நல்லதொரு இரவுப்பொழுது, மும்பையின் கொட்டும் மழை...நாங்கள் அதை பேய் மழை என்று கூட கூறுவோம்..பல வேளைகளில் மழையின் பொழுதே மின்சாரம் துண்டிக்கப்படும்....அந்த குளிரில், வழக்கமான அச்சமூட்டும் பேய்களின் குரலும் சில நேரங்களில் இடிவழியாக கேட்கும்...நான் காதை பொத்திக் கொண்டு, போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு உறங்க முயற்சி செய்வேன்...சிறிய அறையில் நான் என் இரு தங்கைகள்,என் தகப்பன், தாய் என ஐந்து பேர்....கிராமத்தின் சமையற்கட்டு அளவு கூட இல்லாத வீடு...நானும் தங்கைகளும் அருகருகே பேய்க்கு பயந்து, காலிலிருந்து போர்வை விலகிவிடாதபடி...நெருக்கி படுத்துக் கொள்வோம். போர்வையை வைத்து உடலை மூடிக் கொண்டால் பேய் வராது என்றொரு நம்பிக்கை எனக்கும், என் தங்கைகளுக்கும்..
தலையில் தீச்சட்டியோடு ஒரு பேய், கருப்புடை அணிந்திருக்கிறது( அப்படித்தானே படத்தில காண்பிச்சானுங்க)...என்னை துரத்திக் கொண்டே ஓடிவருகிறது, நானும் என்னால் இயன்ற அளவு ஓடிக் கொண்டேயிருந்தேன்...ஒரு கட்டத்தில் தனது மந்திர சக்தியால் நேரடியாக தன் கையை நீட்டி என் தோளை தொட்டே விட்டது. ஆ..ஆ..என்று நான் அலறி எழ..."என்னடா எந்திரி..எந்திரி...வீட்டுக்குள்ளே தண்ணி வந்துடுச்சு.."தூக்கம் கண்ணை சுழற்றிக் கொண்டு நின்றது.தண்ணீர் காலை நனைத்த சுகத்தில் மீண்டும் நான் தூங்க சென்றேன்...வீட்டிற்குள் உறங்கும் வேளையில் மூலையில் ஒதுக்கி வைக்கும் கட்டிலை விரித்துவிட்டு..என் அப்பனும், ஆத்தாளும்...என்னையும்,என் தங்கைகளையும் கட்டிலில் அமரவைத்து உறங்கச் சொன்னார்கள்...அப்பொழுதுதான் மெல்ல உறக்கம் கலைந்தது..வீடெல்லாம் மலம்....மிதக்கும் வெளியாக மழைநீர் கலந்த சாக்கடை நீர்...கடந்த சில ஆண்டுகள் முன்புவரை...நாங்கள் வசித்த சாலில்(தெருவில்) இதே நிலையில்...இரவெல்லாம் விழித்து, உறங்கி, விழித்து, உறங்கி நான் விழித்திருக்க...தண்ணீர் வந்து வீட்டிற்குள் கொட்ட கொட்ட இறைத்து இறைத்து வெளியே தண்ணீரை வெளியேற்ற முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்...அள்ளி தெளித்த தண்ணீர் கண்டிப்பாக சில, பல மலத்துளிகளை அவர்தம் உடலில் தெளித்திருக்கும்..
இந்த அனுபவத்தை என்றுமே அனுபவத்திராத சோனியா காந்தி, மன்மோகன் சிங், ஜெயா, கருணா உள்ளிட்ட மேன்மைமிகு தலைவர்கள்(த்தூ.............) எனக்கு வாழ்த்து செய்தி சொல்லுதுங்க...நானும் வெட்கங்கெட்டத்தனமான மலத்திற்கு சமானமான இந்நாட்டின் விடுதலையை கொண்டாடணுமாம்..
இன்னும் ஒடுக்கப்பட்ட சகோதரர்களை மலமள்ள 100% இட ஒதுக்கீடு செய்து வைத்திருக்கும் இந்த கேடுகெட்ட இந்தியாவின் விடுதலையை மலத்திற்கு ஒப்பிடாமல் எதோடு ஒப்பிடுவது..
சாதிவாரியாக மக்கள் தமது பாட்டன், முப்பாட்டன் சாதியின் பெயரால் செய்து வந்த தொழிலை தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக செய்ய வேண்டும், என்பதுதானே...அதைத்தானே இந்து மத அவதார யோக்கியன்(?) கண்ணன் தன் கீதையில் சுவதருமம் என்று கூறுகிறான். அந்த தரும்ம் அழியும் போதுதான் தான் மீண்டும் தோன்றுவேன்…என்று கீதையில் “யதா யதாஹிதர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத। அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம்... யேயதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்।பரித்ராணாய ஸாதூநாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்।தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே“ என்று மிரட்டுகிறான். அதே கண்ணனின் தரகர்களிடம்தான் இப்பொழுது கருத்து யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
பெரியாருக்கே அல்வா கொடுத்துவிட்டு, ஈரோட்டு பகுத்தறிவு பேரொளியை மங்கலாக்கிய பார்ப்பனீய கூட்டாளிகளின் அதே பார்ப்பன குரல்... தமிழகத்திலிருந்து மீண்டும். கிளம்பியிருக்கிறது ஒன்று கிண்டல், மற்றொன்று வேண்டுகோள்…
முதலில் கிண்டல்…
கலைஞர் தொடங்கி பேரன் வரையிலான திரைத்துறை ஆதிக்கத்தை குறித்தது...வந்ததுஒரு பார்ப்பன இதழில்..
““கலைஞர் வரலாற்றிலேயேமுதன் முறையாக - கலைஞர் கதை வசனத்தில் - கலைஞர்பேரன் தயாரிப்பில் - கலைஞர் பேரன் இயக்கத்தில் - கலைஞர் பேரன் நடித்த - புத்தம்புதிய திரைக்காவியம் - கலைஞர் டி.வி. யில்மிக விரைவில் காணத் தவறாதீர்கள்”
இந்த கிண்டல் கலைஞரை மிகவும் பாதித்து விட்டதாம்……
விடுவாரா கலைஞர்….புலம்பி தீர்த்து விட்டார்…..அவரின் புலம்பலின் விரிவான சுறுக்கம்…
““என்ன; கலைஞருக்கு மகன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு பேரன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு பேத்தி இருக்கக் கூடாதா? அவர்கள் திரைப் படத்துறையிலே ஈடுபடக் கூடாதா? வேறு யாருக்கும் வாரிசுகள் இருந்து, அவர்கள் அந்தந்த துறையிலே ஈடுபட்டதே கிடையாதா? நான் உதாரணத்திற்காக சொல்கிறேன். இங்கேயுள்ள நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் மகள்கள், மருமகன் தனுஷ் ஆகியோர் இல்லையா? அந்தக் குடும்பத்திலே ரஜினி மட்டும் தான் நடிக்கலாமா? தனுஷ் நடிக்கக் கூடாதா?”
இதைத்தானே சுவதருமம் என்கிறது பார்ப்பன தத்துவம்….அதை தமிழகத்து குல்லுக பட்டர் ராஜாஜி, அதாவது கலைஞர் கூட்டத்தின் முதல் கூட்டாளி குலக்கல்வி திட்டமென அறிவித்தார்...பெரியார் மற்றும் சில தமிழகதலைவர்களின் எதிர்ப்புக்குபிறகு கைவிடப்பட்டது..
ஆனால், இதே கலைஞர் தமது இயக்க மேடைகளில் படத்தில் மட்டும் பெரியாரை வைத்துக் கொண்டு, தம் குடும்பம் அரசியலில் மட்டும்தானா கொள்ளையடிக்க வேண்டும், வாரிசு வாரிசாய்
சினிமாவில் கொள்ளையடிக்க உரிமையில்லையா? என்று மனுதரும காவலர் என்ற உரிமையோடு கேட்கிறார்…(மக்கள் தலைவர் சு.சாமிக்காக சூத்திர வழக்கறிஞர்களை அடித்து நொறுக்கியது நினைவில் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல..)
பூணூல் கூட்டத்திற்கோ இந்நேரத்தில் வேறு சிந்தனை நூலறியா, பூணூலறியா வடிவரசி மம்மி ஜெயலலிதாதான் சுரண்ட வேண்டும். அந்த அம்மா எவ்வளவு வெளிப்படையா ஆர்லிக்சுமட்டும்தான்(அழுத்தம் எமது) திருடலைன்னு சொல்றாங்க….தமிழகத்து பிஜேபியின் தலைவராக, மன்னிக்கவும், அ.தி.மு.கவின் தலைவியாகவும் இருக்கிறார். அப்படியிருக்க மிக மிக என்று 100க்கு மிகாமல் போட்டுக் கொள்ளும் தலைவனை கொண்ட அமைப்பு எப்படி சுரண்டலாம்…..
தெற்காசிய முதலாளித்துவத்தின் புனைபெயரான பார்ப்பனீயத்தை காப்பாற்றா விட்டால் கண்ணன் என்னும் Play Boy கடவுள் வந்து அவதாரம் எடுத்து ஜகத்தை அழிச்சுடுவாரோயில்லையோ……
ஏதோ கலைஞர் ஈரோட்டு நினைப்பில் தமிழர் தலைவர்(எத்தனை பேருடா கிளம்பிருக்கீங்க?) வீரமணி எழுதிய கீதையின் மறுபக்கம் நூலை ராமகோபாலனுக்கே கொடுத்தார்..அதற்கு பரிகாரமாய்த்தான் வைத்தியநாதனையும், இந்து ராமையும் அழைத்து அழைத்து செம்மொழி மாநாடு நடத்தி விட்டாரே? இன்னும் ஏன் இந்த பார்ப்பனர்களுக்கு தன் மீது கோபம் தொடர்கிறது என்பதுதான் கலைஞரின் உள்மன ஆதங்கம்..
(செம்மொழி - காரணப் பெயர்
செல்லும் இடமெல்லாம் செருப்படி வாங்கி சிவப்பாய் குருதி வழியும் உதடுகளால் பேசப் படுவதால்– பாவலர் அறிவுமதி)
பார்ப்பனீயம் உட்படஅனைவரது கருத்துக்களையும் அரவணைத்துச் செல்லும் கருணாநிதியின்இந்த உயர்ந்த அரசியல் பண்பை பார்ப்பன பத்திரிக்கைகள் புரிந்து கொண்டார்களா? நன்றி கெட்டவர்கள்...மீண்டும் அவர்களின் பார்ப்பன பாசம் ஜெயலலிதாவை நோக்கி திரும்பிபோக வைத்து விட்டதே என்ற வருத்தம்தான்தமிழக கருணாவை வாட்டி வதைக்கிறது…
(பொறுக்கி தின்பதற்கு பெயர் இந்நாட்டில் அரசியல் பண்பு, கூட்டணி தருமம்)
ஆனால் , இதற்கெல்லாம் அசந்திடுவோமா என "சுரண்டல் பார்ப்பனீயத்தின் சொத்து, ஐந்தாண்டுக்கு மேல் உமக்கு ஜால்ரா தட்ட முடியாது" என்று புரட்சி முழக்கத்தோடு கிளம்பிற்று காண் சிங்க சமஸ்கிருத கூட்டம்(நன்றி: செம்மொழி மாநாடு).
பூணூல் தத்துவம் பாசம் வெற்றி பெறுகிறதா? அல்லது பூணூல்வெற்றி பெறுகிறதா என்று பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும்…அதுவரை மானாட மயிலாட பார்ட்-5..
எங்கு விடுதலை போராட்டம் நிகழ்ந்தாலும் அதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது, தமிழர்களின் தார்மீகக் கடமை.....
கசப்பான இத்தனை அவலங்களுக்கு பிறகு நமக்கு இந்த விழிப்புணர்வு தேவை...
விடுதலைப்போராளிகள் ஆதிக்க-ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அணிதிரட்டுவது, தமிழர்களின் கடமையும் கூட, நம் விடுதலையும் இதில் அடங்கி இருக்கிறது.....
ஈழப்போராட்டத்தை நசுக்கிய இந்தியா, சீன மற்றும் வல்லாதிக்க சக்திகளுக்கு எதிராக இவர்கள் குரல் கொடுத்தார்களா?என்பதற்கான இணைப்பு ஏதும் இருந்தால் தோழர்கள் இந்த பின்னூட்டத்தில் சேர்த்திடவும்..............