சீமான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீமான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 ஜூன், 2011

ஜூன் 26 இல் மெரினாவிற்கு போவது அப்படி என்ன தேவை?


ஈழத்தில் நம் உறவுகளை சிங்கள இனவெறி அரசு பல பத்தாண்டுகளாய் கொன்று குவிப்பதை கொள்கையாய் கொண்டு இயங்கி வருகிற, சிங்கள இனவெறிக்கு எதிராக பல்வேறு வகையில் போராடிவிட்டனர், போராடிக் கொண்டிருக்கின்றனர். இனவெறிக்கு எதிரான இத்தகைய போராட்டங்களுக்கு தமிழகத்திலும், புலத்திலும் தொடர்ந்து அதற்கான ஆதரவு அலை இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அவற்றை கொஞ்சம், கொஞ்சமாக தமிழக்த்தின் அரசியல் நரிகள் தின்று இன்று போதாமையில் வந்து நிற்கின்ற் அவல நிலையில் இருக்கிறோம். போராட்டங்களுக்கு, சுயமரியாதையின் பொருட்டு தன்னிச்சையாக திரள வேண்டிய இளைஞர்கள் கூட்டத்திடம் சென்று ஈழத்தில் நடந்த அவலத்தை பேச வேண்டிய சூழலில் இருக்கிறோம்.


நம் சமகாலத்தில் நடந்த அவலத்தை வலிந்து சென்று கையில் திணித்து துண்டு பிரசுரத்தின் வழி பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆனால், நமீதா "மச்சான்ஸ்" என்று சொன்ன செய்தி, த்ரிசா பாடிகாட் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட செய்தி, அசின் பிகினி உடையில் நடிக்க ஒப்புக் கொண்ட செய்தி இளைஞர்களிடத்தில் தங்கு தடையின்றி போய் சேரும். தினதந்தி, தினகரன், மாலை மலர், மாலை முரசு என விதிவிலக்குகள் கிடையாது. இவனுங்க பத்திரிக்கை தொழில் நடத்துறானுங்களா, பேப்பர்ல விழிவழி விபச்சாரம் பண்ற தரகர்களான்னு கண்டுபிடிக்கிற அளவு நமக்கு சிக்கல். இதுல என்ன வேடிக்கைன்னா, நடிகை தொப்புளை தெளிவாக படம் பிடித்து போடும் பத்திரிக்கையில்தான் அழகிகள் கைது என்ற படச்செய்தியும் வரும். இந்த நாட்டுல இளைஞர்களுக்கு பாலியல் உணர்வை எவ்வளவு தூண்டனுமோ, அத்தனையும் தூண்டி விட்டு, விட்டு படுக்க மட்டும் இடம் தராது சமூகம், அப்பொழுதும் கலாச்சாரம் காக்க வந்துவிடும் இந்த விபச்சார பத்திரிக்கைகள்...


சமீபத்தில், இந்திய அதிகார வர்க்க விபச்சாரி மேனன் கம்முனாட்டி ஜெயா மாமியை சந்திச்சானாம். அந்த மேனன் வெங்காயத்தை பத்தி இங்கிருக்கிற பத்திரிக்கைகளுக்கு தெரியவே தெரியாதா? இவன் ஈழத்தமிழ் துரோகி என்று தெரியவே தெரியாதா? கேட்டா அந்த பொல்லாப்பு நமக்கு எதுக்கு, அரசு விளம்பரம் கிடைக்காதேன்னு ஒரு சால்ஜாப், ஊரறிந்த காரணம் வரும்.... ஏண்டா, தான் பொண்டாட்டி, புள்ள சேலையை உறிஞ்சாதான்........உங்களுக்கெல்லாம் கோபம் வருமா.... அப்ப காத்திருந்து டி.நகர் சேலை வாங்குங்கடா தாராளமா?

இது போதாதுன்னு, தொலைக்காட்சிகள் சொல்லவே வேண்டாம், நிழற்பட விபச்சாரம் செய்பவர்களுக்கு போட்டியாக, நிழல்கள் ஆடுவதை வைத்து, அதுவும் அரை குறையாய், நிறைவாய் குறைவாய் ஆடுவதை வைத்து விபச்சாரம்...

