்தி விட்டுப் போகவேண்டும். இந்தத் திருமணம், சட்டப்படிக்கான பெயரே தவிர, காரியப்படி, எனக்கு வாரிசுதான்.”

பெரியார் ஏன் மணியம்மையை திருமணம் முடித்தார்? அவர் விருப்பத்தின் பெயரில் முடித்தார், தேவை கருதி முடித்தார். அந்த தேவை என்ன என்பதை மேற்கண்ட பெரியாரின் வரிகளே கூறும். அது வெறும் பாலியல் தேவை என்பதாக புரிந்து கொள்பவன், அன்பு என்பது என்னவென்று அறியாத முட்டாளத்தான் இருக்க முடியும். 

மூத்திர சட்டியை தூக்கி சுமந்து கொண்டு இந்த சமூகத்தின் நன்மை கருதி உழைத்த தந்தை பெரியாரை இன்னும் கூடுதல் அக்கறையோடு கவனித்துக் கொண்ட மணியம்மையை பெரியார் தம் வாரிசாக அறிவித்துக் கொள்ள அன்று இருந்த ஒரே வாய்ப்பாக கையெழுத்திட்டு திருமணம் என்னும் ஏற்பாட்டை செய்து கொண்டார். 
மேலும், இந்த விசயத்தில் சந்தேக அரிப்பெடுத்து திரிபவர்கள் தயவு கூர்ந்து பெரியார் – மணியம்மை திருமணம் தொடர்பாக வந்துள்ள நூலை வாங்கி படியுங்கள்.


இன்று குமுதம் இதழ் வழக்கமான தனது ஊடக தருமத்தை அதாவது சமூகத்தில் நிலவும் ஊடக தருமத்தை நிலைநாட்டும் பொருட்டு ஒரு அட்டைப்படத்தை வெளியிட்டிருக்கிறது.
குஷ்பூவையும் மணியம்மையையும் ஒப்பிட்டு ஒரு அட்டைப்படம். இந்த வக்கிரபுத்தியின் ஊடாக இரண்டு விசயத்தை சாதித்திருக்கிறது ஒன்று மணியம்மையை இழிவுப்படுத்தியிருப்பது, இன்னொன்று குஷ்பூவை இழிவுப்படுத்தியிருப்பது.

மணியம்மை தன்னுடைய இள வயது முதலே இயக்கத்திற்காக தன்னை ஒப்புக் கொடுத்தவர், தன்னுடைய அடிப்படை சுக துக்கங்களை இழந்து வாழ்ந்தவர். குஷ்பூவை பொறுத்தவரை சமூக வாழ்க்கைக்காக தன்னை அர்பணித்துக் கொண்டவரல்ல. இந்த ஒப்பீட்டை செய்யும் அயோக்கியதனமான எண்ணம் ஒருவேளை இந்துமத கடவுள் படங்கள் பொறித்த சேலை அணிந்தாரென்ற காரணத்திற்காகவும் இருக்கலாம்.

ஆனால், குஷ்பூவிற்கு இப்பொழுதுதான் சமூக அக்கறை வந்தது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார். குஷ்பூவின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படியிருப்பினும் அது குறித்து நமக்கு கவலையில்லை. அது தேவையுமில்லாத ஒன்று. அவர் நமக்கு அறியப்பட்டது எல்லாம் ஒரு நடிகை என்ற முறையிலும், சமீப காலங்களில் திமுகவின் பேச்சாளர் என்ற முறையிலும்தான். அந்த எல்லையை தாண்டிய விமர்சனம் என்பது அயோக்கியத்தனமானது.

குஷ்பூ இன்று ட்வீட்டரில், இந்தியாவில் பெண்களுக்கு ஒரு மதிப்பான இடத்தை உருவாக்கி கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக கூறியிருக்கிறார், இத்தனை ஆண்டுகால கலை உலக வாழ்க்கையில் அப்படியான பாத்திரங்கள் எதையும் திரை உலகம் அவருக்கு வழங்கியதுமில்லை, அவரும் பெண்ணின் மதிப்பை உறுதிப்படுத்தும் கதாபாத்திரத்தைதான் ஏற்று நடிப்பேன் என்று கட்டாயமாக தன் கலை வாழ்க்கையில் ஈடுபடவில்லை. 

இத்தனை ஆண்டுகாலமாக இல்லாமல் இன்றென்ன அக்கறை? என்ற தொனியில் இந்த கேள்வியை கேட்கவில்லை, இத்தனை ஆண்டுகால செயல்பாடுகளை சுயவிமர்சனம் செய்து கொண்டு, தன்னையும் சுயவிமர்சனம் செய்து கொண்டாலொழிய அவரின் “ இந்தியாவில் பெண்களுக்கான சரியான இடமென்பதை உறுதிப்படுத்தும் போராட்டம்.” நியாயமானதாக இருக்காது. அதோடு, இன்றும், திரை உலகம் பெண்களை சித்தரிக்கும் பாங்கு குறித்தும் அவருக்கு ஏதும் கண்டனங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கருணாநிதியோடு குஷ்பூவை ஜோடி சேர்க்கும் குமுதம் பத்திரிக்கைக்கு எதற்கு இந்த ……வேலை? குஷ்பூவை விமர்சிக்கும் அறிவுநாணயமுள்ள பிரச்சினை ஏதுமில்லையா? இதுதானா பிரச்சினை, பாலியல் ரீதியாக பெண்ணை தரம்தாழ்த்தி அவதூறு செய்வதுதான் தொடர்ச்சியாக இந்த சமூகம் கையாண்டு வரும் ஆயுதம். குஷ்பூவே கூறுவது போல அவர் ஒரு தாய், மனைவி.

அவரது சுற்றத்திற்கும், அவருக்கும் ஏற்படுத்தப்படும் மன உளைச்சல் குறித்து இந்த கழிசடை ஊடகத்திற்குத்தான் அக்கறையில்லையென்றால், இந்த பிரச்சினையில் குளிர்காய, இதோ வாய்ப்பென்று ஜல்லியடிக்க கிளம்பியிருப்பவர்கள், என்ன மசிரு விடுதலையை சாத்தியப்படுத்த போகிறார்களோ தெரியவில்லை.

காரல் மார்க்ஸின் ஒழுக்கத்தை ஆய்வு செய்வோருக்காக…..


லென்ஹென் டெமூத் என்ற பெண்ணோடு மார்க்ஸ் தொடர்ந்து அவதூறு செய்யப்படுகிறார்...பொதுவுடமை குறித்து பேசும்பொழுது, மார்க்ஸ் மட்டும் யோக்கியரா என்று கேட்கிறார்கள்.....
மார்க்ஸ் குறித்தோ ஹெலன் டெமூத் குறித்தோ ஜென்னியைவிட வேறு எவரின் சான்றிதழ் தேவை..

1861 மார்ச் 11 அன்று லூயிசா வெய்டெமையாருக்கு ஜென்னி எழுதிய கடிதம் இது, இதை வாசித்தால் டெமுத் மீது ஜென்னிக்கு இருந்த அன்பும், நம்பிக்கையும் தெளிவாக புலப்படும்.

குடும்ப பணிகளைப் பொறுத்தவரையில் ஹெலென்(டெமுத்) உறுதியாகவும், மனப்பூர்வமாகவும் என்றும் போலவே பணியாற்றி வருகிறாள். அவளைப் பற்றி உங்கள் கணவரிடம் கேளுங்கள். எனக்கு அவள் எத்தகைய பொக்கிஷமாக இருக்கிறாள் என்பது பற்றி அவர் கூறுவார். பதினாறு ஆண்டுகளாக வாழ்விலும், தாழ்விலும் அவள் எங்களுடன் இருந்து வருகிறாள்.”

இவரோடுதான் மார்க்ஸை இணைத்து பேசுகிறார்கள். அதற்கு சுட்டிக்காட்டப்படும் மேற்கோள்களில் ஒன்று மார்க்ஸின் கடிதம், மற்றொன்று ஜென்னியின் கடிதம்.

மார்க்ஸின் அந்த கடிதம் மார்ச் மாதம் 31ம் தேதியன்று எங்கெல்சுக்கு எழுதப்பட்டது. அதில் ‘ஒரு மர்மம்என்று அவர் குறிப்பிடுகிறார். அது குறித்து விரிவாக எழுதுவதாக கூறியிருந்தாலும், பின்னர் அது குறித்து எழுதவில்லை. ஏப்ரல் 20 முதல் 26 வரை தனது அருமை நண்பருடன் அவர் இருந்தார்.

ஜென்னியின் கடிதமாக மேற்கோள் காட்டப்படும் கடிதம் கீழ்க்கண்டவாறு பேசுகிறது

1851 கோடைக்கால துவக்கத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. எங்களது தொல்லைகளும், பிறருடைய தொல்லைகளும் அதிகரிக்க இது காரணமாக இருந்த போதிலும் இதை பற்றி இங்கு விபரமாக எடுத்துக் கூறவிரும்பவில்லை.”

1851 இல் எழுதப்பட்ட ஜென்னியின் கடிதம் டெமுத் மீதான கோபம் அல்லது மார்க்ஸ் மீதான சந்தேகத்தில் எழுதப்பட்டிருந்தால், 1861 இல் எழுதப்பட்ட கடிதம் டெமுத் மீது அத்தனை அன்பை வெளிப்படுத்தியிருக்குமா?

1851 இல் வீட்டில் ”ஒரு நிகழ்ச்சிஎன்று ஜென்னி குறிப்பிடுகிறார், அதே ஆண்டு மார்ச் மாதம் மார்க்ஸ் ஒரு கடிதத்தில் “மர்மம்என்று குறிப்பிடுகிறார்.

ஆனால், 1848 இல் மார்க்ஸ் ஜென்னி குறித்து சொன்னவைதான் கீழ்க்கண்டவை
ஜென்னி செய்த ஒரே குற்றம் பிரஷ்யாவின் ஒரு பிரபு குடும்பத்தில் பிறந்திருந்தும், தனது கணவனுடைய ஜனநாயக சிந்தனைகளை பகிர்ந்து கொண்டிருந்ததுதான்.”

ஜென்னியின் பிரியத்துக்குரியவராகவே இறுதிவரை ஹெலன் லெமூட் இருந்திருக்கிறார்...சுதந்திர காதல் போன்ற விவாதங்கள் போன்றவை ஜென்னிக்கு அதிர்ச்சி தரும் கருத்துக்களாகவே இருந்திருக்கின்றன..அப்படியிருக்க, லெமூட்டின் மீது சந்தேகம் இருந்திருந்தால் கடைசிவரை லெமூட்டின் மீது அன்பு கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறதா?

அதேவேளையில், ஜென்னி சிந்திக்க தெரியாத பெண்ணும் அல்ல...

மார்க்ஸின் எழுத்துகளை பிரதி எடுப்பதில் ஜென்னியும், லெமூட்டும் இணைந்தே பணி புரிந்திருக்கின்றனர்..

மார்க்ஸின் எழுத்துக்களில் ஏங்கல்ஸ் போலவே ஜென்னிக்கும், லெமூட்டுக்கும் பகுதி அளவில் பங்கு இருக்கவே செய்திருக்கிறது. அவர்களின் பங்கை அங்கீகரிக்காமல் நினைவு கூராமல் கடந்து போகும் போக்கு இருக்குமாயின், அவர்களின் பங்கையும் இணைத்து போற்ற வேண்டியது நமது கடமை அவ்வளவே...

லெமூட்டை தன் குடும்பத்தில் ஒருவராகவே பார்த்திருக்கிறார் ஜென்னி..ஜென்னியின் கோரிக்கையின் பெயரில் அவரின் குடும்ப கல்லறையில்தான் லெமூட்டின் உடல் புதைக்கப்பட்டிருக்கிறது..

மார்க்ஸின் மரணத்திற்கு பிறகு தனது மரணம் ஏங்கல்ஸின் பணிகளில் பங்கெடுத்திருக்கிறார் லெமூட்..ஒருவகையில் மார்க்ஸ், ஏங்கல்ஸின் பணிகளில் லெமூட்டின் பங்கும் இருந்திருக்கிறது.. ஏங்கல்ஸோடு லெமூட்டை இணைத்து பேசியவர்களும் இருந்திருக்கிறார்கள்...
தன்னுடைய குழந்தையின் தந்தை யாரென்று அறிவிக்க வேண்டியது லெமூட்தானேயன்றி...கட்டாயம் அறிவித்தேயாக வேண்டும் என்று கோருவது..ஆதிக்கமல்லாமல் வேறென்ன?
லெமூட்டின் குழந்தைக்கு யார் தந்தை என்ற ஆராய்ச்சியும்...தேவையற்ற ஒன்றென்றே தோன்றுகிறது...

அறிவிப்பதும், அறிவிக்காமல் இருப்பதும்...அது அந்த பெண்ணின் உரிமை,
=======================================
மார்க்ஸ் புனிதமானவர் என்ற பிம்பத்தை கட்டமைப்பதோ அல்லது காதலுக்கு புனிதம் கற்பிப்பதற்காகவோ இதை எழுதவில்லை. ஏற்கனவே அறிவிலேயே பிறந்து, அறிவிலேயே குளித்து, அறிவிலேயே உண்டு, உறங்கும் அறிவுஜீவிகள் இது குறித்து பேசியிருப்பார்கள். எழுதியிருப்பார்கள். அறிவார்ந்தோர் நமக்கு கொஞ்சம் அறிவு பிச்சையிட்டு, நான் தவறு செய்திருப்பின், தேவையற்று தொகுத்திருப்பின் எனக்கு கற்று கொடுங்கள் கற்றுக் கொள்கிறேன்..

இதை மார்க்ஸ் - அருணன் அவரது நூலை வாசித்தபடியே, இணையத்திலும் சில தரவுகளை சரிபார்த்து எழுதினேன்...மேலும் தரவுகளை படித்து முடிந்தால் Update செய்து கொள்கிறேன்...கற்றுக் கொள்கிறேன் நன்றி....

தொடர்புடைய இணைப்புகள்:
http://de.wikipedia.org/wiki/Helene_Demuthஹெலன் டெமூத்:மேலும் ஆதாரங்கள்போர்களை ஒழிக்கும் வழி

ஒரு நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்தை மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்தி, இறுதியாக முறியடித்து உடமை நீக்கம் செய்தபிறகு மட்டுமே போர்கள் சாத்தியமற்றதாகும். – லெனின்

சுயநல சக்திகள் மீது போதுமான அளவிற்கு பலவந்தம் செலுத்தப்பட்டாலொழிய அவர்களிடமுள்ளதை அவர்களாகவே விருப்பப்பட்டுக் கைவிட்டதாக இதுவரை யாரும் அறிந்ததில்லை. - அண்ணல் அம்பேத்கர்மூலதனத்தின் ஆட்சி அதிகாரத்தை வீழ்த்தாமல் அரசு அதிகாரத்தை இன்னொரு வர்க்கமான பாட்டாளி வர்க்கத்திற்கு மாற்றி அளிக்காமல்  ஏகாதிபத்திய போரிலிருந்து வெளியேறுவதும், ஜனநாயகமான பலாத்காரமில்லாத சமாதானத்தை அடைவதும் சாத்தியம் இல்லை. - லெனின்
புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதி என்ற முறையில் எனது கடமை ஓர் உலகக் கொலைக் காண்டத்தின் பயங்கரத்திலிருந்து மீளுவதற்கு ஒரே வழியான உலகப் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு தயார் செய்வதேயாகும். - லெனின்இரண்டு சாத்தியப்பாடுகள் மட்டுமே இருக்கிறது. ஒன்று புரட்சி யுத்தத்தை தடுக்கும்; அல்லது யுத்தம் புரட்சியை முன்னுந்தித் தள்ளும் – மாவோ