வியாழன், 13 நவம்பர், 2008

அக்கராயன் முனைகளில் சிறிலங்கா படையினர் - விடுதலைப் புலிகள் மோதல்: 32 படையினர் பலி; 45 பேர் காயம்

அக்கராயன் முனைகளில் சிறிலங்கா படையினர் - விடுதலைப் புலிகள் மோதல்: 32 படையினர் பலி; 45 பேர் காயம்
[வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 12:38 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
அக்கராயனில் உள்ள முட்கொம்பன் மற்றும் கோணாவில் பகுதிகளில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் 32 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 45 பேர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

முட்கொம்பன் பகுதியில் நேற்று புதன்கிழமை காலை முதல் மாலை வரை சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது.

இதில் 20 படையினர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர்.

இதேநேரம், அக்கராயன் கோணாவில் பகுதியில் முன்நகர்வை மேற்கொண்ட சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்று முற்பகல் 10:00 மணிக்கு செறிவான எறிகணை மற்றும் கனரக சூட்டாதரவுடன் படையினர் முன்நகர்வுத் தாக்குதலை நடத்தினர்.

இம்முன்நகர்வுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் தீவிரமாக நடத்தினர்.

இதில் 12 படையினர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்தனர்.

கடந்த ஏழு நாட்களில் இப்பகுதியில் நடைபெற்ற மூன்றாவது பெரும்மோதல் இது என்று விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

http://www.puthinam.com/full.php?22ImUcc3oV24dB1e202AOU4d3YcU0ag6D2e2HMC3b34Aoe

கருத்துகள் இல்லை: