செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

குஷ்பூவின் பெண்ணியம்??????

குமுதத்தின் கயமைத்தனம்தான் குஷ்பூவின் மீதான அவதூறு, அது கண்டிக்கத்தக்கதே. 

அதேவேளையில், ஏற்கனவே ஆணாதிக்க மனநிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்திய ஆண் மனதை மேலும், மேலும் பெண்களை ஒரு பாண்டமாக உருவகம் செய்யும் மனநிலைக்கு தள்ளும் திரைப்படங்கள்தான் இங்கே உருவாகின்றன.

அப்படியான பல திரைப்படங்களில் குஷ்பூவுக்கும் பங்குண்டு. இதே குஷ்பூவுக்கு தன் மீதான அவதூறு குறித்துதான் கோபம் வருகிறதேயொழிய பெண்கள்மீது இந்தியாவெங்கும் ஒடுக்குமுறையை கண்டு கோபம் வரவில்லை..வந்தால் நலமே...

தன்னுடைய கணவரை வைத்து அரைகுறை ஆடையுடன் பெண்களை நடிக்க வைத்து வெளிக் கொண்டு வருகிற திரைப்படம் குறித்து அவருக்கு எந்த குற்றவுணர்வும் கிடையாது.

பத்திரிக்கைகள் நடிகைகளை அரைகுறை ஆடையோடு வெளியிடும் படங்கள் குறித்தும் அவருக்கு விமர்சனம் இல்லை. இவருடைய படங்கள் அப்படி வந்ததும் தொடர்பாகவும் இவர் கவலைப்பட்டிருப்பாரா? அல்லது தன் படம் பத்திரிக்கைகளில் வருவது குறித்து மகிழ்ச்சியடைந்திருப்பாரா?

(குஷ்பூ சுயவிருப்பத்தின் பெயரில்தான் அப்படி நடித்தாரென்று கூறுவதாக நினைத்துக் கொள்ளக்கூடாது. )

கூடங்குளத்தில் நடந்த அரச வன்முறை, அதனூடாக பெண்கள் மீது நிகழ்ந்த வன்முறை குறித்தெல்லாம் குஷ்பூவுக்கு கோபம் வரவில்லை.

இந்தியாவெங்கும் வன்புணர்வுக்குள்ளாகும் பெண்கள் குறித்து இவருக்கு தகவல் கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அதை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அவருக்கு இருப்பதாய் ஊகம் செய்ய இயலவில்லை. (அப்படி ஆர்வம் வந்தால் நன்றுதான்).

குஷ்பூ ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதி கிடையாது என்பதை இந்நேரத்தில் நினைவில் நிறுத்துவோம்..

குறிப்பு: தோழர்கள் என் கருத்தில் ஏதேனும் பிழையிருப்பின் திருத்தவும்.

கருத்துகள் இல்லை: