வியாழன், 13 நவம்பர், 2008

கண்டி வீதியை வல்வளைக்க முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது முறியடிப்புத் தாக்குதல்: 45 படையினர் பலி 100 பேர் காயம்

கண்டி வீதியை வல்வளைக்க முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது முறியடிப்புத் தாக்குதல்: 45 படையினர் பலி 100 பேர் காயம்

[வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 12:19 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

பணிக்கன்குளம், கிழவன்குளம், பழைய முறிகண்டி பகுதிகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு மீது தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதல் நடத்தினர். இதில் 45 படையினர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். படையினரின் உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

 கண்டி வீதிக்கு மேற்காக இருந்து கண்டி வீதியை வல்வளைக்கும் நோக்கில் பணிக்கன்குளம், கிழவன்குளம், பழைய முறிகண்டி பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை (06.11.08) பிற்பகல் 12:00 மணிக்கு சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியவாறு முன்நகர்வுத் தாக்குதலை மேற்கொண்டனர்.

 இம்முன்நகர்வுத் தாக்குதலுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை (07.11.08) பிற்பகல் 3:30 நிமிடம் வரை நடத்தப்பட்டது.

 இதில் 45 படையினர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

 இத்தாக்குதலின் போது படையினரின் இரு உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

 ஆர்பிஜி - 01

 

ஆர்பிஜி எறிகணை - 01

 

புறப்பலர் - 01

 

ரி-56 ரக துப்பாக்கிகள், படையப் பொருட்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

 

கைப்பற்றப்பட்ட இரு உடலங்களும் சிறிலங்கா படையினரிடம் கையளிப்பதற்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கடந்த சனிக்கிழமை (08.11.08) ஒப்படைக்கப்பட்டது.

 

இந்த உடலங்களை புதுக்குடியிருப்பில் வைத்து விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிறுவனங்களின் இணைப்பாளர் கு.பாவரசன் கையளித்தார்.

 இதேநேரம், முட்கொம்பன் நோக்கிய சிறிலங்கா படையினரின் இரு முனைகளிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

 கடந்த புதன்கிழமை காலை தொடக்கம் மாலை வரை முட்கொம்பன் பகுதியை வல்வளைக்கும் நோக்கில் சிறிலங்கா படையினர் சரமாரியான பல்குழல் வெடிகணை தாக்குதல், ஆட்லெறி எறிகணைத் தாக்குதல் மற்றும் கனரக சூட்டாதரவுடன் முன்நகர்வினை மேற்கொண்டனர்.

 இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதலை நடத்தி படை நகர்வினை முறியடித்தனர்.

 இதில் 10 படையினர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: