திங்கள், 17 நவம்பர், 2008

சட்டக்கல்லூரியில் சாதி வெறிக்கு அடங்கமறுத்து திருப்பி அடித்த மாணவர்கள்


சட்டக்கல்லூரியில் மாணவர்கள் தாக்கப்பட்ட நிகழ்வை சன் நியூஸ் தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. அந்த நிகழ்வு எனக்குள் அதிர்வை ஏற்படுத்தி இருந்தாலும், இதற்கு என்ன காரணமாக இருக்கும் அலுவலகத்திற்கு சென்றவுடன் செய்திகளை பார்த்து எதனால் இந்த வன்முறை தூண்டப்பட்டது என்று அறிந்து கொள்ள வேண்டும்,என்ற ஆவலோடு ரயிலில் சென்று அமர்ந்தேன், என் எதிரில் ஒரு தமிழன்பர் தினகரன் நாளிதழை புரட்டிக்கொண்டிருந்தார், அதில் நான் சன் நியூஸ் தொலைக்காட்சியில் பார்த்த நிகழ்வு நிழற்படமாக வந்திருந்தது, அவரிடம் செய்தித்தாளை கேட்டு பெற்று அந்நாளிதழில் வந்திருந்த செய்தியை வாசித்தேன், அப்பொழுது மெலிதாக காரணம் பிடிப்பட்டது, இருந்தும் குழப்பம் நீடித்தது. அலுவலகத்திற்கு சென்று செய்திகளை உலா வந்தேன், குழப்பம்..........அடித்தது யார்?.......அடி வாங்கியது?..........ஏன் அடித்தார்கள்? இந்த வன்முறைக்கு தூண்டுதலாக இருந்த காரணம் என்ன?...........எந்த செய்தித்தாளும், செய்தி தொலைக்காட்சியும் வெளியிட்டனவா?.................என்பது மிகப்பெரிய ஐயம்.

 

(பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிடுவதே இந்தியாவிலேயே அதிகமான வாசகர் வட்டம் கொண்ட நாளேடு எமது, அதிகமான பார்வையாளர்களை கொண்டது எம் தொலைக்காட்சி நிறுவனம் என்று விளம்பரம் தேடுவதற்குதானேயன்றி உண்மையான சமூக அக்கறையோடு அல்ல என்பது என்  திண்ணமான எண்ணம், அது பெருமளவு உண்மையும் கூட)

 

 அதற்கு பிறகு இணையத்தில் தொடர்ச்சியாக உலா வந்தும், செய்தித்தாள்களை வாசித்தும், தொலைக்காட்சி செய்திகளை பார்த்தும் உணர்ந்த செய்தியின் வெளிப்பாடுதான் இந்த கட்டுரை

 

தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றதாம், அதற்கு தங்களை தேவர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் மாணவர்கள் சுவரொட்டியோ(விளம்பரமோ) அச்சிட்டிருக்கின்றனர், அதில் சட்டமேதை அம்பேதகரின் பெயரை லாவகமாக தவிர்த்திருக்கின்றன்ர், அவர்கள் ஏன் அம்பேத்கரின் பெயரை பயன்படுத்த வேண்டும்? என்ற கேள்வி எழலாம், அம்பேத்கரை தலைவராக ஏற்றுக் கொள்ளச் சொல்லி யாரையும் நாம் கட்டாயப்படுத்த தேவையில்லைதான், ஆனால், விழா நடத்தியது (அம்பேத்கர்) சட்டக் கல்லூரி  மாணவர்களாயிற்றே, அங்கு தவிர்த்ததுதான் தவறு, பல நூற்றாண்டுகளாக சேரிகளில் சாதியின் பெயரால், தீண்டாமை கொடுமையால் முடங்கி அடிமைப்பட்டு கிடந்த ஒரு இனம் இன்று படித்து முன்னேறியிருந்தாலும் இன்று இந்த நவீன சேரிக்குள் ஆதிக்க சாதி திமிர் பிடித்த சாக்கடை  கண்ணோட்டத்தை, சாதித் திமிரையும் இன்றும் சந்திக்கத்தான் வேண்டியிருக்கிறது.

 

தன்னை ஈனப்பிறவியாக பார்க்கும் இந்த சமூகத்தால் தன் தலைவன்,     மாமேதை, உலக அறிவாளிகளில் ஒருவர், சட்ட மேதை, பாரத ரத்னா என பல புகழ் பெயர் சூட்டப்பட்டும் இன்றளவும் கீழ்ச்சாதியில் பிறந்தவனாக கீழ்ச்சாதியாக பாவிக்க படுகிறானே, இழிவுபடுத்த படுகிறானே என்ற சினம் வரத்தானே செய்யும். அதுதானே நியாமும்கூட. சுயமரியாதை உணர்வு வந்த பிறகு சாதி ஆதிக்கத்திற்கு அடங்க மறுக்கத்தானே செய்யும் அவன் உணர்வுகள், திருப்பி அடிக்கத்தானே தூண்டும்.

 

அடிப்படையில், கல்லூரி வளாகத்தில் தேவர்  ஜெயந்தி கொண்டாட அனுமதியளித்தது தவறு, அதற்காகத்தான் கல்லூரி முதல்வர் மீது முதல் வழக்கு பதியப்படிருக்க வேண்டும், (ஆனால் இந்த ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகள் இதை செய்ய மாட்டார்கள் என்பது திண்ணம்) முத்துராமலிங்கம் ஒன்றும் பொதுவான தலைவரில்லை (யாருக்காவது அவர் தலைவராக இருக்க தகுதியுடையவரா? என்பது இன்னொரு கேள்வி, அவருடைய தகுதியை ஓரளவாவது தெரிந்து கொள்ள இங்கே சுட்டவும்), இன்றைய நிலையில் ஆதிக்க சாதி திமிரின் அடையாளம்தான் முத்துராமலிங்கம். அந்த சாதி வெறியனின் அடையாளத்தை முன்னிறுத்தி சட்ட மேதை அம்பேத்கரை அவமானப்படுத்தியதை அந்த மாணவர்கள் அல்ல, அரசு தட்டிக் கேட்டிருக்க வேண்டும்,

 

அரசு தட்டி கேட்க வில்லை! மாணவர்கள் தட்டி கேட்டார்கள்!!!

இதில் அவர்களை கைது செய்வதற்கு பதிலாக இன்றாவது சுயமரியாதை உணர்வு எழுந்ததே, இன்னும் வீரியத்தோடு போராடு , சாதி ஒழியும் வரை போராடு என்று தட்டியல்லவா கொடுத்திருக்க வேண்டும் இது சாதி ஒழிப்பு அரசாக இருந்திருந்தால்..................................

 

இவ்வளவு சினம் கொண்டு தாக்கும்படிக்கு தூண்டிய அந்த சாதி ஆதிக்க உணர்வுகளைதான் முதலில் அரசு தட்டி கேட்க வேண்டும், பிறகுதான் அம்மாணவர்களை நோக்கி சட்டம் பாய வேண்டும்,

 இல்லையென்றால், சட்டம் எழுதியரை இழிவுபடுத்திய மாணவர்களை தட்டி கேட்டதற்காக மாணவர்கள் கைது என்றுதான் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட வேண்டும், அதுதான் பொருத்தமாகவும் இருக்கும்.

 

பக்கம் பக்கமாக செய்திகளை வெளியிட்டு, நாளும் நடந்த நிகழ்வை காட்சியாக காண்பித்து பணம் சம்பாதிக்கும் ஊடகங்கள் முதலில்

1)      சமூக அக்கறை பெறட்டும்  சொல்லட்டும்,

2)      சாதி சிக்கல்களை வெளிப்படையாக அலசட்டும் பிறகு

 

பிறகு சொல்லட்டும் இது காட்டு மிராண்டித்தனமா? அல்லது மனிதத்தன்மையா? என்று.

 

##  ஈழத்தமிழனுக்கு குரல் கொடுக்கும் போலித்தமிழனே நம் அருகில் வாழும் நம் சகோதரனை சேரியில் ஒடுக்குவதை முதலில் நிறுத்து!

## ஈழத்தமிழனுக்கு தமிழனாய் குரல் கொடுக்க சாதியின் கழுத்தறுத்து மனிதனாய் வா இன்னொருமுறை கருத்தறித்து!

15 கருத்துகள்:

Dr.Rudhran சொன்னது…

it is time we all point out facts to readers.
good post

பெயரில்லா சொன்னது…

Still now , there are several persons who does not know the reason for that threat . Please you readers must mail this post to your known persons so that they can know what is happening around them .

Robin சொன்னது…

வன்முறைதான் இந்த பிரச்சனைக்கு தீர்வு என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. ஏன் மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை வேறு வழியில் காட்டியிருக்கலாமே?

Unknown சொன்னது…

தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்த கல்பாக்கத்தைச் சேர்ந்த கோபால் நம்மிடம், “அந்தக் கொடூரத்தை நினைத்தாலே மனம் பதறுகிறது. என் கண்முன்னால் சிவப்பு கலர் டி-ஷர்ட் போட்ட ஒரு மாணவர், இன்னொருவரோடு பைக்கில் வருகிறார். அவர்களுக்கு செல்போனில் எங்கிருந்தோ உத்தரவுகள் வருகிறது. `நான் ஃபீல்டுலதான் இருக்கேன். ஒருத்தனையாவது போட்டுட்டு வந்துர்றேன்’ என்றபடியே காம்பவுண்ட் சுவரில் கத்தியைத் தீட்டுகிறார். அந்த இரண்டு பேரும் கத்தியோடு சுவர் ஏறிக் குதிக்கின்றனர். கேட்டின் உள்புறம் சில மாணவர்கள் கட்டைகளோடு நிற்கின்றனர். இந்த இரண்டு பேரும் கத்தியோடு உள்ளே பாய, அந்த மாணவர்கள் கட்டையால் விளாச ஆரம்பித்துவிட்டனர். கடைசியில் கத்தி கொண்டு போன மாணவர்களை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு போனார்கள். (- குமுதம் ரிப்போர்ட்டர் - 20.10.08)

மகிழ்நன் சொன்னது…

வன்முறைக்கு வன்முறை தீர்வில்லைதான்,

ஆனால் வன்முறையை கையில் எடுத்தவனெல்லாம் குற்றவாளியில்லை, மாறாக அந்த வன்முறையை கையிலெடுக்க தூண்டியவன்தான் முழுமுதல் குற்றவாளி.

இங்கு வன்முறை சாதி ஆதிக்கத்தினால் தூண்டப்பட்டுள்ளது. ஆதிக்கம் செலுத்தியவர்கள் ஆதிக்கம் ஆட்டம் கண்டு விடுமோ? என்று அலறுகிறார்கள் அவ்வளவுதான்.

இந்த வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்த எத்தனை பேர் திண்ணயத்தில் நடந்த கொடுமை, கீழ் வெண்மனியில் நடந்த கொடூரம்,கயர்லாஞ்சியில் நடந்த கொலைகள் மற்றும் நாளும் நடக்கும் சாதி அடக்குமுறை, தீண்டாமைக் கொடுமை இவற்றிற்கு எதிராக எதிர்வினை ஆற்றியிருக்கிறார்கள்.

என்னை பொருத்தவரை அந்த கொடுமைக்கு அழாத எவருக்கும் , இந்த வன்முறைக்கு அழ/குரல் கொடுக்க தகுதியில்லை.(ஈழ பிரச்சினை உள்பட)

சாதி ஒழிப்பில் ஈடுபடாத, ஈடுபாடு காட்டாத, வீட்டில் தன் மகளை/மகனை வேற்று சாதி பெண்ணை/ஆணை மட்டும் காதலித்து திருமணம் செய்து கொள்ளாதே எச்சரிக்கும் பெற்றோர் இருக்கும் வரை வன்முறை ஓயப்போவதில்லை, ஓயக்கூடாது.

மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக்கொள்ளாத வரைக்கும் இந்நகர வாழ்வு மிருகங்கள் வாழும் காடாகத்தான் காட்சியளிக்கும்(மிருகங்கள் சாதி பேதம் பார்ப்பதில்லை, தீண்டாமை கொடுமை செய்வதில்லை என்பது இங்கே மகிழ்ச்சிக்குரிய செய்தி மகிழ்ச்சிக்குரிய செய்தி)

அமைதி, மௌனம் எல்லாம் தேவையுள்ள சூழலில் அழகானவைதான், நானும் ஒத்துக்கொள்கிறேன். யார்தான் அமைதியை விரும்பமாட்டார்கள்? தேவையான சூழலில் அமைதியும், மௌனமும் கலைக்கபட வேண்டியவை.

இல்லையென்றால், கொடுமைக்கு ஆதரவான குரலாகத்தான் மௌனத்தை மதிக்க முடியும்.

ஆனால், அந்த சாதி அடக்குமுறைக்கு,ஏளன பார்வைக்கு நாளும் ஆளாகும்தோழர்களின் உணர்வை சொற்களில் வெளிப்படுத்த வேண்டுமானால் இப்படி சொல்லலாம்
“நாங்கள் சும்மா இருந்தாலும் இந்த நாடும், இந்த சாதி சமூகமும் எங்களை சும்மா இருக்க விடுவதில்லை”

கத்தியை எடுத்து குத்த வருபவனிடம் சமாதானம் பேசச் சொல்ல யாருக்கு தகுதி இருக்கிறது? ஏன் பேச வேண்டும்?


இந்நிகழ்வை பெரும் மனித உரிமை மீறலாக வெளிப்படுத்தும்,விளம்பரப்படுத்தும் ஜெயா/சன் தொலைக்காட்சிகள் எத்தனை சாதி அடக்குமுறை, தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக களமிறங்கின?

மக்கள்,
இப்பொழுது இந்நிகழ்விற்கு குரல் கொடுக்கும் அத்தனை பேரும் தமிழின விரோதிகள், சாதி ஒழிப்புக்கு விரோதிகள் என்பதை அழுத்தமாக உணர வேண்டும்.

இதே சாதி அடக்குமுறை நிகழ்ந்தால், ஆதிக்க சாதி நாளை அடிமை சாதியாகிப்போகும் என்பது திண்ணம்

Mangai சொன்னது…

It is painful to see violence getting justified like this even at educated surroundings.

Dr. Rudhran - you too...

It is shameful to see law students edulging in violence. How are these students going to do justice to their profession in future.


Basic problem is we are taught subjects at schools but not about affection, love, forgiveness, handling a situation smoothly, unity ...

மகிழ்நன் சொன்னது…

தோழி மங்கை அவர்களே,
இது வன்முறையை ஆதரிக்கும் பொருட்டு எழுதப்பட்ட பதிவில்லை.

வன்முறையை முரட்டுத்தனமாக எதிர்த்து சமூகச்சிக்கல்களை மேலும் சிக்கலாக ஆக்கக்கூடாது என்ற அக்கறை நோக்கத்திலேதான் எழுதப்பட்டது. (எய்தவனை விட்டுவிட்டு அம்பை மட்டும் நொந்தால் அம்பு என்ன செய்யும்).

சாதியால் தொடர்ந்து இழிவுபடுத்துபவனிடம்/கொடுமைப்படுத்துபவனிடம் அறிவுரை கூறுவதை விட்டுவிட்டு

சாதியால் ஒடுக்கபடுபவனிடம் மட்டும்

நீ அன்பு காட்டு, மன்னிக்க கற்றுக்கொள், சூழலை அமைதியாக கையாள் என்றால் எப்படி முடியும்.

எத்தனை குரல் கத்தியால் தாக்க முயன்ற தோழனையும் கைது செய்வதை குறித்து எழுந்தது, திருப்பி அடித்தவனை மட்டும் எப்படி கைது செய்யலாம்?

இந்தளவு வன்முறை எதிர்க்கும் கும்பலில் எத்தனை பேர் சாதியை எதிர்க்க தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் நம் கேள்வி.

முக்கியமாக,இங்கு மனிதனாக வாழ்வது போல் நடித்து கொண்டிருக்கிறார்கள், சாதி தீயில் மனித பிணங்களை வேக வைத்து உணவாய் தின்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மனிதர்கள் அல்ல மனித உருவில் வாழும் மிருகங்கள்.

காலம் காலமாக நம் சகோதரனைத்தான் சேரியில் ஒதுக்கி வைத்திருக்கிறோம் என்பதை பற்றி சிறிதும் அக்கறையில்லாமல், வெட்கமேயில்லாமல் தொலைக்காட்சியில் கல்யாண மாலையில் எஙகள் சாதியிலேயேஎங்களுடைய பிள்ளைக்கு பெண்/ஆண் வேண்டும்.

