திருவள்ளுவர் நற்பணி இயக்கத்தின் தலைமையில் மும்பையில் தாராவி பகுதியிலுள்ள தாத்தா இரட்டைமலை சீனிவாசன் சதுக்கத்தில் ராசபக்சே உருவப்பட எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
இதன் விபரம் வருமாறு,
இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்தும் , அப்பாவி தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து தமிழகத்தில் எழுந்த இன உணர்வலை மும்பை தமிழர்களையும் தொற்றிக் கொண்டது. இத்தருணத்தில் தங்களுடையஎதிர்ப்பை வெளிப்படுத்தும் படியாக இன வெறியன் ராசபக்சே உருவப்படஎரிப்பு போராட்டம் தமிழ் ஆர்வலர்களால் நடத்தப்பட்டது.இந்நிகழ்வு ஞாயிற்று கிழமை(09/11/2008) அன்று 9:30 மணியளவில் நடந்தது
இப்போராட்டத்தில் திருவள்ளுவர் நற்பணி இயக்கம், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள்,தமிழ் காப்போம் அமைப்பு, தென்னிந்திய முஸ்லிம் சங்கம், மும்பை தமிழ் ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
செவ்வாய், 11 நவம்பர், 2008
ராசபக்சே உருவப்பட எரிப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)