சினிமாத்தனமா யோசிச்சி
சீரழிஞ்சு போரவனே
சிலவேனும் சொல்லுறத
சிந்திச்சிக் கேட்டுக்கடா
வாழ்க்கையில் வசந்தமுன்னு
வாலிபத்த சொல்லுவாங்க – நீ
வாலிபத்த வந்தடஞ்சும் – உன்
வரலாறா என்ன செய்வ
வாழும் சமூகத்தில்
பாழும் சாதி இருக்கயிலே – நீ
காதல் மோகத்தில் – உன்
காலத்த கழிப்பாயா?
இனத்துக்காக ஒரு போரு
ஈழத்துல நடக்கியில
இயற்கையை வர்ணிச்சே – உன்
இலக்கியத்த படைப்பாயா?
தமிழனின் தன்மானம்
தரக் குறைவா போகும் போது – நீ
தலைவனா ஆகவே
தனி இயக்கம் அமைப்பாயா?
அரசியல் அசிங்கங்கள் – மக்கள்
அறியாதிருக்கும் போது – நீ
அரசாங்க வேலைக்காக
அலைந்து திரிவாயா?
பலகாலமான இக்கழிவை – உன்
காலத்தில் கழுவாம
கல்யாணம் கட்டிக்கிட்டு
காசு பணம் சேர்ப்பாயா?
வாழ்க்கையில வசந்தமுன்னு
வாலிபத்தச் சொல்லுவாங்க – நீ
வாலிபத்த வந்தடஞ்சும் – உன்
வரலாறா என்ன செய்வ.