செவ்வாய், 4 நவம்பர், 2008

ராசீவ் கொலையில் அவிழ்க்கப்பட வேண்டிய புதிரான முடிச்சுகள்...

கொடுங்கையூரில் ராசீவின் சிலை உடைக்கப்பட்டு விட்டது என்று தரையில் விழுந்து உருண்டு புரண்டு நீலிக் கண்ணீர் வடிக்கும் போலிகளான பேராயக்கட்சிப் பதடிகளே!....


இந்த வினாக்களுக்கு விடை கூறுங்கள்...

(1) திருப்பெரும்புதூரிலே ராசீவு கொல்லப்பட்டபோது உங்களில் யாருமே அங்கே சென்று சாகவில்லையே ஏன்?
(2) தோழமைக் கட்சிக்காரியான செயலலிதாவை அந்தக் கூட்டத்திலே கலந்துகொள்ள விடாதபடி தடுத்து அறிவுரை வழங்கியது யார்? ஏன்?
(3) ராஜீவு கொலை செய்யப்பட்ட நாளில் மாமல்லபுடத்தில் இருந்த சுப்பிரமணியம் சுவாமி "நான் டில்லியிலே இருக்கிறேன்" .. என்று புளுகியது ஏன்?
(4) இரவு 11 மணிக்கு ராசீவு சாகபோகிற செய்தி மாலை 5 மணிக்கே சந்திராசாமிக்கு எப்படித் தெரிந்தது? "ஒழிந்தான் ராசீவு" என்று ஓங்கி முழங்கியபடியே கப்பல் விருந்திலே ஆயுதத் தரகர்களுடன் கும்மாளமிட்ட சந்திராசாமியை யாருமே நெருங்காமல் விட்டு விட்டது ஏன்??

5) நரி மூஞ்சி - நரசிம்மராவின் அலுவலகத்திலிருந்து சந்திராசாமி பற்றிய கோப்புகள் மாயமாய் மறைந்தபோது எந்தப் பேராய கட்சிப் பேடிகளுமே பேச்சு மூச்சு விடாமல் இருந்தது எதற்காக?


(6) ராசீவைத் தீர்த்துக்கட்டச் சீக்கியர் குழுக்கள் ஒரு புறமும், அமெரிக்க உளவு நிறுவனம் மறுபுறமும் சதி செய்து கொண்டிருப்பதாக ராசீவு கொலைக்கு 10 நாட்களுக்கு முன்பே யாசர் அராபத் எச்சரிக்கை செய்திருந்தபோதும் தமிழினத்தின் சருங்காலி யான கார்திகேயன் புலிகளை மட்டுமே நடுவப்படுத்திப் புலனாய்வு செய்தது எதற்காக?

(7) தஞ்சைப் பண்ணையார் கோடியக்கரை - சண்முகம், சந்திராசாமியின் உதவியாளர் பப்லு,  அதிகாரி சிறீவத்சவா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணி என்ன??

(8) இராசீவின் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க நாங்களும் உதவுகிறோம். என்று விடுதலைப் புலிகள் இயக்கம் வேண்டுகோள் விடுத்ததே, அந்த வேண்டுகோள் எதற்காக புறக்கணிக்கப்பட்டது?

(9) இராசீவு கொலை வழக்கு மூடிய கதவுகளுக்குள் மட்டுமே நடத்தி முடிக்கப்பட்டது எதனால்?

(10) மாவீரன் சிவராசனை உயிருடன் பிடிக்க அதிரடி வீரர்கள் தில்லியிலிருந்து புறப்பட்டு வருவது தெரிந்தவுடன் அதிரடியாக செயல்பட்டுச் சிவராசனைச் சாகடித்தது எதற்காக?

(11) புலனாய்வு செய்த புடலங்காய்களிடம் சந்திராசாமியைப் பற்றி பேச வாய் திறந்தாலே சாமியைப் பற்றி மட்டும் பேசாதே என்று சீறிச் சீறி அடித்து நொறுங்கியது எதற்காக?

(12) சந்தரா சாமி ராசீவ்வைக் கொலை செய்ய இசுரேல் கூலிப் படைகளுக்கு மூன்று கோடி கொடுத்தார் என்ற கமுகத்தை தில்லி அமைச்சர் ஆரிப்கான் சொன்ன போதே ஏன் உசாவவில்லை. 

(13) ராசீவ் கொலை பற்றிய புலனாய்வு ஆவணங்கள் வெளிநாட்டிலே கொத்துக்கொத்தாகப் பறிபோனதன் பின்னணி என்ன?

-மூளையை மழுங்கடித்துக் கொண்டுள்ள பேராயக்கட்சி முண்டங்களே விடை கூறுங்கள்... தனித்தமிழர் சேனை.

தமிழே உலகின் முதன்மொழி! தமிழனே முதலாவது கடலோடி
தமிழ் ஈழம் தமிழினத்தின் பிறப்புரிமை!


50 ஆயிரம் ஆண்டுக்கால இலக்கிய வரலாறு கொண்ட தமிழே உலகின் முதன் மொழி! குமரிக் கண்டமே தமிழனின் பிறந்தகம். கடலில் மூழ்கிய குமரி நிலத்தின் எச்சமே இன்றைய தமிழீழம்! சிங்களவர்கள் இலங்கைத் தீவின் வந்தேறிகள். சேர, சோழ,பாண்டியர் எனும் மூவேந்தர் ஆட்சிகளும் வீழ்ச்சியுற்ற பின்னர் தமிழினம் பலவேறு வந்தேறிகளிடம் மாறி மாறி அடிமைப் பட்டது. ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழினத்தை ஈடேற்றி மேடேற்ற வந்த எழுஞாயிறு, விடிவெள்ளி, தமிழீழத்தின் தேசியத் தலைவரான எல்லாளன் என்கிற பிரபாகரனே!

http://mgr.mywebdunia.com/2008/11/03/1225694880000.html

தமிழன் செத்தொழிவது மேல்

இராமன் வருவானா?

 இந்துத்துவ அடிவருடிகளே! ஒற்றை சீதையை காப்பாற்ற இலங்கை சென்று இராவணனையும்,இலங்கையும் அழித்த இராமன்.

 எங்கள்/உங்கள்(தமிழனாக இருந்தால்) உறவு இலங்கையில் அழிந்து இத்தருணத்தில் கொண்டிருக்கிறது. இராமன் வருவானா காப்பாற்ற?

 இராவணன் என்பதே கற்பனை கதாபாத்திரம்,   கற்பனை கதாபாத்திரத்தை கொன்ற இராமன் இன்னொரு பெரும் போலி,ஏமாற்று, பித்தலாட்ட, பகட்டுக் கற்பனை. அப்படியிருக்க அவன் எப்படி உங்கள் இன மக்களை காப்பாற்ற வருவான் என்று இந்துத்வவாதிகளே முணுமுணுப்பது கேட்கத்தான் செய்கிறது.

 அவன் கற்பனை கதாப்பாத்திரம் மட்டுமல்ல, எம் பண்பாட்டுக்கெதிரான பார்ப்பன புழுகுமூட்டை என்பது எனக்கு நன்றாக தெரியும்.

 ஆனால் என்ன செய்வது? என் உறவு அழியும் போது, இராமன் பேர் சொல்லி இன்னொருபுறம் (இராம-தாச பொறுக்கி) இந்து முண்ணனி, ஆர்.எஸ்.எஸ் (
ந்து தீவிர-வாத அரசியலு)க்கு துணை போகும் தமிழர்களை என்ன கேள்விகேட்பது. இத்தருணத்தை பயன்படுத்தியாவது, இது மாதிரி கேள்வி கேட்டாவது மதச்சாக்கடைக்குள்ளிருந்து இவர்களை விடுவிக்க மாட்டோமா? என்ற நப்பாசைதான்.

 ஏனென்றால்,ஈழத்தில் தன்னுடைய இருப்புக்காக, சுய மரியாதைக்காக போராடிக்கொண்டிருக்கும் மறத்தமிழர்கள் வாழும் இவ்வுலகில் தமிழகத்தில் மறவர்கள் என்றோ, கள்ளர்கள் என்றோ, கவுண்டர்கள் என்றோ, பிள்ளை என்றோ சாதி பெருமை பேசி, திமிரோடு, காட்டுவிலங்காண்டித்தனமான அணுகுமுறையால் இலங்கையைவிட அருகில் வாழும் பெருவாரியான சகோதரர்களை சேரிகளில் ஒதுக்கி வைத்து விட்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க எந்த ஈனத்தமிழனுக்கும் அருகதையில்லை.

 தமிழர்களே தயவு செய்து இந்த தருணத்திலாவது தமிழணர்வு கொள்ளுங்கள், சாதி,மத பிடியற்று வாழுங்கள் அல்லது இலங்கையில் சிங்கள இனவெறி இராணுவம் எறியும் குண்டுகளில் ஏதாவதொன்றை தமிழகத்திலும் உள்வாங்கி செத்து மடியுங்கள். (சாதிக்கட்டமைப்பு தகர்க்கபடாமல் அழுத்தமாக இலங்கையில் இருந்தால் அங்குள்ள தமிழர்கள் வாழ்வது தேவையில்லாதது).

 சாதியோடு வாழும் தமிழன் வாழ்வதற்கு பதிலாக ஒருவன்கூட மீதியில்லாமல் செத்தொழிவது எவ்வளவோ மேல்.

கடவுள் பிடிபட்டார்!

நமக்கு வெளியே கடவுள் என்றொருவர் இருப்பதாகவும், ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களையும் ஏதோ ஒரு நோக்கத்தில் அவர் தொடர்ந்து செய்து வருவதாகவும் கூறுகின்றார்கள் மதவாதிகள். கடவுளை "வெளியே தேடாதே உன்னுள்ளே தேடு' என்றார்கள் சித்தர்கள். இறை நம்பிக்கையாளர்களின் இந்தத் தேடல் பல நூற்றாண்டு காலமாக நடந்துவருகிறதெனினும், "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்' என்பதுதான் இதில் கிடைத்திருக்கும் கடைசி ரிசல்ட்.


இந்தப் பூவுலகில் கடவுள் மிகவும் பத்திரமாகப் பதுங்கியிருந்த ஒவ்வொரு மூடநம்பிக்கைக் குகையிலிருந்தும் புகை போட்டு அவரை வெளியேற்றி வருகின்றது அறிவியல். எனினும், இரண்டு இடங்களிலிருந்து மட்டும் அறிவியலால் "கடவுளை' அப்புறப்படுத்த முடியவில்லை.


எல்லா வாதங்களிலும் தோற்ற பிறகு ஒரு பக்தன் முன்வைக்கும் கடைசி இரண்டு வாதங்கள் இந்த இடங்களை அடையாளம் காட்டுகின்றன. "நீங்க நம்பினா நம்புங்க நம்பாட்டி போங்க, அந்த கோயிலுக்குப் போனா எனக்குள்ள ஒரு ஃபீலிங் வருது பாருங்க, அதாங்க கடவுள்!'' "என்ன வேணா சொல்லுங்க, நமக்கு மேல ஏதோ ஒரு பவர் இல்லாம இந்த உலகம் உருவாகியிருக்க முடியுமா?'' ஒன்று உள்ளே, இன்னொன்று வெளியே.


புறவய உலகத்தின் "தோற்றம்' குறித்த புதிரையும், அகவயமாக மனித மூளையில் தோன்றும் "உணர்வு' குறித்த புதிரையும் விடுவிக்கும் முயற்சியில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது அறிவியல். மதவாதிகளின் மொழியில் சொல்வதென்றால் பிரம்ம ரகசியத்தையும் ஆன்ம ரகசியத்தையும் "கண்டு', பிறகு அதனை "விண்டு' உலகத்திற்குச் சொல்லவும் முனைந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.


···


முதலில் "படைப்பு ரகசியம்' பற்றிப் பார்ப்போம். கடந்த செப் 10 ம் தேதியன்று பிரான்சு நாட்டின் எல்லையில் பூமியின் 300 அடி ஆழத்தில், 17 கிலோ மீட்டர் நீளம் கொண்ட குறுக்கு நெடுக்கான குழாய்ப்பாதையினுள் (Large Hydron Collider)அணுத்துகள்களை மோதவிட்டு பிரம்மாண்டமான ஆராய்ச்சி ஒன்றைத் துவக்கியிருக்கின்றார்கள் உலக விஞ்ஞானிகள்.


"இந்த ஆராய்ச்சி தொடங்கினால் அந்தக் கணமே உலகம் அழிந்துவிடும்'' என்று ஐரோப்பாவில் உள்ள அல்லேலுயா கூட்டத்தினர் முதல் ஒரிசாவில் உள்ள இந்துக்கள் வரை பலரும் தத்தம் தெய்வங்களைச் சரணடைந்தனர். இதனைப் பரபரப்புச் செய்தியாக்கிய ஊடகங்கள், "உலகம் அழியுமா, அழியாதா?'' என்று அப்துல் கலாமிடம் விளக்கம் கேட்க, நவீன இந்தியாவின் அழித்தல் கடவுளான அப்துல் கலாம் "அழியாது' என்று அருள்வாக்கு கொடுத்தார். அதன் பின்னர்தான் கோயிலை விட்டு வெளியே வந்தார்களாம் சிவபக்தர்கள். நாம் விசயத்துக்கு வருவோம்.


நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் சுமார் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெருவெடிப்பினூடாக (Big bang) நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது இயற்பியல் விஞ்ஞானிகளின் கருத்து. இந்தக் கோட்பாட்டு முடிவை, அதாவது பெருவெடிப்பை, சிறிய அளவில் ஒரு சோதனைச் சாலையில் நடைமுறையில் நிகழ்த்திப் பார்ப்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.


கிறிஸ்துவுக்கு முந்தையவரும் அணுக்கோட்பாட்டின் தந்தையுமான கிரேக்க தத்துவஞானி டெமாக்ரைடஸின் காலம் முதல் இன்று வரை இயற்பியல் ஆய்வு வெகு தூரம் வளர்ந்து விட்டது. மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை; அணுக்கள் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் போன்ற துகள்களால் ஆனவை. புரோட்டான்களும் நியூட்ரான்களும் குவார்க், குளுவான்களால் ஆனவை என்கிறது இயற்பியல். குவார்க்குகள்தான் அடிப்படைத் துகள்களா, அல்லது அவை அதனினும் நுண்ணிய வேறொன்றினால் ஆனவையா? இந்தத் துகள்களுக்குப் பொருண்மையையும், கனத்தையும் (mass and weight) வழங்கியது எது? என்ற கேள்விகளுக்கும் விஞ்ஞானிகள் விடை தேடி வருகின்றார்கள்.


புரோட்டான் உள்ளிட்ட துகள்களுக்கு வேறொரு துகள்தான் பொருண்மையை அளித்திருக்க வேண்டும் என்பது இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பவர் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட கணிப்பு. இனிமேல்தான் கண்டுபிடிக்கப்பட வேண்டிய அந்தத் துகள் அவருடைய பெயரால் "ஹிக்ஸ் துகள்' என்று அழைக்கப்படுகிறது. நாம் காணும் இந்த உலகத்திற்கு இந்த ஹிக்ஸ் துகள் பொருண்மையை (ட்ச்ண்ண்) வழங்கியிருக்கக்கூடும் என்பதால் அதனை "கடவுள் துகள்' (எணிஞீ ணீச்ணூtடிஞிடூஞு) என்றும் வேடிக்கையாக அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள். தற்போது நடைபெற்றுவரும் ஆய்வு அந்த கடவுள் துகளைக் கண்டறிய விழைகிறது.


களிமண்ணை உருட்டினால் கடவுள்!கடவுளை உருட்டுகிறார்கள் விஞ்ஞானிகள்!


"ஆற்றலும் பருப்பொருளும் ஒன்றின் இரு வடிவங்களே' என்ற ஐன்ஸ்டினின் கோட்பாட்டின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. புரோட்டான் துகள்கள் இந்த 20 கி.மீ நீளக் குழாய்க்குள் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் மோதவிடப்படுகின்றன. இவ்வாறு மோதும்போது உருவாகக் கூடிய வரம்பற்ற ஆற்றலும், வெப்பமும் குளிரும், பிரபஞ்சம் தோன்றிய அந்தத் தருணத்திற்குப் பின் நாம் எப்போதும் காணாதவை. நம் பிரபஞ்சத்தின் விதிகளை எழுதிய துகள்களும் இந்த மோதுகையின் விளைவாக (collision) வெளிப்படக் கூடும். அத்துகள்களில் பல நாம் இதுவரை கண்டறியாதவையாக இருக்கக் கூடும். பல கோடி முறை நிகழவிருக்கும் இந்த மோதுகைகளில் ஏதேனும் ஒன்று அந்தக் "கடவுள் துகளை'த் தோற்றுவிக்கவும் கூடும். ஆயின், "இந்த உலகம் என்பது என்ன, நாம் ஏன் இங்கு வந்தோம்?'' என்று தத்துவஞானிகள் பலர் எழுப்பிய கேள்விக்கான விடையை, அதாவது "பிரம்ம ரகசியத்தை'க் கண்டறிந்து விட முடியும்.


ஒருவேளை தோற்றுவிட்டால்? "40 ஆண்டுகளுக்கு முன் ஊகிக்கப்பட்ட ஒரு துகளைக் கண்டறிவதைக் காட்டிலும் எங்களைப் போன்ற விஞ்ஞானிகளுக்கு தோல்விதான் சுவையானதாக இருக்கும். எறும்புக் கூட்டத்திலிருந்து மனிதர்களாகிய நம்மைப் பிரிப்பது எது? அறிவுத் தேட்டம்தானே!'' என்கிறார்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள்.


"எறும்பையும் மனிதனையும் கடவுள்தான் படைத்தான்'' என்று கூறும் மதவாதிகளோ, கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல், "அவிசுவாசிகள்' உருவாக்கிய கணினியின் வழியே, "தேவனாகப்பட்டவன் களிமண்ணை உருட்டி ஆதாமைப் படைத்த செய்தி'யையும், இத்தகைய சோதனைகளால் தேவன் படைத்த உலகம் அழிந்து போகக்கூடிய அபாயத்தையும் இணையத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.


சித்தத்தினுள்ளே சதாசிவம் எங்கே?


வளி மண்டலத்திலிருந்து கடவுளை விரட்டும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று விட்டாலும், மனிதனின் நரம்பு மண்டலத்திலிருந்து கடவுள் தானாக வெளியேறிவிடப் போவதில்லை. பக்தர்களின் மூளையில் எந்த இடத்தில் கடவுள் குடியிருக்கிறார்? மூளையின் எந்தப் பகுதி நரம்புகள் தூண்டப்படும்போது அவர்களின் கண் முன்னே கடவுள் "காட்சி' தருகிறார் அல்லது இயேசு அவர்களுக்குள் "இறங்குகிறார்' ? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டு வருகின்றது நரம்பயல் மருத்துவம்.


"மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன், மற்றும் நினைவாற்றலைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் "டெம்பரல் லோப்' என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது. மூளையின் இந்தப் பகுதி வலிப்பு நோயால் பாதிக்கப்படும் போதோ அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான "ஆன்மீக அனுபவங்கள்' ஏற்படுகின்றன'' என்கிறார் கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் பெர்சிங்கர்.


இந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ருடி அபால்டர் என்ற நாத்திகர், உயிரோடு இருக்கும்போதே தான் இறந்துவிட்டது போன்ற நினைப்புக்கு ஆளானார். இன்னொரு நோயாளியான வென் திகே என்ற கிறித்தவப் பெண்ணோ, "தான் ஏசுவைப் பெற்றெடுத்திருப்பதாக'க் கூறினாள். மோசஸ், புனித பால் முதலானோர் "கண்ட' காட்சிகளாக விவிலியத்தில் கூறப்படுபவை, வென் திகேயின் "அனுபவத்தை' ஒத்திருப்பதால், இறைத்தூதர்கள் தீர்க்கதரிசிகள் என்று கூறப்படுவோர் இந்த மூளை வலிப்பினால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கக் கூடும் என்கிறார் பெர்சிங்கர்.


"செவன்த் டே அட்வன்டிஸ்ட் பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எல்லன் ஒயிட் என்ற பெண்ணுக்கு (1836 இல்) 9 வது வயதில் மண்டையில் அடிபட்டு, மூளையில் காயம் ஏற்பட்டது. இதற்கு ஆதாரமும் உள்ளது. இதன் பிறகுதான் "ஏசு அவர் முன் "தோன்றத்' தொடங்கினார்'' என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி கிரகரி ஹோம்ஸ். மண்டையில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய "இறையருள்' கிட்டும் என்பதில்லை. தொடர்ந்து ஆன்மீக சிந்தனையால் தாக்கப்படுபவர்களுக்கும் இத்தகைய "உள்காயம்' ஏற்படக்கூடும்.


"இந்த வலிப்பு தோற்றுவிக்கும் மின் அதிர்வுகள் "டெம்பரல் லோப்' என்ற பகுதிக்கும், உணர்ச்சியையும் உணர்ச்சி சார் நினைவுகளையும் ஆளுகின்ற மூளையின் பகுதிகளுக்கும் உள்ள இணைப்புகளை வலுப்படுத்துவதால், மத உணர்வுகள் பொங்குகின்றன'' என்கிறார் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி, விலயனூர் ராமச்சந்திரன்.


"ஒருவேளை மூளையில் கடவுள் "குடியிருக்கும்' இந்தப் பகுதியை (God spot) அறுத்து அகற்றுவோமாகில், அந்த அறுவை சிகிச்சைக்கு என்ன பெயரிடலாம்? அதனை காடோக்டமி (வாசக்டமி போல) என்று அழைக்கலாமா?'' என இரு மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வேடிக்கையாக அவர் குறிப்பிட்டார். இதையெல்லாம் சகித்துக்கொண்டு சும்மாயிருப்பார்களா மதவாதிகள்? இப்படிப்பட்ட ஆய்வுகள் தங்களது மத உணர்வைப் புண்படுத்துவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கிறித்தவ அமைப்புகள் கூக்குரல் எழுப்பின. "கடவுளை விரைவாகத் தொடர்பு கொள்வதற்கான ஆன்டனாவாக எங்களுடைய கண்டுபிடிப்புகளை நீங்கள் ஏன் கருதக்கூடாது?'' என்று அவர்களை "சமாதானப்படுத்தினார்' ராமச்சந்திரன். அப்படியொரு "ஆன்மீக ஆன்டனா'வை டாக்டர் பெர்சிங்கர் தயாரித்தும் விட்டார்.


கோவில் கனெக்சன் இல்லாமலேயே கடவுளை ஒளிபரப்பும் ஆன்டனா!


காட் ஹெல்மெட் கடவுள் தலைக்கவசம்! இதுதான் அவரது தயாரிப்பின் பெயர். மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கவசம், இதனை அணிந்திருப்பவரின் மூளையில் உள்ள டெம்பரல் லோப் பகுதியைக் குறி வைத்து காந்தப்புலங்களை உருவாக்க வல்லது. எவ்வித நரம்பியல் நோயும் இல்லாத நூற்றுக்கணக்கான மனிதர்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு தனியறையில் இந்தக் "கவச' சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பல்வேறு நாடுகளையும் மதங்களையும் சார்ந்த அந்த நபர்கள் இந்த மூன்று நிமிடச் சோதனையின்போது தத்தம் கலாச்சாரத்துக்கு ஏற்ப, தாங்கள் ஏசுவையோ புத்தனையோ கண்டதாகக் கூறினர்.


டேவிட்சன் என்ற விஞ்ஞானி, கிறித்தவ ஜெபக்கூட்டங்களில், ஜெபித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று உளறத் தொடங்கும் பெண்களின் மூளைகளை ஸ்கேன் (MRI scan) செய்தார். அத்தருணத்தில் அவர்களது மூளையுடைய முன்பகுதி ஏறத்தாழ செயலிழந்திருப்பதைக் கண்டார். தன் மீதான சுயகட்டுப்பாட்டை மனிதனுக்கு வழங்கும் மூளையின் முன்பகுதி செயலிழப்பதால், மொழி பிறழ்ந்து வரும் இந்த உளறலைத்தான், "அந்நிய பாஷை' என்று கிறித்தவர்கள் கூறுகின்றர்.


