வெள்ளி, 11 ஜூலை, 2008

உலகில் விஞ்ஞானிகள் எல்லாம் இறை நம்பிக்கையாளர்களா?

உலகில் விஞ்ஞானிகள் எல்லாம் இறை நம்பிக்கையாளர்கள் என்று மார்தட்டுகிறது தினமணி. ஆனால், உண்மை நிலை என்ன? அமெரிக்காவின் நேச்சர் (Nature) இதழில் வெளிவந்த ஒரு தகவலை ராணி இதழ் (11.7.1999) வெளியிட்டதே.

கடவுள் நம்பிக்கையற்ற விஞ்ஞானிகள் 1914 இல் 72 விழுக்காடு;
1993 இல் 85 விழுக்காடு;
1999 இல் 90 விழுக்காடு என்று கூறியதே தினமணிகளுக்குத் தெரியுமா?
உலகில் கூட மக்களின் அறிவு வளர்ச்சியால் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் பெருகி வருகிறார்கள் என்பதைப் பல நாடுகள்பற்றி ஆய்வு செய்து, “Free Enquiry” (ஆக, செப்டம்பர் 2006) 25 நாடுகளில் கடவுள் நம்பிக்கையற்றவர்களின் எண்ணிக்கைபற்றி விரிவாக வெளியிட்டுள்ளதே!

இந்து ஏடு (16.9.2005) -ஒரு புள்ளி விவரம்
மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு கடவுள், மத நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதுபற்றி ஒரு கருத்துக் கணிப்பை தி இந்து வெளியிட்டது. நீங்கள் எந்த அளவு மதப் பற்றாளர்களாக இருக்கிறீர்கள் என்ற வினாவுக்கு,
@   ஓரளவு என 49 விழுக்காடும்,
@ பற்று இல்லை என 14 விழுக்காடும்,
@ அதிக மதப்பற்று உண்டு என்று 45 விழுக்காடும்
பதில் அளித்தனர் என்று கூறப்பட்டுள்ளதே - மதம் வளர்கிறது, பக்தி வளர்கிறது என்பது இதன் பொருளா?

கருத்துகள் இல்லை: