தமிழீழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழீழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 ஜூலை, 2010

பாகிஸ்தானிய, சீன ஊடுறுவலை கண்டித்தால் கைது...!!!! சட்டம் வர வாய்ப்பு

பாகிஸ்தானிய, சீன ஊடுறுவலை கண்டித்தால் கைது...!!!! சட்டம் வர வாய்ப்பு....ஆமாம், அதற்கான வாய்ப்பை சமூக நீதி தளத்தில் முன்னோடி என்று மார்த்தட்டி கொள்ளும் தமிழகத்திலிருந்தே தொடங்கியிருக்கிறது....

"மானமிகு சிங்கள் இனவெறி இராணுவத்தின் மதிப்புமிக்க மானங்கெட்ட செயலை அன்போடு வன்மையாக கண்டிக்கிறோம்,"என்று கண்டிக்காததால், தமிழக ஊழல் பெருச்சாலிகளின் அதிகார வர்க்கம் சீமானை கைது செய்திருக்கிறது.

கையூட்டு கொடுத்தால் கையை கூட வெட்டி கொடுத்து விடும் இன்றைய நேர்மையான ஊழல் அரசியல்வாதிகளுக்கு, இனத்தை காட்டி கொடுப்பது பெரிய செயலா? நாம்தான் புரியாமல் இவர்களை நோக்கி வெற்றுக் கூச்சல் போடுகிறோம்.

சோனியா என்னும் இரக்கத்தின் உருவை கொண்டு, தமிழை கொன்ற தமிழ்நாட்டில், தமிழனை கொன்ற ஓராண்டில் மாநாடு நடத்தும், மதிப்பிற்குரிய டாஸ்மாக் புகழ் அரசிடம் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்.

ஈழத்தமிழர்களின் துயர்துடைக்க குரல் கொடுக்கும் தமிழர்களை நோக்கி கண்டிக்கும் குரல் கொடுக்கும் மானமிகு ( ஆமாம் அதென்ன மிகு? ) அமைச்சர் பெருமக்களுக்கு ஒரு கேள்வி, தன்னை அடிமையாக அறிவித்துக் கொண்டு ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் தங்கள் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்பிடம் கேட்டுப்பாருங்கள்...

தனது வீரத்தை, சமூக நீதி கோட்பாட்டை ஏன் உத்தபுரத்தில் நிலைநிறுத்த முடியவில்லை என்று? வீராதி வீரர்கள் இலங்கைக்கு சென்று காப்பாற்றி வர முடியுமா என்று எள்ளி நகையாடும் உங்கள் தலைவருக்கு தில்லியை விட உத்தபுரம் தொலைவில் இல்லை என்ற செய்தி தெரியாதா? ஆமாம், தில்லிக்கு போனால் பதவி கிடைக்கும்.....உத்தபுரத்திற்கு போனால்..................?
இதைத்தான் ................வக்கில்லாதவனுக்கு.......................ன்னு ஒரு பழமொழி சொல்வாங்க தோழர்கள் நிரப்பிக் கொள்ளவும், எனக்கு மறந்து போச்சு....

(தமிழர்களுக்கு ஓங்கி குரல் கொடுப்பவர்களின் விழிகளுக்கும், செவிகளுக்கு உத்தபுரம் அவலம் போய் சேரவில்லையோ என்ற கவலை எமக்குண்டு, சேர்ந்தால் அதற்கும் குரல் கொடுங்கள்.....தயவு செய்து...)


ஆனாலும், இந்தியா என்னும் முதலாளிகளின் கூட்டமைப்பில், காசுமீரம், தண்டகாரண்யா காட்டில், வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் உரிமைக்கான போராட்டங்களை அங்கிருக்கும் பொம்மை அரசுகள் எப்படி காட்டி கொடுக்க வேண்டுமென்று முன்மாதிரி ஒன்றை ஒரு மாதிரி ஏற்படுத்தி தந்திருக்கும் தமிழ்நாட்டு அரசை அதிகார வர்க்க ஹிட்லர்-முசோலினி சகோதர, சகோதரிகளின் சார்பாக பெருத்த வருத்தம் கலந்த மகிழ்ச்சியோடு பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்....

அதோடு, இந்தியாவில் இருந்த பொடா, போடா சட்டம், தடா சட்டம், என்றும் இருக்கும் தாடா சட்டம்(லஞ்சம்) என எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் சீமானின் கைது,


இந்திய பனியா கூட்டம் கட்டியமைத்திருக்கும் எதிரி பாகிஸ்தானை விமர்சிப்பவர்களை சிறையில் தள்ளும் சட்டம் தமிழகத்தை முன்மாதிரியாக கொண்டு வர இருக்கிறது..........

இதை இப்பொழுது, இந்த சட்டத்தின் முன்வரைவு தீர்மானத்தை கலைஞர் தொலைக்காட்சியும், ஜெயா தொலைக்காட்சியும் இணைந்தே நேரடியாக ஒளிபரப்பும் காலம் வெகு தொலைவில் இல்லை....கூட்டு களவாணிங்கதானே இவிங்க

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

சிந்திச்சிக் கேட்டுக்கடா

சினிமாத்தனமா யோசிச்சி

சீரழிஞ்சு போரவனே

சிலவேனும் சொல்லுறத

சிந்திச்சிக் கேட்டுக்கடா

வாழ்க்கையில் வசந்தமுன்னு

வாலிபத்த சொல்லுவாங்க நீ

வாலிபத்த வந்தடஞ்சும் உன்

வரலாறா என்ன செய்வ

வாழும் சமூகத்தில்

பாழும் சாதி இருக்கயிலே நீ

காதல் மோகத்தில் உன்

காலத்த கழிப்பாயா?

இனத்துக்காக ஒரு போரு

ஈழத்துல நடக்கியில

இயற்கையை வர்ணிச்சே உன்

இலக்கியத்த படைப்பாயா?

தமிழனின் தன்மானம்

தரக் குறைவா போகும் போது நீ

தலைவனா ஆகவே

தனி இயக்கம் அமைப்பாயா?

அரசியல் அசிங்கங்கள் மக்கள்

அறியாதிருக்கும் போது நீ

அரசாங்க வேலைக்காக

அலைந்து திரிவாயா?

பலகாலமான இக்கழிவை உன்

காலத்தில் கழுவாம

கல்யாணம் கட்டிக்கிட்டு

காசு பணம் சேர்ப்பாயா?

வாழ்க்கையில வசந்தமுன்னு

வாலிபத்தச் சொல்லுவாங்க நீ

வாலிபத்த வந்தடஞ்சும் உன்

வரலாறா என்ன செய்வ.

நன்றி: விடுதலை வேட்கை, வெற்றி வேந்தன்

செவ்வாய், 19 ஜனவரி, 2010

தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாகவுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கை.

எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கின்றது.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மிகுந்த நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளார். தேசியத் தலைவர் பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

அதோடு தேசியத் தலைவர் அவர்கள் வெகுவிரைவில் மக்கள் முன் தோன்றி உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார்.

சர்வதேச ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களின் தற்போதைய நிலை, இலங்கை அரசின் நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்ட எமது தேசியத் தலைவர் விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை புதிய வடிவில் நெறிப்படுத்தியுள்ளார்.

எமது தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பாரிய இழப்புக்களை எமது மக்களுடன் நாம் சந்தித்துள்ளோம்.

இழப்புக்கள் என்பது எமக்கும் எமது மக்களுக்கும் புதியவைகள் அல்ல.

சிங்கள அரசின் சிந்தனைகளைத் தாண்டி எமது விடுதலைப் போராட்டம் புதிய வடிவம் பெற்று வீறுடன் எழுந்து நிற்கின்றது.

சிங்கள பேரினவாத அரசு எமத மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு மதிப்பளித்து எமது மக்களுக்கு சரியான தீர்வு திட்டத்தை முன்வைக்காத வரை சிங்கள பேரினவாதற்திற்கு எதிராக எமது விடுதலைப்போர் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தலைமையில் மாறுபட்ட வடிவங்களுடன் தொடர்வதுடன்.

எமது மக்களை ஏமாற்ற நினைக்கும் எந்த சக்தியினையும் நாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
ச.தமிழ்மாறன்
செய்தி தொடர்பாளர்
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்.

http://lttepress.com/more1.html