வியாழன், 13 நவம்பர், 2008

இதுதான் ‘ரா’

ராஉளவு நிறுவனம் பற்றி வெளிவந்துள்ள மற்றொரு அதிர்ச்சியான செய்தி:

பிரதமர் அலுவலகத்தில் பல்வேறு உளவு மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது ராஎன்று அழைக்கப்படும், ‘ரிசர்ச் அண்ட் அனலிசஸ் விங்க்’. இதில், துணை இயக்குனராக இருந்து வந்தவர் தேவன்சந்த் மாலிக். அவர் பற்றிய சந்தேகத்துக்கு இடமான தகவல் கள் வரவே, அவரைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தபோது, 2005 ஆம் ஆண்டு மே மாதம் தலை மறைவானார்.

கேபினட் செயலகத்திலுள்ள, ‘ஏவியேஷன் ரிசர்ச் சென்டர்இயக்குனர் அனுஜ் வரத்வாஜ், புது டில்லி லோதி காலனி போலீஸ் நிலையத்தில், மாலிக் தொடர்பாக அப்போது புகார் பதிவு செய்தார். போலீசாரும் தேடி வந்தனர். மேற்கு வங்க மாநிலத்தில், ‘24 பர்கானாமாவட்டத்தைச் சேர்ந்தவர் மாலிக் என்று, அவர் பற்றிய அரசு பதிவேட்டில் விவரம் இருந்தது. அங்கு போய், அவர் முகவரியில் விசாரித்தபோது தான், அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதே போலீசுக்கு தெரிந்தது.

இந்த விஷயத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ரகசியம் காத்து வந்தனர். ஆனால், போலீஸ் நிலையத்துக்கு விஷயம் சென்றதை அடுத்து, திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத் துவங்கி விட்டன. பிரதமர் அலுவலகத்தில் டிசிஎன்று செல்லமாக அழைக் கப்பட்டு வந்தவர் தேவன்சந்த் மாலிக். 1999 ஆம் ஆண்டில் இருந்து 2005 ஆம் ஆண்டு மே மாதம் வரை பணியாற்றி இருக்கிறார். அப் போது, அவர் பற்றி விசாரணை நடக்கிறது என்று தெரிந்ததும், திடீரென காணாமல் போய் விட்டார். இப்போது அவர், ‘தலை மறைவானவர் என்று பிரகடனப் படுத்தப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சகம் இது தொடர்பான அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் முக்கிய அலுவலகங்களில், உளவு பிரிவுகளில் உளவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது புதிதல்ல. கடந்த 2004 ஆம் ஆண்டில் ரா உளவுப் பிரிவின் இணைச் செயலர் ரவீந்தர் சிங் என்பவர் அமெரிக் காவுக்கு முக்கிய ஆவணங்களுடன் தப்பியோடிவிட்டார். கடந்த 2002 ஆம் ஆண்டில், பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர் மாளிகையில் உளவு வேலை பார்த்ததாக 12 ஊழியர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. கடந்த 1985 ஆம் ஆண்டு, “கூமர் நாராயணன் உளவு சதி வழக்குபரபரப்பானது. இவர்கள் இப்போது, கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

செய்தி: தினமலர்ஜுன் 14, 2007.

http://www.keetru.com/periyarmuzhakkam/jun07/raw.php

கருத்துகள் இல்லை: