செவ்வாய், 15 ஜூலை, 2008

விநாயகன் பால் குடிப்பானா?

பிள்ளையார் சிலைகள் பால் குடிப்பதாகக் கூறுவது சுத்த ஏமாற்று வேலை என்று டில்லி தேசிய அறிவியல் தொழில் நுட்பக் கவுன்சில் விஞ்ஞானிகளே தெரிவித்தனர்.விஞ்ஞானிகள் ஜகதீஷ் சந்திரா, மனோஜ் பதாரியா ஆகிய இருவரும் கோயில்களுக்குச் சென்று வந்த பிறகு இவ்வாறு தெரிவித்தனர். சிலைகள் பாலை குடிப்பது போல் தோன்றுவதற்கு விஞ்ஞான ரீதியாக மூன்று சாதனங்கள் உள்ளன. பாலின் புறப் பரப்பு அழுத்தம் (Surface Tension), புவி ஈர்ப்பு விசை, பாலின் ஒட்டும் தன்மை ஆகியவையே அவை.
எல்லா இடங்களிலும் ஒரு சிறிய தேக்கரண்டி மூலம் பாலை எடுத்து சிலையின் வாய் அருகே கொண்டு செல்கிறார்கள். கரண்டியை லேசாகச் சாய்க்கும்போது பால் கீழே ஒழுகுகிறது. அப்படி ஒழுகும்பால், கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு மெல்லிய திரையாக மேலே சொன்ன மூன்று காரணங்களால் கீழே விழுகிறது. பிள்ளையார் சலவைக் கல்லால் செய்யப்பட்டிருந்ததால் பக்தர்களின் கண்கள் ஏமாற்றப்படுகின்றன. பாலில் பனங்கற்கண்டை கலந்து அதை நிறமாக்கி சிலையின் வாயில் ஊற்றினால் பிள்ளையார் பால் குடிக்காமல் இருப்பது அம்பலமாகிறது என்றும் அந்த விஞ்ஞானிகள் கூறினர்.

கருத்துகள் இல்லை: