தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 ஜூன், 2012

பாலியல் தொழிலாளியின் தமிழ் முத்தம்

அடர்ந்த பிரதேசம் அது. Sex Ratio அதிகம் உள்ள இடம் அது. பெண்கள் அதிகம் உள்ள பகுதி என்று எடுத்துக் கொண்டாலும் சரி, Sex அதிகம் நடக்கும் இடம் என்று எடுத்துக் கொண்டாலும், தாராவியிலிருந்து தினமும் 20 நிமிடம் ரயில் பயணத்திற்கு பின், 10 நிமிட நடையில் நான் நாளும் கடந்த பகுதி அது. அந்த பகுதிக்கு அருகில்தான் என் அலுவலகம். அலுவலகத்தில் நிரம்ப பெண்கள் நிரம்பியிருப்பர், அது இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்திற்காக பணி புரியும் ஒரு கால் சென்டர். என்னோடு பணிபுரியும் பெண்கள் தேவதைகளாகவும், கஞ்சிக்காக வெளியே அரைகுறை உடையோடு காத்திருக்கும் பெண்கள் பரத்தைகள் என்ற புரிதலோடுதான் நான் இருந்தேன். உடன் பணிபுரியும் பெண்கள் மீது ஏற்பட்ட ஈர்ப்பு, அந்த பெண்கள் மீது ஏனோ வந்ததில்லை. அவர்கள் ஏதோ சொந்த விருப்பத்தின் பெயரில் அந்த தொழிலில் ஈடுபடுவதாக ஆழ் மனதில் பதிந்து போனது கூட காரணமாயிருக்கலாம். ஒரு நாள் என்னுடன் பணி புரியும் தோழியை வேலைக்கு வரும் வழியில் இடைமறித்து ஒரு தரகர் அந்த தொழிலுக்கு அழைத்த நிகழ்வு புரிதல் இல்லாமல் அந்த பெண்கள் மீதேதான் திரும்பியது.

நாட்கள் உருண்டோடின, மும்பையின் வாழ்க்கை முறை தமிழகத்தின் மீது தந்த ஈர்ப்பு சென்னைக்கு இழுத்து வந்தது.

சினிமா மோகத்தோடு வந்த என்னை சென்னை என்னை வரவேற்று ஒரு ஓலை குடிலுக்குள் தள்ளியது. அப்படியே ஒரு போலி சினிமா இயக்குனரிடம் உதவி இயக்குனராக இணைந்து பணி புரியும் வாய்ப்பையும் தந்தது. பெண்களை போகப்பொருளாக மட்டும் பார்த்து பழகிய பல பழைய முகங்களின் பிரதிபலிப்பாகத்தான் அவர் இருந்தார். உனக்கு சான்ஸ் தந்தா? எனக்கு என்ன கிடைக்கும்?” என்கிற ரீதியில்தான் அவரது பேரமே தொடங்கும். அவரோடு பயணித்த அந்த நீண்ட நாள் அயர்ச்சியை தந்ததேயன்றி சினிமாவின் கெண்டைக்கால் மயிரைக்கூட கடைசி வரை காண்பிக்கவில்லை. பொருளாதார சிக்கல் காரணமாக மீண்டும் ஒரு மாத காலத்திற்கு மும்பை சென்றேன். நல்ல மழைக்காலம். ஒரு போலித்தனமான மின்னஞ்சலில் 5 கோடி ரூபாய் பரிசு விழுந்திருப்பதாய் நம்பி ஆந்திரத்தில் பிரபலமான இயக்குனரும், தமிழ்த் திரையுலகில் சில திரைப்படங்களில் நடித்த நடிகையின் கணவருமாகிய ஒருவரோடு என் இயக்குனரும் மும்பை வந்து சேர்ந்தார். பல முயற்சிகளுக்கு பிற தம் பணத்தாசை தவறானது என்று உணர்ந்தவர், மும்பையின் இரவு வாழ்க்கையை காணவிரும்புவதாக கூறினார். நானும் எனக்கு தெரிந்த மும்பை நிழுலகத்தில் முன்பு தீவிரமாக இயங்கி வந்த ஒரு நபரை துணைக்கு அழைத்துக் கொண்டு கிராண்ட் ரோட்டிற்கு சென்றேன். கூடவே ஓட்டுனரான ஒரு நண்பரும் வந்தார்.

நாங்கள் அவ்விடத்தில் முதலில் சென்றது, ஒரு லேடிஸ் பாருக்கு. அங்கே பக்கவாதம் வந்த ஒரு

அல்லக்கைகள் பணத்தை இறைத்துவிட, அங்கே நடனமாடும் பெண் தன் இடுப்பு வளைவுகளின் அசைவுகளின் வழி அந்த பணத்தை அள்ளிக் கொண்டிருந்தாள். பாரில் (உலகில் அல்ல) ஒரு ஓரத்தில் அமர்ந்து இதை ரசித்துக் கொண்டிருந்த இயக்குனர், இந்த பெண்ணையே நம் திரைப்படத்தில் நடிக்க வைத்தாலென்ன? என சிந்திக்க தொடங்கியிருந்தார். எவ்வளவோ முயன்றும் அந்த பெண்ணின் தொடர்பு எண்ணை அவரால் கடைசிவரை பெறவே முடியவில்லை. அங்கிருந்து கிளம்பி நேராக காமாட்டிபுரா பகுதிக்கு சென்றேன்.

கடைக்கண் பார்வைதனை கன்னியர்தம் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்என்று கேட்ட வசனம் அங்கே பொய்த்து போனது. கடைக்கண் பார்வைக்கு அங்கே 100, 200, 500 என விலை அட்டை தொங்கவிடப்பட்டது போல இருந்தது. வண்டியிலிருந்தபடியே இதை நோட்டம் கொண்டிருந்த எனக்கு முன்னிருக்கையில் இருந்து இறங்கி கீழே சென்று வர வேண்டுமென்று ஆவல். இறங்கி அருகிலிருந்து பெட்டிக்கடைக்கு சென்று ஒரு கோல்டு ஃபிளாக் சிகரெட்டை வாங்கி பற்ற வைத்ததுதான் தாமதம்.

பாய் பகூத் படியா அய்ட்டம் ஹை, ஷிர்ஃப் 500 ருப்யே, 2 ஷாட் என்றான் என் பின் நின்றிருந்த ப்ரோக்கர்.

நஹி பாய் என்று முன் நகர்ந்தால், நான் இருந்த இருக்கையில் வெள்ளை காக்ரா சோலி அணிந்திருந்த பெண் அமர்ந்து கொண்டு அந்த ஓட்டுனரை தடவிக் கொண்டிருந்தாள். மெல்ல அவளை சமாதானப்படுத்துவதாக நினைத்து வண்டிக்கு வெளியில் காத்திருந்தால், அவள் இருக்கையை விட்டு எழுந்து வெளிச்சென்றதுதான் தாமதம், இவர்கள் சமாதானமின்றி அவள் பின்னே சென்றுவிட்டனர். உள்ளே இரண்டே, இரண்டு படுக்கைகள், நடுவில் ஒற்றை துணித் திரை. உள்ளே சென்றதும், தன் ரவிக்கைக்குள் கைவிட்டு தன் மார்பகங்களை வெளியே திமிரச் செய்து..

ஏ பாய் அய்ஸா அய்டம் சினிமாமேபி நஹி மிலேகா ஸிர்ப் 500 ருப்யா...கோன் பஹ்லா ஆயேகா?” (இதை மாதிரி அய்ட்டம் சினிமாவிலேயே கிடைக்காது, 500 ரூபாய்தான், யார் முதலில் வருவது?)என்று கூறிக் கொண்டே ஒருவரை இழுத்து படுக்கையில் தள்ளி விட்டிருந்தாள். அவர் பதறிப்போய் எழுந்து, ருக்கோ, பாத் தோ கர்னே தோ” (நில்லுங்க பேசவாவது விடும்மா...)என்றார். இவர் பேசிக் கொண்டே இருக்க அவள் கவனியாதவளாய், மற்றவர்களை இழுக்க தொடங்கினாள். ஒருவருக்கு அங்கே துணிச்சல் வராததால், அனைவரும் வெளியேற முயற்சிக்க...

அந்தர் ஆ கயா நா 500 ருப்யே தோ தேனா படேகா.”( உள்ளே வந்திட்டீங்க இல்ல, 500 ரூபாய் தந்துதான் ஆகணும்) என்று மிரட்ட தொடங்கிவிட்டாள்.

ஓட்டுனர்-நண்பர் காவல்துறையைப் போல வெட்டப்பட்டிருந்த தன் முடியை காண்பித்து, தாங்கள் பரிசோதனையிட வந்ததாகவும், காவல்துறையில் உயர் பதவியில் இருப்பதாகவும் கூற, உடனே எங்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டாள்.

பிறகு, ஒரு மதுக்கடைக்கு சென்று மதுவையும், உணவையும் வயிற்றுக்குள் நிரப்பிக் கொண்டு, ஒவ்வொரு விடுதியாய் சென்றோம், ரோட்டில் தரகு வேலை பார்க்கும் ஒருவன் நண்பனை போன்ற பேச்சுப்பாவனையோடு சலிக்காமல் ஒவ்வொரு விடுதிக்காய் அழைத்துச் சென்றான். விடுதிக்குள் நுழைந்ததும், மென் விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட அறைக்குள் ஷோபாவில் அமர்ந்ததும், கதவை பூட்டிவிட்டு பெண்களை வரவழைத்தான் அந்த ப்ரோக்கர். வரிசையாக பெண்கள் வந்து நின்றனர். சிலர் சோர்விலும், சிலர் சோற்று பருக்கைகள் கைவிரலிடுக்கிலும், சிலர் உறக்கத்தை இமைகளுக்கு நடுவிலும் சுமந்தபடி வந்து நின்றனர். 5 நபர்களுக்கும் பெண்கள் தேட, 2 பெண்களுக்கு மேல் இவர்களின் ரசனைக்கு யாரும் தேராததால், மற்றொரு விடுதிக்கு சென்றனர். இப்படியே இந்த படலம் இரவு 12 மணி தொடங்கி, அதிகாலை 3 மணிவரை தொடர்ச்சியாக நடந்தது. இறுதியில் களைப்புற்று, இந்த விடுதியில் எப்படியான பெண்கள் இருந்தாலும் அவர்களோடு நேரத்தை கழித்துவிட்டு கிளம்பலாமென்று முடிவு செய்துவிட்டே உள்ளே நுழைந்தனர். கொண்ட கொள்கையில் உறுதியாய் நின்று அங்கிருந்த பெண்களில் 5 பேரை தேர்ந்தெடுத்தனர்.

கட்டிலின் மீது போடப்பட்டிருந்த மெத்தையின் நடுவில் அந்த ஆந்திர இயக்குனர் அமர்ந்து கொள்ள, அந்த பெண்கள் அவரை சுற்றி அமர்ந்து கொண்டனர். அதில் ஒரு பெண் எழுந்து வந்திருந்த ஒரு நண்பரின் தோளில் கைபோட்டுக் கொண்டு, ஏதோ பலநாள் பழகியவள் போல் உரையாடிக் கொண்டிருந்தாள், அவரும் ஏதோ நீண்ட நாளாய் உயிருக்கு, உயிராய் காதலித்ததுபோல் உரையாடிக் கொண்டிருந்தார். அந்த ஆந்திர இயக்குனர் தன் அருகில் இருந்த பெண்ணின் தொடையை தட்டி, ச்சீ, என்ன இத்தனூண்டு டிரெஸ் போட்டிருக்கே. என்று சொல்ல.... அந்த பெண் ஏதோ கொஞ்சம் அதீத கோபம் வந்தவளாய்,

ஜிஸ் காம் கே லியே ஆயா, ஓ கர்கே நிகல் ஜானா, ஐஸா சவால் முஜே நா பூச்னா. க்யா சமஜ் ரகா முஜே” (என்ன வேலைக்கு வந்தியோ, அதை முடிச்சிட்டு போய்ட்டே இரு, இதை மாதிரிலாம் கேள்வி கேட்காதே, என்ன நினைச்சிட்டு இருக்கே என்னை?)

என்று திட்டிவிட்டு எழுந்து நகர்ந்து விட்டாள். அந்த பெண்ணின் சுயமரியாதை மெய்யாலுமே அழகாய்த்தான் இருந்தது. சமீபத்தில் ஒரு நீதிமன்ற தீர்ப்பில், பல நபர்களோடு உறவு வைத்துக் கொண்ட பெண்ணாக இருந்தாலும், அவள் முன்வைக்கும் புகாரை அவள் நடத்தையை முன்வைத்து புகாரை நிராகரிக்க முடியாது.

மதுவும், இதர பண்டங்களும், பெண்களுமாய் இருந்த அந்த சூழல் ஒரு சில நிமிடத்தில் ரணகளமாகி விட்டிருந்தது. திட்டு வாங்கிய அந்த இயக்குனருக்கு முகத்தில் ஈயாடவில்லை. அசடு வழிய சிரித்துக் கொண்டிருந்தார். அந்த பெண் அவசரமாய் சென்றதை கவனித்த வெளியில் காத்திருந்த தரகர்,

க்யா ஹுவா பாய், குச் ப்ராப்ளம் ஹை க்யா.” (என்ன சகோதரா, ஏதும் சிக்கலா?) என்று வினவினான்.

வாசல் கதவுக்கருகே நின்றிருந்த நான் விளக்கிச் சொன்னதும்,

துஸ்ரி லட்கி பேஜூன் க்யா. மதராசி லட்கி சலேகி க்யா?” என்றபடி சென்றான்.

சில நிமிடங்களில், ஐந்தடி உயரத்தில் ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட் அணிந்தபடி அந்த கருத்த நிறப் பெண் உள்ளே வந்தாள்.

என்னங்க, அவர் கிண்டல் பண்ணதுக்கே அந்த பெண் ஓடிடுச்சு, இதுக்கே இப்படின்னா, இந்த மாதிரி தொழில்கள்ல எப்படி?” என்று நான் கேட்டதுதான் தாமதம்.

உங்ககிட்ட பேசுறதுக்கோ, கிண்டல் பண்றதுக்கோ, என்னங்க இருக்கு, சொல்றதுக்கு ஒண்ணுமில்லாதவங்ககிட்ட?” என்று படபடவென பொறிந்து தள்ளிவிட்டாள்.

எனக்கோ அவள் சொன்னது, எங்களுக்கு இந்த உலகத்திடம் சொல்ல ஒன்றுமில்லை, அதற்கான தகுதியும் இந்த உலகத்தில் இல்லை.என்றதுபோல்தான் கேட்டது.

சில நிமிடங்களில் மீண்டும் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த தரகர்,

யஹா பைட்கே பாத் கர்தே ஹி ரகேங்கே க்யா? ஹர் ஏக், ஏக் லட்கி கோ லேக்கர், அப்னே அப்னே கம்ரே மேன் ஜாவ், அய்ஸா நஹி சலேகா ( இப்படியே அமர்ந்து பேசிக் கொண்டிருப்பீர்களா, தத்தமது அறைக்கு ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு செல்லுங்கள், இப்படியே பேசிக் கொண்டிருப்பது செல்லாது) என்றான்.

அப்படியே ஒவ்வொருவரும் தத்தமது அறைக்கு ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு சென்றனர். அவளை மட்டும் வந்திருந்தவர்கள் தேர்வு செய்யவில்லை. நானும் அந்த பெண்ணும் மட்டும் மீந்து நின்றோம், தரகர் என்னைப் பார்த்து ஏதோ வினவுவது போல கண்ணசைத்தான். நான், “இந்த பெண்ணை என்னோடு அழைத்துச் செல்கிறேன்.என்றேன்.

அறைக்கான திசை காண்பிக்கப்பட்டது. நானும் எனது பையை எடுத்துக் கொண்டு அந்த அறைக்குள் சென்றேன். உள்ளே சென்றதும், எனக்கு புகைக்க வேண்டுமென்றேன். அறைச்சேவகன் ஒருவனை அழைத்து எனக்கு தீப்பெட்டி வாங்கித் தந்தாள். நான் புகைத்தபடியே அமர்ந்திருந்தேன். அவளை வந்து அமருமாறு அழைத்தேன். அவள் காத்திருக்குமாறு கூறுவிட்டு வாசலிலேயே நின்றாள். அதே சேவகன் ஒரு வெள்ளைத் துண்டை கொண்டு வந்து கொடுக்க, அவள் அதை வாங்கி என்னிடம் தந்தாள். நானும் வாங்கி என் அருகில் அதை வைத்தேன். அதை வைத்தபடியே,

இப்படியான தொழிலைச் செய்கிறீர்களே, ஏதும் பாதுகாப்புக்குப் பயன்படுத்துவதில்லையா?” என்றேன்.

அந்த துண்டைத் திறந்து பாருங்கள். என்றாள். திறந்தேன், உள்ளே ஆணுறை இருந்தது. கழிவறைக்குச் செல்வதாக சொல்லிச் சென்றவள், சிறுது நேரத்தில் வந்து அறைக் கதவை தாழிட்டாள்.

அறையை மெல்லிய மின்விளக்கின் வெளிச்சம் பரப்பி நின்றது. நானும் புகைத்து முடித்தேன். அருகில் அமர்ந்திருந்தவளிடம் அப்புறம் என்ன?” என்றதும்,

தம் உடையை கழற்றத் தொடங்கினாள். நான் பதறிப் போய்,

ஏய் நான் சும்மா சொன்னேன். நாம் அமர்ந்து பேசலாம். என்றேன்.

என்ன பேசவேண்டும்?” என்று நமட்டு சிரிப்போடு தலையை கீழே கவிழ்த்தபடி அமர்ந்தாள்.

நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன், நான் இங்கே வந்தது தெரிந்தாள் கொன்றுவிடுவாள். நீங்கள் யாரையாவது காதலிச்சிருக்கீங்களா?” என்றேன். பொதுச்சமூகத்தில் உலவுகின்ற திமிர் கண்டிப்பாக அந்த சொற்களில் தொனித்திருக்கும் என்றே நம்புகிறேன். சட்டென வந்தது அவளிடமிருந்து ஒரு பதில்.

அதென்ன, காதலிச்சிருக்கீங்களா? நான் காதலிக்கிறேன், இப்பவும். நான் சென்னை பொண்ணு, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு இருந்தேன். திடீர்னு அப்பா தவறிட்டார், பெருத்த பொருளாதார சிக்கல், ஒரே தம்பி அவனும் படிக்கணும், ஆக, நான் படிப்பை நடுவில் நிறுத்திட்டு வேலைக்கு போகத் தொடங்கினேன், அங்கேதான் அந்தப் பையனை சந்திச்சேன், ரொம்ப நேசிச்சோம், அந்த வேளையில் பெங்களூர்ல வேலை இருக்கிறதா ஒரு பொண்ணு சொல்லி பெங்களூர் போனேன், அங்கேயிருந்து ஒரு கும்பல் என்னை இங்கே கடத்திட்டு வந்திடுச்சு, ரெண்டு வருசமா இங்கேதான் இருக்கேன், நான் நேசிக்கிறவனுக்கு நான் தகுதியுள்ளவளா நான் என்னை கருதலை, அதனால், அவனைவிட்டு விலகிவிட்டேன், அவன் நான் அவனை ஏமாற்றிவிட்டதாக கருதிக் கொண்டிருக்கிறான். இன்றும், எனது நண்பர்களுக்கு வாரம் ஒருமுறை அழைத்து, அவன் எப்படியிருக்கிறான் என்று விசாரிக்கத்தான் செய்கிறேன். ஆக, நான் இப்பவும் காதலிக்கத்தான் செய்கிறேன்.

அதெல்லாம் சரி, இவ்வளவு பேசுற நீங்க ஏன், முகத்தை கீழே வச்சிக்கிட்டு பேசுறீங்க, என்னை பாத்து பேசுறதுக்கு அளவுக்கு கூட எனக்கு தகுதியில்லையா?” என்றேன்.

அப்படியில்லை, நான் சென்னைப் பொண்ணு. வேற மொழிக்காரங்க வருவாங்க, வாய்ல வெற்றிலை எச்சிலோடு வருவாங்க, வாய்நிறைய மதுநாற்றத்தோடு வருவாங்க, அப்பல்லாம் வராத குற்றவுணர்வு,கோபம், கழிவிரக்கம், இங்கே யாராவது தமிழர்கள் வந்தால் எனக்கு வந்துவிடும், உடலெல்லாம் கூசுவது போல இருக்கும், அதனால்தான் உங்கள் முகத்தை பார்த்து பேச முடியவில்லை. என்றாள்.

என்னால பேசவே இயலவில்லை, நான் பேசுகின்ற மொழி, முடிந்தளவு தூயத்தமிழில் பேச முயற்சிப்பது பிறருக்கு மகிழ்ச்சியைத் தரும் என்றுதான் நினைத்திருந்தேன், தேமதுர தமிழோசை கேட்டிடல் இன்பமென்றுதான் நினைத்திருந்தேன், ஆனால், அது அப்படியில்லாதிருக்கக் கூடும், அது துன்பம் தரக்கூடியதாகவும் இருக்குமென்று அன்றுதான் உணர்ந்தேன்.

மெல்ல அவளது கைகளைப் பற்றிக் கொண்டு, முகத்தை மறைக்க முன் வந்து விழுந்திருந்த முடியை விரல்களால் நீக்கி, உன்னிடம் கடைசியாக யாராவது அன்பாக பேசி எத்தனை ஆண்டுகள் கடந்திருக்குமென்றேன், இரண்டு கண்ணீர் துளிகளை மட்டும் பதிலாய் தந்தாள். வெற்று அமைதி மட்டும் அங்கே நிலவியது மொழி அங்கே தேவைப்பட வில்லை.

என்னை உன் நண்பனா நினைச்சுக்கோ, என் வீட்டுக்கு வா, புது உறவுகளை அறிமுகப்படுத்தி வைக்கிறேன், எவருக்கும் நீ யாரென்று தெரியாது, நானும் சொல்ல மாட்டேன் என்றேன்.

என்னால் இயலாது. மும்பையில் நடமாடுவதற்கு எனக்கு லைசன்ஸ் இன்னும் தரப்படவில்லை. அதோடு நான் இன்னாரென்று அறிந்து கொள்வதற்கு சிரமப்படும் உலகத்தோடு உறவாடி நான் எதை சாதிக்கப் போகிறேன். என்று சொன்னாள்.

சரி, கிளம்புகிறேன், வாய்ப்பிருந்தால் என் எண்ணிற்கு தொடர்பு கொண்டுவிட்டு தாராவிக்கு வா என்று கூறிவிட்டு எழும் பொழுது, அருகில் வந்தவள் நெற்றியில் முத்தமிட்டாள்.

இந்த முத்தம் உன் அன்பிற்கு என்று என்னை வழியனுப்பி வைத்தாள்.

அந்த முத்தத்தை தமிழுணர்வாளர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன், தன் முத்தத்தை விலைக்கு விற்க நிர்பந்திக்கப்படும் பல்-தேசிய இனப் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை களைய ஏதேனும் செயல்திட்டம் வகுக்க கோருவதற்கு நான் கொடுக்கும் லஞ்சமாகக் கூட அந்த முத்தத்தை நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.

ஞாயிறு, 12 ஜூன், 2011

ஜூன் 26 இல் மெரினாவிற்கு போவது அப்படி என்ன தேவை?


ஈழத்தில் நம் உறவுகளை சிங்கள இனவெறி அரசு பல பத்தாண்டுகளாய் கொன்று குவிப்பதை கொள்கையாய் கொண்டு இயங்கி வருகிற, சிங்கள இனவெறிக்கு எதிராக பல்வேறு வகையில் போராடிவிட்டனர், போராடிக் கொண்டிருக்கின்றனர். இனவெறிக்கு எதிரான இத்தகைய போராட்டங்களுக்கு தமிழகத்திலும், புலத்திலும் தொடர்ந்து அதற்கான ஆதரவு அலை இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அவற்றை கொஞ்சம், கொஞ்சமாக தமிழக்த்தின் அரசியல் நரிகள் தின்று இன்று போதாமையில் வந்து நிற்கின்ற் அவல நிலையில் இருக்கிறோம். போராட்டங்களுக்கு, சுயமரியாதையின் பொருட்டு தன்னிச்சையாக திரள வேண்டிய இளைஞர்கள் கூட்டத்திடம் சென்று ஈழத்தில் நடந்த அவலத்தை பேச வேண்டிய சூழலில் இருக்கிறோம்.


நம் சமகாலத்தில் நடந்த அவலத்தை வலிந்து சென்று கையில் திணித்து துண்டு பிரசுரத்தின் வழி பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆனால், நமீதா "மச்சான்ஸ்" என்று சொன்ன செய்தி, த்ரிசா பாடிகாட் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட செய்தி, அசின் பிகினி உடையில் நடிக்க ஒப்புக் கொண்ட செய்தி இளைஞர்களிடத்தில் தங்கு தடையின்றி போய் சேரும். தினதந்தி, தினகரன், மாலை மலர், மாலை முரசு என விதிவிலக்குகள் கிடையாது. இவனுங்க பத்திரிக்கை தொழில் நடத்துறானுங்களா, பேப்பர்ல விழிவழி விபச்சாரம் பண்ற தரகர்களான்னு கண்டுபிடிக்கிற அளவு நமக்கு சிக்கல். இதுல என்ன வேடிக்கைன்னா, நடிகை தொப்புளை தெளிவாக படம் பிடித்து போடும் பத்திரிக்கையில்தான் அழகிகள் கைது என்ற படச்செய்தியும் வரும். இந்த நாட்டுல இளைஞர்களுக்கு பாலியல் உணர்வை எவ்வளவு தூண்டனுமோ, அத்தனையும் தூண்டி விட்டு, விட்டு படுக்க மட்டும் இடம் தராது சமூகம், அப்பொழுதும் கலாச்சாரம் காக்க வந்துவிடும் இந்த விபச்சார பத்திரிக்கைகள்...


சமீபத்தில், இந்திய அதிகார வர்க்க விபச்சாரி மேனன் கம்முனாட்டி ஜெயா மாமியை சந்திச்சானாம். அந்த மேனன் வெங்காயத்தை பத்தி இங்கிருக்கிற பத்திரிக்கைகளுக்கு தெரியவே தெரியாதா? இவன் ஈழத்தமிழ் துரோகி என்று தெரியவே தெரியாதா? கேட்டா அந்த பொல்லாப்பு நமக்கு எதுக்கு, அரசு விளம்பரம் கிடைக்காதேன்னு ஒரு சால்ஜாப், ஊரறிந்த காரணம் வரும்.... ஏண்டா, தான் பொண்டாட்டி, புள்ள சேலையை உறிஞ்சாதான்........உங்களுக்கெல்லாம் கோபம் வருமா.... அப்ப காத்திருந்து டி.நகர் சேலை வாங்குங்கடா தாராளமா?

இது போதாதுன்னு, தொலைக்காட்சிகள் சொல்லவே வேண்டாம், நிழற்பட விபச்சாரம் செய்பவர்களுக்கு போட்டியாக, நிழல்கள் ஆடுவதை வைத்து, அதுவும் அரை குறையாய், நிறைவாய் குறைவாய் ஆடுவதை வைத்து விபச்சாரம்...

இப்படில்லாம் ரவுண்டு கட்டி விபச்சாரம் பண்ணா, மசிறாடா நாங்க இளைஞர்கள்கிட்ட போய் பிரச்சாரம் பண்ண முடியும்....
======================================================================
சரி பத்திரிக்கை காரங்க தொல்லை மசிறுதான் தாங்க முடியலைன்னு பார்த்தா.....
நம்ம அரைவேக்காட்டு அரசியல் வெண்ணெய்ங்களோடவும் பெருத்த தொல்லையா இருக்கு...

ஐநா என்னும் அமெரிக்க அடிவருடி அவை.....உலக மக்களின் துன்பத்திற்கு சாட்சியாக நின்று "வணக்கம் சார்" மட்டும் சொல்லும் அவை...

அந்த மசிற புடுங்குன அவை அமைச்ச ஒரு மயிர புடுங்காத கமிட்டி சில பரிந்துரைகளை செய்து...சில வாரங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கின்றது....அது, வெண்ண மயிரானையும் போர்க்குற்றவாளின்னு அறிவிக்கலை....போர்குற்றம் நடந்ததற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு போர்குற்றவாளிகளே நீதிபதிகளாக மாறி விசாரணையை நடத்த வேண்டுமென்று கூறியிருக்கிறது....

நாம் பட்டினி கிடந்தவனுக்கு வாசமும் சுவைதான் என்கிற ரீதியில் அப்படியே துள்ளி குதிச்சோம்...


அடுத்து ஈழத்து தாய், ஜெயலலிதா அம்மையார்...ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்..... சிங்கள அரசை போர்க்குற்றவாளின்னு அறிவிக்க மைய அரசு ஐநா மன்றத்தை வலியுறுத்தணும்...(இதுக்கு நடுவுல இந்திய அதிகார வர்க்கம் மனித உரிமை கவுன்சிலில் நிரந்த உறுப்பினராக முயற்சி பண்றானுங்கன்னு செய்தி கேள்விப் பட்டேன்...மேற்கொண்டு தகவல் தெரியல..எப்படி,எதன் வழியா தெரிஞ்சுக்க தோணும்...). சிங்கள வெறியர்களுக்கு உதவி செய்ய துடித்து, துடித்து உதவி செய்த காங்கிரசு கம்முனாட்டிகள் கால்ல மிரட்டி விழற தொனி தெரிஞ்சது.....முழுக்க திமுக சாடல்... இதுல புரட்சி மயிரான்.......விஜயகாந்த...காவிரி பிரச்சினையில் திமுக அரசு துரோகம் பண்ணிடுச்சுன்னு.....பேசுறார்(ன்). 10 ஆண்டு துரோகம் பண்ண அம்மா முன்னிலையில் என்பதுதான் ஹைலட்டு....

இதுமட்டுமா, என்றால் சாதிக்குள் நின்று கொண்டு தமிழ்த்தேசியம் பேசும் அறிவுஜீவிகள்.....மதத்திற்குள் படுத்துக் கொண்டு தமிழ்த்தேசியம் பேசும் ஓநாய்கள்..... அடக்குமுறைக்கு எதிராக இன்னொரு விதமான அடக்குமுறையிடம் சரணடைவதை அரசியல் யுக்தி என்று பிதற்றும் அரைவேக்காடுகள்.......என பல மண்டை குடைச்சல்...

இப்படி எல்லா திசையில் நம்ம உயிரை வாங்குற கம்முனாட்டி நாய்ங்களுக்கு நடுவில் தன்னலமற்ற ஓரளவு அரசியல் புரிதல் கொண்ட(அதற்கு மேலும் கூட இருக்கலாம்...)
தன்னலமற்ற இளைஞர்கள் ஈழத்தில் நடந்த படுகொலைக்கு மக்களிடம் சென்று குறைந்த பட்சம் மெரினாவில் அணிதிரளச் சொல்லி அழைத்திருக்கிறாள்...

குறிப்பாக சீமான், நெடுமாறன், வைகோ போன்றவர்கள் கண்டிப்பாக இந்த அணிதிரள்விற்கு வரவேண்டும்...அதுவும், தங்கள் கட்சி கொடி, கரைவேட்டி இல்லாமல்.... இல்லையென்றால் வேட்டியை கழட்டிட்டு தயவு செஞ்சு ஓடிடுங்க......

உங்க பிழைப்புவாதத்திற்கு தமிழ்த்தேசியத்தின் கோவணத்தை அவிழ்க்காதீர்கள்.

================================================================

இவ்வளவு பேசுற நீ என்ன மசிறுக்குடா இணையத்துல எழுதுக்கிட்டு இருக்கிறே, மக்கள்கிட்ட போக வேண்டியதுதானே என்ற கேள்வி வரலாம்....என்னால் இயன்றதை கண்டிப்பாக செய்வேன்....இதை படிக்கும் என் நண்பர்கள் அல்லாத தோழர்களும்....தயவு கூர்ந்து............தம்மால் இயன்ற அன்பர்களை அழைத்துக் கொண்டு மெரினாவிற்கு வாருங்கள்.................

தொடர்புகளுக்கு: தோழர் உமர்: 9600781111, தோழர் ஸ்டாலின்:9884877487

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

நியூட்டனுக்கு கோயிலா கட்டினார்கள் - அண்ணா

ஒரு பழம்! உலகுக்கே உன்னதமான ஆராய்ச்சிகளை வழங்கிற்று.
சின்ன்ஞ்சிறு ஆப்பிள்! மரத்திலிருந்து விழுந்தது!! – அது தந்தது, அருமையான சிந்தனையை.
“ஏன், விழுந்தது?” – பழம் விழுந்ததை பார்த்தவன். கேட்டான், தன் உள்ளத்தை,
பிறரை பார்த்துக் கேட்டுருந்தால், “பழம்,ஏன் விழும்? பழுத்ததால், விழுந்திருக்கும்!” என்றே பதில் அளித்திருப்பர். இந்தப் பதில் பலரும் சொல்லக் கேட்டு, அவன் சலித்துப்போன பதில். ஆகவே, தன் மனதை கேட்டான். “விழுந்த பழம் நேரே, ஏன் பூமியை நோக்கி விழவேண்டும்?” கேள்வி, கிண்டலுக்கு ஆளாக்கும்,எவனாவது இன்னொருவனை கேட்டால், அவனோ, தன் சிந்தனையைக் கேட்டான்! சிறுகல்லை ஆகாயத்தில்; வீசி, அதுவிழும் வேகத்தைக் கணக்கிட்டான்!! உயரமான இடத்திலிருந்து ஒரு பொருளைப் போட்டு அது பூமியை நோக்கி வந்துசேரும் வினாடிகளை எண்ணினான்! விளைவு, விஞ்ஞான உலகுக்கு, விசித்திரமான உண்மை கிடைத்தது – நியூட்டன் – வரலாற்று மனிதனான் – பூமிக்கு, ஆகர்ஷண சக்தி உண்டென்று விளக்கினான். இது, அங்கே – இங்கிலாந்தில்!
ஒரு பழம் – உன்னதமான, உண்மையை, உலகுக்கு வழங்கிற்று.
இதோ ஒரு பழம்! பாராத பிரசங்கி, பக்தி பிரவாகத்தோடு விவரிக்கிறார் – பாண்டவர்கள் ஆரண்யவாசம் செய்தபோது, பாஞ்சாலி கேட்க, அர்ஜூன்ன் அறுத்துத்தந்தானாம். அது, முனிவர் ஒருவருடையதாம்! அவர் கண்டால் ஆபத்து என்றஞ்சி, இருந்த இடத்திலே அதைக் கொண்டு வைக்க தர்மரும், தம்பிகளும் சக்கரபாணியை துதித்தனராம் – நீலமேக சியாமள வர்ணன் வந்தாராம் – நெஞ்சத்து உண்மைகளை ஒவ்வொருவரும் சொன்னால், மரத்துக்கு பழம் போகும் என்றாராம். ஒவ்வொருவரும் உண்மைகளைச் சொல்ல, கீழே விழுந்த பழம், உயர நோக்கி ஓரிடத்தில் வந்து நின்றதாம் ! பாஞ்சாலி, உண்மையை மறைத்தாளாம் – உடனே பழம் பூமிக்கு வந்ததாம் – கண்ணன் சிரித்துக் கொண்டே, “ நீ பொய் சொன்னாய் திரௌபதா!” என்று சொல்ல, அவள் உண்மையைச் சொன்னாளாம் – “அய்வரின் பத்தினி நான்! இந்த அய்வர் எனக்கிருந்தாலும் கூட, உள்ளத்தின் ஒரு கோடியில் கர்ணன் மீதும் என் கண்கள் பதிந்திருக்கின்றன”, என்று பக்திரசம் சொட்ட வர்ணிக்கிறார், புராணிகர்!

“ அய்ம்புலன்களும்போல்
அய்வரும் பதிகளாகவும்
இன்னும் வேறொருவன்
எம்பெருங்கொழு தனாவதற்கு
உருகும் இறைவனே
எனது பேரிதயம்
அம்புலிதனில்
பெண் பிறந்தவர் எவர்க்கும்
ஆடவர் இலாமையினல்லா
நம்புதற்குளதோ
வென்றனள் வசிட்டனல்லற
மனைவியே யனையாள்”

இன்னம் வேறொருவன்! எம் பெருங்கொழுனாவதற்கு! கவனித்தீர்களா, கவிதையை? உருகுதாம் உள்ளக்ம்! புராணிகரும் மனம் உருகியே வர்ணிக்கிறார், இதனை! இந்த உண்மை கேட்டதும்...உடனே பழம்போய் ஒட்டிக்கொண்டதாம்!
 ஒரு பழம் – விஞ்ஞான உண்மையை தர பயன்பட்டது, அங்கே
 ஒரு பழம் – புராண பெருமையை விளக்கப் பயன்படுகிறது இங்கே
 நியூட்டனுக்கு கோயில் கட்டி யாரும் கும்பிடவில்லை, அங்கே
 வேதவியாசருக்கும், கண்ணபிராணுக்கும், ‘பத்தினி’ பாஞ்சாலிக்கும், விழாக்கள் குறைவில்லை இங்கே.

 இரண்டும், கீழே விழுந்த பழங்கள் தான்! என்ன செய்வது! அறிவு நடைபோடுகிறது, அங்கே! மகாத்மீயம், பவனிவர முயல்கிறது, இங்கே!
‘திராவிட நாடு’ 5.12.1948

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

செந்தமிழர் நாட்டைச் சிறை மீட்க........! - பாரதிதாசன்

“செந்தமிழை; செந்தமிழர் நாட்டைச் சிறை மீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று
குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே.”

“பொதுவுடமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம்
புனித மோடதை எங்கள் உயிரென்று காப்போம்
உடலைக் கசக்கி உதிர்த்த வேர்வையின்
ஒவ்வொரு துளியிலும் கண்டேன்
இவ்வுலக உழைப்பவர்க்கு உரியதென்பதையே.”

“கைத்திறனும், வாய்த்திறனும் கொண்ட பேர்கள்
கண்மூடி மக்களது நிலத்தை யெல்லாம்
கொத்திக் கொண்டு ஏப்பம் விட்டு வந்ததாலே
கூலி மக்கள் அதிகரித்தார், என்ன செய்வேன்
பொத்தல் இலைக் கலமானார் ஏழை மக்கள்
புனல் நிறைந்த தொட்டியைப் போல் ஆனார் செல்வர்.”

“இந்த நிலை இருப்பதனால் உலகப்பா நீ
புதுக்கணக்கு போட்டுவிடு; பொருளையெல்லாம்
பொதுவாக எல்லோர்க்கும் குத்தகை செய்.”

“பஞ்சமோ பஞ்சம் என்றே – நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்தே
துஞ்சி மடிகின்றாரே – இவர்
துயர்களை தீர்க்க ஒர் வழியில்லை - அந்தோ
நெஞ்சு பொறுக்குதில்லையே.”

“ஆடுகிறாய் உலகப்பா யோசித்துப்பார்
ஆர்ப்பாட்டக்காரர் இதை ஒப்பாரப்பா
தேடப்பா ஒரு வழியை என்று சொன்னேன்.”

“ஓடப்பாயிருக்கும் ஏழையப்பர்
உதையப் பராகிவிடில் ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆகிடுவர் உணரப்பா நீ”

“சதுர் வர்ணம் வேதன் பெற்றால்
சாற்றும் பஞ்சமர் தம்மை
எது பெற்று போட்டதடி - சகியே
எது பெற்று போட்டதடி?”

“ஊரிற் புகாத மக்கள்
உண்டென்னும் மூடர் – இந்த
பாருக்குள் நாமேயடி – சகியே
பாருக்குள் நாமேயடி”

“குக்கலும் காகமும் கோயிலிற் போவதில்
கொஞ்சமும் தீட்டில்லையோ? – நாட்டு
மக்களில் சிலர் மாத்திரம் – அந்த வகையில்
கூட்டில்லையோ?”

புதன், 14 ஜூலை, 2010

பாகிஸ்தானிய, சீன ஊடுறுவலை கண்டித்தால் கைது...!!!! சட்டம் வர வாய்ப்பு

பாகிஸ்தானிய, சீன ஊடுறுவலை கண்டித்தால் கைது...!!!! சட்டம் வர வாய்ப்பு....ஆமாம், அதற்கான வாய்ப்பை சமூக நீதி தளத்தில் முன்னோடி என்று மார்த்தட்டி கொள்ளும் தமிழகத்திலிருந்தே தொடங்கியிருக்கிறது....

"மானமிகு சிங்கள் இனவெறி இராணுவத்தின் மதிப்புமிக்க மானங்கெட்ட செயலை அன்போடு வன்மையாக கண்டிக்கிறோம்,"என்று கண்டிக்காததால், தமிழக ஊழல் பெருச்சாலிகளின் அதிகார வர்க்கம் சீமானை கைது செய்திருக்கிறது.

கையூட்டு கொடுத்தால் கையை கூட வெட்டி கொடுத்து விடும் இன்றைய நேர்மையான ஊழல் அரசியல்வாதிகளுக்கு, இனத்தை காட்டி கொடுப்பது பெரிய செயலா? நாம்தான் புரியாமல் இவர்களை நோக்கி வெற்றுக் கூச்சல் போடுகிறோம்.

சோனியா என்னும் இரக்கத்தின் உருவை கொண்டு, தமிழை கொன்ற தமிழ்நாட்டில், தமிழனை கொன்ற ஓராண்டில் மாநாடு நடத்தும், மதிப்பிற்குரிய டாஸ்மாக் புகழ் அரசிடம் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்.

ஈழத்தமிழர்களின் துயர்துடைக்க குரல் கொடுக்கும் தமிழர்களை நோக்கி கண்டிக்கும் குரல் கொடுக்கும் மானமிகு ( ஆமாம் அதென்ன மிகு? ) அமைச்சர் பெருமக்களுக்கு ஒரு கேள்வி, தன்னை அடிமையாக அறிவித்துக் கொண்டு ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் தங்கள் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்பிடம் கேட்டுப்பாருங்கள்...

தனது வீரத்தை, சமூக நீதி கோட்பாட்டை ஏன் உத்தபுரத்தில் நிலைநிறுத்த முடியவில்லை என்று? வீராதி வீரர்கள் இலங்கைக்கு சென்று காப்பாற்றி வர முடியுமா என்று எள்ளி நகையாடும் உங்கள் தலைவருக்கு தில்லியை விட உத்தபுரம் தொலைவில் இல்லை என்ற செய்தி தெரியாதா? ஆமாம், தில்லிக்கு போனால் பதவி கிடைக்கும்.....உத்தபுரத்திற்கு போனால்..................?
இதைத்தான் ................வக்கில்லாதவனுக்கு.......................ன்னு ஒரு பழமொழி சொல்வாங்க தோழர்கள் நிரப்பிக் கொள்ளவும், எனக்கு மறந்து போச்சு....

(தமிழர்களுக்கு ஓங்கி குரல் கொடுப்பவர்களின் விழிகளுக்கும், செவிகளுக்கு உத்தபுரம் அவலம் போய் சேரவில்லையோ என்ற கவலை எமக்குண்டு, சேர்ந்தால் அதற்கும் குரல் கொடுங்கள்.....தயவு செய்து...)


ஆனாலும், இந்தியா என்னும் முதலாளிகளின் கூட்டமைப்பில், காசுமீரம், தண்டகாரண்யா காட்டில், வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் உரிமைக்கான போராட்டங்களை அங்கிருக்கும் பொம்மை அரசுகள் எப்படி காட்டி கொடுக்க வேண்டுமென்று முன்மாதிரி ஒன்றை ஒரு மாதிரி ஏற்படுத்தி தந்திருக்கும் தமிழ்நாட்டு அரசை அதிகார வர்க்க ஹிட்லர்-முசோலினி சகோதர, சகோதரிகளின் சார்பாக பெருத்த வருத்தம் கலந்த மகிழ்ச்சியோடு பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்....

அதோடு, இந்தியாவில் இருந்த பொடா, போடா சட்டம், தடா சட்டம், என்றும் இருக்கும் தாடா சட்டம்(லஞ்சம்) என எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் சீமானின் கைது,


இந்திய பனியா கூட்டம் கட்டியமைத்திருக்கும் எதிரி பாகிஸ்தானை விமர்சிப்பவர்களை சிறையில் தள்ளும் சட்டம் தமிழகத்தை முன்மாதிரியாக கொண்டு வர இருக்கிறது..........

இதை இப்பொழுது, இந்த சட்டத்தின் முன்வரைவு தீர்மானத்தை கலைஞர் தொலைக்காட்சியும், ஜெயா தொலைக்காட்சியும் இணைந்தே நேரடியாக ஒளிபரப்பும் காலம் வெகு தொலைவில் இல்லை....கூட்டு களவாணிங்கதானே இவிங்க

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

சிந்திச்சிக் கேட்டுக்கடா

சினிமாத்தனமா யோசிச்சி

சீரழிஞ்சு போரவனே

சிலவேனும் சொல்லுறத

சிந்திச்சிக் கேட்டுக்கடா

வாழ்க்கையில் வசந்தமுன்னு

வாலிபத்த சொல்லுவாங்க நீ

வாலிபத்த வந்தடஞ்சும் உன்

வரலாறா என்ன செய்வ

வாழும் சமூகத்தில்

பாழும் சாதி இருக்கயிலே நீ

காதல் மோகத்தில் உன்

காலத்த கழிப்பாயா?

இனத்துக்காக ஒரு போரு

ஈழத்துல நடக்கியில

இயற்கையை வர்ணிச்சே உன்

இலக்கியத்த படைப்பாயா?

தமிழனின் தன்மானம்

தரக் குறைவா போகும் போது நீ

தலைவனா ஆகவே

தனி இயக்கம் அமைப்பாயா?

அரசியல் அசிங்கங்கள் மக்கள்

அறியாதிருக்கும் போது நீ

அரசாங்க வேலைக்காக

அலைந்து திரிவாயா?

பலகாலமான இக்கழிவை உன்

காலத்தில் கழுவாம

கல்யாணம் கட்டிக்கிட்டு

காசு பணம் சேர்ப்பாயா?

வாழ்க்கையில வசந்தமுன்னு

வாலிபத்தச் சொல்லுவாங்க நீ

வாலிபத்த வந்தடஞ்சும் உன்

வரலாறா என்ன செய்வ.

நன்றி: விடுதலை வேட்கை, வெற்றி வேந்தன்

திங்கள், 28 டிசம்பர், 2009

எங்களை தமிழில் படிக்கவிடு.......இல்லை தமிழில் படிக்க நாடு கொடு

இந்திய என்ற கூட்டு........அவியல்........பொறியல்........

அய்யய்யோ மன்னிச்சுக்கோங்க,...............கொஞ்சம் குழம்பி போய்ட்டேன். இப்படித்தாங்க இந்தியாவை நினைச்சாலே குழப்பாக இருக்கு.........

நான் மராத்திய மாநிலத்தில் வாழும் தமிழன்..........இங்கு ரே ரோடு என்னும் பகுதியில் வாழும் தமிழர்களை சந்திக்கச் சென்றிருந்தேன்..........தமிழர்கள் கொடி கட்டி........ஆமாம் கோமணக்கொடி கட்டி வாழாதது மட்டும்தான் குறை.......

அவர்களோடு உரையாடிய போது அவர்களிடம் வந்த பதில்............

படிக்க வாய்ப்பில்லைங்க............குடிக்க தண்ணி இல்லைங்க..........குளிக்கவும்கூட தண்ணி இல்லைங்க...........பணமிருக்கிறவன் தண்ணி வாங்கு குளிக்கிறான்......... ஆனால், துவைக்கிறதுக்கு துணி வாங்குறதுக்குக்கூட வாய்ப்பில்லை காரணம் பணம்தாங்க.......இவ்வளவு செய்திகள் இல்லைனு சொன்னாலும் எங்களை இப்படி இழிநிலையில் வைத்திருக்கும் இந்தியாவை நேசிக்கிறேங்க............என்ன இருந்தாலும் தாய் நாடு இல்லையாங்கிறான்???????????? ஏதாவது வாயில் வந்திருக்கும்.......ஆனால்,எவ்வளவு முயற்சி செய்தாலும் எச்சிலை தவிர வேறெதுவும் வரவில்லை..........எச்சிலை துப்பிவிட்டு.........தாய் மண்ணே வணக்கம்னு சொல்லிட்டு வந்தேன்.........

வேற்று மாநிலங்களில் புலம்பெயர்ந்து வாழும் தமிழனின் சொல்..........எப்படி.....ஈழ அகதியின் குரலோடு ஒத்துப் போகிறது...குளிக்க நீர் இல்லை.....கல்வி கற்க தமிழில்லை....இந்த நாடு எங்களுடையது என்றால் எங்கள் தாய்மொழியில் படிக்க என்ன தடை?.........தாய்மொழியை மறந்துதான் என்னுடைய நாட்டுப்பற்றை உறுதி செய்ய வேண்டும் என்றால் அப்படி என்ன புடலங்காய் தாய்நாட்டின் மீதான பற்று தேவையிருக்கிறது.........

நீங்கள் பேசுவது பிரிவினைவாதம்......இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்று நாக்கில் முட்டாள்தனத்தை நட்டு வைத்துக் கொண்டு பேசும் அன்பர்களிடம் நாங்கள் கேட்பது இதுதான்........

மராத்திய மாநிலத்தில் மராத்தியில்தான் படிக்க வேண்டும் என்பது சரிதான்........ஆனால், மராத்திய மாநிலத்தில் இந்தியன் என்று அடையாளப்படுத்தப்படும் தமிழன் அவனுடைய தாய்வழிக் கல்வி படிக்க்கூடாது என்றால் ஒன்று மராத்தியம் இந்தியாவில் இல்லை..அல்லது தமிழனுக்கு இந்தியா இல்லை........




ஞாயிறு, 27 டிசம்பர், 2009

சாதிகள் இடையே சண்டையடி

சாதிகள் இடையே சண்டையடி

நல்ல சமத்துவ போர் வந்ததடி

மங்கிய வீரன் பொங்கி எழுந்து

ஆயுதம் ஏந்தியே வாரானடி

போர் ஆயுதம் ஏந்தியம் வாரானடி

சிவனும் மீண்டு எழுந்தானோ?

அந்த முருக பெருமான் வந்தானோ?

முத்தமிழ் தந்த மூத்த தமிழன்

நக்கீரன் வாயை திறந்தானோ?

மதுரை வீரன் வந்தானோ?

நல்ல மயக்கும் மொழியில் தந்தானோ?

காவேரி சோழன், காத்தவராயன்

கண்களை திறந்து கொண்டானோ?

அழகன் சுடலை மாடனோ?

ஆயுதம் ஏந்திய அழகனோ?

கட்டை விரலை தந்திட மறுத்த

ஏகலைவன் வந்தானோ?

புது ஏகலைவன் வந்தானோ>?

சாதிய கனல்கள் அழியட்டும்

காதலர் பூங்கா மலரட்டும்

சாதிகள் இல்லா சங்கத் தமிழ் தந்த உலகம்

மீண்டும் உதிக்கட்டும்

தமிழ் உலகம் மீண்டும் உதிக்கட்டும்

அம்பேத்கர் போட்ட விதைகளாம்

அந்த அறிஞன் வளர்த்த செடிகளாம்

ஆலம், அரசம் நிழல்கள் தந்திட

வானம் தொட்டு வளர்ந்தோம்

நீல வானம் தொட்டு வளர்ந்தோம்.......

இருள் நீக்க வளர்ந்தோம்.....

நன்றி: தோழர் ராசேந்திரன், ரே ரோட், மும்பை