இப்படில்லாம் ரவுண்டு கட்டி விபச்சாரம் பண்ணா, மசிறாடா நாங்க இளைஞர்கள்கிட்ட போய் பிரச்சாரம் பண்ண முடியும்....
======================================================================
சரி பத்திரிக்கை காரங்க தொல்லை மசிறுதான் தாங்க முடியலைன்னு பார்த்தா.....
நம்ம அரைவேக்காட்டு அரசியல் வெண்ணெய்ங்களோடவும் பெருத்த தொல்லையா இருக்கு...

ஐநா என்னும் அமெரிக்க அடிவருடி அவை.....உலக மக்களின் துன்பத்திற்கு சாட்சியாக நின்று "வணக்கம் சார்" மட்டும் சொல்லும் அவை...

அந்த மசிற புடுங்குன அவை அமைச்ச ஒரு மயிர புடுங்காத கமிட்டி சில பரிந்துரைகளை செய்து...சில வாரங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கின்றது....அது, வெண்ண மயிரானையும் போர்க்குற்றவாளின்னு அறிவிக்கலை....போர்குற்றம் நடந்ததற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு போர்குற்றவாளிகளே நீதிபதிகளாக மாறி விசாரணையை நடத்த வேண்டுமென்று கூறியிருக்கிறது....

நாம் பட்டினி கிடந்தவனுக்கு வாசமும் சுவைதான் என்கிற ரீதியில் அப்படியே துள்ளி குதிச்சோம்...


அடுத்து ஈழத்து தாய், ஜெயலலிதா அம்மையார்...ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்..... சிங்கள அரசை போர்க்குற்றவாளின்னு அறிவிக்க மைய அரசு ஐநா மன்றத்தை வலியுறுத்தணும்...(இதுக்கு நடுவுல இந்திய அதிகார வர்க்கம் மனித உரிமை கவுன்சிலில் நிரந்த உறுப்பினராக முயற்சி பண்றானுங்கன்னு செய்தி கேள்விப் பட்டேன்...மேற்கொண்டு தகவல் தெரியல..எப்படி,எதன் வழியா தெரிஞ்சுக்க தோணும்...). சிங்கள வெறியர்களுக்கு உதவி செய்ய துடித்து, துடித்து உதவி செய்த காங்கிரசு கம்முனாட்டிகள் கால்ல மிரட்டி விழற தொனி தெரிஞ்சது.....முழுக்க திமுக சாடல்... இதுல புரட்சி மயிரான்.......விஜயகாந்த...காவிரி பிரச்சினையில் திமுக அரசு துரோகம் பண்ணிடுச்சுன்னு.....பேசுறார்(ன்). 10 ஆண்டு துரோகம் பண்ண அம்மா முன்னிலையில் என்பதுதான் ஹைலட்டு....

இதுமட்டுமா, என்றால் சாதிக்குள் நின்று கொண்டு தமிழ்த்தேசியம் பேசும் அறிவுஜீவிகள்.....மதத்திற்குள் படுத்துக் கொண்டு தமிழ்த்தேசியம் பேசும் ஓநாய்கள்..... அடக்குமுறைக்கு எதிராக இன்னொரு விதமான அடக்குமுறையிடம் சரணடைவதை அரசியல் யுக்தி என்று பிதற்றும் அரைவேக்காடுகள்.......என பல மண்டை குடைச்சல்...

இப்படி எல்லா திசையில் நம்ம உயிரை வாங்குற கம்முனாட்டி நாய்ங்களுக்கு நடுவில் தன்னலமற்ற ஓரளவு அரசியல் புரிதல் கொண்ட(அதற்கு மேலும் கூட இருக்கலாம்...)
தன்னலமற்ற இளைஞர்கள் ஈழத்தில் நடந்த படுகொலைக்கு மக்களிடம் சென்று குறைந்த பட்சம் மெரினாவில் அணிதிரளச் சொல்லி அழைத்திருக்கிறாள்...

குறிப்பாக சீமான், நெடுமாறன், வைகோ போன்றவர்கள் கண்டிப்பாக இந்த அணிதிரள்விற்கு வரவேண்டும்...அதுவும், தங்கள் கட்சி கொடி, கரைவேட்டி இல்லாமல்.... இல்லையென்றால் வேட்டியை கழட்டிட்டு தயவு செஞ்சு ஓடிடுங்க......

உங்க பிழைப்புவாதத்திற்கு தமிழ்த்தேசியத்தின் கோவணத்தை அவிழ்க்காதீர்கள்.

================================================================

இவ்வளவு பேசுற நீ என்ன மசிறுக்குடா இணையத்துல எழுதுக்கிட்டு இருக்கிறே, மக்கள்கிட்ட போக வேண்டியதுதானே என்ற கேள்வி வரலாம்....என்னால் இயன்றதை கண்டிப்பாக செய்வேன்....இதை படிக்கும் என் நண்பர்கள் அல்லாத தோழர்களும்....தயவு கூர்ந்து............தம்மால் இயன்ற அன்பர்களை அழைத்துக் கொண்டு மெரினாவிற்கு வாருங்கள்.................

தொடர்புகளுக்கு: தோழர் உமர்: 9600781111, தோழர் ஸ்டாலின்:9884877487

திங்கள், 2 நவம்பர், 2009

சீமானிடம் இதையா எதிர்ப்பார்த்தோம்?

முதல் முறையாக மும்பையில் சீமானை இரண்டு ஆண்டுகளுக்கு(சரியாக நினைவில்லை, மூன்று ஆண்டுகளாக கூட இருக்கலாம்) முன்பு தொலைவில் இருந்து ஒரு அரங்கில் உரையாற்றியதை கண்டேன் ,கேட்டேன்.....

தமிழன் இவ்வளவு தரம் தாழ்ந்து போய்விட்டானே, வேற்று மொழியில் பெண் கொடுத்து பெண் எடுக்க தயங்காதவன், தன் தாய்மொழி பேசும் நபர்களோடு திருமண உறவு கொள்ள தயங்குகிறானே? மொழி, இன பற்றை விட சாதி பற்று தமிழனிடத்தில் என்று ஆட்கொண்டதோ அன்றே தமிழன் வீழ்ந்தான், வந்தவனெல்லாம் ஏறி மிதித்து போய்க் கொண்டே இருக்கிறான்.

தமிழனிடம் இருக்கும் சாதிய பிரச்சினைகளை பேச, பகுத்தறிவு சிந்தனைகளை பரப்ப இப்படியொரு ஆளா? அதுவும் திரைப்படத்துறையிலிருந்தா? என்று பிரம்மித்துதான் போனேன், எனக்கு அப்பொழுது 21 வயதுதான் இருக்கும். அதிகம் புரிதல் இல்லா நேரம், பெரியார் அப்பொழுதுதான் அறிமுகமாயிருக்கிறார். பெரியாரை அப்பொழுதுதான் படிக்க தொடங்கியிருக்கிறேன்....புரட்சிகர கருத்துக்கள் சீமானின் சிந்தையில் இருந்ததா இல்லையா? என்பதெல்லாம் எனக்கு தெரியாது ஆனால், சொற்களில் இருந்தன.

புரட்சி என்பது காய்ந்த சருகு போன்றது, யார் முதலில் தீக்குச்சி ஆவது என்பதுதான் இங்கே கேள்வி.என்று அவர் சொற்களை உதிர்த்து கொண்டே போனார். அந்த நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கம் இன்னும் என்னுள் இருக்கிறது. அந்த தாக்கம்தான் பெரியார் என்னும் பெரும் தலைவனை எனக்குள் ஆழமாக விதைத்தது.....பெரியாரை படிக்க தொடங்கியது உலகத்தில் உள்ள விடுதலைச்சிந்தனைகளை தேடி தேடி படிக்க வைத்து, தேடலை விரிவுப்படுத்தியது......தேடல் தொடர்கிறது

