திங்கள், 14 ஜூலை, 2008

கடவுள் கற்பனையே-2

நேர்மையான ஆய்வு மூலம்

 உண்மை என்னவென்றால், கடவுள் என்றும் நம்பும் ஒரு கருத்தாக்கம் என்றும் வேண்டுகோளுக்கு இறங்கி வேண்டியதை அளித்த்தில்லை. கடவுள் உதவுவார் என்ற உண்மை என்று நம்ப வைக்கப்பட்ட பொய், உருவகம்.

 கடவுள் வேண்டுகோளுக்கு இறங்குவது என்பது பொய்/பொய்யான நம்பிக்கை என்பதை நாம் எப்படி அறிவது, சிறிது அறிவியல் கண்ணோட்ட்த்தோடு ஆய்வு செய்வதே இதற்கு உதவும். அதாவது கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஏதாவது ஒன்றை வேண்டிக் கொள்ள செய்து, அவர்களையும் மேற்கொண்டு விளைவுகளையும் கவனிப்பது. இந்த ஆய்வின் முடிவில் தெளிவாக நாம் அறிய இயலுவது என்னவென்றால் பிரார்த்தனை, வேண்டுகோள் இவற்றில் எதுவும் முடிவை பாதிப்பதில்லை என்பதே!

 இதில்

 1)       யார் வேண்டுகோள் வைக்கிறார்கள் என்பது பிரச்சினையில்லை.

2)       யாரிடம் வேண்டுவதாக நினைத்து கொள்கிறார்கள் என்பது பிரச்சினையில்லை அது அல்லா, இயேசு, சிவன், விஷ்ணு என யாராக இருந்தாலும் சரி.

3)       என்ன வேண்டுகிறார்கள் என்பது பிரச்சினையில்லை.

அதாவது அறிவியல் ரீதியில் Double-Blind Test(ஆய்வுக்கு உட்படுபவர், ஆய்வு செய்பவர் இருவரும் ஒருவர்- மற்றொருவரின் தகல்களை அறிந்திருக்க மாட்டார்) , செய்து அதன் அடிப்படையில் வேண்டுதலின் தாக்கத்தை அளந்து, ஆய்வு செய்து பார்த்தால் பலன் ஒன்றும் இல்லாதிருப்பது தெள்ளத்தெளிவாகும். இதில் வேண்டுதல் பதிலளிக்கப்பட்ட்தாக வாதிடுதல் நிகழ்வை பொருத்தி, உறவுபடுத்தி பார்ப்பதல்லாமல் வேறொன்றுமில்லை. இது அறிவியல் ஆய்வுக்கு மட்டுமல்லாமல் தனிப்பட்ட நபரின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை நேர்மையாக ஆய்ந்து பார்த்தாலும் பொருந்தும்.

எடுத்துக்காட்டுக்கு இந்த கட்டுரை,

சார்புணர்ச்சியில்லாமல் கடுமையான நேர்மையோடு, அறிவியல் கண்ணோட்ட்த்தோடு, உண்மை அறியும் தீவிர ஆவலோடு செய்யப்பட்ட ஆய்வுகளின் வேண்டுதல் இருதய சிகிச்சைக்காக அனுமதிக்கப்படிருந்த நோயாளிகளின் நிலைமையிலோ அல்லது இறப்பின் விகித்தையோ சிறிதளவும் குறைக்கவில்லை என்று வரையறுக்கிறது.

அதோடு மட்டுமில்லாமல்,

தொலைவு-சிகிச்சை(Distance Healing ) பற்றி செய்யப்பட்ட கடந்த 17 ஆய்வுகளின் அடிப்படையை , 2003 ஆம் ஆண்டில் இங்கிலாந்து ஆய்வாளர்  ஆய்ந்து வேண்டுதலோ, தொலைவு-சிகிச்சையோ பலன் அளிப்பதில்லை என்று திடமாக நிறுவியுள்ளார்.

மார்ச் 2006 இல் வெளியிடப்பட்ட இந்த கட்டுரையும் இதை ஆமோதிக்கிறது,

இதே போன்று செய்யப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெளிவுறுவது என்னவென்றால் இதய நோயாளிகளின் நிலையில் வேண்டுதல் எந்த மாற்றத்தை கொண்டு வருவதில்லை என்பதோடல்லாமல் மாறாக பிரச்சினைகளைதான் உருவாக்குகிறதாம்.

இந்த கட்டுரையில் சிறிது வியப்பு அளிக்க்கூடயதான, நகைப்புக்குறியதான செய்தி வாசிக்கக் கிடைக்கிறது.

தத்துவயிலாளர்களும், மதத்தலைவர்களும் வேண்டுதலுக்கு பலனில்லை என்று அறிவிக்கின்றனர்: மதத்தலைவர்கள் இதில் மகிழ்ச்சி அடைந்து கொள்ளலாம், பக்தர்களுக்காக இனி இவர்கள் வேண்டுவது தேவையாயிருக்காதல்லவா (மக்களின் ஏமாளித்தனத்தையும், அறியாமையையும் வைத்துதானே இவர்களின் பிழைப்பு நடக்கிறது, மேற்கூறிய கூற்றை அறிந்த பக்தர்கள் எனக்காக வேண்டுதல் செய்யவும் என்று யாரும் மதத்தலைவர்கள் தொல்லை தரமாட்டார்கள், ஆனால் என்ன இவர்கள் பிழைப்பு ஓடாது),

நண்பர்களே, வேண்டுதல் மீது நம்பிக்கை கொள்வது என்பது மூடநம்பிக்கையே இது பலமுறை நிருபக்கப்பட்டிருந்தாலும், உள்ளத்தில் உள்ள தகுதிக்கு மீறிய, உண்மைக்கு புறம்பான விருப்பங்கள் மூடநம்பிக்கைக்கு உட்படுத்துகின்றன. பிராமானந்தாவிடம் மயங்கிக் கிடந்த கூட்டம் இன்று பங்காரு அடிகளார், சதய்சாய்பாபா என்று பிடிபடாத சாமியார்களிடம் போகிறது, பிடிபட்டவன் போலிச் சாமியாராம், பிடிபடாத சாமியாராம் (எந்த அளவுகோலில்)

இந்த பித்தலாட்டக்கார்ர்களின் விளம்பரத்தில் ஏமாந்து இவர்களின் காலையும் கழுவி குடிக்கும் மட மக்களின் நிலையை நினைத்து சினம் வருவதற்கு பதிலாக பரிதாபம்தான் மேலோங்குகிறது,

சிலர் இயேசு அழைக்கிறார் என்று பிரச்சாரம் செய்து,     இவன் அழைத்து நோய் தீர்க்கிறேன் என்று பொய் விளம்பரம் செய்து கூட்ட்த்தை கூட்டி அதையும் தொலைக்காட்சி வாயிலாக விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்கள், இயேசு எங்களை அழைத்த்து எஙகளுக்கு கேட்கவில்லையே உனக்கு மட்டும் எப்படி கேட்டது என்று கேட்க துப்பில்லை இந்த மக்களுக்கு

இந்த அயோக்கியர்களில் எவனாவது ஒரு யோக்கியன் நான் தொடுக்கும் பந்தயத்திற்கு தயாரா?

இந்த  சாதாரண நடுத்தர வகுப்பைச் சார்ந்த நான் அழைக்கிறேன் பந்தயத்திற்கு நான் நிறுத்தும் நோயாளிகளுல் 20 பேரை இவனுடைய வேண்டுகோளால் குணப்படுத்த இயலுமா?

அப்படி முடிந்தால் நேர்மையோடு சொல்கிறேன், நான் என்னுடைய பகுத்தறிவு பிரச்சாரத்தை விடுத்து இயேசு விளம்பரத்திற்காக, பிரச்சாரத்திற்காக, ஊழியத்திற்காக நடிக்க(நம்புவது எப்படி?) தயார்.

கீழே உள்ளதையும் கவனிக்கவும்


நாம் சந்திக்கும் கடவுள் நம்பிக்கை கொண்ட தோழர்களில் பலர் அறிவியல் ஆய்வுகளின் மூலம் கடவுளை கண்டறிய இயலாது, அவர் இதற்கெல்லாம் புலப்படாதவர். ஆனால் இப்படி சொல்லும் நண்பர்கள் இயேசு பூமிக்கு வந்தார் என்ற கதையை நம்புவார்கள், சிவன் பூமிக்கு வந்தான் என்று கதையளந்தால் நம்புவார்கள், அல்லா குரானை அனுப்புனாருன்னு அளந்தா நம்புவார்கள்.

இவர்கள் எல்லாம் இப்பொழுது எங்கே என்றால்? கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார், ஆனால் தெரியமாட்டார். அது உனக்கு எப்படி தெரியும் என்றால் பேந்த பேந்த விழிப்பர்.

கடவுள் கருத்தில் மட்டும் அறிவியல் ஆய்வை மறுப்பவர்கள், அறிவியல் ஆய்வால் பிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை ஒதுக்கத் தயாரா? வண்டிகளை, விமானங்களை, கணிணியை ஒதுக்க முடியுமா? இவை அத்தனையும் அறிவியலின் பிள்ளைகள்தானே, ஆய்வின் தரவிறக்கம்தானே?

வேண்டுதலுக்கே திரும்ப வருவோம்,

வேண்டுதல் நிறைவேற்றப்படுதலின் மேல் உள்ள நம்பிக்கை என்பது நிகழ்வுகளை பொருத்தி பார்ப்பதோடு மட்டுமல்லாமல், நிறைவேறாத வேண்டுதலை லாவகமாக மறப்பதும்தான்.

எடுத்துக்காட்டுக்கு,

ஒரு குறிப்பிட்ட நோயிலிருந்து மீழுவது 5 விழுக்காடுதான் சாத்தியம் என்று வைத்து கொள்வோம்,

அந்நோயினால் 20 பேர் பாதிக்கபட்டிருக்கிறார்கள், 20 பேரும் வேண்டுகிறார்கள் என்று வைத்து கொள்வோம் (அல்லது) பிறர் அவர்களுக்காக வேண்டுகிறார்கள் என்றே வைத்து கொள்வோம். இவர்கள் அத்தனை பேரும் மத்தேயு 21:21, மாற்கு 11:24. யோவான் 14:12-14, மத்தேயு 18:19, ஜேம்ஸ் 5:15-16 படித்து விட்டு சிரத்தையோடு வேண்டினார்கள் என்று கருதுவோம்.

இந்த வேண்டுதலுக்கு பிறகும் கண்டிப்பாக 20 பேரில் 19 பேர் மடிந்து போவர்.

உயிர்பிழைத்த அந்த ஒருவன் தான் வேண்டுதலால் பிழைத்ததாக நம்புவான், கடவுள் வேண்டுதலுக்கு பதிலழித்தாக நம்புவான், அதை அவன் பிரச்சாரமும் செய்வான், இதை கேட்டு இன்னும் 20 பேர் வேண்டுவார்கள் இந்த சங்கிலி தொடரும்.

 

ஆனால் , 19 பேர் மடிந்து போனார்களே இவர்களை பற்றி எந்த நம்பிக்கையாளரும் வினா எழுப்புவதில்லை, எந்த பத்திரிக்கையும் வேண்டுதலுக்கு பிறகும் 19 பேர் மடிந்தார்கள் என்ற செய்தியை வெளியிடுவதுமில்லை. இப்படி நம்பி தானும் அறிவால் தானும் பிறர் அறிவையும் மழுங்கடிப்பது முட்டாள்தனமில்லாமல் வேறென்ன?

நன்றி: http://godisimaginary.com/