தியானத்தில் ஈடுபடும்போது, "தான்' என்ற உணர்வு மறைந்து பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலந்து விடுவதாகக் கூறும் புத்த பிக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சிந்தனையின் மீது மட்டுமே மூளை ஒன்று குவிக்கப்படும்போது, திசை மற்றும் வெளி குறித்த பிரக்ஞையை வழங்குகின்ற "பாரிடல் லோப்' செயலிழப்பதையும், அதன் காரணமாகவே இவர்கள் இத்தகைய பிரமைக்கு ஆளாவதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டினர்.


இவையன்றி, பட்டினி கிடத்தல் (விரதம்), இரத்தச் சர்க்கரையின் அளவு அலைபாய்தல், திரும்பத் திரும்ப ஒரே சொல்லை உச்சரிக்கும் மந்திர உச்சாடனங்கள், ஒரே விதமான அசைவு கொண்ட நடனம் ஆகியவையும் "அமானுஷ்யமானவை' என்று சொல்லப்படும் அனுபவத்தைத் தரவல்லவை. மிக உயர்ந்த சிகரங்களுக்கு (அமர்நாத்) செல்லும்போது மூளைக்கு பிராணவாயு செல்வது குறைவதும், கஞ்சாவும், வேகமாகப் பக்கவாட்டில் சுழலும் குடைராட்டினமும் கூட "ஆன்மீக அனுபவங்களை'த் தூண்டக்கூடும் என்கிறது நரம்பியல் விஞ்ஞானம்.


மூளையின் உட்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியிலிருந்து வெளியாகும் டைமெதில் டிரிப்டாமைன் என்ற வேதிப்பொருள்தான் இது போன்ற மாயத்தோற்றங்களை உருவாக்குகிறது என்று "ஆன்மீக மூலக்கூறு' என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் ரிக் ஸ்டிராஸ்மேன். மொத்தத்தில் பக்தர்கள் துரும்பில் தேடிய இறைவனை நரம்பில் கண்டுபிடித்ததுடன், "இறை நரம்பியல்' (neuro theology) ) என்றொரு துறையையும் உருவாக்கிவிட்டது அறிவியல்.


எனினும், தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூக்கத்தை வரவழைப்பது போல கடவுள் மாத்திரை சாப்பிட்டுக் கடவுளை வரவழைக்கலாம் என்றோ, பேதி மாத்திரை போன்றதொரு மாத்திரையால் மூளையிலிருந்து சுமுகமாகக் கடவுளை வெளியேற்றி விடலாம் என்றோ அறிவியல் கூறவில்லை. "மனித மூளையின் உள்ளே தோன்றும் மாயத்தோற்றங்களோ, விவரிக்கமுடியாத "பரவச உணர்வுகளோ', வெளியே கடவுள் என்பவர் இருப்பதற்கான ஆதாரமாக முடியாது'' என்பதையே இந்த ஆய்வுகள் நிறுவுகின்றன.


ஏசு இறங்கினாரா? எம்.ஆர்.ஐ.ஸ்கேன் வழங்கும் தேவ சாட்சியம்!


மதம் என்பது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் சிந்தனைக்கான காரணத்தையும் அதற்கான சமூக அடிப்படைகளையும் நரம்பியல் ஆராயவில்லை; ஆராயவும் முடியாது. மாறாக, அந்த நம்பிக்கை தோற்றுவிக்கும் உணர்வை, நமது நரம்பு மண்டலம் உயிர் வேதியல் மொழியில் எவ்வாறு மொழிபெயர்த்துள்ளது என்பதை, அதாவது மத உணர்வின் பொருள் வடிவத்தைக் கண்டறியவே நரம்பியல் முயல்கின்றது.


பெர்சிங்கரின் ஹெல்மெட்டால் நாத்திகரின் மூளையில் கடவுள் நம்பிக்கையை வரவழைக்க முடியாது; ஆத்திகரின் மூளையிலிருந்து நம்பிக்கையை அகற்றவும் முடியாது. அவருடைய ஹெல்மெட் சோதனையில் பங்கேற்ற ஒரு கன்னியாஸ்திரீ, "ஏசு எனக்குள் இறங்கினாரா டாக்டர்? ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து கொஞ்சம் சொல்லுங்களேன்'' என்று சோதனை முடிந்தபின் பெர்சிங்கரிடம் கேட்டாராம். இறை நம்பிக்கையை ஒழிக்கும் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு, அதற்கு நேரெதிரான விளைவை அந்த கன்னியாஸ்திரீயிடம் ஏற்படுத்தியிருக்கின்றது.


பொருளும் சிந்தனையும்: புரட்சி எனும் ஹைட்ரஜன் கொலைடர்!


இயற்பியல் கடவுள் துகளைக் கண்டறிந்தாலும், மத உணர்வின் உயிர் வேதியல் சங்கேதங்களை நரம்பியல் கண்டுபிடித்தாலும் இவற்றின் விளைவாகவெல்லாம் மத நம்பிக்கை தானே ஒழிந்து விடாது. மதம் என்ற அபினை மனித மூளைக்குள் உற்பத்தி செய்யும் அடித்தளம் சமூகத்தில் இருப்பதால், ஒரு சமூகப் புரட்சியின் மூலம் மட்டுமே மனித மூளையிலிருந்து "கடவுளை' அகற்ற முடியும் என்றார் மாமேதை மார்க்ஸ். அத்தகையதொரு புரட்சியை சாதிக்கும் பொருட்டு, மனித சமூகம் எனும் சோதனைச்சாலையில் நடத்த வேண்டியிருக்கும் ஆய்வும், மனிதர்களின் சிந்தனையை மாற்றியமைக்கும் இந்தச் "சோதனையும்' ஒப்பீட்டளவில் கடினமானவை.


உலக முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு மென்மேலும் ஆட்படுத்தப்படும் மக்கள், அந்தத் துயரத்திலிருந்து விடுபடவும் முடியாமல், காரணமும் விளங்காமல், கடவுளிடமும் மதத்திடமும் சரணடைகிறார்கள். இந்தச் சுரண்டலால் ஆதாயமடையும் ஆளும் வர்க்கமோ மக்களை இந்த மடமைப் படுகுழியில் ஆழ அமிழ்த்துகிறது.


எந்த மேலை நாடுகளில் நடைபெறும் அறிவியல் ஆய்வுகள் கடவுளைத் துரத்துகின்றனவோ, அதே அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கடவுள் அரியணையில் ஏற்றப்படுகின்றார். அமெரிக்காவின் 5 மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு விவிலியம் கற்பிக்கப்படுகிறது. மதச்சார்பற்ற நாட்டில் பள்ளிகளில் மதக்கல்வி அளிக்க சட்டரீதியான தடை இருப்பதால், "கல்விச் சுதந்திரம்' என்ற பெயரில் அறிவியல் வகுப்புக்குள் விவிலியம் நுழைக்கப்பட்டு விட்டது.


"டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுடன் விவிலியத்தின் படைப்புக் கோட்பாட்டையும் கற்பிக்க வேண்டும்' என்பதை ஒரு இயக்கமாகவே நடத்திவர், புஷ் கட்சியின் சார்பில் தற்போது குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சாரா பாலின். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிறித்தவ தீவிரவாதக் குழுக்கள், கோடிக்கணக்கில் டாலரை இறைத்து ஐரோப்பிய நாடுகளின் பள்ளிகளிலும் ஏசுவை இறக்கி வருகின்றன.


பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கிய சார்லஸ் டார்வின் பணியாற்றிய இடமும், உலகின் புகழ் பெற்ற அறிவியல் மையமுமான, பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி என்ற நிறுவனமே பள்ளிகளின் அறிவியல் வகுப்புகளில் பைபிளின் படைப்புக் கோட்பாட்டைச் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது (தி இந்து, செப், 18).


விவிலியக் கோட்பாடே அறிவியல் பூர்வமானது என்று சித்தரித்து, டார்வினைக் கேவலப்படுத்தும் குறுந்தகடுகளை இலட்சக்கணக்கில் இங்கிலாந்தின் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கின்றன அமெரிக்க இவான்ஜெலிகல் குழுக்கள். "குரங்குக்கும் மனிதனுக்கும் மூதாதை ஒன்று என்றால் மிச்சமுள்ள குரங்கெல்லாம் இன்னும் ஏன் மனிதனாகவில்லை?'' என்று 1860 ஆம் ஆண்டில் டார்வினுக்கு எதிராக மூடப்பாதிரிகள் எழுப்பிய அதே நைந்துபோன கேள்வியை மீண்டும் எழுப்புகின்றன இந்தக் குறுந்தகடுகள். ஒவ்வொரு பள்ளியாகச் சென்று பைபிளுக்குப் பலியான மாணவர்கள் மத்தியில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், பிரிட்டனின் புகழ் பெற்ற பகுத்தறிவாளருமான ரிச்சர்டு டாகின்ஸ்.


"அடுத்தது என்ன, உயிரியல் வகுப்பில் ஆதாமின் விலா எலும்பை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா?'' என்று குமுறியிருக்கிறார் ஒரு அறிவியலாளர். இல்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விலா எலும்பை முறிக்க வேண்டும். அதுதான் டார்வினுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. அறிவியல் பார்வை வளர்வதற்கும் கூட அதுதான் வழி.


http://tamilcircle.net/index.php?view=article&catid=67%3A2008&id=4243%3A2008-10-15-19-23-47&option=com_content&Itemid=29

நூற்றாண்டுகால தனிமையும் தொடரும் துரோகமும்....-பொன்னிலா

இன்றைய அறிக்கை நாளைய ஆவணம். தமிழகத்தின் தமிழினத் தலைவர்களின் அறிக்கைகள் கூட எதிர்கால இளம் தலைமுறையினருக்கு கடந்த காலத்தின் சாட்சியமாய் இருக்கும். துரோகமும் பெருந்துரோகமுமாய் கொந்தளிப்பாய் நம்மை இதுவரை கடத்தி வந்த தலைவர்களின் வாக்குமூலங்களாய் அவைகள் பல்லிளிக்கக் கூடும். முன்னெப்போதையும் விட கடந்த பத்து நாட்களில் தமிழக அரசியல் அறிக்கைகளால் ஆனதாய் மாறியிருக்கிறது. வாழும் காலத்தில் காந்திகளாகவும் மடிந்த பிறகு ஹிட்லர்களாகவும் தலைவர்களை வரலாறு புரட்டிப் போட்டிருக்கிறது. ஆனால் இவர்கள் மகாத்மாக்களா? ஹிட்லர்களா என கணிப்பதே சிரமமாக இருக்கிறது. இந்த அம்மணமான அவமான அரசியலுக்கு அவர்கள் வைத்துக் கொண்ட பெயர் அரசியல் ராஜதந்திரம். நாமோ அதை “தொடரும் துரோகம்” என்கிறோம்.

Karunanidhi“கொடுங்கையூரில் ராஜீவ்காந்தி சிலை உடைக்கப்பட்டதன் மூலம் தமிழகத்தில் புலிகளின் நடமாட்டம் இருப்பது உறுதியாகி இருக்கிறது” இப்படி ஒரு அறிக்கையை அண்மையில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு விட்டிருந்தார். படித்த உடன் கண்ணைக் கட்டியது. இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த மக்கள் தலைவர் ஒருவரின் சிலையை அல்லவாஉடைத்திருக்கிறார்கள். ஆனாலும் புலிகள் இப்படி கொடுங்கையூருக்கு வந்து ராஜீவ்காந்தி சிலையை உடைத்திருக்கக் கூடாது என்பதே என் கருத்து. அதுவும் கிளிநொச்சி சிங்கள ராணுவத்தின் முற்றுகையில் இருக்கும்போது தமிழ் மக்களைப் பாதுகாப்பதை கைவிட்டு கொடுங்கையூருக்கு தங்களின் பிரதான தளபதிகளை சிலை உடைக்க அனுப்பி வைத்ததை மானமுள்ள, தேசபக்தி உள்ள, பாரத மாதாவின் உண்மை புத்திரர்கள் யாரும் கண்டிக்காமல் இருக்க முடியாது. ஆகவே புலிகளை நானும் கண்டிக்கிறேன் ராஜீவ்காந்தியின் சிலையை உடைத்ததற்காக.

இன்னும் எதைக் கண்டிக்க வேண்டும், எதைப் பாராட்ட வேண்டும்? “ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவே மௌனசாட்சி என்றும் இந்தியா கொடுக்கிற ஆயுதங்களில் தான் ஈழ மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும் சொன்ன ஜெயலலிதாவைப் பாராட்டுவதா? அல்லது மறுநாளே.”இலங்கைப் போரை நிறுத்தச் சொல்லும் அதிகாரம் இந்தியாவுக்குக் கிடையாது. புலிகள் பயங்கரவாதிகள் அவர்கள் என்னை கொல்லத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்ன ஜெயலலிதாவைக் கண்டிப்பதா?

இரண்டு நாள் கழித்து, டில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் “விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் அல்ல. தமிழர்களின் விடுதலைக்காக போராடும் இயக்கம்” என்று சொன்னதை பாராட்டுவதா? இல்லை மறுநாளே பாட்டாளி மக்கள் கட்சியின் ஜி.கே.மணி “புலிகள் பற்றி மருத்துவர் ராமதாஸ் சொன்னது வருத்தத்திற்குரியதுதான். புலிகளை நாங்கள் பார்த்தது கூட கிடையாது. (நல்ல வேளை ஈழம் என்பது எங்கிருக்கிறது என்பது கூடத் தெரியாது என்று சொல்லாமல் விட்டாரே) மருத்துவர் அப்படி (போராளிகள் என்று) சொல்லியிருக்கக் கூடாது” என்று சொன்ன மணியைக் கண்டிப்பதா?

அடுத்து அதிரடியாக காட்சிக்கு வந்தார் கருணாநிதி.

“இதோ, இன்று வெளிவந்துள்ள "ஹிந்துஸ்தான் டைம்ஸ்" ஆங்கிலப் பத்திரிகையில் ஜெயலலிதா நம்முடைய அனைத்துக் கட்சி தீர்மானத்திற்குப் பதிலாக வெளியிட்ட மறுப்பறிக்கையை பாராட்டி, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபக்ச என்பவர் கொடுத்த பேட்டி வெளிவந்துள்ளது. அதில் அவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?. ‘நிலைமையை நாங்கள் கவனித்து வருகிறோம். இந்திய அரசு ஏதாவது அறிக்கை வெளியிடுகிறதா என்பதை நாங்கள் பார்ப்போம். அது மாத்திரமல்ல, கருணாநிதிக்கு எதிராக ஜெயலலிதா பேசியிருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.’ இந்த அளவிற்கு சிங்கள அரசுக்கு ஆதரவாக ஜெயலலிதா இருப்பதை அவர்களே ஒத்துக்கொண்டு சொல்லியிருப்பதைப் படிக்கும்போது, தமிழா, இப்போதாவது புரிகிறதா?. உண்மையில் காட்டிக் கொடுக்கின்ற கபட நாடகம் ஆடுவது யார் என்று?” என்று கருணாநிதி சொன்னதை உணர்ச்சிவசப்பட்டு பாராட்டுவதா...

இல்லை இப்போது போர் நிறுத்தக் கோரிக்கையை தூக்கி ஓரமாக வைத்து விட்டு ‘நாற்பதாண்டு காலப் போரை நான்கு நாளில் முடிவுக்கு கொண்டு வர முடியாது.’ என்கிற பிரணாப் முகர்ஜியின் கருத்தையே வழிமொழிந்து “இவ்விஷயத்தில் மத்திய அரசுக்கு திமுக எவ்வித நெருக்கடிகளையும் கொடுக்காது” என்கிற கருணாநிதியைக் கண்டிப்பதா?

நம்மை வழிநடத்திச் செல்கிற, செல்லப்போகிற அய்யாக்களையும், அம்மாக்களையும், புரட்சிப் போராளிகளையும் சரியாக கணித்த ஒருவர் இருக்கிறார். அவரை பாராட்டியே ஆக வேண்டும். போர் வெறிபிடித்த பாசிச இலங்கை அரசின் ஊடகத்துறை அமைச்சராக இருக்கும் லஷ்மன் யாப்பாதான் அவர். தமிழகத்தில் எழுந்த ஈழத் தமிழர் ஆதரவுக் கொந்தளிப்புகள் தொடர்பாக ஊடகத்துறையினரிடம் பேசிய அவர். “இந்தியாவில் தேர்தலொன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் எழுந்திருக்கும் இந்த சூடான நிலைமை, தேர்தல் முடிவடைந்த பின்னர் தணிந்து விடும். இதை கண்டு கொள்ளத் தேவையில்லை” என்றிருக்கிறார். நமது தமிழினத் தலைவர்களை நம்மை விட நமது எதிரி எவ்வளவு துல்லியமாக கணித்திருக்கிறார். அந்த பாசிச அரசின் பிரதிநிதியை பாராட்டாமல் என்ன செய்ய? அவர் தேர்தல் முடிந்த பிறகு தணிந்து விடும் என்றார். மத்தியில் தேர்தல் வர இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறது. அதற்குள்ளாகவே முடிந்து போய் விட்டதே.

இரண்டு வார காலத்திற்குள் இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட இந்தியா வழியேற்படுத்தாவிட்டால் தமிழகத்தின் நாற்பது எம்பிக்களும் தங்களின் ராஜிநாமா கடிதங்களை மத்திய அரசுக்கு அனுப்புவார்கள் என்ற முடிவு அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவு. திமுகவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதமும் கருணாநிதியின் கைக்குப் போனது. முடிவுகள் முடிவுகளாக இருந்தன. பாட்டாளி மக்கள் கட்சியோ தங்கள் கட்சி எம்பிக்களின் ராஜிநாமா குறித்து கருத்துச் சொன்ன போது “ராஜிநாமாவை தி.மு.க. தலைவர் அனுப்பினால் நாங்களும் அதனைப் பின்பற்றுவோம்.” என்றார் ராமதாஸ்.

திமுக தனது ராஜிநாமா கடிதங்களை மத்திய அரசுக்கு அனுப்பாவிட்டாலும் பாட்டாளி மக்கள் கட்சி எம்.பிக்கள் தங்களின் ராஜிநாமா கடிதங்களை மக்களவைத் தலைவருக்கு அனுப்புவார்கள் என்று சொல்ல பாட்டாளி மக்கள் கட்சிக்கு கசக்கிறது.

ஓட்டுச் சீட்டு அரசியலையும் பாராளுமன்ற பதவிகளையுமே பிரதானமாக நினைக்கும் இவர்கள் அரசியலற்ற அரசியல் நடத்துகிறார்கள். மக்களையும் அரசியலற்ற அரசியலுக்குத் தூண்டுகிறார்கள். உண்மையில் இந்தக் கொந்தளிப்பை நீங்கள் உருவாக்கவில்லை. அது தமிழக மக்களிடம் தன்னெழுச்சியாய் உருவான ஒன்று. அதை அறுவடை செய்யலாம் என தமிழினத் தலைவர்கள் முயன்றார்கள். காங்கிரஸ் கட்சி ஈழ மக்களுக்கு ஆதரவான போர் நிறுத்தக் கோரிக்கையை விடுதலைப் புலிகளின் பிரச்சனையாக மாற்றியது. திமுக தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வன்னிப் போர் முனையில் சிக்கியுள்ள பல லட்சம் மக்களின் வாழ்க்கையை பலிகடாவாக்கியிருக்கிறது.

நாடகங்கள் வெகு வேகமாக அரங்கேறின. இந்தியத் தரப்பில் இருந்து போரை நிறுத்தக் கோரி எவ்விதமான கோரிக்கைகளும் இலங்கை அரசுக்கு விடப்படவில்லை. இலங்கை இனப்பிரச்சனைக்கு ராணுவத் தீர்வின் மூலம் முடிவு காண முடியாது என்கிற மட்டில் கருத்துச் சொன்னார்கள். அவைகள் முடிவுகள் அல்ல கருத்துகள். அதே சமயம் இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்குவதாக எடுக்கப்பட்டது கருத்தல்ல முடிவு. அந்த முடிவுகளை இந்திய அரசாங்கம் செயல்படுத்தியது. இலங்கை கடற்படையோடு சேர்ந்து கூட்டு ரோந்து என்பதும் கருத்தல்ல முடிவு. இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சியளிப்பதாக எடுக்கப்பட்டதும் கருத்தல்ல முடிவு.

இந்நிலையில் தான் தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்று சேர்ந்து இலங்கையில் போர் நிறுத்தம் என்ற கோரிக்கையை தமிழகத்தின் முடிவாக எடுத்து அதை மத்திய அரசுக்கு கோரிக்கையாக அனுப்பி வைத்தார்கள். இரண்டு வாரகாலத்திற்குள் இந்தியா தலையிட்டு போர் நிறுத்தம் அறிவிக்காவிட்டால் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்பதுதான் அந்த முடிவு. ஆமாம் தமிழகத்தின் முடிவு. மத்திய அரசுக்கோ அது ஒரு கோரிக்கை அவ்வளவுதான்.

Jayalalithaகடந்த ஐம்பதாண்டுகால ஈழத் தமிழரின் மீதான துரோக வரலாற்றில் இதுவரை தமிழகம் கை நனைக்காமலேயே இருந்து வந்தது. அதை மட்டும் விடுவானேன் அதையும் செய்து விடுவோம் என்று நினைத்தார்களோ என்னவோ ஒரு இன அழிப்பின் மீதான இந்தியத் தீர்ப்புக்கு இவர்கள் குறிப்பாக அதிமுகவும், திமுகவும், பாட்டாளி மக்கள் கட்சியும் குறிப்பெழுதிக் கொடுத்து விட்டார்கள். அதனால்தான் கருணாநிதி இலங்கை தொடர்பாக இந்தியா எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கிறார். அதாவது போர் தீர்வல்ல என்று கருத்துச் சொல்கிறவர்களை பாராட்டுகிறார்.

சூழலை ஆனது ஆனபடி ஒப்பேற்றியபடி இனவெறியன் பசில் ராஜபட்சேவோடு விருந்து உண்ட கையோடு வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்தார். இந்தியா 800 டன் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு அனுப்பும் என்றும் இதை முறைப்படி இலங்கை அரசே தமிழ் மக்களுக்கு வழங்கும் என்றும் நாற்பதாண்டு காலமாக நடக்கிற போரை நான்கு நாட்களில் முடிவுக்கு கொண்டு வர முடியாது என்றும் நார்வேயின் தலைமையில் அமைதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், கிழக்கு மக்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதன் மூலம் அங்குள்ள மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும் என்றும் கலந்து கட்டி இலங்கை அதிபர் ராஜபட்சேயின் கருத்துக்களை சென்னையில் திமுகவின் ஆதரவோடு கொட்டிக் கொண்டிருந்தார் பிரணாப் முகர்ஜி.

இதில் வேடிக்கையான ஒன்று தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்ததான ஒன்றும் இருந்தது. இனி இலங்கை அரசு கடல் எல்லையை அளந்து இந்தியாவிடம் சொல்லுமாம். அதன்படி அங்கீகரிக்கப்பட்ட படகுகளில் எல்லை தாண்டிச் செல்லும் மீனவர்களை பத்திரமாக இலங்கை திருப்பி அனுப்புமாம். அப்படி இலங்கை அரசு சொன்னபோது 2005ல் இலங்கை அரசோடு போடப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி இந்தியா கேட்டுக் கொண்டதாம்.

2005ல் போடப்பட்ட இலங்கை இந்திய ராணுவ ஒப்பந்தம் என்பது தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை ஒட்டு மொத்தமாக இலங்கை அரசிடம் அடகு வைக்கிற ஒப்பந்தம். தவிரவும் இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் சேர்ந்து நிகழ்த்தும் கூட்டு ரோந்து என்கிற முடிவு இருக்கிறதல்லவா? அந்த முடிவும் இந்த ராணுவ ஒப்பந்தத்தின் கீழ்தான் வருகிறது.

இதில் தமிழகம் வைத்த போர் நிறுத்தக் கோரிக்கை எங்காவது வந்ததா? அதற்குப் பதில் மத்திய அரசு என்ன செய்திருக்கிறது என்று பார்த்தால், இது வரை தமிழகத்தில் எழுந்த அரசியல் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைத்திருந்த கூட்டு ரோந்து, ராணுவ ஒப்பந்தம் போன்ற விஷயங்களை மிகவும் தந்திரமாக மாநில முதல்வரிடம் ஒப்புதல் வாங்கிச் சென்றிருக்கிறது. இதில் வெற்றி தோல்வி யாருக்கு என்று பார்த்தால் தோல்வி தமிழக மக்களுக்கும் ஈழ மக்களுக்கும்தான், இம்முறையும் வெற்றி சிங்களர்களுக்குத்தான். எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பசில்ராஜபட்சே எரிகிற தீயில் தண்ணீரை ஊற்றி அணைத்து விட்டு வெற்றியோடு கொழும்புக்குச் சென்றிருக்கிறார். இவர்களோடு கூட்டு சேர்ந்த தமிழக தலைவர்கள் டில்லி காங்கிரஸ்காரர்களோடு சேர்ந்து தமிழகத்துக்கு பட்டை நாமம் போட்டு விட்டுப் போய் விட்டார்.

இலங்கையின் முன்னாள் அதிபரும் பாசிச தலைவருமான ஜெயவர்த்தனே விரித்த வலையில் எப்படி ராஜீவ்காந்தி சிக்கிக் கொண்டாரோ அப்படி அண்ணனும் தம்பியுமான ராஜபக்ஷேவும், பசில்ராஜபக்ஷேவும் விரித்த வலையில் மன்மோகன் சிங் வகையாக சிக்கிக் கொண்டிருக்கிறார். இப்போது தமிழினத் தலைவர் கருணாநிதி என்ன சொல்கிறார் என்றால், “கிட்டத்தட்ட அவர் (பிரணாப் முகர்ஜி) சொல்கிற மாதிரி 40 ஆண்டுகளாக நீடிக்கிற யுத்தம் நான்கு நாட்களில் முடியாது. நாம் போர் நிறுத்தம் வேண்டும் எனச் சொன்னது பொது மக்களை இன்னல்களில் இருந்து காப்பற்றத்தான். இப்பொழுது இலங்கை அரசு நாங்கள் பொதுமக்களை நிச்சயம் தாக்க மாட்டோம் என்ற உறுதி மொழியை அளித்திருக்கிறது” என்கிறார்.

நண்பர்களே, இந்திய அரசின் அக்கிரமமான இந்த முடிவை கருணாநிதி ஆதரிக்கிற போது ‘நாம்’ என்ற சொல்லை பயன்படுத்துகிறார். அதாவது அனைத்துக் கட்சித் தலைவர்களும் போர் நிறுத்தம் என்று சொன்னது மக்களை இன்னல்களில் இருந்து காக்கத்தான் என்பதை தந்திரமாக சுருக்கிக் கதைக்கிறார். ஈழ மக்களை சோற்றால் அடித்தால் விழும் பிண்டங்கள் என நினைக்கிறார். அதனால்தான் யுத்த முனையில் வன்னிக்காடுகளில் பாம்புக்கும் தேளுக்கும் மத்தியில் குண்டு மழைக்கு செத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு தயிர்சாதமும் புளி சாதமும் போடக் கேட்கிறார்.

இவர்களின் இந்தக் கூட்டு சதியை கூட்டு நாடகத்தை மருத்துவர் ராமதாஸ் மத்திய அரசு இறங்கி வந்து விட்டதுபோலப் புகழ்கிறார். அவர்கள் தமிழ் மக்களுக்கு வீசி வைத்திருக்கும் வலையைப் புரிந்து கொண்டே இவர்கள் இந்த நூற்றாண்டு கால துரோகத்தைச் செய்கிறார்கள். சரி இலங்கை அரசு ஒப்புக் கொண்டபடி வன்னிப் பகுதிக்கு உணவுப் பொருட்களை அனுப்புமா? என்றால் அனுப்பும்; உணவோடு கூடவே ராணுவத்தினருக்குத் தேவையான தளவாடங்களையும் சேர்த்தே அனுப்பும். தற்காப்புத் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் புலிகளோ ஆயுதம் வரும்போது அதை தாக்கக் கூடும். உடனே “இதோ பாருங்கள் இந்தியா கொடுத்த உணவுப் பொருட்களை நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினோம். ஆனால் புலிகள் அதை தாக்கியழித்து விட்டார்கள்” என்று இலங்கை பிரச்சாரம் செய்யும்.

தமிழகத்தில் எப்போதெல்லாம் கொந்தளிப்புகள் எழுந்து வந்தனவோ அப்போதெல்லாம் அதை தங்களுக்கு சாதகமாக மாற்றுவதுதான் போர் வெறி பிடித்த இலங்கை அரசின் யுத்த தந்திரம். அப்படி மக்களின் எழுச்சியை போருக்கு பலியாக்குகிற அளவுக்கு நமது தமிழக தலைவர்கள் இருந்தார்கள்; இன்றும் இருக்கிறார்கள். அதி வேகத்தில் தமிழகத்தில் எழுந்த ஈழ ஆதரவு அலை ஓய்ந்து விட்டதா? என்றால் இல்லை. அது எளிய மக்களிடம் பெரும் கொந்தளிப்பாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சிதான் இந்த எழுச்சியை புலிகள் பிரச்சனையாக மாற்றுகிறது. எழுகின்ற ஆதரவு அலையை விட அதிக சத்தம் கேட்கும்படியாக இந்த ஆதரவோடு விடுதலைப் புலிகளை முடிச்சுப் போட்டு பேசுகிறவர்களின் வாயை அடைக்கிறது.

தேர்தல் நெருங்கி வரும் போது கூட்டணியைக் கணக்கிட்டே இந்த துரோகங்கள் அரங்கேறுகின்றன. திமுகவைத் தவிர்த்து விட்டு காங்கிரஸ் தலைமையில் அணிசேர வேண்டும் என நினைக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. அடுத்தவன் முதுகில் ஏறியே இது வரை சவாரி செய்த காங்கிரஸோ விஜயகாந்தோடும் ரகசிய பேரத்தை நடத்தி முடித்திருக்கிறது. ஒரு வேளை இன்னும் மீதியிருக்கிற ஆறு மாத காலத்தை முழுவதுமாக காங்கிரஸ் அரசு பூர்த்தி செய்து பின்னர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் என்றால் - தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் பட்சத்தில் - அதிமுக பிஜேபியோடு கூட்டணி சேரும் பட்சத்தில் - கம்யூனிஸ்டுகள் தனித்தோ விஜயகாந்துடனோ சேர்ந்து தேர்தலைச் சந்திக்கும் பட்சத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கருணாநிதி நினைக்கிற மாதிரி இருக்காது.

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைய வாய்ப்பே இல்லை. மக்கள் விரோத காங்கிரஸ் கட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள். பாசிச பிஜேபி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். ஆனால் மாநிலத்தில் ஆளும் திமுக காங்கிரஸ் தயவில் இன்னும் இரண்டரை ஆண்டுகளை ஒட்டியாக வேண்டும் என்கிற சூழலில் - நண்பர்களே இதை முடிந்தால் நினைவில் வையுங்கள் - திமுக அரசை காங்கிரஸ் கவிழ்த்து விடும். காரணம் காங்கிரஸ் விஜயகாந்தின் முதுகில் குதிரை ஏறப் போய்விடும். துரோகம் என்றால் அதற்கு மறுபெயர் காங்கிரஸ் இது கருணாநிதிக்கும் தெரியும்.

Ramadossகாங்கிரஸ்காரர்கள் ஏன் ஈழ மக்கள் மீது இவ்வளவு வன்மத்தோடு நடந்து கொள்கிறார்கள் என்றால் ராஜீவ்காந்தியைக் கொன்று விட்டார்கள் என்கிறார்கள். ஆமாம் கொன்று விட்டார்கள். கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்தக் கொலையை கண்டித்தாயிற்று. ஏராளமாய் அழுதாயிற்று இப்போது வேண்டுமானால் மீண்டும் கண்டிக்கிறேன். ராஜீவ்கொலை படுபாதகம். இந்தியாவுக்கு மட்டுமல்ல அமெரிக்கா, அய்ரோப்பா, ஆப்ரிக்கா போன்ற அகில உலகத்துக்கே அது பேரிழப்பு. ஏனென்றால் உலகின் சகல பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் வல்லமையும், சாதுரியமும் உடையவர் அல்லவா? அவர் இல்லாமல், அகில உலகமும் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது, குறிப்பாக ராகுல் காந்தியும், ப்ரியங்காவும் தகப்பனை இழந்து போதிய வருவாய் இல்லாமல் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகத்தான் இருக்கிறது. ஆகவே நானும் ராஜீவ்கொலையைக் கண்டிக்கிறேன்.

சரி, கண்டனங்கள், காரியங்கள், அரசியல் விளையாட்டுகள், கைதுகள் எல்லாவற்றையும் கடந்து இரு கேள்விகள் பாக்கியிருக்கின்றன. அது...

அமீரும் சீமானும் ஏன் கைது செய்யப்பட்டார்கள்? கலைஞர்களின் (Freedom Of Expressions) உணர்வுகளுக்கு சுதந்திரம் உண்டா இல்லையா?

இந்த இரண்டாவது கேள்வியை இவர்களிடம் கேட்பதே அபத்தம். முதலாவது கேள்விக்கு அவர்களில் ஒருவர் பிரிவினைவாதம் பேசினார். இன்னொருவர் புலிகளை ஆதரித்தார். ஆகவே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். புலிகளை ஏன் ஆதரிக்கக் கூடாது என்றால் அவர்கள் ராஜீவைக் கொன்று விட்டார்கள் என்பது பதில். அவர்கள் ஏன் ராஜீவைக் கொல்ல வேண்டும் என்ற நமது இரண்டாவது கேள்வியைக் கேட்டால் அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கிற கேள்வி என்கிறார்கள். ஆனால் பதில் தெரிந்தாக வேண்டிய கேள்வியல்லவா? ஒரு இளம் தலைவனை நாம் ஏன் இழந்தோம் என்று எனது குழந்தை கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?

இந்திராகாந்தியை அவரது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்கள் ஏன் கொன்றார்கள்? என்று ஒரு இந்தியக் குழந்தை கேட்டால் மன்மோகன்சிங் பிரதமராக இருப்பதால் இம்மாதிரி கேள்விகளெல்லாம் கேட்கக் கூடாது என்று காங்கிராஸ்காரர்கள் சொல்ல முடியாது. கேட்கிற உரிமையையும் அதை அறிந்து கொள்கிற உரிமையையும் இந்திய அரசியல் சாசனம் எனக்கும் என் சந்ததிக்கும் வழங்கியிருக்கிறது. ஆக, ராஜீவ்காந்தி ஏன் மனித வெடிகுண்டின் மூலம் கொல்லப்பட்டார் என்றால் அதற்கான பதிலை ஈழத்தில்தான் தேட வேண்டும்.

ராஜீவ்காந்தி எதற்காக கொல்லப்பட்டார் என்பதை இன்னொரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம். இந்திராவைப் பற்றி உங்களிடம் யாராவது கேட்டால் நீங்கள் கூட எழுதலாம். சரி காங்கிரஸ்காரன் பிரச்சனை புரிகிறது. நமது தமிழினத் தலைவர்களுக்கு என்னதான் பிரச்சனை என்றால் ஒன்றே ஒன்றுதான். அது சென்னை ஜார்ஜ் கோட்டையிலே இருக்கிற மாநில முதல்வர் நாற்காலி என்பதுதான். அதில் யாராவது ஒருவர்தான் அமர முடியும். அதுதான் இவர்களின் பிரச்சனை. இந்திய அரசு இப்படி ஒரு முடிவு எடுக்கிறது என வைத்துக் கொள்வோம். அதாவது ஒரு மாநிலத்தை இரண்டு முதல்வர்கள் ஆளலாம். அதாவது இனி மாநில முதல்வர் நாற்காலி என்பது இரண்டு நாற்காலியாக இருக்கும் என்று முடிவெடுக்கிறது என வைத்துக் கொள்வோம். இவர்களின் பிரச்சனை முடிந்தது. ஜெயலலிதாவும் கருணாநிதியுமே கூட்டணி வைப்பார்கள். ராமதாசும் விஜயகாந்தும் கூட ஒன்றாக இணையும் வாய்ப்பு உண்டு.

ஆக உங்களின் பிரச்சனை உங்களோடு இருக்கட்டும். மக்களை மந்தைகளாக்காதீர்கள். அவர்களை அரசியலற்ற வெற்று வெடிகளாக்கி வேடிக்கை காட்டாதீர்கள். எண்பதுகளில் எழுந்த ஈழ ஆதரவு அலையை பயன்படுத்தித்தான் இந்திராவும் அதன் பின்னர் ராஜீவும் ஈழத்தில் தலையிட்டு வேண்டாத நிகழ்வுகளை உருவாக்கிக் கொண்டார்கள். உங்களின் தலையீடு இலங்கையில் அவசியம்தான். அது ஈழ மக்களுக்கு ஆதரவாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே பயனளிக்கும். அதுவல்லாமல் கூலிக்கு மாரடிக்கிற ராணுவத்தையும் கொள்கைக்காகப் போராடுகிற ஈழ மக்களையும் ஒன்றாக வைத்து அளவிட வேண்டாம். உங்களின் கோஷங்கள் தமிழனத்தின் தலைமைக்கான அறைகூவலகள் எல்லாவற்றையும் உங்கள் மட்டில் மேடைகளில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் உங்களை விட மகாத்தானவ்ர்கள். அவர்கள் எப்போதும் போராளிகளை ஆதரிக்கிறார்கள். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு துளி கண்ணீரேனும் சிந்துவார்கள்.


http://www.keetru.com/literature/essays/ponnila_1.php

மாங்குளம் நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 10 படையினர் பலி

[திங்கட்கிழமை, 03 நவம்பர் 2008, 10:48 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
மாங்குளம் நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

வன்னிவிளாங்குளத்திலிருந்து மாங்குளம் நோக்கி சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 12:00 மணியளவில் முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.

பிற்பகல் 5:00 மணியளவில் படையினரின் முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

இதில் 10 படையினர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர் என களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


http://www.puthinam.com/full.php?201VoA20eUcY42eacA4y3bdC6D74dc71e3cc4YmI3d42mOA3a03QMH3e

சிறிலங்காவின் பொருளாதாரம் மிக மோசமடைந்துள்ளது - அனைத்துலக நாணய நிதியம்

சிறிலங்காவின் பொருளாதாரம் மிக மோசமடைந்துள்ளது - அனைத்துலக நாணய நிதியம்
திங்கள், 03 நவம்பர் 2008, 18:03 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன்]



சிறீலங்கா பொருளாதாரம் மிக மோசமான நிலையை நோக்கிச் செல்வதாக அனைத்துலக நாணயநிதியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது. இந்த அறிக்கையில்:

25 வருடங்களுக்கு மேலாக நடைபெறும் மோதல்களால் பொருளாதாரம் மிக மோசன நிலையை நோக்கிச் செல்கின்றது. 2008ம் ஆண்டு சிறீலங்காவின் பணவீக்கம் 23.9 விழுக்காட்டினை எட்டியுள்ளது.

நாயணத்தின் பெறுமதியை அதிகரித்தமை, நேர்த்தியான வரவு - செலவு பாதீட்டை பேணாமை, வெளிநாடுகளுடைய கடன்களில் தங்கியிருப்பது போன்ற காரணிகளால் தற்போது அதன் பொருளாதாரம் மோசமான நிலையை நோக்கி சென்றுள்ளது.

பொருளாதாரத்தின் சமமற்ற தன்மை, உயர் பணவீக்கம், வெளிநாட்டுக் கடன் நிதி தொடர்பான அழுத்தம் போன்றவற்றால் இலங்கையின் பொருளாதார பாதிக்கும் அச்சம் காணப்படுகின்றது.

சிறீலங்காவின் பணவீக்கம் ஒக்டோபர் மாதத்தில் 23.4 வீதமாகக் காணப்பட்டது. பொதுச் செலவுகளைக் குறைக்குமாறும், உட்கட்டுமான நிதிக்கு மில்லியன் ரூபா செலவு செலவு செய்வது குறித்தும் நாணய நிதியம் ஏற்கனவே இலங்கைக்கு அறிவுரை வழங்கியிருந்தது.

இந்த நிலையில் இலங்கை மத்திய வங்கி இருவருடங்களுக்கு 200 மில்லின் டொலர்களைப் பெறுவதில் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றது. வெளிநாட்டு வணிக வங்கிகளிடம் இருந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவது குறித்தும் பேச்சுகளை நடத்தி வருகின்றது அனைத்துலக நாணய நிதியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


http://www.pathivu.com/news/388/34//d,view.aspx