கல்யாண மாலை போன்ற நிகழ்ச்சிகளுக்கு தடை செய்ய குரல் கொடுங்கள்.

கல்விக்கூடத்தில் அன்பை போதிக்க கற்றுக்கொடுக்க சொல்லும் நீங்கள் முதலில் சாதி மறுப்பை, மத மறுப்பை இன்னும் அழுத்தமாக சொல்லப்போனால் கடவுள் மறுப்பை சொல்லிக்கொடுக்க முனையுங்கள், குரல் கொடுங்கள்.

இச்சமூக அமைப்பை மாற்ற தாமதமாகுமென்று உங்களுக்கு தோன்றினால், குறைந்த அளவில் உங்கள் வீட்டில் மட்டுமாவது சாதி ஒழிக்க துணை நில்லுங்கள். அது சாதி ஒழிப்பு போராளிகளுக்க் துணை நிற்கும்.

மீண்டும் சொல்கிறேன்.

எரிமலை வெடிக்கும் போது
சில மலர்கள் கருகத்தான் செய்யும்.

இது தோழர் மங்கை அவர்களுக்காக மட்டுமல்ல. சாதிய சகதியில் பன்றிகளாக உளன்று கொண்டிருக்கும் மொத்த சமூகத்துக்கும்தான்.

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு தோழர்,

அன்று அவனுக்கு கல்லூரி இல்லை (பாரதி கண்ணனுக்கு...)ஆனால் அவன் எதற்க்கு கல்லூரி வந்தான் என்பதை யாராவது சொல்லமுடியுமா??

Mangai சொன்னது…

அம்பேத்கர் வன்முறை தான் தீர்வு என்று நினைத்து இருந்தால் இன்று நீங்கள் குறிப்பிடும் பிரிவுகளில் எத்தனை பேர் இன்றைய உயர்வு நிலைக்கு வந்திருப்பார்கள்.
அந்த காலக் கட்டத்தில் எந்த மட்டத்திலும் பெரிய அளவு ஆதரவு எதுவும் இல்லாமல் கிடைத்த சிறு ஆதரவை வைத்தே இவளவு
பெரிய சாதனை நிகழ்த்தி உள்ளார்.
அன்று சண்டையில் ஈடுபட்டு அடித்தவர்களும் அடி வாங்கியவர்களும் படித்து முன்னேறியதற்கு காரணம் படிப்பா அல்லது வன்முறையா?
தலைவர்கள் காட்டிய வழி விடுத்து நாம் வன்முறையை கையில் எடுத்து அதற்கு ஒரு நியாயம் வேறு சொல்லிக் கொள்கிறோம்.

சட்டம் பயிலும் மாணவர்களுக்கே சட்டம் மூலம் தீர்வு காணும் நம்பிக்கை இல்லை. பின் ஏன் சட்டம் பயில வேண்டும். ஜாதி கட்சிகளின் அடியாளாகப் போய் வன்முறை கொண்டு தீர்வு காண வேண்டியது தானே.

நாம் நியாயப் படுத்த நினைத்தால் காந்தியின் கொலை கூட நியாயம் ஆகி விடும்

ஜாதி யை எதிர்க்கும் எத்தனை பேர் ஜாதி சார்ந்த சலுகை தேவை இல்லை என்று கூறி அது இன்றும் போய் சேராத நிலையில் இருப்பவர்களுக்கு கொடுக்க தயாராக இருக்கிறார்கள்( atleast in thier own caste).
நீங்கள் உங்கள் பிள்ளைக்கு ஜாதி சார்ந்த சலுகை வேண்டாம் என்று எழுதி கொடுப்பீர்களா? அது ஒடுக்கப் பட்டவர்களுக்கு போய் சேரட்டுமே.

அதிகம் படிக்காதவர்கள் ஆயுதம் எடுத்து வன்முறை செய்கிறார்கள் என்றால் படித்த பலர் எழுத்து மூலம் பாதுகாப்பு வளையத்துக்குள் அமர்ந்து கொண்டு தூண்டுகோலாக அமைவது சரியா?

I dont intend to hurt anyone's feelings. But I strongly beleive Technology, education, freedom is misused to promote castisim , groupism and violence with regards to that.

Mangai சொன்னது…

One doubt.

