புதன், 6 ஆகஸ்ட், 2008

மறுபடியும் சொல்கிறேன், ரஜினிதான் தமிழனுக்கு தலைவர்!!!!!!!!!!

ஈழத்தில் நம் உறவுகள் இப்படி கொடுரமாக கொல்லபடுவதை கண்டு கொஞ்சமும் கவலை கொள்ளாமல் ரஜினி/சினிமா பைத்தியம் பிடித்து திரியும் தமிழனுக்கு ரஜினிதான் தலைவன்தமிழன் எப்படி செத்து மடிஞ்சாலும் சினிமா பைத்தியங்கள் இப்படித்தான் தன்னிலை மறந்து திரியும்.


உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்குன்னு சொல்லிட்டு இருந்தே, இப்பதானே தெரியுது அது ஆட்டு உயிருன்னு

 ஏண்டா! தலைவன் தலைவன்னுட்டு ஒரு ஆட்டின் தலையை எடுக்குறே, அவருக்கு எதுவும் வேணும்னா, அவருக்குதான் இமயமலை இருக்கே! பாபா இருக்காரே!! ராகாவேந்திரா இருக்காரே!!!

 நீ ஏண்டா ஒரு ஆட்டை கொல்லுரே, ஆடு என்னைக்காவது தன்னை வீணடிச்சுருக்கா????? 

ஆனா நீ உன்னையும் வீணடிச்சு, இந்த மண்ணையும் வீணடிச்சு, சுயமரியாதை இழந்து ஆன்மிக ரஜினியின் மூடபக்தனாக இருக்குறப்போ! 

உனக்கு ரஜினி தலைவனாகாம யாருடா தலைவரார்?

கூலித்தொழிலாளி போல் நடித்து கூலித்தொழிலாளியின் ஒரு நாள் கூலியை பிடுங்கும் இவனா உன் தலைவன்?  ???   ? ?


ஏண்டா ,எங்கேயாவது சூடம் காண்பித்து கொண்டே இருக்கணுமா? கோயில்லை கல்லை கண்டா சூடம் காண்பிக்கிறே! தெருவோரம் மலம் துடைத்த கல்லாயிருந்தாலும் கொஞ்சமேனும் குங்குமம் வைத்துவிட்டால் அதற்கும் சூடம் காண்பிக்கிறே!! படத்தாளுக்கு சூடம் காண்பிக்கிறே!!!

 நாய் கம்பத்தை கண்டா காலத்தூக்குது, நீ எதை கண்டாலும் கையத்தூக்குறே!! சூடம் காண்பிப்பதற்கு!!!!

உங்களுக்கு ரஜினி தலைவனாகாம, வேற எவண்டா தலைவனாவான்!?முத்தமிழ் அறிஞர், கலைஞர் தமிழனை குரல்வளையை மேலும் அருக்க , வாள் வழங்குகிறாரோ!!!!!!!!!!!!!

சிவாஜி படத்திற்காக நடந்த விருந்தில் ஒரு தொழில் நுட்ப கலைஞர் இறந்ததற்கு, ரஜினி வருத்தம் தெரிவித்ததாகவோ, இரங்கல் தெரிவித்ததாகவோ நாம் செய்தி படிக்கவில்லை, ஆனால், குசேலன் படம் கர்நாடகாவில் ஓட வேண்டும்,என்பதற்காக கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டாராம் ரஜினி,எதற்கு?

 

தயாரிப்பாளர்களுக்கு கேடு வந்துவிடக்கூடாது, போட்ட முதலுக்கு பங்கம் வந்து விடக்கூடாது. என்று ஒரு பொது நல்நோக்கோடு மன்னிப்பு கேட்டார் என்று சிலர் சப்பைக்கட்டு கட்டுவர்.

 

ஓகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்து அரசியல் பலன் தேடி கொண்டவர்கள் அரசியல்வாதிகளும் ரவுடிகளும்தான்.இதுஎல்லோரும் அறிந்தது  அப்படியிருக்க யாரிடம் வருத்தம் தெரிவித்தான் ரஜினிகாந்த்.

 

தமிழன் குடிக்க தண்ணியில்லாம செத்தாலும் சரி,எனக்கு நான் நடித்த படம் ஓடணும், என் முதலாளி நட்டப்படக்கூடாதுன்னு நினைக்கறவன் தலைவன்னா? பணம்போடறவன் முதலாளியா, அப்படத்தை ஓடவைக்கிறவன்/ரசிகன் முதலாளியா?

