ஞாயிறு, 24 ஜனவரி, 2010

சிந்திச்சிக் கேட்டுக்கடா

சினிமாத்தனமா யோசிச்சி

சீரழிஞ்சு போரவனே

சிலவேனும் சொல்லுறத

சிந்திச்சிக் கேட்டுக்கடா

வாழ்க்கையில் வசந்தமுன்னு

வாலிபத்த சொல்லுவாங்க நீ

வாலிபத்த வந்தடஞ்சும் உன்

வரலாறா என்ன செய்வ

வாழும் சமூகத்தில்

பாழும் சாதி இருக்கயிலே நீ

காதல் மோகத்தில் உன்

காலத்த கழிப்பாயா?

இனத்துக்காக ஒரு போரு

ஈழத்துல நடக்கியில

இயற்கையை வர்ணிச்சே உன்

இலக்கியத்த படைப்பாயா?

தமிழனின் தன்மானம்

தரக் குறைவா போகும் போது நீ

தலைவனா ஆகவே

தனி இயக்கம் அமைப்பாயா?

அரசியல் அசிங்கங்கள் மக்கள்

அறியாதிருக்கும் போது நீ

அரசாங்க வேலைக்காக

அலைந்து திரிவாயா?

பலகாலமான இக்கழிவை உன்

காலத்தில் கழுவாம

கல்யாணம் கட்டிக்கிட்டு

காசு பணம் சேர்ப்பாயா?

வாழ்க்கையில வசந்தமுன்னு

வாலிபத்தச் சொல்லுவாங்க நீ

வாலிபத்த வந்தடஞ்சும் உன்

வரலாறா என்ன செய்வ.

நன்றி: விடுதலை வேட்கை, வெற்றி வேந்தன்

கருத்துகள் இல்லை: