அன்பார்ந்த மும்பைவாழ் தமிழர்களே!!
உங்கள் அனைவருக்கும் எங்கள் உள்ளம் கனிந்த
“பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்”
நகரத்திலே வாழ்ந்து தமிழை, பண்பாட்டை, நன்றியுணர்ச்சியை மறந்த குடியாகிப்போன நாம், பணம் கொடுத்தால் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் வாழ்ந்து வருகிறோம். ஆனால், உண்மை அதுவல்லவே உறவுகளே, உழவனின் உழைப்பும், இயற்கையின் கொடைதான் நம் உணவுக்கு, இருப்புக்கு அடிப்படை. இதை நினைவூட்ட உழவர்களின் வியர்வையை மதிக்கும் பொருட்டு, இயற்கையின் கொடையாகிய நிலம், நீர், காற்று, பகலவன் என அனைத்திற்கும் நம் வாழ்விடங்களிலிருந்தே நம்முடைய நன்றியை தெரிவிக்கும் ஒரு நன்றி பெருவிழாகவே இந்த விழாவை
“விழித்தெழு இளைஞர் இயக்கம்”
ஏற்பாடு செய்துள்ளது.எங்களின் உண்மையான முயற்சிகளுக்கு எப்போதும் இப்பொழுதும் நீடிக்கும் உங்களின் உள்ளார்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி. உங்களது இந்த ஆதரவை வாய்ப்பாக பயன்படுத்தி சில செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
நாம்தானா தமிழர்கள்? நம்மிடைய தமிழ் மீதமிருக்கிறதா?
தோழர்களே எம் முயற்சி நமக்கான பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சியல்ல, நமக்கான பண்பாட்டை உருவாக்கும் முயற்சி.......நாம் இழந்தவைகளை நற்பண்புகளை மீட்கும் முயற்சி........
என்ன அப்படி இழந்துவிட்டோம்?எங்கு தவறவிட்டோம்
நம்மிடையே பயன்பாட்டில் உள்ள வழக்குகளை கொஞ்சம் பாருங்கள்...........
« நம்மிடையே தமிழ் எண்கள் இல்லை
க, 2 – ௨, 3- ௩, 4- ௪, 5- ௫, 6- ௬, 7- ௭, 8- ௮,9- ௯,10- ௰, 100- ௱,1000- ௲
« நம்மிடையே தமிழ் திங்கள் இல்லை (மாதம் என்பது தமிழ் சொல் இல்லை)
1.தை(சுறவம்), 2.மாசி (கும்பம்), 3. பங்குனி(மீனம்), 4. சித்திரை (மேழம்), 5. வைகாசி (விடை),
6. ஆனி(ஆடவை), 7. ஆடி (கடகம்),8. ஆவணி (மடங்கல்), 9. புரட்டாசி(கன்னி),10. ஐப்பசி (துலாம்),11. கார்த்திகை(நளி),12. சிலை (மார்கழி)
« நிகழும் வட மொழி ஆண்டின் பெயர் விரோதி.....(விரோதி தமிழ் கிடையாது என்று தெரியாதவர்களெல்லாம் இங்கு தமிழார்வலர்கள் காலத்தின் கொடுமை தோழர்களே)
« நாம் கடவுள் என்று வணங்கும் கடவுளுக்கு தமிழ் பெயர் இல்லை
பிரம்மா, 2) லட்சுமி, 3) கிருட்டிணன், 4)ராமன், 5) அல்லா, 6)யேசு
« குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதில்கூட தமிழில் பெயர் சூட்டும் அக்கறையில்லை நம்மிடம் இருக்கும் பெயர்களை பாருங்கள்
சுரேஷ், ராமன், கிருஷ்ணன், ரமேஷ், கணேஷ், கீதா, சீதா, லட்சுமி, ஜோசப், ஸ்டெல்லா, முகம்மது, ரஃபீக்.................
« கோவிலில், சர்ச்சில், மசூதியில் என வழிப்பாட்டு தலத்தில் என எதிலும் தமிழில்லை..
« பைபிள், குரான், கீதை என எதுவும் இதுவரை தூயதமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை
« நாம் பேசும் தமிழை கொஞ்சம் பாருங்கள் ஹோட்டல்(உணவகம்), ஸ்டோர்ஸ்(கடை), பஸ்(பேருந்து),டீ(தேநீர்), டிவி(தொலைக்காட்சி), ரேடியோ(வானொலி)
« நம் வீட்டில் குழந்தைகள்......மம்மி என்றோ டாடி என்று அழைப்பதையோ பெருமையாக கருதுகிறோம்..........
« அதுமட்டுமா? கொஞ்சம்கூட வெட்கமில்லாமல்..........
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”..........குறள்: 972
என்ற வள்ளுவன் வாக்குக்கு எதிராக சாதிகள் என்னும் வீண் சுமையை சுமந்து திரிகிறோம். சக தமிழனை சாதியின் பெயரால் ஒடுக்குகிறோம். நல்லதொரு பண்பாட்டை பின்பற்றாதிருந்தால்தான் நாம் தமிழர்களா?
இப்படி எதிலும் தமிழை பின்பற்றாத நாம்.........தமிழ் தவிர வேற்று மொழி தெளிவாக பேசத்தெரியாத காரணத்தினாலே, வழக்கில் தமிழ் தேவைப்படுவதால் தமிழை பயன்படுத்துகிறோம்.....இல்லையேல் விட்டுவோம் என்ற நிலையிருந்தால்.............இது நன்றி கொன்ற செயலாகிவிடாதா?
தமிழல்லாது தமிழர்களுக்கு ஏது சிறப்பு.......தமிழை நாம் பாதுகாக்காவிட்டால் யார் பாதுகாப்பது...தமிழார்வம் என்றாலே வேலைவெட்டி இல்லாதவர்களின் வேலை என்றல்லவா பார்க்கிறோம். கொஞ்சம் சிந்தியுங்கள், அக்கறை கொள்ளுங்கள். நமக்காக நாம் உழைக்காமல் யார் உழைப்பது?
எனக்கா தமிழ்பற்று கிடையாது புலிகளை எவ்வளவு ஆதரிக்கிறேன் தெரியுமா? பிரபாகரன் என் தலைவர் என்றெல்லாம் எகிறும் தோழர்கள்..எத்தனை பேர் புலிகள் செய்ததை செய்யத்தயார்?
புலிகள் தனித்தமிழ் பெயர்களைத்தான் இயக்கத்தோழர்களுக்கு இட்டார்கள்.
அலுவலகங்கள், வழக்கு மொழி என அனைத்திலும் வடமொழி கலப்பில்லாத தமிழையே கையாண்டார்கள்.
புலிகள் சாதியை ஒழிக்க முயற்சித்தார்கள், நீங்கள் தயாரா?
புலிகள் தமது இயக்கத்தில் ஆணும், பெண்ணும் சரிநிகர் என்று நிறுவினார்கள். நீங்கள் தயாரா?
சாதி கடந்து, மதம் கடந்து வாருங்கள் தோழர்களே..தமிழ் காப்போம் , நம் அடையாளம் மீட்போம்....தயவுகூர்ந்து சாதி, மதம் மறந்து வராதீர்கள்...மீண்டும் என்றாவது உங்கள் நினைவுக்கு வரலாம்.
மகிழ்நன் (+919769137032)
விழித்தெழு இளைஞர் இயக்கம்