சனி, 8 டிசம்பர், 2007

கடவுள் பற்றி காமராசர் - அதிகம் அறியப்படாத செய்தி- சொன்னவர் திரு. சீர்காழி பெ. எத்திராஜ் (முன்னாள் மேலவை உறுப்பினர்)

தலைவர் காமராசர் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் வந்த நேரத்தில் ஒரு கிராமத்தின் பாழடைந்த கோயிலைப் பார்த் தார். அந்தக் கோயில் பழம்பெருமை வாய்ந்தது. ஆனாலும், சிதிலமடைந்து கிடந்தது. சுற்றுப்புற மதில்கள் உடைந்து பிரகாரம் திறந்து கிடந்தது. அங்கங்கே ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. கோயில் கோபுரத்திலெல் லாம் மரம், செடி, கொடிகள் வளர்ந்து கிடந்தன. கோயில் குருக்கள் எப்போதாவது வந்து பூஜை செய்து மணியடிப்பார்.சற்றும் எதிர்பாராமல் தலைவர் கோயிலுக்குள்ளே போய்விட்டார். சுற்றியிருந்த நாங்களனைவரும் அவருடன் சென்றோம். நான் கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திகன். இது தலைவருக்கும் தெரியும். தலைவர் கோயில் வாசலில் இருந்த கல்வெட்டுகளை யெல்லாம் பார்த்தார். புதராக மண்டிக்கிடந்த சாசனங்களையெல்லாம் துடைத்துவிட்டுப் பார்த்தார். பலிபீடம், கொடிமரம், நந்தி இவைகளிடமெல்லாம் போய் நின்று உற்றுக் கவனித்தார். இவரது ஒவ்வொரு செய்கையும் கட்சிக்காரர்களுக்கு வியப்பாயிருந்தது. கோயிலுக்கு வந்து உள்ளே சாமி கும்பிடப்போகாமல், எது எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறாரே என்று மற்றவர்கள் பேசிக் கொண்டனர்.ஆனால், எனக்கு அவரைப்பற்றி நன்றாகத் தெரியும்,

கோயில்களில் கொடுக்கும் பிரசாதங்களை வாங் கிக் கொள்வார். விபூதி பூசிவிட்டால் மறுக்கமாட்டார். பரிவட்டமும் கட்டிக் கொள்வார். தீபா ராதனையைத் தொட்டுக் கொள் வார். கோயிலை விட்டு வெளியில் வந்த மறு நிமிடமே பழம், தேங் காய் மூடி, மாலைகளை யார் பக் கத்திலிருக்கிறார்களோ அவர்களிடம் கொடுத்துவிடுவார்... விபூதி, குங்குமத்தை வீட்டுக்கு எடுத்துப் போகமாட்டார். பையில் பத்திரப் படுத்தவும் மாட்டார். அதற்குப் பெரிய முக்கியத்துவமும் கொடுக்க மாட்டார். கேட்டால், “கோயில்ல செய்ற மரியாதையை வாங்கிக்கணும் அதுதான் மனுஷ நாகரி கம். குருக்கள், அறங்காவலர், ஊர் ஜனங்க மனசு புண்படக் கூடாதில் லியா.... அதுக்கு மேல அதில ஒண்ணுமில்லே...!என்பார்.தலைவர்

இந்தக் கோயிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்தக் கோயிலின் குருக்களும், அறங்காவலரும் வந்துவிட்டனர். பிரகாரத்தைச் சுற்றிவந்த தலைவர், குருக்களைப் பார்த்து,

இந்தக் கோயிலக்கட்டி எவ்வளவு காலமாச்சு...?” என்றார்.

குருக்களும், நிருவாகிகளும் பதில் சொல்ல முடியாமல் விழித்தனர்.

ஏன்ய்யா... குருக்கள்.... நீங்க எவ் வளவு காலமா இந்தக் கோயிலுக்கு மணியடிச்சிகிட்டு இருக்கீங்க.... இந்தக் கோயில பத்தின தல வரலாறேஉங்களுக்குத் தெரி யாதா...? எந்த வருஷத்து வண்டி? எத்தனை கிலோமீட்டருக்கு எவ்வளவு பெட்ரோல் ஆகும்னு தெரியாம, ஒரு டிரைவர் அந்தக் காரை ஓட்டலாமான்னேன்?” என்று காமராசர் ஆரம்பித்ததும் குருக்கள் உள்பட எல் லோரும் ஆடிப்போனார்கள்.

தலைவரே மேலும் தொடர்ந்தார். இந்தக் கோயிலக் கட்டி எண்ணூத்து எழுபது வருஷத்துக்கு மேலாகுது. சோழமாதேவி தானமா கொடுத்த இறையிலிநிலங்கள்தான் இந்தக் கோயில சுத்தி இருக்குது. இந்த ஊரும், இந்தத் தாலுக்காவுமே இந்தக் கோயில் சொத்துதான். அதிலே ருந்து வர்ற வருமானத்துலதான் சாமிக்குப் பூஜை, புனஸ்காரமெல்லாம் பண்ணணும். குத்தகைதாரர் கள் அளக்கிற பகுதி நெல்லை வாங்கித்தான் சாமியாடிகளுக்கும், தேவரடியார்களுக்கும், பூக்குடலைத் தூக்குறவங்களுக்கும் சம்பளம் போடணும். சாமி நெலத்த விவசாயம் பண்ணிச் சாப்பிட்டுக் கிட்டிருக்கிற ஒருத்தனும் ஒரு பிடி நெல்லைக்கூட கோயிலுக்கு அளக்கலப் போலிருக்கு... அதனாலதான் சாமி இருட்டில கிடக்குன்னேன்.. !என்று காம ராசர் பேசப்பேச அத்தனை பேரும் அதிர்ந்து போய் நின்றனர். அந்தக் கோயில் சொத்தைச் சாப் பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த பெருச்சாளிகள்பலரும் அங்கே நின்று கொண்டிருந்தனர்.தங்கள் அடிமடியிலேயே கை வைக்கிறாரே என்று அந்தக் குத்தகைதாரர்கள் நடுங்கிப் போயிருக்கக்கூடும். இதற்குள் குருக்கள்மார் சிலர் வந்து, ‘பிரசாதம், பொங்கல், வடையெல்லாம் தயாரா இருக்கு...!என்று ஆரம்பித்தனர்.சாமியை இருட்டில போட் டுட்டு ஆசாமியெல்லாம் சாப்பிட்டு கிட்டிருக்கீங்க. பொங்கல், வடையையெல்லாம் ஏழை ஜனங் களுக்கு, சேரிப் பிள்ளைகளுக்குக் கூப்பிட்டுக் கொடுங்க...!என்று சொல்லிவிட்டு வேகமாகத் தலைவர் கோயிலை விட்டு வெளியே வந்துவிட்டார். அறங்காவலர் குழு திகைத்துப் போய் நின்றது.தலைவர் அடுத்த ஊர் நிகழ்ச் சிக்குப் போவதற்காகக் காரில் ஏறினார். நானும் அவரோடு பயணம் செய்தேன். கடவுள்பற்றி காமராசர் என்ன நினைக்கிறார்... பூஜை, வழிபாடு, நேம, நைவேத்தி யங்கள் பற்றி அவரது கருத்து என்ன?” என்பதையெல்லாம் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் நெடுநாளைய அவா. இதுதான் சரியான வாய்ப்பு என்று எண்ணி நான் தலைவரிடம் மெல்ல ஆரம்பித்தேன்.

கடவுள்னு ஒருத்தர் இருக் கார்னு உங்களுக்கு நம்பிக்கை உண்டா...?”

இருக்கு, இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்றது நல்ல காரியமா இருந்தா போதும். பக்தனா இருக்கறதை விட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண் ணிகிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா...?” என்றார்.

நான், “கடவுள் விஷயத்துல நேரு கொள்கையும், உங்க கொள்கையும் ஒண்ணாயிருக்கும் போலிருக்கே...என்று ஆரம்பிக்கவும்.

அவரே, “ஆதிஸ்டு(Athiest)ன்னுசொல்றீயா...? நேரு ரெண்டப் பத்தியும் கவலப்படாதவர்தான். ஆனா... மனிதனை முன்னேற்ற ணும். சமூகம் வளரும்ணும்கிறதுல அவர் கவனமாயிருந்தார்.. அதுக்கு மதமோ, கடவுளோ தடையாயி ருந்தா அதைத் தூக்கிக் குப்பை யில போடணும்கிற அளவுக்கு அவர் தீவிரவாதி. எப்படி யோசிச் சிப் பார்த்தாலும், சாதாரண மனிதனைக் கை தூக்கி விடணும்கிற தத்தானே எல்லா மதமும் சொல்லுது. சமுதாயத்துல பேதம் போகணும்... ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாதுங்கிறதத்தானே மகான்கள் சொல்றாங்க. ஆனா, இன்னிக்கு நம்ம மதங்கள் அதப்பத்திக் கவலைப்படுதான்னேன்..? அவன் தலையைத் தடவியாவது, எவனை அழிச்சாவது தான் முன்னேற ணும்னுதானே ஒவ்வொரு மடாதிபதியும் நினைக்கிறான்... இதுக்குக் கடவுள் சம்மதப்படுறாரா...?” என்று கேட்டார்.

நான் உடனே, “அப்படியானா ஆண்டவன்னு ஒருத்தர் இல்லேன்னுதான் நீங்களும் நினைக் கிறீங்களா...? இருந்திருந்தா இந்த அயோக் கியத் தனத்தையெல்லாம் ஒழிச்சிருப்பாரே...! தன்னோட எல்லா பிள்ளைகளையும் மேல் ஜாதி, கீழ் ஜாதின்னு படைச்சிருக்க மாட்டாரே...?” என்றேன்.

மேல் ஜாதி, கீழ் ஜாதியெல்லாம் இடையிலே வந்த திருட்டுப் பயலுக பண்ணினதுன்னேன். சுரண்டித் திங்கிறதுக்காகச் சோம்பேறிப் பசங்க பண் ணின ஏற்பாடுன்னேன். எல்லாரும் ஆயா வவுத்துல பத்து மாசம் இருந்து தானே பொறக்கிறான். அதுலே என்ன பிராமணன் சூத்திரன்...? ரொம்ப அயோக்கியத்தனம்...!என்றார் காமராசர்.

எனக்குள் பெருமையும், பூரிப்பும் பிடிபட வில்லை. காமராசரைக் கட்டிப் பிடித்து ஆலிங்கனம் செய்ய வேண்டும் போலிருந்தது. இவருக்குள் இவ்வளவு சிந்தனை ஊற்றா.....? இத்தனை கம்பீரமா? அடங்காத சீற்றமா? ஆத்திர நெருப்பா? அவர் பேசப்பேச நான் வானுக்கும், பூமிக்குமாய்க் குதித்தேன்.நீங்கள் ஏன் உங்களை ஒரு முழு நாத்திகராய் அறிவித்துக் கொள்ள வில்லை...?” என்று கேட்டேன்.

நான் ஒரு சமுதாயத் தொண்டன். நாத்திகவாதி - ஆத்திகவாதி எல்லா ருக்கும் சேவை செய்றவன். எனக்கு எதிரே வர்றவனை மனுஷன்னுதான் பாக்குறேனேதவிர அவனை பிராமணன், சூத்திரன்னு பாக்குறதில்லே.... அப்படி எவனும் என்கிட்டே பேசிகிட்டு வரவும் முடியாது. நாத்திகவாதம்கிறது ஒரு தனி மனிதக்கொள்கை. அரசியல்வாதி பொதுவானவன். ஒரு கோயிலை நிருவாகம் பண்ண நிதி கொடுக்க வேண்டியது, அரசியல் வாதியோட கடமை. அந்தக் கோயில்லே ஆறுகால பூஜை ஒழுங்கா நடக்குதா.. விளக்கு எரியுதான்னு பாக்க வேண்டியது, “கவர்ன்(Govern)” பண்றவனோட வேலை.

நான் நாத்திகவாதி. எனவே கோயிலை இடிப்பேன்னு எவனும் சொல்லமுடியாது. கம்யூனிச சமுதாயத் திலேயே கோயிலும், பூஜையும் இருக்கே...! தனிப்பட்ட முறை யில நான் கோவில், பூஜை, புனஸ்காரம்னு பைத்தியம் பிடிச்சி அலையிறதில்ல. மனிதனோட அன்றாடக் கடமைகள்தான் முக்கியம்னு நெனைக்கிறவன்...

என்று மிகத் தெளிவாகப் பேசினார்.அப்படியானா, நீங்க பூஜை, பிரார்த்தனை யெல்லாம் பண்றதில்லையா...?” எனக் கேட்டேன்.

அதெல்லாம் வேலை, வெட்டி யில்லாதவன் பண்றதுன்னேன். அடுத்த வேளை சோத்துக்கில்லாதவன், கடன் வாங்கி ஊர், ஊரா ஷேத்ராடனம்போறான்... எந்தக் கடவுள் வந்து நீ ஏண்டா என்னப் பாக்க வரலைன்னு இவன் கிட்டே கோவிச்சுகிட்டான்....?’ அபி ஷேகம் பண்றதுக்காக கொடம், கொடமாப் பாலை வாங்கி வீணாக்குறானே மடையன்.... அந் தப் பாலை நாலு பிள்ளைங்க கிட்டே கொடுத்தா, அதுங்க புஷ்டியாவாவது வளருமால்லியா...?”“பதினெட்டு வருஷமா மலைக்குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனுக் குப் பி.ஹெச்.டியா கொடுக்கிறாங்க...? பதினெட்டு வருஷமா கடன்காரனா இருக்கான்னு அர்த் தம். பணம் படைச்சவன் போடுற பக்தி வேஷம், ‘சோஷியல் ஸ்டேடஸ்(Social Status)’க்காக. நாலு பேர் தன்னைப் பக்திமான், பெரிய மனுஷன்னு பாராட்டணும்கிறதுக்காக. ஒரு அனாதை இல்லத்துக்கோ, முதி யோர் இல்லத்துக்கோ கொடுக் கலாமில்லியா....ஊருக்கு நூறு சாமி... வேளைக்கு நூறு பூஜைன் னா.... மனுஷன் என்னிக்கு உருப்ப டறது...? நாட்டுல வேலையில்லாத் திண்டாட்டம்..... வறுமை - சுகா தாரக்கேடு.... ஏற்றத் தாழ்வு இத்த னையையும் வச்சிகிட்டு பூஜை என்ன வேண்டிக்கிடக்கு.... பூஜைன் னேன்.....? ஆயிரக்கணக்கான இந்த சாமிகள்இதப்பாத்துகிட்டு ஏன் பேசாம இருக்குன்னேன்...?”

தலைவர் போடு, போடு என்று போட்டுக் கொண்டு வந்தார். அவருக்குள் ஆயிரம் இங்கர் சாலை, பெரியாரை நான் கண் டெடுத்தேன்.

அப்படியானா.... நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா.... இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக் கிறீங்களா....?” என்று கேட்டேன்.அவர் கொஞ்சம் கூடத் தாம திக்காமல்... லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித் திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம் பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அநத வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்தும் கடவுளாக்கிட் டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா...? “அரேபியாவிலே இருக்கிறவன் அல்லான்னான். ஜெருசலத்தல இருக்கிறவன் கர்த்தர்னான் அதிலேயும் சில பேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு டெனாமினே ஷன்உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக் கினி பகவான், ருத்ரன், வாயு பக வான்னு நூறு சாமியச் சொன் னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடி மக்களான திராவிடர்கள், காத்தவ ராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே என் பேரு இதுதான்னு சொன்னான்....? அவனவனும் அவனவன் இஷ்டத் துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உரு வான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான்... காங்கிர° - கம்யூ னி°ட் - தி.மு.க. மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி. யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான்... மதம் மனித னுக்குச் சோறு போடுமா...? அவன் கஷ்டங்களப் போக்குமா...? இந் தக் குறைந்த பட்ச அறிவுகூட வேண்டாமா மனுஷனுக்கு...? உல கத்துல இருக்கிற ஒவ்வொரு மத மும், நீ பெரிசா... நான் பெரி சான்னு மோதிகிட்டு ரத்தம் சிந் துதே...! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே....! இப்படியெல்லாம அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்...?” தலை வர் தெளிந்த நீரோடை மாதிரி பேசிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்த மான முடிவை அவர் வைத்திருப்ப தைப் பார்த்து நான் வியந் தேன்.நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே... அதை ஏத் துக்கிறீங்க போலிருக்கே...?” என்று வினாத் தொடுத்தேன்.தலைவர் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்.

டேய்... கிறுக்கா... நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்....? ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன். அதையெல்லாம் நம்மாளு கடவு ளாக்கிட்டேன்னேன்....! இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் கட்அவுட்வைக்கிறானில்லையா... அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப் பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான். அந்தப் புத்தங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள எடுத்துக்கணும். ஆசாமிய விட்டுபுடணும்.”....காலப்போக்குல என்னாச்சுன்னா.. லட்சக் கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும் பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி. அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க களவாணிப் பசங்க.... புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம ஜனங்கள அடிமையா ஆக்கிவச்சிருக் கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான். நவ ராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூஜை பண்றான். விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை ஜனங்களையும், பாமர ஜனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான். நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல... எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல... புதுசு கட்டுனதுமில்ல... பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம சலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்...என்று விளக்கினார்.

மதம் என்பதே மனிதனுக்கு அபின்...!அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத் தோணுதே...?” என்று ஒரு கேள்வியைப் போட்டேன்.

தலைவர், “நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத் துக்குத் தேவையில்ல... பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா...? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக் கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம்; ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலா மில்லையா? அதையெல்லாம் செய்ய மாட்டான். சாமிக்குத்தம்வந்திடும்னு பயந்துகிட்டு செய் வான். மதம் மனிதனை பயமுறுத் தியே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்....என்றார்.

கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா...? அதிலேருந்து எப்போ விலகுனீங்க...?” இது நான்.

சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூஜை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930-க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுகிட் டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும், போயும் கடவுள் தலை முடியத்தானா கேக்குறாரு... எல்லாம் பார்பர் ஷாப்(Barber Shop)’காரன் செட்-அப்அப்புடீன்னு சிந்திச்சேன். விட்டுட்டேன். ஆனா, சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலை யில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா...?” என்று கேட்டுவிட்டு விழுந்து, விழுந்து சிரித்தார்.

அப்படியானா... மனிதர் களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே... அதப்பத்தி....?” என்று கேட்டேன்.

அடுத்த மனுஷன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை. இதுல நாம சரியா இருந்தா... தெய்வம்னு ஒண்ணு இருந்தா அது நம்ம வாழ்த்தும்னேன்...!

காமராசர் என்கிற அந்த மனிதாபிமானி என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார். சட்டென்று காரை நிறுத்து கிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லா மல் நடந்துபோன சிறுவர்களைப் பார்த்து, “ஏன் பள்ளிக்கூடம் போகலியா...?” என்கிறார். அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்தது விடுகிறது.

இந்த அறிய செய்திக்கு நன்றி.

திங்கள், 26 நவம்பர், 2007

எல்லாப் பெண்களும் கற்பில்லாதவர்களா ? - தந்தை பெரியார்

[மார்ச் 8 - உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் உரிமைகள் பற்றிய தந்தை பெரியாரின் கருத்துகளை வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வருவது தவிர்க்க முடியாததாகிறது. உரையாடல் வடிவில் அமைந்துள்ள இக் கட்டுரையில் கற்பு, திருக்குறள், மனுதர்மம் பற்றிய பெரியாரின் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. 'பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், 50 ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை - 600007 ' வெளியிட்டுள்ள 'பெரியார் களஞ்சியம் ' நூல் வரிசையின் ஆறாம் தொகுதியில் (குறைந்த அளவு நன்கொடை ரூ.70) வெளிவந்துள்ள கட்டுரை இது. - ஆசாரகீனன்]

ஆஸ்திகப் பெண்: என்ன அய்யா பகுத்தறிவுவாதியே! மனுதர்ம சாஸ்திரத்தில் மற்ற விஷயங்களைப் பற்றி மறுப்புகள் எப்படி இருந்தாலும், பெண்களைக் கடவுளே விபசாரிகளாய்ப் பிறப்பித்துவிட்டார். ஆதலால் அவர்கள் விஷயத்தில் ஆண்கள் கவனமாய் இருக்கவேண்டுமென்று சொல்லி இருப்பது மாத்திரம் பெரிய அயோக்கியத்தனம் என்பதே எனது அபிப்பிராயம். அது விஷயத்தில் நான் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன்.

நாஸ்திகன்: அம்மா! அப்படித் தாங்கள் சொல்லக்கூடாது. மனு தர்ம சாஸ்திரத்தில் மற்ற எந்த விஷயங்கள் அயோக்கியத்தனமாக இருந்தாலும், இந்த விஷயத்தில் மனு தர்ம சாஸ்திரம் சொல்லுவதை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆ-பெண்: அதென்ன அய்யா, நீங்கள் கூட அப்படிச் சொல்கின்றீர்கள். இதுதானா உங்கள் அறிவு இயக்கத்தின் யோக்கியதை ? எல்லாப் பெண்களுமா விபசாரிகள் ?

நா-ன்: ஆம் அம்மா! எல்லோருமேதான் 'விபசாரிகள் '. இதற்காக நீங்கள் கோபித்துக்கொள்வதில் பயனில்லை.

ஆ-பெண்: என்ன அய்யா உலகத்தில் உள்ள பெண்கள் எல்லோரையுமா விபசாரிகள் என்று நினைக்கிறீர்கள் ?

நா-ன்: ஆம். ஆம். ஆம். இந்த உலகத்தில் உள்ள பெண்கள் மாத்திரமல்லர். மேல் உலகத்தில் உள்ள பெண்களையும்கூடத்தான் நான் 'கற்பு உள்ளவர்கள் ' என்று சொல்வதில்லை.

ஆ-பெண்: சொல்லுவது தர்மமாகுமா ?

நா-ன்: கடவுளால் உண்டாக்கப்பட்ட வேதத்தின் சாரமானது மனுதர்ம சாஸ்திரம் சொல்லுவது எப்படிப் பொய்யாகும்; அதர்மமாகும். சொல்லுங்கள் பார்ப்போம். வேண்டுமானால், அது சரியென்று ருஜுப்படுத்தவும் தயாராய் இருக்கிறேன்.

ஆ-பெண்: என்ன ருஜூ! நாசமாய்ப்போன ருஜூ! சற்றுக் காட்டுங்கள் பார்ப்போம்.

நா-ன்: நமது பெரியவர்கள் கற்பைப் பரீஷிக்கத்தக்க பரீஷைகள் வைத்திருக்கின்றார்கள். ஆதலால் அவர்களை நாம் சுலபத்தில் ஏமாற்றிவிட முடியாது.

ஆ-பெண்: என்ன பரீஷை அய்யா அது ?

நா-ன்: சொல்லட்டுமா; ,கோபித்துக்கொள்ளக் கூடாது.

ஆ-பெண்: கோபமென்னையா ? மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம். தாராளமாய்ச் சொல்லுங்கள்.

நா-ன்: 'தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை ' என்கிற பொய்யாமொழிப் புலவரின் வேதவாக்கைக் கேட்டிருக்கிறீர்களா ?

ஆ-பெண்: ஆம், கேட்டிருக்கிறேன்.

நா-ன்: சரி...ஊரில் மழை பெய்து மூன்று வருஷமாச்சுது. குடிக்கத் தண்ணீர் கிடையாது. தயவு செய்து ஓர் இரண்டு உளவு (2 அங்குலம்) மழை பெய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்.

ஆ-பெண்: இது நம்மாலாகின்ற காரியமா ? தெய்வத்திற்கு இஷ்டமிருந்தாலல்லவா முடியும் ? இந்த ஊர்க்காரர்கள் என்ன அக்கிரமம் பண்ணினார்களோ! அதனால இந்தப் பாவிகள் மழை இல்லாமல் தவிக்கின்றார்கள்.

நா-ன்: எந்தப் பாவி எப்படித் தவித்தாலும், நீங்கள் கற்புள்ளவர்களாயிருந்தால், மழை பெய்யுமென்றால் பெய்துதானே ஆகவேண்டும். அல்லது இந்த ஊரில் ஒரு கற்புள்ள பெண்ணாவது இருந்தால் மழை பெய்துதானே தீர வேண்டும். எப்போது பெண்கள் சொன்னால் மழை பெய்வதில்லையோ, அப்போதே பெண்கள் எல்லாம் கற்புள்ளவர்கள் அல்லர். விபசாரிகள் என்று ருஜுவாகவில்லையா ? பொறுமையாய் யோசித்துப் பாருங்கள். இதையெல்லாம் நான் சொல்லவில்லை. வேதங்களும் சாஸ்திரங்களும் சொல்லுகின்றன. ஆகையால், இனிமேல் சாஸ்திரங்களைப் பற்றிச் சந்தேகப்படாதீர்கள். அதிலும் ரிஷிகளும் முனிவர்களும் சொன்ன வாக்கியமும், கடவுள் சொன்ன வேதத்தின் சத்தாகியதும், இந்த மதத்திற்கு ஆதாரமானதும், மோட்சத்திற்குச் சாதனமானதுமான மனுதர்ம சாஸ்திரம் பொய்யாகுமா ? அதனால்தானே நான்கூட கலியாணம் செய்துகொள்ளவில்லை.

ஆ-பெண்: எதனால்தான் ?

நா-ன்: பெண்களைக் கலியாணம் செய்து கொண்டால் புருஷன்மார்கள் அவர்கள் விபசாரித்தனம் செய்யாமல் ஜாக்கிரதையாகக் காப்பாற்ற வேண்டுமென்று மனுதர்ம சாஸ்திரத்தில் இருக்கிறதனால்தான்.

ஆ-பெண்: பின்னை என்ன செய்கின்றீர்கள் ?

நா-ன்: கடவுளோ பிறவியிலேயே பெண்களை விபசாரிகளாய்ப் பிறப்பித்துவிட்டார். யார் காப்பாற்றிப் பார்த்தும் முடியாமல் போய்விட்டது. சாஸ்திரங்கள் நிபந்தனையின்படி ஒரு சொட்டு மழைக்கும் வழியில்லை. கற்பு உள்ள பெண் என்று தெரிவதற்கு மனித முயற்சியை மீறி நடக்க முடியாத காரியங்களைச் செய்து காட்டவேண்டுமென்ற கதைகளும் எழுதி வைத்திருக்கிறார்கள். மழை பெய்ய வைப்பவளும், வாழைத் தண்டை எரிப்பவளும், சூரியனை மறைப்பவளும், இரும்புக் கடலையை வேக வைப்பவளுமே பத்தினிகள் என்று லைசென்ஸ் பெற முடிகிறது. ஆதலால் எவனோ கட்டிக் கொண்டு காப்பாற்றட்டும். கடவுள் செயல் பிரகாரம் நமக்குக் கிடைப்பது கிடைக்கட்டும் என்பதாகக் கருதிச் 'சிவனே ' என்று உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றமாட்டானா என்கிற தைரியம் உண்டு.

ஆ-பெண்: அப்படியானால், நீங்கள் முன் சொல்லிக் கொண்டிருந்ததில் ஒன்றும் குற்றமில்லை. இந்த மனுதர்ம சாஸ்திரமும், வேதமும், பொய்யாமொழியும், நீதியும் இவற்றை உண்டாக்கியதோ அல்லது ஒப்புக்கொண்டதோ ஆன கடவுளும் நாசமாய்ப் போகட்டும். இனிமேல் இந்த ஆஸ்திகம் நமக்கு வேண்டவே வேண்டாம். நம் எதிரிகள் நாட்டுக்கும் வேண்டாம்.

- ஆகஸ்டு 1, 1945 'குடி-அரசு ' இதழில் தந்தை பெரியார் அவர்கள் 'சித்திர புத்திரன் ' என்ற புனை பெயரில் எழுதிய கட்டுரை.

மகாபாரதம் பொய்யே

மஹாபாரதம்

அரசாளும் குடும்பத்திற்குள் நடந்த ஒரு சண்டை.அரசாளுபவர்கள் சண்டையிட்டால் மாளுவது சாதாரண மக்கள். போர் யாருக்கும் நல்லது அல்ல. முடிந்தால் போரை தவிர்ப்பது தான் வீரம். வாய்மையே வெல்லும். வாய்மையை வெல்ல வைக்க சில பொய்கள் அவசியமாகிறது. ஆனால் அப்படி சொல்லப்படாத பொய்களினால் வாய்மையே தோற்கவேண்டி நிலை வந்தால் அது ஆபத்து.

பாண்டவர்கள்

தாய் சொல்லை தட்டாதவர்கள்சகோதரத்துவத்திற்கு மதிப்பு கொடுத்தவர்கள்சூதாட்டம் எனும் தவறு செய்ததால் நாட்டை இழந்தவர்கள். அதனால் பல கஷ்டமும் பட்டவர்கள்.

கௌரவர்கள்

சொன்ன வார்த்தையை காப்பாற்றாதவர்கள்.தந்தை சொல்லையும் தாய் சொல்லையும் மீறியவர்கள்சூழ்ச்சியினால் நேர்மையை வெல்ல நினைத்தவர்கள்.பல நேர்மையற்ற காரியத்தை செய்தவர்கள்ஒரு பெண்ணை அவமானப்படுத்தியவர்கள்.

திரெளபதி

மிகவும் காராசாரமாக இணையத்தில் விவாதிக்கப்படும் ஒரு பாத்திரம். அவள் விலைமாதா - இல்லை. காசுக்கு உறவு கொண்டால் தான் ஒரு பெண் விலைமாதாகிறாள்.அவள் கள்ள உறவு கொண்டவளா - இல்லை. கணவனுக்கு அறியாமல் இன்னொரு ஆண்மகனுடன் உறவு கொண்டால் தான் அது கள்ள உறவு. இங்கு அவள் அந்த ஐவரையும் மணந்தாள். ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் உறவு கொள்ளவில்லை. ஒரு பெண் 5 பேரை மணப்பதா - ஒரு ஆண் 5 பெண்களை மணக்கும் போது ஒரு பெண்ணும் 5 பேரை மணக்கலாம். சமத்துவும் என்று பார்த்தால் அந்த காலத்திலேயே. ஒரு பெண் பல பேரை மணப்பதா - மீண்டும் நாம் கதை பல்லாயிரம் வருடங்களுக்கு முன் நடந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த காலகட்டம் சமூக கட்டமைப்பு அப்படி மணப்பதில் ஏதாவது கட்டுபாடு இருந்து அவள் அந்த கட்டுப்பாட்டை உடைத்தாளா என்று. அப்படி இல்லை. கதைப்படி.

அர்ஜூனன்

கிருட்டிணரிடம் அறிவுரைகள் கேட்கிறார். அதுவே பிறகு பகவத் கீதையாகிறது. அதில் ஒரு மனிதனின் கடமைகளையே விளக்கியுள்ளனர் கிருட்டிணன் வாயிலாக.

பொய் புரட்டு செய்கிறான் பாண்டவர்களை ஜெயிக்க வைக்க

ஒரு வேளை நேர்மையான யுத்தம் பாண்டவர்கள் பூண்டிருந்தால் துரியோதனனின் சூழ்ச்சி வென்று மஹாபாரதத்தையே மாற்றி எழுதியிருப்பான். அதற்காக நேர்மை வெல்ல பொய்மையும் சில நேரம் ஆயுதமாக எடுக்க வேண்டும் என்று பல counter-attacks களை கிருட்டிணர் செய்வதாக கதை.

கர்ணன்

நட்பில் சிறந்தவன். தானத்தில் சிறந்தவன். தானம் கொடுப்பவர்கள் இன்றும் கூட நீ என்ன கர்ணனா என்று சொல்லும் அளவிற்கு காலங்கள் கடந்து மனதில் நின்றவன். தான் பாண்டவர்களுக்கு மூத்தவன் என்று அறிந்தும் பாண்டவர்கள் பக்கம் சேராமல் தன் நண்பனுடன் நின்றவன். இன்று யாராவது நம்மிடம் வந்து நீதான் நிஜமாகவே அம்பானியின் பிள்ளை என்று சொன்னால் நாம் ஓடிப்போய்விடுவோம். நட்புக்கு இலக்கணம் இங்கிருந்து கற்கலாம்.

துரியோதனன்

அவன் கர்ணனை பயன்படுத்தியிருந்தாலும் அவனுக்கு உரிய மரியாதை பெற்றுத் தந்தவன். தன் நண்பனுக்கு தன் மனைவிக்கும் உள்ள நட்பை சந்தேகப்படாமல் இருவர் மீதும் அளிவில்லா நம்பிக்கை கொண்டவன். நண்பனின் மனைவியை எவ்வாறு நடத்த வேண்டும் எனும் பாடம்.

பீஷ்மர்

அதர்மத்தின் பக்கம் இருந்தாலும் நாட்டை காப்பது தன் கடமை என்று துரியோதனின் பக்கமாக நின்று போர் புரிகிறார். தேசப்பற்றுக்கு உதாரணம்.

திருதிராஷ்டிரன்

கண்ணில்லாதவர். மகன் மீது அளிவிலா பாசம் கொண்டவர். தான் அடையாத ராஜ்ஜியத்தை எப்படியாவது தன் மகன் அடைய வேண்டும் என்று ஆசை கொண்டவர். நடப்பது தவறுகள் என்றிருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டே காதையும் மூடிக் கொண்டவர். இவர் ஒரு துணைபாத்திரம் தான். ஒரு Helpless character depicted nicely. இவர் மனைவி தன் கணவன் பார்க்காத உலகை தானும் பார்க்க மாட்டேன் என்று கண்ணை மூடிக் கொண்டவள். கணவன் மேல் வைத்திருக்கும் பாசத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு. நல்ல பட்டிமன்ற தலைப்பு. கண்களை கட்டிக் கொள்ளாமல் தன் கணவனுக்கு சேவை செய்வது தானே நியாயம் என்பார்கள் சிலர்.

குந்தி

தவறாக குழந்தை பெற்றவள். அந்த தவறுக்காக கடைசி வரையில் வாடுகிறாள். கணவனை இழக்கிறாள். பிறகு பிள்ளைகளுடன் அவதிப்படுகிறாள்.

யுத்தம்

யுத்தம் குருக்ஷேத்திரத்தில் நடப்பதாக கதை. மேலும் பல துணை கதைகள் நீதி நேர்மை வாய்மை இவற்றை அறிவுறுத்துவதாகவே உள்ளன.

ஆனால் இவை யாவும் பொய்யே, மகாபாரதம் என்பது பொய்யே, மகாபொய்யேயன்றி வேறொன்றுமில்லை

மகாபாரதம் என்றொரு மெகாபொய் மகாபாரதம் உண்மையாக நடந்த வரலாறு என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் கிடைத்து உள்ளதாக உ.பி. அரசு தெரிவித்துள்ளது. பாக்பத் - பர்னாவா இடையேயான 60 கி.மீ. தூரம் இப்போது மகாபாரத காலத்தை நினைவூட்டும் வகையில் இருந்து வரு வதைக் கண்கூடாகக் காணலாம். இருபுறம் திறந்த நிலையில் இப்போதும் நீண்ட குகை மகாபாரதம் கதையல்ல; நிஜம் என்பதை விளக்குவதாக இருக்கிறது. ஆதாரம் கிடைத்தனவாம்! 12.6.2005 நாளிட்ட 'தினமலர்' - நாளிதழில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. "மகாபாரதம் கற்பனையல்ல; வரலாறு. ஆதாரங்களுடன் உ.பி. அரசு உறுதி இவ்வாறு உ.பி . அமைச்சர் கோகல் ஹமீத் கூறியுள்ளார். இதுதான் 'தினமலர்' செய்தியின் சில பகுதிகள். முதன்முதலாகப் பார்த்தபோது. இப்பொழுது, நாம் மகாபாரதம் கற்பனைக் கதையா? வரலாறா? என்பதுபற்றி ஆய்வு முறையில் அலச இருக்கிறோம். இந்த மகாபாரதமானது முதலில் அஸ்வலாயனா என்பவரின் 'கிருஹ்ய சூத்ரம்' என்னும் நூலிலும், பாணினியின் 'அஷ்டத்யாயி' என்னும் நூலிலும் குறிக்கப்பட்டுள்ளது. முழுமையாக, மகாபாரதம் என்ற பெயரானது, முதல் தடவையாக குப்தர் காலக் கல்வெட்டில் தான் பொறிக்கப்பட்டுள்ளது. கண்ணன் இறந்த காலம்: மகாபாரதப் போர், துவாபர யுகத்தின் இறுதியிலும், கலியுகத்தின் தொடக்கத்திலும் நடந்ததாகக் கூறி, இந்நிகழ்வு 5000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்று பழம்பெருமை பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு, மகாபாரதம் : ஆதிபர்வம் :அத்தியாயம் - 2; சுலோகம் 10 கூறுகிறது.இந்தக் கலியுகம் எப்பொழுது தொடங்கியது? கண்ணன் இறந்த அந்த நாளில்!கண்ணன் இறந்தது எப்பொழுது? மகாபாரதப் போர் முடிந்து, 36 ஆண்டுகளுக்குப் பின் கண்ணன் மடிந்தான். இவ்வாறு ஸ்ரீமத் மகாபாகவதம்: முதல் °கந்தம்:அத்தியாயம் - 15, சுலோகம் - 36 கூறுகிறது.கலிகாலப் பிறப்பு:கலியுகம் தொடங்கி இப்பொழுது எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?ஏதாவது ஒரு பஞ்சாங்கத்தை எடுத்துப்புரட்டி பார்த்தால் கலியுகம் தொடங்கி 5107 ஆண்டுகள் ஆகின் றன எனத் தெரிந்து கொள்கின்றன. இந்த 5107-லிருந்து 36 ஆண்டுகளைக் கழித்தால் வருவது 5071. ஆக, இதிலிருந்து 5071 ஆண்டு களுக்கு முன் மகாபாரதப் போர் நிகழ்ந்தது என்பதாகப் பாகவதம் பகர்கிறது.ஆனால், மகாபாரதக் கணக்குப்படி கண்ணன் உயிருடன் இருந்து மகாபாரதப் போரில் அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாய் அதாவது பார்த்த சாரதியாய் இருந்தபோது கலியுகம் பிறந்து விட்டது என்கிறது மகாபாரதம். இரண்டில் எது சரி? எது சரி அன்று? அந்த வியாசருக்குத்தான் வெளிச்சம்! வேறுபாடு வரலாமா? மகாபாரத நூலையும், பாகவதம் உள்ளிட்ட 18 புராணங்களையும் பாடியவர் இந்தப் பராசரப் புத்திரர் வியாசர்தானே?ஒருவரே, தாம் எழுதிய இரண்டு நூல்களிலும் கணக்கில் வித்தியாசம் வரும்படி எழுதலாமா? வேதம் வகுத்த வியாச முனிவருக்கு கணக்கில் கலக்கமான அறிவா? தப்புக்கணக்கு போடுபவர் வேத வியாசர் என்று அழைக்கப்படும் தகுதியுடையவர் ஆவாரா?ஒத்த கருத்து உண்டா?மகாபாரதப் போர் ஸ்ரீமத் மகாபாகவதப்படி கி.மு. 3007 வாக்கில் நிகழ்ந்தது. அது இருக்கட்டும், இந்தக் கலியுகம் தோன்றியது எப்போது என்பது பற்றிய செய்தியிலிருந்து வடமொழி அறிவாளர் களிடை ஒத்தக் கருத்து உண்டா? "கி.மு. 3102 பிப்ரவரி 18 ஆம் நாள் வெள்ளிக்கிழமை கலியுகம் தோன்றியது" என்கிறார். கி.பி. 476இல் பிறந்த ஆரியப்பட்டர் என்கிற வானியலார்."கலியுகம் கி.மு. 2449 ஆம் ஆண்டில்தான் தொடங்குகிறது" - என்கிறார் வராகமிஹிரர் என்னும் மற்றொரு வானியலார். ஆக, மகாபாரதம் - கலியுகம் பற்றி இத்துணை குளறுபடி இருக்கையில் மகாபாரதம் வரலாறு என்பது பொருந்துமா?என்ன கணக்கு, இந்தக் கணக்கு?குருச்சேத்திரத்தில் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கவுரவரின் 11 அக்ரோணி சேனையும் பாண்டவரின் 7 அக்ரோணி சேனையும் ஆக மொத்தம் 18 அக் ரோணி சேனை ஈடுபட்டதாக மகாபாரதம் கூறுகிறது. ஓர் அக்ரோணி படை என்பது,21870 தேர்கள்;21870 யானைகள்;65610 குதிரைகள்;109350 காலாட்படைகள்அடங்கியது ஆகும்.18 அக்ரோணி சேனைகள் என்றால்,21870 ஒ 18 = 393660 தேர்கள் (ரத)21870 ஒ 18 = 393660 யானைகள் (கஜ) 65610 ஒ 18 = 1180980 குதிரைகள் (துரக)109350 ஒ 18 = 1978300 காலாட்கள் (பதாதிகள்) அடங்கியது என்பதாகிறது,தேர் ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால் 3,93,660 தேர்ப்படை வீரர்கள்; யானை ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால், 3,93,660 யானைப் படை வீரர்கள்; குதிரை ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால், 11,80,980 வீரர்கள். இத்தோடு, காலாட்படை வீரர்கள் 19,78,300 வீரர்கள்.இவற்றைக் கூட்டினால் மொத்த நாற்படை வீரர்கள் 39,46,540 எண்ணிக்கையாகிறது.போரில் பங்குபெற்ற நாற்படை வீரர்கள் ஏறத்தாழ 40 இலட்சம் பேர்; யானைகள் 4 இலட்சம்; தேர்கள் 4 இலட்சம்; குதிரைகள் 1 1/4 இலட்சம்; நம்பமுடியவில்லை, இல்லை!எந்த ஒரு நாட்டிலும் இவ்வளவு படை வீரர்கள், யானை, தேர், குதிரைகள் நிறுத்தி வைக்க இவ்வளவு பெரிய மைதானம் இருக்க வாய்ப்பு உண்டா? அவற்றை மோதுமான இடைவெளியில் அணி வகுத்து நிறுத்த இடம் இருக்க முடியுமா?நிறுத்தி, அணிவகுத்து நிற்கவே இடமிராது என்றால் அப்படையினர் அங்கும் இங்கும் பாய்ந்து திரிந்து ஓடிப் போரிட அத்தனை பெரிய போர்த்திடல் இருக்க வேண்டுமே? அதற்கு வாய்ப்பு உண்டா? இல்லையே! இத்துணை எண்ணிக்கை நம்பும்படியாக இல்லை; இல்லை; இல்லவே இல்லை!!எல்லாம் ஒரே 'கப்ஸா' ஆகவல்லவா இருக்கிறது?இவ்வெண்ணிக்கை, உண்மையாக இருக்க வேண்டும் எனில், படைவீரர்களுக்கும், மொத்த மக்கள் தொகைக்கும் இயல்பான விகிதாசாரப்படி மக்கள் தொகை 20 கோடியாக இருக்கவேண்டும். இது எவ்வகையிலும் சாத்தியமே இல்லை! எல்லாம் இல்லை மயம்!மகாபாரதம் பற்றி, வரலாற்று அறிஞர் பெருமகன், டி.டி. கோசாம்பி முதலியோர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளனர்.அவற்றுள் சிலவற்றைக் கீழே காண்போம்.1. கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரையிலான எந்த இலக்கியத்திலும் மகாபாரதம், மகாபாரத யுத்தம் பற்றிய செய்திகளே இல்லை! 2. மகாபாரத யுத்தம் எப்போது நடந்தது? என எவராலும் வரையறுத்துக் கூறப்படவில்லை!3. இன்றைய அஸ்ஸாம் என்று கருதப்படுகிற மகாபாரத 'பிரஜியோதிஷா' மன்னனைப் பற்றி அஸ்ஸாமிய இலக்கியம், வரலாறு எவற்றிலும் எந்தக் குறிப்புகளும் இல்லை !4. போரில் கலந்துகொண்ட படைவீரர்கள் எண்ணிக்கை நம்பவே முடியாத கற்பனையாகும்.5. எல்லாவற்றிற்கும் மேலாக, யுத்தத்தில் பயன்படுத்தப் பட்டதாகக் கூறப்படும் பல ஆயுதங்களைச் செய்வதற்கு, பெருவாரியான இரும்பு தேவைப்பட்டிருக்கும். ஆனால், மகாபாரதம் நடந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் இரும்பு அரிதாகவே இருந்திருக்கிறது.(உலகின் இரும்புக் காலம் என்பது, 3300 ஆண்டுகளுக்கு முன், அதாவது கி.மு. 1300 ஆண்டுகளுக்கு முன்). இந்தக் காலகட்டத்தில்தான் இரும்பை உலகில் மனிதன் இனம் மிகுதியாகக் கையாளத் தொடங்கியது என்பது மனித இன வரலாற்றுச் செய்தி. மகாபாரத காலம் எனக் கூறப்படுவதோ கி.மு. 3000 வாக்கில் - (ஆதாரம்: 'சண்டே', 5-11, ஜூன் 1988) வரலாற்று அடிப்படையற்றது:வரலாற்று ஆய்வு அறிவாளர்களின் கருத்து இவ்வண்ணம் இருக்க, உத்திரபிரதேச அமைச்சர் பெருமகன் மான்புமிகு ஹமீத் பாக்பத் - பர்னாவா இடையேயான 60 கி.மீ. தூரம் இப்போதும் மகாபாரத காலத்தை நினைவூட்டுவதாக இருந்து வருவதாக எதன் அடிப்படையில் இயம்புகிறார்? தலைமுறை தலைமுறையாக:ஏதோ ஒரு சமயம் குருச்சேத்திரம் எனப்படும் பகுதியில், பாண்டவர் என்பவர்களுக்கும் கவுரவர் என்பவர் களுக்கும் இடையே பங்காளிச் சண்டை என்று சிறிய அளவில் நிகழ்ந்திருக்கலாம். இம்மாதிரியான சண்டை எங்கும் நடப்பது தான்! இயல்பானதுதான்! ஆனால், ஒவ்வொரு தலை முறையினரும், இந்தச் சண்டை நிகழ்ச்சியை அடுத்த தலைமுறையினருக்கு விவரிக்கும்போது பல, புதிய, புதிய தகவல்களைக் காலப் போக்கில் கற்பனை வளம் மிளிர சேர்த்திருக்கின்றனர். வளர்த்த கலை மறந்துவிட்டாய் ஏனடா, கண்ணா?"முதன் முதலாக, வியாசர் எழுதிய மகாபாரதக் காவி யத்தில் 8000 செய்யுள்களே இருந்தன. இதற்கு 'ஜெய பாரதம்' எனப் பெயர்! இதுவே, காலப்போக்கில், 24 ஆயிரம் செய்யுள் களையும், பின்னர், 1 லட்சம் செய்யுள்களையும் கொண்ட 'மகாபாரதம்' ஆக வளர்ந்துவிட்டது. உண்மை ஒருநாள் வெளியானால்?இதுவரை, ஜெயபாரதம் நமக்குக் கிடைக்கவில்லை! அதைப் படித்தால், ஒருவேளை பாரதக் கதையின் உண்மை உருவத்தை நாம் தெரிந்து கொள்ள வழியிருக்கிறது?" என்கிறார், குருச்சேத்திரப் பல்கலைக் கழகத்துத் தொல் பொருள் ஆய்வுத் துறைப் பேராசிரியர் டாக்டர் உதய்வீர் சிங் அவர்கள். இவர், மகாபாரத ஆய்வுப் பணியில் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருபவர். கேள்வி (கேலி)க் குறி:"40 இலட்சம் பேர் கொண்ட பெரிய படைகள் இந்தக் குறுகிய இடத்தில் போரில் எப்படிப் பங்கு கொண்டன? என்பது கேள்விக் குறியான விஷயமாக இருக்கிறது!இத்தனை பெரிய எண்ணிக்கை, கவியின் கற்பனை யாக இருக்கலாம்" - என்று குறிப்பிட்டுள்ளார் டாக்டர் உதயவீர்சிங். ஒன்றும் காணவில்லை!அவர் மேலும் கூறுகிறார்: "குருச் சேத்திரத்திலிருந்து, சுற்றிலும் மேட்டுப் பகுதிகள் இருக்கின்றன.இங்கிருந்து 2 கல் தொலைவில் அஸ்திபூர் என்று ஓர் இடம் இருக்கிறது. இங்குதான், பாரதப் போரில் உயிரிழந்த போர்வீரர்களின் உடல்கள் எரிக்கப் பட்டன - என்பது அய்தீகம். இப்போது, இந்த அஸ்திபூருக்குப் போனால் ஒரு அஸ்திக்குன்றைக் கூட (எலும்புச் சாம்பல் மேடு)ப் பார்க்க முடியாது" - (தகவல்: நூல் - 'கண்ணனைத் தேடி' - டி.கே.வி. இராஜன்)எதுவும் கிடைக்கவில்லையே?"மகாபாரதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் அரசர்களின் கல் வெட்டுகளோ, செப்பேடுகளோ, காசுகளோ இதுவரை எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை!" - என்கிறார், மய்ய அரசுத் தொல் பொருள் துறையின் மேனாள் டைரக்டர் ஜெனரல் பேராசிரியர் பி.பி. வால் அவர்கள். பானை ஓடும், பாரத காலமும்:தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த ஆதாரங் களை வைத்துக் கொண்டு பார்க்கும் போது, அஸ்தினா புரத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பானை ஓட்டின் காலம் கி.மு. 1100 எனக் கணக்கிடப் பட்டுள்ளது. எனவே, இப்பானை பாரத காலத்தைச் சேர்ந்ததில்லை என்று தெரிய வந்துள்ளது. மகாபாரத காலம் கி.மு. 3000 வாக்கில் - என்பது முன்னர்க் குறிப்பிட்டுள்ளோம். ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே!மகாபாரதக் கதை நிகழ்வு பற்றிய எந்தத் தடயங்களும் உ.பி. அமைச்சர் கூறும், குருச்சேத்திரப் பகுதியில் அதாவது புதுடில்லியிலி ருந்து 150 கி.மீ. வடமேற்கில் கிடைக்கவில்லை! இந்நிலையில், உ.பி. அமைச்சர் ஹமீத் அவர்கள் எதை ஆதாரமாக வைத்துக் கொண்டு பாக்பத் - பர்னாலா இடையிலான 60 கி.மீ. தூரம் மகா பாரத காலத்தினை நினைவூட்டுவதாக, ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! - என்று கூறுகிறார் என்பது நமக்குத் தெரியவில்லை!உங்கள் விருப்பம்! "நீண்ட குகை அப்பகுதியில் இருப்பதால் மகா பாரதம் நிஜம்" என்கிறார் அமைச்சர். அது, மெய்ப் பிக்கப்பட வேண்டாமா? மெய்ப்பிக்கப்பட்டதா? அந்தக் குகை, கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஏதேனும் வரலாற்று அறிவியல் ஆய்வு கூறியுள்ளதா? ஒரு பகுதியில், குகை ஒன்று இருப்பதாலேயே, 'பார், பார்! அது மகாபாரத காலக் குகை!' என்று எப்படிக் கூறலாம்? வெறும் கற்பனை, யூகத்தை, தன் விருப்பத்தை உண்மை - என்று அவர் எப்படிக் கூறலாம்? இது என்ன 'உங்கள் விருப்பமா'?கற்பனையின் விற்பனை!வரலாற்று ஆய்வு முடிபுகளிலிருந்து மகாபாரதம் 'நிஜம்' அல்ல; வரலாறு அன்று; கற்பனைக் கதை என்றுதான் கூறமுடியும். கற்பனையை வரலாறு என்று விற்பனை செய்யலாமா? இது தகுமா? முறையா? சரியா? காரணம் புரிகிறதா?"இந்துத்வா என்ற பெயரில் உ.பி.யிலும், மத்தியி லும் ஆட்சி நடத்திய தே.ஜ. அரசு செய்யாத இந்த முயற்சியை சமாஜ் வாடி அரசு செய்ய முன் வந்துள் ளது குறிப்பிடத்தக்கது" - என்று 'தினமலர்'க்காரர் புல்லரித்துப் போய் எழுதுகிறாரே? என் செய்ய? நமது சமுதாயம் ஏன், பிற்படுத்தப்பட்டு தாழ்த்தப் பட்டுப் போய்க் கிடக்கிறது? என்பதற்கு சமாஜ்வாடிக் கட்சி அரசின் செயல்பாடு உலகுக்குத் தெரிவித்து நிற்கிறதே? இப்படிச் 'சூத்திர' அரசு இந்துத்வாவுக்கு வெண்சாமரம் வீசலாமா? இதைக் கண்டு நாம் வெட்கப்படுகிறோம்! வேதனைப்படுகிறோம்! வேறு என்ன செய்ய? -

நன்றி: yarl.com

வியாழன், 22 நவம்பர், 2007

இராமாயணத்தில் கூறப்படுவது இந்த இலங்கை அல்ல.- மஞ்சை வசந்தன்

சேதுக் கால்வாய்த் திட்டம் நீண்ட நாளைய முயற்சி. செயல் திட்டம் கூடிவரும் வேளையில் மதவெறிக்கூட்டமும், சுயநலக் கூட்டமும் எதையெதையோ சொல்லி, எப்படியெப்படியோ எதிர்த்து, இறுதியில் அவர் களின் கடைசிப் புகலிடமாக உச்சநீதிமன்றத்தில் நின்று உருக்குலைக்கப்பார்க்கிறார்கள்.இதற்கு, இராமர் பாலம் என்ற இல்லாத கற்பனை அவர்களின் கையாயுதம்; இரா மாயணம் அவர்களின் கவசம்; நம்பிக்கை என்று வாதிடுவது அவர்களின் வலிமை.நம்பிக்கை என்பது ஒரு வரின் தனிப்பட்டக் கருத்து; அது உண்மையை உறுதி செய்ய உதவாது. அவன்தான் கொலை செய்தான் என்று ஒருவருக்கு நம்பிக்கையிருக் கலாம். அவரது நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் தண்டனை வழங்க முடியுமா? என்று கேட்டால்,பெருவாரியான மக்கள் நம்புகிறார்கள் - என்ற வாடிக் கையான வாதத்தை வைப்பார் கள்.

நாவரசு என்ற, அண்ணா மலைப் பல்கலைக் கழக மருத் துவ மாணவரை, ஜான் டேவிட் என்பவன்தான் கொலை செய் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதை அனைவரும் நம்பினர். ஆனால், ஆதாரம் இல்லையென்று நீதி மன்றம் ஜான் டேவிட்டை விடுதலை செய்துவிட்டதே!அப்படியென்றால் நீதிமன் றத்திற்குத் தேவை ஆதாரமே யன்றி, நம்பிக்கையல்ல.

ஆனால் அவாள் வழக்கு என்று வந்துவிட்டால், ஆதா ரம் எதுவும் தேவையில்லை சட்டம், நடைமுறை, விதிமுறை எதுவும் வேண்டாம்! மனுதர்ம காலந்தொட்டு, மக்களாட்சிக் காலம் வரை இதுதான் நிலை!செத்துப்போன பெரிய சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி (பெரியவாள்) கோமா நிலையில் இருந்தபோது நடந்த கனகாபிஷேகத்திற்கு வெளி நாட்டிலிருந்து தங்கம் வந்த போது அப்பெட்டியை எச்சோதனையும் செய்யாமல் அப் படியே அனுப்ப வேண்டு மென்று சுங்கத் துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இன் றளவும் அத்தங்கத்திற்கு கணக் கில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு இது தெரிந்தாலும் அது கண்டு கொள்ளாது. காரணம் இது அவாள் சமாச்சாரம்!

ஆனால், குப்பனும் சுப் பனும் அரை பவுன் எடுத்து வந்தால், சுங்கத் துறை சுற்றி வளைத்து அவனைப் பங்கம் செய்து பத்திப் பத்தியாய் செய்தி வெளியிட்டு விடும்.

1) மசூதி இருக்கும் இடத்தில் தான் இராமர் பிறந்த இடம் இருக்கிறது என்பர். ஆதாரம் என்னவென்று கேட்டால், அது இந்துக்களின் நம்பிக்கை என்பர்.

2) மதுராவில் உள்ள மசூதியை இடிக்க வேண்டும் என்பர். ஏன் என்று கேட்டால், கண்ணன் பிறந்த சரியான இடம் மசூதிக் குள்தான் உள்ளது என்று காரணம் கூறுவார்கள்.
ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்டால், ஆதாரம் எல்லாம் எதுவும் இல்லை, எங்கள் நம்பிக்கை என்பர்.

பாமர மனிதன்கூடப் பட்டென்று சொல்வான். இது பச்சை அயோக்கியத்தனம் என்று. ஆனால், நீதிமன்றங் களுக்கு மட்டும் அது நியாய மாகவே படுகிறது!சிவபெருமான் தலையில் நிலவு இருக்கிறது என்பது எங்கள் நம்பிக்கை. சிவன் இந்திய நாட்டுக் கடவுள், எனவே, நிலவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று கூறினால், அமெரிக்கா, இரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஒத்துக் கொள்ளுமா?

இந்திய நாட்டுக் கடவுள் திருமால், பூமியை ஒரு காலால் அளந்து தனக்கு உரிமை யாக்கிக் கொண்டார். ஆகா யத்தை இன்னொரு காலால் அளந்து உரிமையாக்கிக் கொண்டார். எனவே, ஆகாயம், பூமி இரண்டுமே இந்தியர்களுக்கு மட்டுமே சொந்தம், அதுவும் வைணவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கொண்டாடினால், உலக நாடுகள் ஒத்துக் கொள் ளுமா? குறிப்பாக சிவனை வணங்குகிறவர்கள் ஒத்துக் கொள்வார்களா?பூமாதேவி என்பது கோடானுகோடி மக்களின் நம்பிக்கை. எனவே, அதில் துளைபோட்டு குழாயை விடக் கூடாது என்று கூறமுடியுமா? அந்த நம்பிக்கையைத் தகர்த்துத்தானே பூமாதேவியைக் குடைகிறார்கள்!பூமாதேவி கோடிக்கணக் கானோரின் நம்பிக்கை. அது பூமி தெய்வம். எனவே, அதில் ஓட்டை போடக்கூடாது என்று ஒருவர் வழக்குப் போட் டால், உச்ச நீதிமன்றம் தடை கொடுக்குமா?இவையெல்லாம் பைத்தியக் காரத்தனம் என்றால், இராமர் பாலம் என்பது வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலானது, அதுவும், புதிதாய்ப்புனையப்பட்ட நம்பிக்கையிலானது என்னும் போது, அதற்கு மட்டும் என்ன தடையாணை? எந்த அடிப்படையில் தடை யாணை வழங் கப்படுகிறது?அப்படியே நம்பிக்கை யென்று கொண்டாலும், இராமர் பாலம் என்பதும் இலங்கையென்பதும் வடஇந்தியாவிலுள்ளதா? தென்னிந்தியாவிலுள்ளதா? அதையே விளங்கிக் கொள்ளாமல் ஆர்ப்பாட்டம், அடாவடித்தனம் அன்றாடம் அரங்கேற்றுவது அசல் மோசடித்தனமல்லவா?

இந்த இலங்கையா?

1. வடபுலத்தில் உள்ளது போலவே தென்புலத்திலும் (தமிழகத்திலும்) நகரங்கள் உண்டு.வடக்கே காசி - தெற்கேயுள்ளது தென்காசிவடக்கேயுள்ளது மதுரை - தெற்கேயுள்ளது தென்மதுரை.

வடக்கேயுள்ளது தான் இலங்கை- தெற்கேயுள்ளது தென்னிலங்கை.தற்போது ஸ்ரீலங்கா என்று அழைக்கப்படும் பகுதிக்கு, தென்னிலங்கை என்றுதான் பெயரேதவிர இலங்கை என்பது அல்ல.தமிழகத்தில் உள்ள மதுரை தென்மதுரைதான். மதுரை என்பது கண்ணன் பிறந்த பகுதிதான்.

தெற்கத்திக்கள்ளனடா தென்மதுரைப் பாண்டியன்டா என்ற திரைப்படப் பாடல் கூட இவ்வழக்கத்தை; இவ்வுண் மையை உறுதி செய்யப் போதிய சான்றாகும்.அதுபோல்தான், நமக்கு அருகிலுள்ள இலங்கை தென்னிலங்கை என்றே நீண்ட நெடுங்காலமாக அழைக்கப் பட்டு வருகிறது.இது தென்னிலங்கை என் றால், வடக்கேயுள்ளது இலங் கை என்பது உறுதியாகிறது.எனவே, இராமாயணத்தில் சொல்லப்படுவது வட இந்தியாவில் உள்ள இலங்கையே தவிர, இந்த இலங்கை இல்லை.

2. இலங்கைத் தீவு பின்னால் உருவானது.

இராமாயணம் நடந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் இலங்கை தனித்தீவாக இல்லை. அது தமிழ்நாட்டைச் சேர்ந்த நிலப்பகுதியாகவே இருந்தது.தாமிரபரணி ஆறு தென்னிலங்கை வரை ஓடியதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. இந்த இலங்கையின் பழைய பெயர் தாமிர பரணி என்பதேயாகும். அசோகர் கல்வெட்டில் இந்த இலங்கையானது தாமிரபரணி என்றே குறிக்கப்பட்டுள்ளது. கிரேக்க மொழியில் அதை தாப்ரோபேன் என்று அழைத்தனர்.ஆறு எங்குச் சென்று முடி கிறதோ அந்த இடத்தை வைத்து அந்த ஆற்றை அழைப்பது வழக்கில் உள்ளது. சிதம்பரம் வட்டத்தில், ஒரு வாய்க்கால் உடையூர் என்ற ஊரில் சென்று முடிவடைவதால் அதற்கு உடையூர் வாய்க்கால் என்றே பெயர் வழங்குகிறது.அதைப்போல், மற்றொரு வாய்க்கால் அரியகோஷ்டி என்ற ஊரில் சென்று முடி வடைவதால் அதற்கு அரிய கோஷ்டி வாய்க்கால் என்று பெயர் வழங்குகிறது.அவ்வாறு தான், தாமிரபரணி என்ற பகுதியில் சென்று முடிவடைந்ததால் அந்த ஆறு தாமிரபரணி ஆறு என்று அழைக்கப்பட்டது. இலங்கையின் பழைய பெயர், தாமிரபரணி என்பதுதான் - என்பதை தாமிரபரணி ஆற்றின் பெயரே அய்யமின்றி விளக்கிக் கொண்டு இருக்கிறது. இலங்கை அப் போது தனித்தீவாக இல்லை யென்பதற்கும் இது அசைக்க முடியாத சான்றாகும்.

3. இராமாயணம் நடந்த தாகக் கூறப்படும் காலத்தில் இலங்கை, தமிழகத் தோடுதான் சேர்ந்திருந்தது என்கின்ற போது, குறுக்கே கடல் இருக்க வாய்ப்பில்லை. அதனால், அணைகட்ட (பாலங்கட்ட) வேண்டிய அவசியம் இல்லை. அணை கட்டியதாக இராமா யணம் கூறுவதால், இராமாய ணத்தில் கூறப்படும் இலங்கை இதுவல்ல; வடக்கே அணை கட்ட வேண்டிய அவசியச் சூழலில் இருந்த, வட இந்தியா வில் உள்ளது இலங்கை தான் என்பது உறுதியாகிறது.

4. இராமன் பிறந்த இடம் வடநாட்டில் உள்ள அயோத்தி என்னும்போது, இராமன் பாலம் அமைத்ததாகக் கூறப்படும் இலங்கை, வட இந்தியா வில் உள்ள இலங்கைதான் என்பது உறுதியாகிறது. காலால் நடந்துதான் செல்லவேண்டும் என்ற சூழலில், காட்டில் திரிந்த இராமன், இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை.மேலும், இந்தியாவில் பல அரசுகள், பல மன்னர்களால் ஒவ்வொரு பகுதியும் ஆளப் பட்டு அந்தக் காலத்தில், ஒரு நாட்டைவிட்டு, மற்றொரு நாட்டிற்கு இராமன் முதலானோர் வர வாய்ப்பும் இல்லை; வரவேண்டிய கட்டாயமும் இல்லை; வருவதும் கடினம். எனவே, அயோத்தியின் ஆளு கைக்கு உட்பட்ட பகுதியில் இருந்த காட்டில்தான் அவர் கள் வாழ்ந்திருக்க முடியும்.

5. பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்துவிட்டு வா! என்பதுதான் தசரதனின் கட்டளை. ஒரு அரசன் காட்டுக்குப் போ என்று கட்டளை யிட்டால் என்ன அர்த்தம்? அவனது ஆளுகைக்கு உட் பட்ட காட்டுக்குப் போ என்பதுதானே?

ஒரு அரசு - நாடு, காடு என்ற இருபெரும் பகுதி களை உடையது. மன்னர்கள் காடுகளுக்குச் சென்று வேட்டையாடுவர். முனிவர்கள் காடுகளுக்குச் சென்று தவம் மேற்கொள்வர் என்பதே மரபாகச் சொல்லப்படும் செய்தி. அதன் வழி நோக்கின், தசர தனின் ஆளுகைக்கு உட்பட்ட, அவனது நாட்டை ஒட்டியுள்ள காட்டிற்கு மரவுரி போன்ற தவக்கோலத்துடன் இராமன் சென்றான் என்பதுதானே பொருள். அப்படியாயின் பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள தமிழகத்திற்கு எப்படி வரமுடியும்? ஏன் வரவேண் டும்? எனவே, இராமாயணத்தில் சொல்லப்படும் இலங்கை தென்னிலங்கை அல்ல அது வடக்கேயுள்ள இலங்கை என்பது உறுதி செய்யப்படுகிறது.

6. இராமாயணத்தில் இலங் கையில் வாழ்ந்தவர்களாகச் சொல்லப்படும் இராவணன், கும்பகர்ணன், விபீஷணன், மண்டோதரி, இந்திரஜித், சூர்ப் பநகா போன்ற பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் அல்ல. வட இலங்கையில் வாழ்ந்தவர்கள் என்பதாலே அவர்களுக்கு இப் பெயர்கள் இருந்தன. தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களாயின் அவர்கள் பெயர் தமிழில் இருந்திருக்கும். இதன் வழி நோக்கினும் இந்த இலங்கை யல்ல என்பது உறுதி.

7. காட்டில் இராமன் இருக்கும் இடத்திற்கு சூர்ப்பநகா சென்றாள், என்று இராமாயணத்தில் கூறப்படுகிறது. தென்னிலங்கையிலிருந்த சூர்ப் பநகா வடநாட்டிலுள்ள இராமனை எவ்வாறு அறிந்தாள்? எதற்காக வடநாட்டிற்குச் சென்றாள்? காரணமே இல்லை. அப்படியிருக்க தென்னிலங்கையிலிருந்து சூர்ப்பநகா சென்றதாகக் கூறுவது முற்றிலும் தவறு.மேலும், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் பேசிய மொழி தமிழ். அப்படியிருக்க இவள் எப்படி வடநாட்டு இராமனுடன், லட்சுமணனுடன் பேசியிருக்க முடியும்? சவால் விட்டு வந்திருக்க முடியும்? இராமன் லட்சுமணன் தமிழ் தெரியாதவர்களாயிற்றே! சுருக்கமாகச் சொன்னால் ஆயி ரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள இராமனைப் பற்றி சூர்ப்பநகா கேள்விப்பட்டிருக்கக் கூட வாய்ப்பில்லை!

8. வடநாட்டில் உள்ள காட்டில் மூக்கறுபட்டு மார்பறுபட்டு மீண்டும் தென்னிலங் கைக்கு வர எத்தனை மாதங்கள் ஆகும். தன் அண்ணன் இராவணனிடம் நடந்ததைச் சொல்லி, இராவணன் சீதையைக் கவர்ந்து வர வடநாட்டிற்குச் செல்ல எத்தனை மாதங்கள் ஆகியிருக்கும். பல மாதங்க ளுக்குப் பிறகே இராவணன் வடநாட்டைச் சென்றடைந்தி ருக்க முடியும். அந்த கால இடைவெளியில் இராமன், இலட்சுமணன், சீதை ஆகிய மூவரும் காட்டில் வேறு பகு திக்குச் சென்றிருப்பர். அப்படி யிருக்கையில் இராவணன் சீதையைக் கண்டு பிடித்து எப்படி தூக்கி வந்திருக்க முடியும்?இவ்வளவும் நடக்க வேண் டும் என்றால், அயோத்திக்கு அருகில் அயல்நாடாயிருந்த வட இலங்கையில்தான் இவை நடந்திருக்க முடியும்.சூர்ப்பநகை ராமனை அறியவும், அவள் அவமானப்படவும், அண்ணனிடம் உடனே வந்து சொல்லவும், அண்ணன் இராவணன் உடனே புறப் பட்டு போய் சீதையைக் கொண்டு வரவும், இராமன் உடனே தூது அனுப்பி விடு விக்கக் கேட்டுக் கொள்ளவும் அருகிலுள்ள இலங்கையாய் இருந்தால் மட்டுமே சாத்தியம். தென்னிலங்கையிலிருந்து இத்தனை முறை போய்வர வாய்ப்பே இல்லை. எனவே, இராமாயணத்தில் சொல்லப்படுவது தென்னிலங்கையல்ல. என்பது உறுதியாகிறது.

9. சீதையைத் தூக்கிச் சென்ற இராவணன் வான்வழி யாகச் சென்றான், ஜடாயு எதிர்த்துப் போரிட்டது என்றெல்லாம் இராமாயணத்தில் சொல்லப்படுகிறது. அப்படி யாயின் அந்தக் காலத்திலே விமானம் இருந்திருந்தால், இராமன் இலங்கைக்குச் செல்லுகையில் விமானத்திலே சென் றிருக்கலாமே. ஏன் பாலம் கட்ட வேண்டும்?அதுமட்டுமல்ல, இலங்கையில் போர் முடிந்து இராமன் திரும்பும்போது அயோத்தியில் விமானத்தில் வந்தான் என்று சொல்லப்படுகிறது. அப்படியாயின் போகும் போது விமா னத்தில்தானே போயிருக்க வேண்டும்? ஏன் பாலம் கட்ட வேண்டும்? அப்படியாயின் இராமர் பாலம் என்பதே கட்டுக்கதை அல்லவா?

10. சஞ்சீவி மலையையே தூக்கி வரக்கூடிய வலுப் படைத்த அனுமான் இருக்கும் போது இவர்கள் ஏன் பாலம் கட்ட வேண்டும்? இராமன், இலட்சுமணன் இவர்களை பல்லக்கில் அமரச் செய்து அப்படியே அலேக்காசு தூக்கிச் சென்று அனுமார் இலங்கையில் விட்டிருப்பாரே. அப்படியிருக்க பாலம் கட்டி னார்கள் என்றால், முட்டாளைத் தவிர எவன் நம்புவான்?

11. இராமர் பாலங்கட்டிய போது குரங்குகள் மலை களைச் சுமந்து சென்று போட்டதாக இராமாயணம் சொல்கிறது. அப்படியாயின் இலங்கைக்கு எதிரிலுள்ள தமிழகக் கடலோரப் பகுதியில் அதாவது இராமேஸ்வரம் பகுதியில் மலைகள் இருக்க வேண்டும். ஆனால் இல்லையே! அப்படியிருக்க எப் படி மலைகளை பாறைகளை எடுத்துச் சென்று போட்டி ருக்க முடியும்?எனவே, மலை சூழ்ந்த வட இந்தியாவிலுள்ள இலங்கை யில்தான் அது சாத்தியம். எனவே இராமாயணத்தில் குறிக்கப்படுவது இந்த இலங்கை அல்ல!12. இராவணன் கைலாய மலையைத் தூக்கினான் என்று அவனது வல்லமையைப் பற்றிச் சொல்லப்படுகிறது. அப்படியாயின் இராவணன் வட இந்தியாவில் வாழ்ந்தவன் என்பது உறுதியாகிறது. அப்படியாயின் இராமாயணத்தில் வருவது வட இந்தியாவிலுள்ள இலங்கை யேயன்றி தென்னிலங்கையல்ல!

13. மேலும் சேதுக் கால் வாய்ப் பகுதியிலுள்ள மணல் திட்டை தோண்டிப் பார்த்தால் 20 மீட்டர்களுக்கு மேல் மணலே செல்கிறது. பாறை களைக் கொண்டு பாலம் அமைந்திருந்தால் பாறைகள் அல்லவா வரவேண்டும். எனவே, இது இயற்கையான மணல் மேடு என்பது மலை மேல் விளக்காக விளங்குகிறது.

14. வால்மீகி இராமாய ணத்தில், இலங்கையில் போர் முடிந்த பின் நாடு திரும்பிய இராமன், தான் கட்டிய (பாலத்தை) அணையைத் தானே அழித்துவிட்டுச் சென் றதாகச் சொல்லப்படுகிறது. அப்படியிருக்க இராமன் கட்டிய பாலம் இன்னமும் இருக் கிறது என்பது மோசடியல் லவா?இராமாயணத்தையும், இராமனையும் மக்கள் நம்புகி றார்கள் என்றால், இராமர் பாலமும் இன்னமும் இருக்கிறது என்று கூறுவது மக்கள் நம்பிக்கைக்கு எதிரானது அல்லவா? அப்படியாயின் இராமர் பாலம் இருக்கிறது; அதை இடிக்கக்கூடாது என்பவர்கள் தானே இராமனுக்கு எதிரான வர்கள்? விந்திய மலைப் பகுதி அல்லது மஹாநதிப் பகுதி களை ஆய்வு செய்தால், இராமாயணத்தில் குறிக்கப் படும் இலங்கையை அடை யாளங்காண முடியும். அமர்க்கண்ட் அல்லது சோட்டா நாக் பூர் பகுதியில்தான் இலங்கை இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் பலன் கூறுகின்றனர்.அதுமட்டுமல்ல, கடல் பகுதியில் இராமர் பாலம் அமைக்கப்பட்டதாக இராமா யணம் அறிவிக்கவில்லை. கடல் பகுதியில் பாலம் அமைக்கவும் இயலாது.எனவே, அயோத்தியின் ஆளுகைக்கு உட்பட்ட நாட்டின் அண்டை நாடாகவே இலங்கை இருந்திருக்க முடி யும். மாறாக, இந்தியாவின் தென்கோடியில் உள்ள தென் இலங்கையாக இருக்க வாய்ப்பே இல்லை.மேற்கண்ட தடயங்களை ஒரு முறைக்கு பல முறை படித்தால் யாரும் இவ்வுண் மையை அய்யமற அறிந்து தெளிய முடியும்.அப்படியிருக்க சம்பந்தமில் லாத தென் இலங்கையோடு இராமாயணத்தை முடிச்சுப் போட்டு, இயற்கையான மணல் திட்டை இராமர் பாலம் என்று வீண்சிக்கலை உருவாக்குவது, சுயநலமிகள் மற்றும் மத வெறியை ஊட்டி, மக்களை உசுப்பி, அதை வாக்காக மாற்றி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று அலையும் ஆதிக்கக் கூட்டத்தினரின் அடா வடிச் செயல்பாடாகும். இதற்கு உச்ச நீதிமன்றம் உடந்தையாகக் கூடாது என்பதே நீதியாளர் களின் எண்ணம். நாட்டின் நலன் விரும்புவோரின் நாட்ட மும் அதுவேயாகும்.இல்லாத ஒரு கற்பனைக் காரணத்திற்காக ஒரு இணை யற்ற திட்டத்தை முடக்காமல், தடை ஆணை விரைவில் நீக்கப்பட்டு, திட்டம் விரைந்து நிறைவேற்றப்பட அனைத்து மக்களும் துணை நிற்க வேண்டும். அதற்கு இக்கருத்துகள் தீவிரமாகப் பரப்பட்டு மக்களுக்கு தெளிவு உண்டாக்கப்பட வேண்டும்; உண்மை விளக்கப் பட வேண்டும்.

செவ்வாய், 6 நவம்பர், 2007

" இந்த உலகுக்கு கடவுளைவிட மனிதம் உள்ள மனிதனே தேவை"

கொலை செய்யாதே! கொள்ளை அடிக்காதே!என்று கிருஸ்து உபதேசம் செய்வதாகக் கூறுகின்றனர். ஆனால்,

கர்த்தர் கொலை, கொள்ளை செய்யத் தூண்டியதோடல்லாமல், கொள்ளையடிக்கபட்ட பொருள்களை(பெண்களோடு சேர்த்து) தானும் பங்கு போட்டு கொண்டாராம். அப்படியிருக்க அவர் மகனாகிய(இயேசுவை) மட்டும் கர்த்தர் உலக அமைதிக்காக எப்படி அனுப்பியிருப்பார்.

ஆதாரம் இதோ:

எண்ணாகமம் 31 அதிகாரம், 2ஆம் வசனம்: கர்த்த்ர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்குவாயாக; அதன் பின்பு உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார்.

எண்ணாகமம் 31 அதிகாரம், 17-18 ஆம் வசனம்: குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷம் யோகத்தை அறிந்த எல்லா பெண்களையும் கொன்று போடுங்கள். கன்னி பெண்களை உங்களுக்காக விட்டு வையுங்கள்.

எண்ணாகமம் 31ஆம் அதிகாரம் 35-40ஆம் வசனம்: முப்பத்தீராயிரம் கன்னி பெண்களில் (பதினாறாயிரம் பேரில்) 32 பேர் கர்த்தர் எடுத்துக் கொண்டாராம்.

கிருஸ்தவ மதத்தின் அடிப்படை நம்பிக்கையே கர்த்தரின் கன்னி பிறப்பு, மற்றும் இயேசு ம்ரித்து உயிர்த்தெழுதல். ஆனால் இவற்றை வெறும் பக்தி கண்ணோட்டத்தோடு பார்க்காமல், பகுத்தறிந்தால் இவை கட்டுக்கதை என்பது தெரிய வரும்.

ஆணுடைய துணையில்லாமல் பெண் பிள்ளை பெறுவது போன்ற பல கதைகள் அக்காலங்களில் யூத, ரோமனிய,கிரேக்க புராண கதைகளிலும், இந்து புராணங்களிலும் உணடு, உதாரணமாக, இந்து புராணங்களில் கர்ணன் என்ற பாத்திரம் ஆண் துணையில்லாமல் சூரியனுடன் கூடி ஒரு பெண் குழந்தை பெற்றதாகக் கூறப்படுகிறது. இதை நம்புவது எவ்வளவு மடத்தனமாகுமோ அதுபோலவே கன்னிக்கு இயேசு பிறந்தார் என்று நம்புவது.

விஞ்ஞான உலகத்தில் மனிதன் எதை-எதையோ கண்டு பிடித்துக் கொண்டிருக்க இன்னுமா? கடவுள் என்னும் கருத்தை மேம்படுத்த ஒரு நல்ல காரணம் தெரியவில்லை?

கடவுளின் கன்னி பிறப்பை நம்புவோரே,எந்த கன்னியாவது தான் பரிசுத்த ஆவியானாலே கருத்தரித்தேன் என்று சொன்னால் யாரேனும் நம்பத் தயாரா?

இனி அவர் மரித்தலிலும், உயிர்த் தெழுவதிலும் உள்ள குளறுபடிகள்

இயேசு பிறந்த நாட்டின் வழக்கப்படி ஒவ்வொரு பண்டிகை சமயத்திலும்,
மக்கள் எந்த குற்றவாளியை விடுதலை செய்யச் சொல்லி வேண்டிக் கொள்கிறார்களோ அந்த குற்றவாளியை விடுதலை செய்வார்கள்.
யாரை விடுதலை செய்ய வேண்டும்? இயேசுவையா? பரபாஸையா? என்று


பிலாத்து(அதிகாரி) மக்களிடம் கேட்டதற்கு மக்கள் " பரபாஸையே விடுதலை செய்யுங்கள, இயேசுவை சிலுவையில் அறையுங்கள. இயேசுவினுடைய இரத்தபழி எங்கள் மீதும், எங்கள் பிள்ளைகள் மீதும் விழட்டும்."என்றார்கள்.

பிலாத்துவும் பரபஸை விடுதலை செய்துவிட்டு இயேசுவை வாரினால் அடித்து, சிலுவையில் அறையச் செய்யவும் ஒப்புக் கொண்டான்.( மத்தேயு: அதிகாரம்:24, வசனம்:15)

இயேசுவுக்கு ஆதரவாக பிலாத்துவும்,பிலாத்துவின் மனைவியும்
பிலாத்து கூறுகிறான் "இந்த நீதிமானுடைய இரத்தபழிக்கு நான் குற்றமற்றவன்." (மத்தேயு 27ஆம் அதிகாரம், 24 வசனம்)
மேலும், பிலாத்துவின் மனைவி, பிலாத்துவிடம் ஆள் அனுப்பி, இயேசுவை ஒன்றும் செய்யாமலிருக்கும்படி கூறியிருக்கிறாள், (மத்தேயு 27ஆம் அதிகாரம், 19 வசனம்)

ஆக, பிலாத்துவுக்கும், அவன் மனைவிக்கும் இயேசுவைக் கொல்ல கொஞ்சம் கூட விருப்பம் இல்லைஎன்பது தெளிவாகிறது.

இயேசு உண்மையிலே மரித்தாரா?

இயேசு ஏலீ ஏலீ என்று ம்கா சத்தமாய் கூப்பிட்டு ஆவியை விட்டார்.(மததேயு: அதிகாரம் 27, வசனம் 50)

பிதாவே! உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.(லூக்கா:23,வசனம்:46).

இயேசு காடியை வாங்கியபின்பு, முடிந்தது,என்று சொல்லி தலையை சாய்த்து, ஆவியை ஒப்புக் கொடுத்தார். (யோவான்:19, வசனம் 30)

இயேசு அறையப்பட்டபோதும், அதன் பின்பும் காட்சிகளை பார்த்ததாகக் கூறப்படும் சுவிஷேகர்களின் காதுகளில், இயேசு ஆவியை விடும்போது கூறிய வார்த்தைகள் ஒரே மாதிரியாகத்தானே விழுந்திருக்க வேண்டும்? பின் வேறுவேறாகக் கூறுகிறார்கள். இயேசு எப்படி வேறுவேறாக சத்தம் போட்டு மரித்தார்.

இயேசுவைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சி

சிலுவையில் அறையப்பட்டவர்கள் இறக்காமல் இருக்கும் பட்சத்தில் கால்களை முறித்து கொல்வது வழக்கமாக இருந்தது.
ஓய்வு நாளில் சிலுவையில் உடல்கள் இல்லாதபடிச் செய்வதற்காக யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய் அவர்களுடைய காலெலும்பகளை முறிப்பதற்கும், உடல்களை அப்புறப்படுத்துவதற்கும் பிலாத்துவினடத்திலே உத்தரவு கேட்டனர்( யோவான்:அதிகாரம் 19, வசனம் 31)

இது இருக்க, இயேசுவோடு அறையப்பட்ட மற்ற இருவருடைய கால்களும் முறிக்கப் பட்டனவாம். இயேசு மட்டும் முன்னரே மரித்துவிட்டாராம், ஆதலால், அவருடைய கால்கள் மட்டும் முறிக்க படவில்லையாம்,
மரித்த இயேசுவின் விலாவிலே ஈட்டியால் குத்தினபொழுது ரத்தமும் தண்ணிரும் வெளிப்பட்டதாம். (யோவான்:அதிகாரம் 19, வசனம் 34)

மரித்தவருடைய உடலில்தான் இரத்த ஓட்டம் நின்றிருக்குமே, பின் எப்படி இது சாத்தியமாகும்.

இதோடு மட்டுமல்லாமல், மரித்த இயேசுவின் உடலை யோசோப்பு பிலாத்துவினிடத்திலே கேட்க எந்த விசாரணையும் இல்லாமல் பிலாத்து இயேசுவின் உடலை யோசோப்பிடம் கொடுக்க உத்தரவிட்டான்.

மரித்தாரா என்று கூட ஒழுங்கான ஆய்வு செய்யாமல், கால்களை முறிக்காமல் யோசோப்பிடம் ஒப்படைத்தது. இயேசுவை காப்பாற்றுவதற்காகத்தான் என்றே கருதத் தூண்டுகிறது.
இயேசு என்ற ஒருவரை அடக்கம் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கல்லறை இரண்டு மூன்று பேர் உள்ளே இருக்க கூடிய அளவில் இருந்திருக்கிறதே ஏன்?
நிக்கொதேமு என்பவன் வெள்ளை போளம், கருப்பு போளம் போன்ற மருந்து வகைகளை முன்கூட்டியே கொண்டுவந்திருந்ததையும் பார்க்கும் பொழுது (யோவான்:அதிகாரம்19, வசனம்:39)

இயேசுவை அடக்கம் பண்ணுகிற பாவனையில் கல்லறைக்குள் கொண்டு சென்று காப்பாற்ற முயற்சியே தவிர வேறொன்றும் இல்லை.
உடல்நிலை சரியானபின்பு உயிர்த்தெழுந்த்தாக கதை அழந்திருக்க வேண்டும்.

இயேசு சீடர்களை ரகசியமாகச் சந்தித்தல்,ஏன்?
இயேசுவை எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சம் ஆகும் படிக்குச் செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்து தம் நலம் விரும்பிகளை மட்டும் சந்தித்தது ஏன்?( அப்போஸ்தலர் நடபடிகள் 10-41) கள்ளத்தனமாக காப்பாற்றப்பட்ட இயேசு பொது மக்கள் மத்தியில் நடமாடினால், மீண்டும் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தால்தான் சீடர்களை மட்டும் அவர் தனிமையில் சந்தித்திருக்கக் கூடும்.
அனைத்து மக்களின் பாவத்தை கழுவ வந்தவர், ஒருமுறை எல்லோர் முன்பும் தோன்றி மக்களுக்கு விளக்கி இருக்கக் கூடாதா? இது பாவங்கள் பெருகாமல் பார்த்திருக்குமே.

இன்னும் மதச்சண்டைகள் நடந்து கொண்டிருக்க விடுதலை எப்படி கிடைக்கும். மனிதச் சிந்தனைக்கு கட்டாகவே மதங்கள் இருக்கின்றன. விடுதலை பெற விரும்புவர்கள் மதத்திலிருந்து வெளியேறுங்கள். மனிதனாய் வாழ முடிவெடுங்கள்.
பாவங்கள் பெருகி கடைசி காலத்தில் கர்த்தர் வந்து கடைசி தீர்ப்பு வழங்குவார் என்று பொய் நம்பிக்கை கொள்ளாமல், பாவங்களே நடைபெறாமல் இருக்க சுயவிழிப்புணர்வே தேவை? கடவுள் நம்மை ஆசிர்வதிப்பார் என்பதற்காக நல்லது செய்யாமல் , இயல்பாகவே நல்லது செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.
கடவுள் ஒருவேளை இருந்தால் அவர் கண்டிப்பாக தன்னை துதிப்பதற்காக நேர, பண விரயத்தை விரும்ப மாட்டார். கடவுள் விரும்பியாக இருப்பதை விட்டுவிட்டு, மனிதம் போற்றி கடவுளே உங்களை விரும்புபவராக மாறுங்கள்.


" இந்த உலகுக்கு கடவுளைவிட ம்னிதம் உள்ள மனிதனே தேவை"