புதன், 23 செப்டம்பர், 2009

கொலை வாளினை எடடா! தமிழா!

மையத்தில் பேராய காங்கிரசு கட்சியின் ஆட்சி, மாநிலத்தில் பெரியாரின் கொள்கைகளுக்கு காயடிக்கும், மக்களை தேர்ந்த ஏமாளிகளாக்கும் திமுகவின் ஆட்சி. மக்களுக்கு இலவசங்களை கொடுத்து, இனத்தை காட்டிக் கொடுத்து, வடநாட்டு பனியாக்களிடம் தமிழனின் வாழ்வுரிமையை பறித்து கொடுத்து, லஞ்சத்தை கூட்டிக்கொடுக்கும் கூட்டத்திடம் இனமானத்தை விட்டுக்கொடுத்து.............கொலைக்கார காங்கிரசின் கையிடம் கள்ள மௌனத்தோடு கள்ள உறவு கொண்டு மீண்டும் வருகிறது அதே கூட்டம், ஒட்டுச்சேர்க்க............

தமிழர்கள் முட்டாள்கள் ரொம்ப நல்லவர்கள்,எவ்வளவு அடித்தாலும் வலிக்காதது போல நடிப்பார்கள்.........என்ற ரீதியில் உலகத் தமிழ் மாநாடு.....இன்றைய சூழ்நிலையில் அந்த மாநாட்டை நிறுத்த முடியாவிட்டாலும்......தோழர்களே உங்கள் கோபத்தை தணித்து கொள்ளாதீர்கள்....பாவேந்தனின் வரிகளில் இருக்கும் செஞ்சினத்தை சிந்தைக்கு ஏற்றுங்கள். நாளை நம் நாள் என்று கனியும் வரை இளைஞர்களிடம் உங்கள் நியாயமான சினத்தை பரப்புங்கள்...........

வலியோர் சிலர் எளியோர் தமை

வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்

நிலையாம் எனும் நினைவா?

உலகாள உனது தாய்மிக

உயிர்வாதை யடைகிறாள்;

உதவாதினி ஒரு தாமதம் உடனே

விழி தமிழா!

கலையேவளர்! தொழில் மேவிடு!

கவிதைபுணை தமிழா!

கடலேநிகர் படை சேர்கடு

விடநேர்கரு விகள் சேர்!

நிலமேஉழு! நவதானிய

நிறையூதியம் அடைவாய்;

நீதிநூல்விளை! உயிர் நூல் உரை

நிசநூல் மிக வரைவாய்!

அலைமாகடல் நிலம் வானிலும்

அணி மாளிகை ரதமே

அவைஏறிடும் விதமேயுன

ததிகரம் நிறுவுவாய்!

கொலைவாளினை எடடாமிகு

கொடியோர்செயல் அறவே

குகைவாழ் ஒரு புலியே உயர்

குணமேவிய தமிழா!

தலையாகிய அறமேபுரி

சரிநீதி யுதவுவாய்!

சமமேபொருள் ஜனநாயகம்

எனவே முரசரைவாய்!

இலையே உண விலையே கதி

இலையே எனும் எளிமை

இனிமேலிலை எனவே முர

சறைவாய் முரசறைவாய்!

2 கருத்துகள்:

இறக்குவானை நிர்ஷன் சொன்னது…

தலைப்பினை பார்த்து பயந்தேபோய்விட்டேன்...

எழுத்து தொடரட்டும்.

Thevesh சொன்னது…

பல விடயங்களைச் சரியாக குறிப்பிட்டு
ள்ளீர்கள்.அந்த உங்கள் கருததுக் களோதோடு நானும் ஒத்துப்போகிறேன்.
பல்லாயிரம் வருடங்கள் அடிமையாக
வாழ்ந்தததால் அடிமைப்புத்தி அடிமனதில்
நன்றாகவேர் ஊன்றி விட்டது.அதனால்
கைஏந்தும் புத்தி இன்னும் மனதை விட்டுப்போகவில்லை.அரசாள்பவர் மாறி
யுள்ளார் அவ்வளவே.