How the incident was shot in video camera and sent to media or
Was it by one of the students who was in the spot or someone from media or other who were already aware about something like that and was present there readily?

மகிழ்நன் சொன்னது…

தோழி மங்கை அவர்களே!
நம் ஆதங்கமெல்லாம் திண்ணயத்திற்காக எழாத இழவு ஊடகங்களின் குரல் இப்பொழுது மட்டும் ஒலிப்பது ஏன்?என்பதுதான்.

உண்மையறியும் குழு சென்று கண்டறிந்ததை லக்கிலுக் கீழ்க்கண்ட பதிவில் இணைத்துள்ளார், ஒரு முறை சென்று வாசிக்கவும்.

http://www.luckylookonline.com/2008/11/blog-post_19.html

இங்கு வன்முறை திணிக்கப்பட்டுள்ளது.

என்ன வன்முறைக்கு வித்திட்டவர்கள் வன்முறைக்கு பலியாகியிருக்கிறார்கள் அவ்வளவுதான்.

அமைதியான வழியில் ஏன் போராடவில்லை என்று கேட்பதெல்லாம் சரிதான், அன்றைய சூழலில் என்ன வகையான அமைதி வழியில் போராடியிருந்தால் நல்லாயிருந்திருக்கும் என்று தோழர் மங்கை தெரிவித்தால் நன்றாயிருக்கும்.

இந்திய அதிகார அமைப்பு எவ்வகையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறதுஎன்பதற்கு திண்ணியக் கொடுமைக்கான தீர்ப்பை வாசிக்கவும்.

http://www.keetru.com/dalithmurasu/nov07/sathiyachandran.php

என் உள்ளம் ஏனோ இந்த அதிகார அமைப்பு தகர்த்து, புது சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்திலே நாளுக்கு நாள் வலுக் கொள்கிறது.

கண்டன குரலை, எதிர்ப்புக் குரலை வன்முறை கொண்டு தடுக்க நினைத்தால் அடக்கியாளப்படும் வர்க்கம் எத்தனை நாளைக்கு பொருமையோடு காத்திருக்க வேண்டும் என்பதை மங்கைதான் தெரிவிக்க வேண்டும்.

Mangai சொன்னது…

Sorry. I couldn't get back immediately.

மகிழ்நன் அவர்களே, உங்கள் ஆதங்கம் புரிகிறது.

இந்த உலகம் மிகப் பெரியது. அதில் நீங்கள் குறிப்பிடும் மக்கள் அவர்கள் மரியாதையைய் பெற குறிப்பிட்ட ஒரு சில ஜாதி வெறியர்களோடு போரிட்டு நேரத்தை யும் உழைப்பையும் செல விடாமல் படித்து முன்னெருவதே விடியலுக்கான வழி.


யோசித்துப் பாருங்கள். சாலை, பொதுக் கழிப்பிடம், நாம் பணி புரியும் அலுவலகம் என்று பல இடங்களிலும் சுத்தம் செய்யும் தொழில் செய்யும் ஒரு குறிப்பிட இன மக்களின் வீட்டில் இருந்து ஒருவர் மருத்துவம், தொழில் நுட்பம், சட்டம் அல்லது வேறு தொழில் நுட்பமோ படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு சந்தோசமான விஷயம். ஆனால் படிப்பில் கவனம் செலுத்துவது விட்டு எதிர்கொள்ளும் சிறு சிறு தடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பை க் கோட்டை விட்டால் அவன் தலைமுறை முன்னேறுவது எப்படி?

என்ன செய்வது என்ற உங்கள் கேள்விக்கு என் பதில்:
பிற ஜாதிகளின் எதிர்ப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நேரம், உழைப்பு என்று வீணாக்கும் நேரத்தில் தன்னை தான் முன்னேற்றும் முயற்சியில் முழு மூச்சாக உழைக்க வேண்டும்.
ஜாதியில் ஏற்கனவே முன்னேறியவர்கள் கீழ் நிலையில் இருப்பவர்களுக்கு உதவ வேண்டும். ஒரு குழு அமைத்து செயல் பட வேண்டும். தமிழ் நாட்டில் முடிந்தால் நாட்டில் இருக்கும் அனைத்து தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களில் முன்னேறியவர்கள் பட்டியல் தயாரித்து அவர்களை தேவைப் படும் போது அணுகி உதவி பெறலாம்.
அடுத்த ஜாதியை வெறுக்கும் பேச்சுக்கள் எழுத்துக்களை புறக்கணித்து சொந்த ஜாதி மனிதர்களை முன்னேற்றும் ஆக்க பூர்வ வழிகளில் இறங்குவது தான் பலன் தரும்.

உதாரணமாக, இரட்டை குவளை முறையை எதிர்த்து போராடிக்கொண்டே இருப்பது விட்டு,
தாங்களே ஒவ்வொரு கிராமத்ிலும் ஒரு தொழில் தொடங்கி அதில் காப்பி ,டீ முதல் அனைத்து பொருளும் கிடைக்கும் ஒரு பல் பொருள் அங்கா டி யாக இருக்குமாறு தொடங்கச் சொல்லுங்கள். அது எல்லா ஜாதிக்கும் பொதுவானதாக இருக்கட்டும். ஜாதி வெறி இல்லாத பிறர் வந்து செல்வர். மேல் ஜாதி வெறிய ர்கள் தாழ்த்தப்பட்ட வரை ஒதுக்குவது போக இவர்கள் அவர்களை புறக்காணிப்பதே அவர்களுக்கு நல்ல தண்டனை.
உலகம் பெரியது. ஒரு சில வெறியர்களை எதிர்த்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கையை வீணாக்கூவதில் என்ன பயன்?


நல்லா யோசித்துப் பாருங்கள், அந்த சட்ட கல்லுூரி இளைஞர்கள் அடித்தது ஜாதி வெறியர்களைய்யா?
இல்லை தங்கள் வாழ்க்கையை. தங்கள் முன்னேற்றததை நம்பி இருக்கும் தங்கள் குடும்பத்தின் நம்பிக்கையை.
போலீசில் கைது ஆகி குற்றம் சட்டப் பட்டு விட்ட அவர்கள் எதிர்காலத்தில் மேல் படிப்பு
உத்தியோகம் என்று வரும் போது இது ஒரு பெரும் மு ட்டு கட்டையாகும் என்பது மறந்து விட்டு இப்படி ஒரு காரியததை செய்தது முட்டாள்தனம்.

Instead, they could have taken help from media, human rights commission, law etc. There are so many sources to help.

ஜாதி சார்ந்த ஒரு விழாவில் அம்பேத்கர் பெயர் இடம் பெற்றால் என்ன இல்லாவிட்டால் என்ன? அம்பேத்கருக்கு நாம் அங்கீகாரம் தேடித் தர வேண்டுமா என்ன? அவருக்கான அங்கீகாரம் அவர் செயல் மூலம் எப்போதோ கிடைத்தயிற்று. அவர் என்ன விரும்பினாரோ அதை செயல் படுத்துவது தான் இப்போது நாம் அவருக்கு செய்யும் கைமாரு. அதை விடுத்து அழைப்பிதழலில் பெயர் போடவில்லை, சிலை சேதப் படுத்தினார்கள் என்று ஏதாவது ஒரு காரணம் கொண்டு வன்முறை செய்தால் சமுதாயத்தின் வெறுப்பு தான் மிஞ்சும்.

பெயரில்லா சொன்னது…

palaki paar paasam theriyum moothi paar veeram thereiyum.THEVAR.
nee ammpulanna then mavattathula vanthu soluda putta payala.....

மகிழ்நன் சொன்னது…

பெயரில்லா.........ஆண்பிள்ளை அவர்களே.........உங்கள் பெயர் முகவரி சொல்லும் ஆண்மை இல்லையே........என்னுடைய தகவல்தான் அங்கே அப்படியே தரப்பட்டிருக்கிறதே

aarthy சொன்னது…

intha vanmurail pangettra oru thozharudan nan pesinean.. avarathu karuthil enakku udanpaadu irunthathu.. saathi veri konda thevargalai thandippathil, thavaru illai..
aanal sattak kalluri manavargalea. sattathai kail eduthathu varuthap padavendia seithi.. ne entha aauthathai edukka vendum ena un ethiri mudivu seikiran endravar mavoo.. sattam enkira aayutham kaiil irukkum bothu, matra aauthathiru, nam nattil mathippu illai..