இவரை மேடையில் பார்த்தபின்பு அவரின் சீமானின் தம்பி திரைப்படம் பார்க்க நேரிட்டது. படத்தில் மாதவன் தன்னுடைய குடும்பத்தில் வீட்டிலிருக்கும் காட்சி வந்தது, பெரியாரின் படம் வந்தது, பாரதிதாசன் படம் வந்தது, கூடவே முத்துராமலிங்கம் என்ற சாதி வெறியனின் படமும் அந்த திரைப்படத்தில் வந்தது...அதிர்ச்சியுற்றேன்...தோழர்களோடு இதை பகிர்ந்து கொண்ட பொழுது மிகவும் வருத்தமடைந்தடைந்தனர்..ஆழ்ந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

சீமானோடு அப்பொழுது தொடர்பு கொண்டு எனது தோழர் ஒருவர் கேட்டதற்கு அது பிழையாக நடந்துவிட்டது...என்று கூறியிருக்கிறார்...பேச்சுனூடாக இன்னும் சாதி வெறியை கக்கி கொண்டிருக்கும், தமிழன் என்ற உணர்வேயில்லாமல் சாதிய வெறி கொண்டு சகதமிழனை ஒடுக்கும் சாதி வெறியர்களையும் சீமான் கண்டித்ததாக தொடர்பு கொண்ட தோழர் கூறினார்....

அது தற்செயலாக நடந்தது. இனி அதை தவிர்த்து விடுகிறேன் என்று கூறியவுடன் விமர்சனங்களையும், அதன் மீதான தனது நிலைப்பாட்டையும், தவறிருந்தால் திருத்திக் கொள்ளும் மனப்பான்மையும் இவருக்கு இருக்கிறதே என்று மகிழ்ச்சியடைந்தேன்.

அதோடு மட்டுமில்லாமல் கீற்றுவில் அவரது நேர்காணலையும் படித்தேன் அதில் சாதியை குறித்து அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுருந்தார்..

கேள்வி: தமிழ் சினிமா சாதியை எப்படி கையாளுது. சாதியை எதிர்த்து வந்த படங்கள் கூட அதைத் தீவிரமா செய்யலை. சாதியை எதிர்த்து வேதம் புதிதுன்னு பாரதிராஜா ஒரு படம் எடுத்தார். அதிலயும் கடைசியில் பார்ப்பனர்களுக்கு அடிபணிந்து போறமாதிரி தான் எடுத்திருப்பார்...

மார்க்சிஸ்டுகள், பெரியாரிஸ்டுகளைத் தவிர வேறு யாருக்கும் சாதியைக் கடந்து மக்களை மீட்கணுங்கிற நோக்கம் கிடையாது. இங்க சாதி, மதம்னு எல்லாம் எதுவும் கிடையாது. அது ஒரு உணர்வு அவ்வளவுதான். கடவுள், கற்பு இதெல்லாம் எப்படிக் கற்பிதமோ சாதியும் அப்படி ஒரு கற்பிதம். ஒரு உருவகம். வேதங்கள் சொல்லுது, தர்மங்கள் சொல்லுதுன்னா அதையே நாமக் கொளுத்தணும். ஆனா சாதியை அடிச்சு நொறுக்கணுங்கிற நோக்கத்தில இங்க யாரும் எதையும் படைக்கலை. அந்த உணர்ச்சிகளையும் வைச்சு காசு சம்பாதிக்கணுங்கிற நோக்கத்தில் தான் திரைப்படங்கள் படைக்கப்படுது.

கேள்வி:நீங்க சாதியைப் பத்திப் பேசறதால இங்க ஒரு கேள்வி கேட்க விரும்புறோம். முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தாத்தான் தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை ஒழியும்னு முதுகுளத்தூர் கலவர நேரத்தில் பெரியார் சொல்லியிருக்கார். ஆனால் உங்களோட படங்களில் முத்துராமலிங்கத் தேவரோட புகைப்படம் தொடர்ந்து இடம்பெறுகிறது.?

கொஞ்சநாள் முன்பு வரைக்கும் எனக்கு முத்துராமலிங்கத் தேவர் பத்தின உண்மைகள் எதுவும் தெரியாது. தம்பி படம் வந்தபிறகு அண்ணன்களெல்லாம் சொன்னபிறகு தான் என்னோட பிழை தெரிஞ்சது. அவரை முன்னிறுத்தணுங்கிற உள்நோக்கம் எல்லாம் எதுவும் கிடையாது. படம் வந்த பிறகு தான் தேவரும், பெரியாரும் கொள்கைரீதியா வேறானவங்கன்னு எனக்குத் தெரிய வந்தது. பெரியார் இறந்தபோது அரைக்கம்பத்தில் பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட பார்வார்ட் பிளாக் கொடிதான் என்பதையும் தெரிஞ்சிக்கிட்டேன். நான் முழுக்க முழுக்க பெரியாரைப் பின்பற்றுகிறவன். முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த பிழைதான்.

கீற்று நேர்காணல் இணைப்பு

அதற்கு பிறகு அவரை சமீபத்தில் விழித்தெழு இளைஞர் இயக்கத்தின் சார்பாக மும்பையில் நடந்த நிகழ்ச்சியில்தான் அவரை சந்தித்தேன். அவரை கண்டு வியந்து போனேன், கூர்ந்து கவனித்த பொழுது தன்னலமில்லா, கள்ளமில்லா உள்ளமும் கொண்டவர் என்றே இதுவரை நினைத்து வருகிறேன். இன்னமும் குழந்தை உள்ளத்தோடு இந்தச்சமூகத்திற்கு ஏதாவது செய்துவிட முடியாதா? என்ற ஏக்கமும் அவரிடம் என்னால் காண முடிந்தது....

ஆனால்,எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும் அவரின் தவறான அரசியல் நிலைப்பாடுகளை எப்படி ஆதரிக்க இயலும்......

பெரியாரின் பேரன் முத்துராமலிங்கம் என்ற சாதிவெறி பிம்பத்திற்கு சீமான் மாலை அணிவித்ததைத்தான் குறிப்பிடுகிறேன்.

ஈழத்தில் சிங்கள இனவெறி தமிழர்கள் மீது ஏவிவிட்ட அடக்குமுறைக்கு எதிராக முழங்கும் தமிழ்த்தேசியவாதிகள் தமிழகத்திலேயே சம மரியாதை இல்லாமல் சக தமிழன் சாதியின் பெயரால் மிகக்கொடுமையாக ஒடுக்கப்படும் கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்பதில்லையே என்ற ஆதங்கம் எமக்கு இருந்தாலும் அதை தருணம் கருதி ஈழப்பிரச்சினையின் தற்காலத்திய முக்கியத்துவம் கருதி, குரல் கொடுக்க வேண்டிய தேவை கருதி அதைப்பற்றி விரிவாக விவாதத்திற்குள் உட்புகவில்லை...ஆனால், சாதிய ஒழிப்புதான் தமிழர்களை அணிதிரட்டும் என்பதில் மாறுபடாமல் இருந்தோம்.....

ஈழத்தில் நடக்கும் கொடுமைக்கு தீண்டாமை கொடுமைக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை இனியாவது உணர்வார்களா என்றால் அதுதான் நடக்கவில்லை....என்ன ஒரே வேறுபாடு..ஈழத்தில் ஒடுக்குபவன் சிங்களவன், தமிழகத்தில் தமிழன்

ஈழக்கொடுமை கண்டாவது விழிப்புணர்வு பெற்று தமிழர்கள் சாதி வெறிக்கெதிராக வரமாட்டார்களா? என்ற ஏக்கம்தான் காரணம்..

பெரியார் திராவிடர் கழகம் இனி என்ன செய்யப்போகிறோம்என்ற குறுந்தகட்டை பிரதி எடுத்து மும்பையில் தமிழர்கள் மத்தியிலே பிரச்சாரம் செய்து வந்த வேளையில் ஒரு நபர் என்னை அணுகினார்..

