திங்கள், 26 அக்டோபர், 2009

நாம் தமிழர்கள்............?

ஒரே மொழிதான்

ஆனாலும்-

நீயும் நானும் பேசிக் கொள்வதில்லை.

ஒரே ஊர்தான்

ஆனால்-

நீயும் நானும் உறவாடிக் கொள்வதில்லை

ஒரே பண்டிகைதான்

ஆனால்-

நீயும் நானும் பண்டம் பகிர்ந்து கொள்வதில்லை

ஒரே மதம்தான்

ஆனால்-

நீயும் நானும் மன்னித்துக் கொள்வதில்லை...

நம் இடையினில் இருப்பது

சாதி தோழா.

நன்றி:விடுதலை வேட்கை- வெற்றி வேந்தன்

2 கருத்துகள்:

ரோஸ்விக் சொன்னது…

அருமை. வாழ்த்துக்கள் நண்பரே!

http://thisaikaati.blogspot.com

Thevesh சொன்னது…

நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.