 

வச்சுக்கோ, அவர்(ன்)தான் உனக்கு தலைவனாக இருக்க தகுதியானவர். நீ ஏமாந்து கொண்டே இரு அவரு உன்னை ஏமாத்திக்கிட்டே இருப்பாரு


20 கருத்துகள்:

Bleachingpowder சொன்னது…

//முத்தமிழ் அறிஞர், கலைஞர் தமிழனை குரல்வளையை மேலும் அருக்க , வாள் வழங்குகிறாரோ!!!!!!!!!!!!!//

அதெல்லாம் ஒரு மண்ணாகட்டியும் இல்லை. தேர்தல்னு வந்தா ரஜினி முதல் எல்லா நடிகர்,நடிகைகளின் ஆதரவு வேனும் அவருக்கு. அதனால எந்த நடிகருக்கு விழா எடுத்தாலும் வந்து ஒரு வாளையும், புனைப்பெயரையும் கொடுத்து விடுவார். அதேப்போல் நடிகர் சங்கத்தில் உறுப்பினராய் ஒரு படத்தில் நடிச்சாலே அவர்களுக்கு கலைமாமணி பட்டம் வீடு தேடி வரும்

எம்ஜியாரில் துவங்கி எதாவது நடிகனோட முதுகுல ஏறிதான் அவர் முதலமைச்சர் ஆவார்.

btw, ஈழ தமிழ் மக்களுக்குகாக கருணாநிதி என்ன செய்தார். சட்டசபைல இலங்கை அரசை கண்டித்து தீர்மாணம் நிறைவேற்றினதை தவிர. இதை ரஜினி முதலைமைச்சரா இருந்தாலும் செய்வார்.

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு.

spacey சொன்னது…

romba nallaa irukku thozharae....ungal ezhuthukkalil ulla communisa niraththai konjam kuraithu nidharsanam endru ondrai neevir unarum poazhdhu dhaan unmai ennum pokkisham num kangalukku pulappadum..........edhirpaarppoadu
thilak.

பிரியமுடன் பிரபு சொன்னது…

என்ன சொன்னாலும் இந்த முட்டாள் ரசிகர்கள் திருந்த மாட்டார்கள்

பெயரில்லா சொன்னது…

எல்லாம் சுத்தப் படான்.

சதீஸ் சொன்னது…

மிகவும் பயனுள்ள பதிவு. ஒவ்வொரு தமிழனுக்கும் நல்ல பகுத்தறிவு வளர வேண்டும்...

Asfar சொன்னது…

I am not agree with this post, but i will accept below sentence becuse i dont like cinema, i never put my vote for cinema post..but Izo mudiva mattittan
என்ன சொன்னாலும் இந்த முட்டாள் ரசிகர்கள் திருந்த மாட்டார்கள்

பெயரில்லா சொன்னது…

unakku vekkama illai aduthavani pathi pesarakku.

yen, ulaga thamil thalaivernnu sollarare kalaignar, avaru ethavathu seithirukka vendiyathuthane ?

thiruvalluvar silai thirakka pechuvarthai pannavarkku, srilankan thamilarkalukkaka pakkathu manila thalaivarkaludan poi pesi irukka vendiyathuthane ?

ramadas, JJ, vaiko ellorum arasiyal panninangale thavira, yarum unmaiya nadakkala.

Rajiniya pathi pesuraye, yen ivangala pathi pesula ? Bayama ?

ithellam oru polappu.

சரவணன். ச சொன்னது…

சரியாக சொன்னீர்கள்
இதுல வேற அரசியலுக்கு வருவேன் டுபாக்கூர் விடவேண்டியது, இதுக்கு விஜயகாந்து எவ்வளவொ மேல்.

பெயரில்லா சொன்னது…

poda dubbukku. ni ennada pannune.

அருண்.இரா சொன்னது…

இல்ல , தெரியாம தான் கேட்குறேன் ..ஆ ஊ நா ரஜினி யை இழுக்குறீங்க .."நதி நீர் இணைப்புக்கு ஒரு கோடி தர்றேன் " எவன் சொன்னான் ?அத பத்தி ஒரு பய பேச மாட்டான்..கன்னட மன்னிப்பு பத்தி மட்டும் வாய் கிழிய பேசுவீங்க...
ஏன் யா ரஜினி வேலை ,மக்கள் சேவை இல்ல , He is an entertainer , அத அவரு நல்லா தான் செய்றாரு!!
இல்ல அவரு ஈழத்துக்கு குரல் கொடுத்தா ராஜபக்ஷே "ஆமாம் சாமி " நு கும்பிடு போட்டு இருப்பாரா ?

ரஜினி படம் வந்தா 1000 திரை கலைஞர்கள் வீட்ல அடுப்பு எரியுது ..உன் பதிவு - எவனோ ஒரு net provider(Airtel, reliance etc..) க்கு வெட்டி லாபம் ..அடுத்தவன குறை சொல்றத விட்டிட்டு ஆக்கபூர்வமா எதாவது பண்ணுங்க தோழரே !

ஈழம் - வலிகளின் உச்சகட்டம் ..எனக்கு அந்த காட்டம் அரசியல் வாதிக மேல இருக்கு !! நீங்களே நடிகர்களாக ஏத்தி விட்டு , அரசியல் ஆசை காட்டி ஆப்பு வச்சிட்டு அடுத்த பதிவ எழுத உட்காருவீங்க .
திருந்துங்கையா ...

பெயரில்லா சொன்னது…

என்ன செய்ய!! திருத்த முடியாதுங்க...

R.Bhagyaraj சொன்னது…

நண்பா முதலில் நாம் என்ன செய்தோம் என்று யோசிங்கள்......

ஈழத்தில் பிரச்னை என்றால் தமிழகத்தில் என்ன கசாப்(மட்டன்,சிக்கன்,மீன்) கடை விடுமுறை விட்டார்களா....இல்லை......அரசில்வதிகளே ஒன்றும் செய்யவில்லை....உயிர் என்றல் அனைவருக்கும் ஒன்றுதான்... உலகத்தில் யார் இறத்தலும் உயிர்தான்..சினிமா என்பது பொழுதுபோக்கு.உங்களுக்கு யாராவது பிடிக்கவில்லை என்றால் மனதில் வைத்துகொள்ளவும்..ரஜினி மட்டும்தான் நடிகார ?..................MGR இருதாளும் இப்படித்தான் இருக்கும்...

subra சொன்னது…

இவனுங்க ரஜினி காக்க தமிழன் என்ற
போர்வையில் உள்ளவங்கள் ,அதனால்
இவனுங்க கிட்ட எது சொன்னாலும் இப்படிதான்
கோக்கு மாக்கா பேசுவான் ,இவர்கள் தமிழர்களே
கிடையாது .

ஆகாயமனிதன்.. சொன்னது…

இப்படி தலைப்பு வச்சா தான் பல பைத்தியங்கள் படிக்கும் என்பது நிஜத்திலும் நிஜமே !
தைரியமா நிறைய எழுதுங்க...

நண்பன் சொன்னது…

நதி நீர் இணைப்புக்கு ஒரு கோடி தர்றேன் avar romba kastappatu sambathiththathu? illa.

பெயரில்லா சொன்னது…

தமிழனையும் நடிகனையும் திட்டிட்டா நீ பெரியார் ஆக முடியாது... இவ்ளோ வாய் கிழிய பேசுற நீயும் உன் இயக்கமும் ஈழத்தமிழருக்காக என்ன புடுங்குநீங்க.... வந்துட்டானுங்க பேசுறதுக்கு.... அவனவன் அவனவன் வேலைய மட்டும் பாருங்க டா... கேவலமா ஹிட்ஸ் வாங்குறதுக்காக ஈழத்தமிழர் பெயரை இனிமே இப்படி பயன்படுத்தாதே... உன்னால முடிஞ்சத செஞ்சுட்டு அப்புறம் ஊருக்கு உபதேசம் பண்ணுடா...

RAIT சொன்னது…

தமிழனை ஓன்று சேருங்கள் என்று பலர் தன் இதயத்தில் எரிகிற நெருப்பினை வார்த்தை கணைகளாய் தொடுத்துக்கொன்று இருக்கிறார்கள் .இவன் எனடான்னா என் தமிழ் உறவுகளை ஊருக்கு உபதேசம் என்று பழமொழி பேசிக்கொண்டிருக்கிறான் .இவனை முதலில் சுட்டு பொசுக்க வேண்டும். .இவனுக்கு என்ன தெரியும் என் ஈழத்தமிழர்கள் ,என் தமிளினச்சொந்தங்கள் பட்ட இன்னல்கள் ,கொடுமைகள் ,சீரழிவுகள் ,சித்ரவதைகள் .மாவீரர்கள் நம் ஈழத்தை மீட்டுக்க எத்தனை உயிர்களை ,எத்தனை குடும்பங்களை இழந்து தவித்துருப்பார்கள். ரத்த காட்டேரிகளுக்கு நீயும் துணை போனாயா உன்னை போன்று பல துரோகிகளின் நாக்கை இழுத்து வைத்து அறுக்க வேண்டும் .

maduraikkural சொன்னது…

தமிழனை ஓன்று சேருங்கள் என்று பலர் தன் இதயத்தில் எரிகிற நெருப்பினை வார்த்தை கணைகளாய் தொடுத்துக்கொன்று இருக்கிறார்கள் .இவன் எனடான்னா என் தமிழ் உறவுகளை ஊருக்கு உபதேசம் என்று பழமொழி பேசிக்கொண்டிருக்கிறான் .இவனை முதலில் சுட்டு பொசுக்க வேண்டும். .இவனுக்கு என்ன தெரியும் என் ஈழத்தமிழர்கள் ,என் தமிளினச்சொந்தங்கள் பட்ட இன்னல்கள் ,கொடுமைகள் ,சீரழிவுகள் ,சித்ரவதைகள் .மாவீரர்கள் நம் ஈழத்தை மீட்டுக்க எத்தனை உயிர்களை ,எத்தனை குடும்பங்களை இழந்து தவித்துருப்பார்கள். ரத்த காட்டேரிகளுக்கு நீயும் துணை போனாயா உன்னை போன்று பல துரோகிகளின் நாக்கை இழுத்து வைத்து அறுக்க வேண்டும் .

ஆத்திரக்காரன் சொன்னது…

என்னைப் பொறுத்தவரை ஈழத் தமிழனுக்குக் குரல் கொடுக்காதவன் தமிழன் அல்ல. அந்த வகையில் பார்த்தால், நெடுமாறன், வைகோ, தா. பாண்டியன், கொளத்தூர் மணி, சீமான், பாரதிராஜா, இன்னும் சிலர்..... இவர்களைத் தவிர எல்லாரும் ஏமாற்றுக் காரர்கள்.