ஈழக்கொடுமையெல்லாம் சரிதான்....ஆனால், அதில் வரும் பெரியாரின் படத்தை எடுத்து விட்டு தாருங்களேன். என்று கூறினார். அங்கு வெளிவந்தது சாதிய திமிர் என்னும் பூனை...பெரியாரின் சாதிக்கு எதிரான கொள்கையின் வீரியம் அங்கே நினைவுக்கு வந்தது......

சாதி வெறிக்கெதிராக தமிழகத்தில் இயங்குவதற்கு பெரியார்தான் கருவி என்பதை நான் அன்று நன்கு புரிந்து கொண்டேன்...இதையே தமிழர்களோடு சமூக தளத்தில் இயங்கிய பொழுது பல நிகழ்வுகள் இதையே வலுவாக உறுதி செய்தன.

முத்துராமலிங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பது சாதிக்கு ஆதரவாக இயங்குவதாகத்தான் போய் முடியும்.என்பதையும் சேர்த்தே உணர்த்தியது...

தமிழர்களாக அணிதிரட்ட கிளம்பியிருப்பதாக கூறும் பெரியாரின் பேரனாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் சீமான் சாதி ஒழிப்பிலிருந்துதானே தொடங்கியிருக்க வேண்டும்...ஆனால், அதை விடுத்து பெரியாரை சாதி வெறி தேவர் பூசை கொண்டாட்டத்தில் கொண்டு போய் விட்டு விட்டு சாதியை தூக்கி பிடிக்கும் மக்களிடம், அவர்களிடம் வைக்க வேண்டிய நேர்மையான விமர்சனங்களை வைக்காமல் முத்துராமலிங்கத்திற்கு மாலை போட்டு வந்ததுதான் ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறது...

அவர்களும் தமிழர்கள்தானே அவர்களை புறக்கணிப்பது சரியா? என்று என்னதான் சமாதானம் கூறினாலும்... அது

ராஜபக்சேவும், பிரபாகரனும் எனக்கு நண்பர்கள்தான் என்று சொல்வதுபோல்தான் முடியும்..

இனத்திற்கு தலைவனாக விரும்புவன் மக்களிடம் சமரசம் செய்து கொண்டால் சமரச சாதாரண பிழைப்புவாத அரசியல்வாதிதான் ஆக முடியும், மாறாக மக்களிடம் பரப்ப வேண்டிய கொள்கைகளை பரப்புரையின் மூலமாக தம் பின்னே அணி திரள வைப்பவன்தான் நேர்மையான அரசியல்வாதியாக,இந்த இனத்திற்கான விடிவாக வர முடியும்

சீமான் செய்ய வேண்டியது தமிழர்களிடையே இருக்கும் சாதியை ஒழிப்பதற்கு களம் காண்பதுதான்..சாதி ஒழிப்பை மறந்தாலோ, சிறுது நாட்களுக்கு ஒதுக்கி வைத்தாலோ, சாதிய ஆதிக்க வாதிகளிடம் அடங்கி போனதாய்தான் முடியும்.

கால ஓட்டத்தில்

நாம் தமிழர் என்பது போலி முழக்கமாகிவிடும்...

ஏனென்றால்....சாதி ஒழியாத வரை தமிழகத்தில்

தமிழ் தேவர், தமிழ் பறையர், தமிழ் பள்ளர், தமிழ் கோனார்,தமிழ் பிள்ளைதான் இருப்பார்களேயொழிய...

தமிழர்களாக தமிழகத்தில் எவனும் சீமானுக்கு கிடைக்கமாட்டான்.

தொடர்பான இணைப்புகள்:

சண்டாளர் என்ற சொல்லை பயன்படுத்தியதால் மறுப்பு கூறு தலித் முரசு 2006 இதழிற்கு சீமான் அனுப்பிய மடல் அழுத்துக

தோழர் சுகுணாதிவாகரின் இணைப்புகள் 1, 2, 3

தோழர் அசுரன் மாமேதை முத்துராமலிங்கத்தை பற்றிய பதிவு : 1

தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் சாதி வன்முறையின் ஓர் தொகுப்பு.

இணைப்புக்கு அழுத்துங்கள்