ஞாயிறு, 30 மே, 2010
கடவுளை கொல்ல வழி சொல்லுங்கள்
1) பிஞ்சு மழலை..பிறந்தநாளே இறப்பது,
2) என் சிறுவயதில் வீட்டின் அருகே தலைநசுங்கி லாரி டயரில் இறந்த குழந்தை...
3) 10 பேர் வெட்ட கையறு நிலையில் வெட்டுப்பட்டு பரிதாபமாய் செத்துப்போனவன்........
4) ஈழத்தில் புலிகளை விடுங்கள் புலிகளைத்தான் உங்களுக்கு பிடிக்காதே, செத்தொழிந்த மக்கள்..........
5) சாதி ஒடுக்குமுறையில் செத்தொழியும் என் சகோதர - சகோதரிகள்.......
6) சமீபத்தில் விமான விபத்தில் மடிந்த நபர்கள்.....
7) மும்பை தீவிரவாத தாக்குதலில் செத்த மக்கள்
8) அமெரிக்க கேனத்தனத்திற்கு ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் மடிந்த மக்கள்.........இன்னும் உலகமெங்கும் மடியும் மக்கள்..........
இப்படி எல்லாம் கடவுளின் செயலென்றால்..........
அப்படி ஒரு கடவுள் இருக்கு, நீ நம்பு, நான் நிறைய படிச்சிருக்கேன்.....இதெல்லாம் நீதி...........
என்று சொல்வதில் உங்களுக்கு நியாயமாக பட்டால்..........
அந்த கடவுளை கொல்வதற்கு தயவு கூர்ந்து ஒரு வழி கேட்டுச்சொல்லுங்கள் உங்கள் கடவுளிடம்
செவ்வாய், 1 செப்டம்பர், 2009
தமிழினத்திற்கு ஒவ்வாதது பக்தி..............தேவை நமக்கு புத்தி.............
தோழர்களே! ஈழ மக்களின் அவலத்தில் உள்ளம் மிகுந்த ரணமாகியிருக்கிறது. இந்த அவலமான வருத்தமான தருணத்தில் நம் மக்கள் அனைவருமே உண்மையான அக்கறையோடு இருக்கிறார்களா?என்பது சுய ஆய்வுக்குரியது. கொஞ்சம் இந்த இணைப்புகளை பார்க்கவும்.
வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் கந்தனின் திருவிழா
சுவிஸில் உள்ள இந்து ஆலயங்களில் தாயகமக்கள் அமைதி வேண்டி அமைதிப் பிராத்தனை
வானில் அம்மன் தோன்றும் அரிய புகைப்படம்
3 லட்சம் மக்களை முள்வேலி கம்பிக்குள் அடைத்து வைத்திருக்கும் சூழலில் பிரார்த்தனை போன்ற ஒன்றுக்கும் உதவாத காரியங்களில் ஈடுபட்டு கொண்டிருந்தால் வரலாறு நம்மை மன்னிக்குமா?
கடைசி நாளில் 10,000 மேற்பட்ட தமிழ்மக்கள் சாக கிடந்த வேளையில் வந்து காப்பாதாத கடவுளை இன்னும் நம்பித்தான் ஆக வேண்டுமா?
மாதாவாகட்டும்,ஏசுவாகட்டும், முருகனாகட்டும், அல்லாவாகட்டும் எவனும் தமிழனத்தின் இக்கட்டான சூழலில் வரவில்லையே...........இன்னும் எதற்கு இந்த பக்தி போதை....நம்பி கெட்டது போதாதா?
பக்தி என்னும் மூடத்தன்த்திற்கு மகுடம் போல, சாதி என்னும் கொடூரம் நம் உள்ளங்களில் உள்ளதே?
ஈழத்தமிழருக்காய் குரல் கொடுக்கும் எத்தனை தமிழர்கள் தங்கள் வீட்டில், வாழ்க்கையில் சாதி பார்க்காமல் இருக்கிறார்கள்.....வீட்டில் சாதியை பின்பற்றுபவன் வெளியில் வந்து தமிழன் என்று கத்தினால் கொஞ்சம் நெருடலாகத்தானே இருக்கிறது....
ஈழத்தமிழர்களும் இதில் விதிவிலக்கல்ல, இவ்வளவு ரணங்கள், வலிகள் இருந்தும் சாதியை பின்பற்றுவதில், பாதுகாப்பதில் அவ்வளவு ஆர்வத்தோடு திருமணத்திற்கு துணைதேடும் நிலையில் நாமெல்லாம் தமிழர்கள் என்பது கொஞ்சம் போலியாக தோன்றவில்லையா.....?
தமிழ் பேசுவதால் மட்டும் நாம் தமிழர்களாகிவிட முடியாது. சாதி, மதம் பார்க்காமல், பின்பற்றாமல் இருந்தால்தான் நாம் தமிழர்கள்...கடவுள் என்ற மூடநம்பிக்கையிலிருந்து விடுபட்டால்தான் நாம் மனிதர்கள்..........
நாம் தமிழராக சாதியை விடுங்கள், மதத்தை துரத்தி அடியுங்கள்.......தமிழில் உரிமை கோரும் மனிதராக உயருங்கள்......
தமிழர்களே திருந்துங்கள்...பெரியாரின் பாதைக்கு திரும்புங்கள்...
பகுத்தறிவுப்பாதை தேர்ந்தெடுங்கள்..............
தமிழினத்திற்கு ஒவ்வாதது பக்தி..............தேவை நமக்கு புத்தி.............
வெள்ளி, 26 டிசம்பர், 2008
அன்புத்தோழர்களே! உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்
அன்புத்தோழர்களே!
இந்த ஊடகங்களை நாம் கைப்பற்றாமல் இருப்பது நம்மவர்கள் செய்த மாபெரும் பிழையல்ல, குற்றம். அதை ஓரளவு விழிப்புணர்வு கொண்ட நாமாவது நம் ஆதிக்கம் இந்த ஊடகங்களில் வருமளவு ஆதிக்கம் செலுத்த வேண்டும்.
அறிவியலை முன்னிறுத்தும் நாம் இந்த அறிவியிலால் விளைந்த ஊடகங்களை நம்மைவிட வெகுவாக நம் எதிரிகள் பயன்படுத்துவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா? அறிவியலை மறுப்பவர்கள் இந்த ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள்.
நம்மிடமும் ஊடகங்கள் இருக்கின்றன், ஆனால் குறிஞ்சிப்பூ போன்று, இவைகளை மட்டும் வைத்துக் கொண்டு நாம் ஒன்றும் பெரிதாக சாதித்து விட முடியாது. நம் ஊடகங்கள் பரவ வேண்டும்.
பெரியாருடைய காலம் போலல்லாமல் பொதுக்கூட்டமும், உரைவீச்சும் மட்டுமே இன்றைய நிலையில் கருத்து பரவலுக்கு முக்கிய பங்கு வகிக்கலாம் என்று கருதினோமானால், அது நாம் செய்யும் பெரும் பிழையாகிவிடும். பார்ப்பன பண்டார ஊடகங்கள் நீண்ட நாட்களாக நமக்கு எதிரான வேலைகளை செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன. நாமோ இன்றும் பொதுக்கூட்டங்களையும், துண்டு பிரசுரங்களை மட்டும் பெரிதாக நம்புகிறோம்.
நாம் செய்ய வேண்டியது
முதலில் ஒரு குழு உருவாக்கி, (அந்த குழு ஒரு கிராமத்திற்கோ, மாவட்டத்திற்கோ, மாநிலத்திற்கோ, நாட்டிற்கோ உட்பட்டதாகவோ இல்லாமல்) மின்னஞ்சல் முகவரிகளை சேகரித்து, நாம் வாசிக்கும் செய்திகளை பரப்புவோம்.
ஒவ்வொரு தோழரும் மாதம் ஒருமுறை தாம் அனுப்பிய செய்திகள் எத்தனை தனிநபர்களை சென்றடைந்தது,என்பதை குறித்துக் கொண்டால் நம்முடைய இந்த முயற்சி எந்தளவு வெற்றிகனியை ஈட்டும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
நாம் பகிர்ந்து கொள்ள வேண்டியவை
1) துண்டு பிரசுரங்களை 2) படக்காட்சிகளாக நம் கருத்துக்கு வலு சேர்ப்பவைகளை 3) குறுந்தகடுகளாக வெளிவரும் ஒளிவீச்சினை 4) மின்னஞ்சல் முகவரிகளை 5) தொடர்பு எண்களை 6) தம் இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களை கண்டிப்பாக ஒளி/ஒலிப்பதிவு செய்து குறுந்தகடுகளை
உங்கள் ஆலோசனை ஏதும் இருந்தால்,
மகிழ்நன்.
+919769137032
தாராவி, மும்பை
நம்மை பண்படுத்துவோம்! சமூகம் பண்படவே!!
விழித்தெழு இளைஞர் இயக்கம்.
செவ்வாய், 4 நவம்பர், 2008
கடவுள் பிடிபட்டார்!
நமக்கு வெளியே கடவுள் என்றொருவர் இருப்பதாகவும், ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களையும் ஏதோ ஒரு நோக்கத்தில் அவர் தொடர்ந்து செய்து வருவதாகவும் கூறுகின்றார்கள் மதவாதிகள். கடவுளை "வெளியே தேடாதே உன்னுள்ளே தேடு' என்றார்கள் சித்தர்கள். இறை நம்பிக்கையாளர்களின் இந்தத் தேடல் பல நூற்றாண்டு காலமாக நடந்துவருகிறதெனினும், "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்' என்பதுதான் இதில் கிடைத்திருக்கும் கடைசி ரிசல்ட்.
இந்தப் பூவுலகில் கடவுள் மிகவும் பத்திரமாகப் பதுங்கியிருந்த ஒவ்வொரு மூடநம்பிக்கைக் குகையிலிருந்தும் புகை போட்டு அவரை வெளியேற்றி வருகின்றது அறிவியல். எனினும், இரண்டு இடங்களிலிருந்து மட்டும் அறிவியலால் "கடவுளை' அப்புறப்படுத்த முடியவில்லை.
எல்லா வாதங்களிலும் தோற்ற பிறகு ஒரு பக்தன் முன்வைக்கும் கடைசி இரண்டு வாதங்கள் இந்த இடங்களை அடையாளம் காட்டுகின்றன. "நீங்க நம்பினா நம்புங்க நம்பாட்டி போங்க, அந்த கோயிலுக்குப் போனா எனக்குள்ள ஒரு ஃபீலிங் வருது பாருங்க, அதாங்க கடவுள்!'' "என்ன வேணா சொல்லுங்க, நமக்கு மேல ஏதோ ஒரு பவர் இல்லாம இந்த உலகம் உருவாகியிருக்க முடியுமா?'' ஒன்று உள்ளே, இன்னொன்று வெளியே.
புறவய உலகத்தின் "தோற்றம்' குறித்த புதிரையும், அகவயமாக மனித மூளையில் தோன்றும் "உணர்வு' குறித்த புதிரையும் விடுவிக்கும் முயற்சியில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது அறிவியல். மதவாதிகளின் மொழியில் சொல்வதென்றால் பிரம்ம ரகசியத்தையும் ஆன்ம ரகசியத்தையும் "கண்டு', பிறகு அதனை "விண்டு' உலகத்திற்குச் சொல்லவும் முனைந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
···
முதலில் "படைப்பு ரகசியம்' பற்றிப் பார்ப்போம். கடந்த செப் 10 ம் தேதியன்று பிரான்சு நாட்டின் எல்லையில் பூமியின் 300 அடி ஆழத்தில், 17 கிலோ மீட்டர் நீளம் கொண்ட குறுக்கு நெடுக்கான குழாய்ப்பாதையினுள் (Large Hydron Collider)அணுத்துகள்களை மோதவிட்டு பிரம்மாண்டமான ஆராய்ச்சி ஒன்றைத் துவக்கியிருக்கின்றார்கள் உலக விஞ்ஞானிகள்.
"இந்த ஆராய்ச்சி தொடங்கினால் அந்தக் கணமே உலகம் அழிந்துவிடும்'' என்று ஐரோப்பாவில் உள்ள அல்லேலுயா கூட்டத்தினர் முதல் ஒரிசாவில் உள்ள இந்துக்கள் வரை பலரும் தத்தம் தெய்வங்களைச் சரணடைந்தனர். இதனைப் பரபரப்புச் செய்தியாக்கிய ஊடகங்கள், "உலகம் அழியுமா, அழியாதா?'' என்று அப்துல் கலாமிடம் விளக்கம் கேட்க, நவீன இந்தியாவின் அழித்தல் கடவுளான அப்துல் கலாம் "அழியாது' என்று அருள்வாக்கு கொடுத்தார். அதன் பின்னர்தான் கோயிலை விட்டு வெளியே வந்தார்களாம் சிவபக்தர்கள். நாம் விசயத்துக்கு வருவோம்.
நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் சுமார் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெருவெடிப்பினூடாக (Big bang) நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது இயற்பியல் விஞ்ஞானிகளின் கருத்து. இந்தக் கோட்பாட்டு முடிவை, அதாவது பெருவெடிப்பை, சிறிய அளவில் ஒரு சோதனைச் சாலையில் நடைமுறையில் நிகழ்த்திப் பார்ப்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.
கிறிஸ்துவுக்கு முந்தையவரும் அணுக்கோட்பாட்டின் தந்தையுமான கிரேக்க தத்துவஞானி டெமாக்ரைடஸின் காலம் முதல் இன்று வரை இயற்பியல் ஆய்வு வெகு தூரம் வளர்ந்து விட்டது. மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை; அணுக்கள் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் போன்ற துகள்களால் ஆனவை. புரோட்டான்களும் நியூட்ரான்களும் குவார்க், குளுவான்களால் ஆனவை என்கிறது இயற்பியல். குவார்க்குகள்தான் அடிப்படைத் துகள்களா, அல்லது அவை அதனினும் நுண்ணிய வேறொன்றினால் ஆனவையா? இந்தத் துகள்களுக்குப் பொருண்மையையும், கனத்தையும் (mass and weight) வழங்கியது எது? என்ற கேள்விகளுக்கும் விஞ்ஞானிகள் விடை தேடி வருகின்றார்கள்.
புரோட்டான் உள்ளிட்ட துகள்களுக்கு வேறொரு துகள்தான் பொருண்மையை அளித்திருக்க வேண்டும் என்பது இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பவர் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட கணிப்பு. இனிமேல்தான் கண்டுபிடிக்கப்பட வேண்டிய அந்தத் துகள் அவருடைய பெயரால் "ஹிக்ஸ் துகள்' என்று அழைக்கப்படுகிறது. நாம் காணும் இந்த உலகத்திற்கு இந்த ஹிக்ஸ் துகள் பொருண்மையை (ட்ச்ண்ண்) வழங்கியிருக்கக்கூடும் என்பதால் அதனை "கடவுள் துகள்' (எணிஞீ ணீச்ணூtடிஞிடூஞு) என்றும் வேடிக்கையாக அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள். தற்போது நடைபெற்றுவரும் ஆய்வு அந்த கடவுள் துகளைக் கண்டறிய விழைகிறது.
களிமண்ணை உருட்டினால் கடவுள்!கடவுளை உருட்டுகிறார்கள் விஞ்ஞானிகள்!
"ஆற்றலும் பருப்பொருளும் ஒன்றின் இரு வடிவங்களே' என்ற ஐன்ஸ்டினின் கோட்பாட்டின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. புரோட்டான் துகள்கள் இந்த 20 கி.மீ நீளக் குழாய்க்குள் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் மோதவிடப்படுகின்றன. இவ்வாறு மோதும்போது உருவாகக் கூடிய வரம்பற்ற ஆற்றலும், வெப்பமும் குளிரும், பிரபஞ்சம் தோன்றிய அந்தத் தருணத்திற்குப் பின் நாம் எப்போதும் காணாதவை. நம் பிரபஞ்சத்தின் விதிகளை எழுதிய துகள்களும் இந்த மோதுகையின் விளைவாக (collision) வெளிப்படக் கூடும். அத்துகள்களில் பல நாம் இதுவரை கண்டறியாதவையாக இருக்கக் கூடும். பல கோடி முறை நிகழவிருக்கும் இந்த மோதுகைகளில் ஏதேனும் ஒன்று அந்தக் "கடவுள் துகளை'த் தோற்றுவிக்கவும் கூடும். ஆயின், "இந்த உலகம் என்பது என்ன, நாம் ஏன் இங்கு வந்தோம்?'' என்று தத்துவஞானிகள் பலர் எழுப்பிய கேள்விக்கான விடையை, அதாவது "பிரம்ம ரகசியத்தை'க் கண்டறிந்து விட முடியும்.
ஒருவேளை தோற்றுவிட்டால்? "40 ஆண்டுகளுக்கு முன் ஊகிக்கப்பட்ட ஒரு துகளைக் கண்டறிவதைக் காட்டிலும் எங்களைப் போன்ற விஞ்ஞானிகளுக்கு தோல்விதான் சுவையானதாக இருக்கும். எறும்புக் கூட்டத்திலிருந்து மனிதர்களாகிய நம்மைப் பிரிப்பது எது? அறிவுத் தேட்டம்தானே!'' என்கிறார்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள்.
"எறும்பையும் மனிதனையும் கடவுள்தான் படைத்தான்'' என்று கூறும் மதவாதிகளோ, கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல், "அவிசுவாசிகள்' உருவாக்கிய கணினியின் வழியே, "தேவனாகப்பட்டவன் களிமண்ணை உருட்டி ஆதாமைப் படைத்த செய்தி'யையும், இத்தகைய சோதனைகளால் தேவன் படைத்த உலகம் அழிந்து போகக்கூடிய அபாயத்தையும் இணையத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சித்தத்தினுள்ளே சதாசிவம் எங்கே?
வளி மண்டலத்திலிருந்து கடவுளை விரட்டும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று விட்டாலும், மனிதனின் நரம்பு மண்டலத்திலிருந்து கடவுள் தானாக வெளியேறிவிடப் போவதில்லை. பக்தர்களின் மூளையில் எந்த இடத்தில் கடவுள் குடியிருக்கிறார்? மூளையின் எந்தப் பகுதி நரம்புகள் தூண்டப்படும்போது அவர்களின் கண் முன்னே கடவுள் "காட்சி' தருகிறார் அல்லது இயேசு அவர்களுக்குள் "இறங்குகிறார்' ? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டு வருகின்றது நரம்பயல் மருத்துவம்.
"மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன், மற்றும் நினைவாற்றலைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் "டெம்பரல் லோப்' என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது. மூளையின் இந்தப் பகுதி வலிப்பு நோயால் பாதிக்கப்படும் போதோ அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான "ஆன்மீக அனுபவங்கள்' ஏற்படுகின்றன'' என்கிறார் கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் பெர்சிங்கர்.
இந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ருடி அபால்டர் என்ற நாத்திகர், உயிரோடு இருக்கும்போதே தான் இறந்துவிட்டது போன்ற நினைப்புக்கு ஆளானார். இன்னொரு நோயாளியான வென் திகே என்ற கிறித்தவப் பெண்ணோ, "தான் ஏசுவைப் பெற்றெடுத்திருப்பதாக'க் கூறினாள். மோசஸ், புனித பால் முதலானோர் "கண்ட' காட்சிகளாக விவிலியத்தில் கூறப்படுபவை, வென் திகேயின் "அனுபவத்தை' ஒத்திருப்பதால், இறைத்தூதர்கள் தீர்க்கதரிசிகள் என்று கூறப்படுவோர் இந்த மூளை வலிப்பினால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கக் கூடும் என்கிறார் பெர்சிங்கர்.
"செவன்த் டே அட்வன்டிஸ்ட் பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எல்லன் ஒயிட் என்ற பெண்ணுக்கு (1836 இல்) 9 வது வயதில் மண்டையில் அடிபட்டு, மூளையில் காயம் ஏற்பட்டது. இதற்கு ஆதாரமும் உள்ளது. இதன் பிறகுதான் "ஏசு அவர் முன் "தோன்றத்' தொடங்கினார்'' என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி கிரகரி ஹோம்ஸ். மண்டையில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய "இறையருள்' கிட்டும் என்பதில்லை. தொடர்ந்து ஆன்மீக சிந்தனையால் தாக்கப்படுபவர்களுக்கும் இத்தகைய "உள்காயம்' ஏற்படக்கூடும்.
"இந்த வலிப்பு தோற்றுவிக்கும் மின் அதிர்வுகள் "டெம்பரல் லோப்' என்ற பகுதிக்கும், உணர்ச்சியையும் உணர்ச்சி சார் நினைவுகளையும் ஆளுகின்ற மூளையின் பகுதிகளுக்கும் உள்ள இணைப்புகளை வலுப்படுத்துவதால், மத உணர்வுகள் பொங்குகின்றன'' என்கிறார் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி, விலயனூர் ராமச்சந்திரன்.
"ஒருவேளை மூளையில் கடவுள் "குடியிருக்கும்' இந்தப் பகுதியை (God spot) அறுத்து அகற்றுவோமாகில், அந்த அறுவை சிகிச்சைக்கு என்ன பெயரிடலாம்? அதனை காடோக்டமி (வாசக்டமி போல) என்று அழைக்கலாமா?'' என இரு மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வேடிக்கையாக அவர் குறிப்பிட்டார். இதையெல்லாம் சகித்துக்கொண்டு சும்மாயிருப்பார்களா மதவாதிகள்? இப்படிப்பட்ட ஆய்வுகள் தங்களது மத உணர்வைப் புண்படுத்துவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கிறித்தவ அமைப்புகள் கூக்குரல் எழுப்பின. "கடவுளை விரைவாகத் தொடர்பு கொள்வதற்கான ஆன்டனாவாக எங்களுடைய கண்டுபிடிப்புகளை நீங்கள் ஏன் கருதக்கூடாது?'' என்று அவர்களை "சமாதானப்படுத்தினார்' ராமச்சந்திரன். அப்படியொரு "ஆன்மீக ஆன்டனா'வை டாக்டர் பெர்சிங்கர் தயாரித்தும் விட்டார்.
கோவில் கனெக்சன் இல்லாமலேயே கடவுளை ஒளிபரப்பும் ஆன்டனா!
காட் ஹெல்மெட் கடவுள் தலைக்கவசம்! இதுதான் அவரது தயாரிப்பின் பெயர். மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கவசம், இதனை அணிந்திருப்பவரின் மூளையில் உள்ள டெம்பரல் லோப் பகுதியைக் குறி வைத்து காந்தப்புலங்களை உருவாக்க வல்லது. எவ்வித நரம்பியல் நோயும் இல்லாத நூற்றுக்கணக்கான மனிதர்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு தனியறையில் இந்தக் "கவச' சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பல்வேறு நாடுகளையும் மதங்களையும் சார்ந்த அந்த நபர்கள் இந்த மூன்று நிமிடச் சோதனையின்போது தத்தம் கலாச்சாரத்துக்கு ஏற்ப, தாங்கள் ஏசுவையோ புத்தனையோ கண்டதாகக் கூறினர்.
டேவிட்சன் என்ற விஞ்ஞானி, கிறித்தவ ஜெபக்கூட்டங்களில், ஜெபித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று உளறத் தொடங்கும் பெண்களின் மூளைகளை ஸ்கேன் (MRI scan) செய்தார். அத்தருணத்தில் அவர்களது மூளையுடைய முன்பகுதி ஏறத்தாழ செயலிழந்திருப்பதைக் கண்டார். தன் மீதான சுயகட்டுப்பாட்டை மனிதனுக்கு வழங்கும் மூளையின் முன்பகுதி செயலிழப்பதால், மொழி பிறழ்ந்து வரும் இந்த உளறலைத்தான், "அந்நிய பாஷை' என்று கிறித்தவர்கள் கூறுகின்றர்.
தியானத்தில் ஈடுபடும்போது, "தான்' என்ற உணர்வு மறைந்து பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலந்து விடுவதாகக் கூறும் புத்த பிக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சிந்தனையின் மீது மட்டுமே மூளை ஒன்று குவிக்கப்படும்போது, திசை மற்றும் வெளி குறித்த பிரக்ஞையை வழங்குகின்ற "பாரிடல் லோப்' செயலிழப்பதையும், அதன் காரணமாகவே இவர்கள் இத்தகைய பிரமைக்கு ஆளாவதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டினர்.
இவையன்றி, பட்டினி கிடத்தல் (விரதம்), இரத்தச் சர்க்கரையின் அளவு அலைபாய்தல், திரும்பத் திரும்ப ஒரே சொல்லை உச்சரிக்கும் மந்திர உச்சாடனங்கள், ஒரே விதமான அசைவு கொண்ட நடனம் ஆகியவையும் "அமானுஷ்யமானவை' என்று சொல்லப்படும் அனுபவத்தைத் தரவல்லவை. மிக உயர்ந்த சிகரங்களுக்கு (அமர்நாத்) செல்லும்போது மூளைக்கு பிராணவாயு செல்வது குறைவதும், கஞ்சாவும், வேகமாகப் பக்கவாட்டில் சுழலும் குடைராட்டினமும் கூட "ஆன்மீக அனுபவங்களை'த் தூண்டக்கூடும் என்கிறது நரம்பியல் விஞ்ஞானம்.
மூளையின் உட்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியிலிருந்து வெளியாகும் டைமெதில் டிரிப்டாமைன் என்ற வேதிப்பொருள்தான் இது போன்ற மாயத்தோற்றங்களை உருவாக்குகிறது என்று "ஆன்மீக மூலக்கூறு' என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் ரிக் ஸ்டிராஸ்மேன். மொத்தத்தில் பக்தர்கள் துரும்பில் தேடிய இறைவனை நரம்பில் கண்டுபிடித்ததுடன், "இறை நரம்பியல்' (neuro theology) ) என்றொரு துறையையும் உருவாக்கிவிட்டது அறிவியல்.
எனினும், தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூக்கத்தை வரவழைப்பது போல கடவுள் மாத்திரை சாப்பிட்டுக் கடவுளை வரவழைக்கலாம் என்றோ, பேதி மாத்திரை போன்றதொரு மாத்திரையால் மூளையிலிருந்து சுமுகமாகக் கடவுளை வெளியேற்றி விடலாம் என்றோ அறிவியல் கூறவில்லை. "மனித மூளையின் உள்ளே தோன்றும் மாயத்தோற்றங்களோ, விவரிக்கமுடியாத "பரவச உணர்வுகளோ', வெளியே கடவுள் என்பவர் இருப்பதற்கான ஆதாரமாக முடியாது'' என்பதையே இந்த ஆய்வுகள் நிறுவுகின்றன.
ஏசு இறங்கினாரா? எம்.ஆர்.ஐ.ஸ்கேன் வழங்கும் தேவ சாட்சியம்!
மதம் என்பது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் சிந்தனைக்கான காரணத்தையும் அதற்கான சமூக அடிப்படைகளையும் நரம்பியல் ஆராயவில்லை; ஆராயவும் முடியாது. மாறாக, அந்த நம்பிக்கை தோற்றுவிக்கும் உணர்வை, நமது நரம்பு மண்டலம் உயிர் வேதியல் மொழியில் எவ்வாறு மொழிபெயர்த்துள்ளது என்பதை, அதாவது மத உணர்வின் பொருள் வடிவத்தைக் கண்டறியவே நரம்பியல் முயல்கின்றது.
பெர்சிங்கரின் ஹெல்மெட்டால் நாத்திகரின் மூளையில் கடவுள் நம்பிக்கையை வரவழைக்க முடியாது; ஆத்திகரின் மூளையிலிருந்து நம்பிக்கையை அகற்றவும் முடியாது. அவருடைய ஹெல்மெட் சோதனையில் பங்கேற்ற ஒரு கன்னியாஸ்திரீ, "ஏசு எனக்குள் இறங்கினாரா டாக்டர்? ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து கொஞ்சம் சொல்லுங்களேன்'' என்று சோதனை முடிந்தபின் பெர்சிங்கரிடம் கேட்டாராம். இறை நம்பிக்கையை ஒழிக்கும் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு, அதற்கு நேரெதிரான விளைவை அந்த கன்னியாஸ்திரீயிடம் ஏற்படுத்தியிருக்கின்றது.
பொருளும் சிந்தனையும்: புரட்சி எனும் ஹைட்ரஜன் கொலைடர்!
இயற்பியல் கடவுள் துகளைக் கண்டறிந்தாலும், மத உணர்வின் உயிர் வேதியல் சங்கேதங்களை நரம்பியல் கண்டுபிடித்தாலும் இவற்றின் விளைவாகவெல்லாம் மத நம்பிக்கை தானே ஒழிந்து விடாது. மதம் என்ற அபினை மனித மூளைக்குள் உற்பத்தி செய்யும் அடித்தளம் சமூகத்தில் இருப்பதால், ஒரு சமூகப் புரட்சியின் மூலம் மட்டுமே மனித மூளையிலிருந்து "கடவுளை' அகற்ற முடியும் என்றார் மாமேதை மார்க்ஸ். அத்தகையதொரு புரட்சியை சாதிக்கும் பொருட்டு, மனித சமூகம் எனும் சோதனைச்சாலையில் நடத்த வேண்டியிருக்கும் ஆய்வும், மனிதர்களின் சிந்தனையை மாற்றியமைக்கும் இந்தச் "சோதனையும்' ஒப்பீட்டளவில் கடினமானவை.
உலக முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு மென்மேலும் ஆட்படுத்தப்படும் மக்கள், அந்தத் துயரத்திலிருந்து விடுபடவும் முடியாமல், காரணமும் விளங்காமல், கடவுளிடமும் மதத்திடமும் சரணடைகிறார்கள். இந்தச் சுரண்டலால் ஆதாயமடையும் ஆளும் வர்க்கமோ மக்களை இந்த மடமைப் படுகுழியில் ஆழ அமிழ்த்துகிறது.
எந்த மேலை நாடுகளில் நடைபெறும் அறிவியல் ஆய்வுகள் கடவுளைத் துரத்துகின்றனவோ, அதே அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கடவுள் அரியணையில் ஏற்றப்படுகின்றார். அமெரிக்காவின் 5 மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு விவிலியம் கற்பிக்கப்படுகிறது. மதச்சார்பற்ற நாட்டில் பள்ளிகளில் மதக்கல்வி அளிக்க சட்டரீதியான தடை இருப்பதால், "கல்விச் சுதந்திரம்' என்ற பெயரில் அறிவியல் வகுப்புக்குள் விவிலியம் நுழைக்கப்பட்டு விட்டது.
"டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுடன் விவிலியத்தின் படைப்புக் கோட்பாட்டையும் கற்பிக்க வேண்டும்' என்பதை ஒரு இயக்கமாகவே நடத்திவர், புஷ் கட்சியின் சார்பில் தற்போது குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சாரா பாலின். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிறித்தவ தீவிரவாதக் குழுக்கள், கோடிக்கணக்கில் டாலரை இறைத்து ஐரோப்பிய நாடுகளின் பள்ளிகளிலும் ஏசுவை இறக்கி வருகின்றன.
பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கிய சார்லஸ் டார்வின் பணியாற்றிய இடமும், உலகின் புகழ் பெற்ற அறிவியல் மையமுமான, பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி என்ற நிறுவனமே பள்ளிகளின் அறிவியல் வகுப்புகளில் பைபிளின் படைப்புக் கோட்பாட்டைச் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது (தி இந்து, செப், 18).
விவிலியக் கோட்பாடே அறிவியல் பூர்வமானது என்று சித்தரித்து, டார்வினைக் கேவலப்படுத்தும் குறுந்தகடுகளை இலட்சக்கணக்கில் இங்கிலாந்தின் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கின்றன அமெரிக்க இவான்ஜெலிகல் குழுக்கள். "குரங்குக்கும் மனிதனுக்கும் மூதாதை ஒன்று என்றால் மிச்சமுள்ள குரங்கெல்லாம் இன்னும் ஏன் மனிதனாகவில்லை?'' என்று 1860 ஆம் ஆண்டில் டார்வினுக்கு எதிராக மூடப்பாதிரிகள் எழுப்பிய அதே நைந்துபோன கேள்வியை மீண்டும் எழுப்புகின்றன இந்தக் குறுந்தகடுகள். ஒவ்வொரு பள்ளியாகச் சென்று பைபிளுக்குப் பலியான மாணவர்கள் மத்தியில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், பிரிட்டனின் புகழ் பெற்ற பகுத்தறிவாளருமான ரிச்சர்டு டாகின்ஸ்.
"அடுத்தது என்ன, உயிரியல் வகுப்பில் ஆதாமின் விலா எலும்பை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா?'' என்று குமுறியிருக்கிறார் ஒரு அறிவியலாளர். இல்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விலா எலும்பை முறிக்க வேண்டும். அதுதான் டார்வினுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. அறிவியல் பார்வை வளர்வதற்கும் கூட அதுதான் வழி.
http://tamilcircle.net/index.php?view=article&catid=67%3A2008&id=4243%3A2008-10-15-19-23-47&option=com_content&Itemid=29
செவ்வாய், 2 செப்டம்பர், 2008
போப் வருகையால் பெருகியது விபச்சாரம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற உலக இளைஞர் கள் தினத்துக்கு வருகை தந்தார் போப் பெனடிக்ட் சுமார் 1,25,000 பன்னாட்டுப் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வுக்காக சிறப்புச் சலுகைகளையும், புதிய தொகுப்புத் திட்டங்களையும், அறிவித்திருக்கிறார்கள். பன்னாட்டு மக்கள் கலந்து கொள்வதால் அவர்களுக்கேற்ப பல மொழியிலிருந்து பாலியல் பணியாளர்களை இறக்குமதி செய்திருக்கும் இவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் அடையாள அட்டையும் வருவோருக்கு 10 விழுக்காடு சிறப்புக் கழிவும் அறிவித்ததாம், இதேபோல 1990-இல் உலக சர்ச்சுகளின் கவுன் சில் கூடிய போதும் நல்ல வசூல் இருந்தது; அதைப்போல பன்மடங்கு எதிர்பார்க்கிறோம் என்று பாலியல் தொழில் செய்வோரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
2000-இல் போப் அன்றைய இரண்டாம் ஜான் பால் தலைமையில் ரோமில் நடைபெற்ற இதேபோன்ற நிகழ்ச்சி முடிந்தபிறகு அவ்விடத்தைத் தூய்மை செய்த பணியாளர்கள் ஆயிரக்கணக்கான பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளைக் கண்டெடுத்தார்களாம் பரமண் டலத்தில் இருக்கும் பரமபிதாவே உம்முடைய இரட்சகத்தினால் ஆஸ்திரேலிய மண்ணில் எம் தொழில் பெருகுவதாக... நின் கிருபையினால் இவ்வாண்டு எங்களுடைய வருமானம் உயருவதாக... ஆமென்... என்று அவர்களும் இயேசுவின் புனித ஆசியைக் கோரி நிற்கிறார் கள் போலும். ஏனெனில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பாதிரிகள் உட்பட பலருக்கு ஆடி மாத சிறப்புக் கழிவு அறிவித்து வணிகம் நடத்துவதைப் போல ஒட்டுமொத்தமாக பாவ மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கிறதல்லவா அண்மையில்... அந்த வரிசையில் ஆங்காங்கே (ஏ.டி.எம்.) தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் போல, தானியங்கி பாவ மன்னிப்பு வழங்கும் இயந்திரச் சேவையும் அறிமுகப்படுத்தப்படலாம். அச்சூழலில் இந்த பாவங்களையெல்லாம் கார்டைச் செருகி கணநேரத்தில் காணாமல் செய்துவிடலாம். ஆ....மென்...!
திங்கள், 14 ஜூலை, 2008
கடவுள் கற்பனையே-2
நேர்மையான ஆய்வு மூலம்
அதாவது அறிவியல் ரீதியில் Double-Blind Test(ஆய்வுக்கு உட்படுபவர், ஆய்வு செய்பவர் இருவரும் ஒருவர்- மற்றொருவரின் தகல்களை அறிந்திருக்க மாட்டார்) , செய்து அதன் அடிப்படையில் வேண்டுதலின் தாக்கத்தை அளந்து, ஆய்வு செய்து பார்த்தால் பலன் ஒன்றும் இல்லாதிருப்பது தெள்ளத்தெளிவாகும். இதில் வேண்டுதல் பதிலளிக்கப்பட்ட்தாக வாதிடுதல் நிகழ்வை பொருத்தி, உறவுபடுத்தி பார்ப்பதல்லாமல் வேறொன்றுமில்லை. இது அறிவியல் ஆய்வுக்கு மட்டுமல்லாமல் தனிப்பட்ட நபரின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை நேர்மையாக ஆய்ந்து பார்த்தாலும் பொருந்தும்.
எடுத்துக்காட்டுக்கு இந்த கட்டுரை,
சார்புணர்ச்சியில்லாமல் கடுமையான நேர்மையோடு, அறிவியல் கண்ணோட்ட்த்தோடு, உண்மை அறியும் தீவிர ஆவலோடு செய்யப்பட்ட ஆய்வுகளின் வேண்டுதல் இருதய சிகிச்சைக்காக அனுமதிக்கப்படிருந்த நோயாளிகளின் நிலைமையிலோ அல்லது இறப்பின் விகித்தையோ சிறிதளவும் குறைக்கவில்லை என்று வரையறுக்கிறது.
அதோடு மட்டுமில்லாமல்,
தொலைவு-சிகிச்சை(Distance Healing ) பற்றி செய்யப்பட்ட கடந்த 17 ஆய்வுகளின் அடிப்படையை , 2003 ஆம் ஆண்டில் இங்கிலாந்து ஆய்வாளர் ஆய்ந்து வேண்டுதலோ, தொலைவு-சிகிச்சையோ பலன் அளிப்பதில்லை என்று திடமாக நிறுவியுள்ளார்.
மார்ச் 2006 இல் வெளியிடப்பட்ட இந்த கட்டுரையும் இதை ஆமோதிக்கிறது,
“இதே போன்று செய்யப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெளிவுறுவது என்னவென்றால் இதய நோயாளிகளின் நிலையில் வேண்டுதல் எந்த மாற்றத்தை கொண்டு வருவதில்லை என்பதோடல்லாமல் மாறாக பிரச்சினைகளைதான் உருவாக்குகிறதாம்.
இந்த கட்டுரையில் சிறிது வியப்பு அளிக்க்கூடயதான, நகைப்புக்குறியதான செய்தி வாசிக்கக் கிடைக்கிறது.
தத்துவயிலாளர்களும், மதத்தலைவர்களும் வேண்டுதலுக்கு பலனில்லை என்று அறிவிக்கின்றனர்: மதத்தலைவர்கள் இதில் மகிழ்ச்சி அடைந்து கொள்ளலாம், பக்தர்களுக்காக இனி இவர்கள் வேண்டுவது தேவையாயிருக்காதல்லவா (மக்களின் ஏமாளித்தனத்தையும், அறியாமையையும் வைத்துதானே இவர்களின் பிழைப்பு நடக்கிறது, மேற்கூறிய கூற்றை அறிந்த பக்தர்கள் எனக்காக வேண்டுதல் செய்யவும் என்று யாரும் மதத்தலைவர்கள் தொல்லை தரமாட்டார்கள், ஆனால் என்ன இவர்கள் பிழைப்பு ஓடாது),
நண்பர்களே, வேண்டுதல் மீது நம்பிக்கை கொள்வது என்பது மூடநம்பிக்கையே இது பலமுறை நிருபக்கப்பட்டிருந்தாலும், உள்ளத்தில் உள்ள தகுதிக்கு மீறிய, உண்மைக்கு புறம்பான விருப்பங்கள் மூடநம்பிக்கைக்கு உட்படுத்துகின்றன. பிராமானந்தாவிடம் மயங்கிக் கிடந்த கூட்டம் இன்று பங்காரு அடிகளார், சதய்சாய்பாபா என்று பிடிபடாத சாமியார்களிடம் போகிறது, பிடிபட்டவன் போலிச் சாமியாராம், பிடிபடாத சாமியாராம் (எந்த அளவுகோலில்)
இந்த பித்தலாட்டக்கார்ர்களின் விளம்பரத்தில் ஏமாந்து இவர்களின் காலையும் கழுவி குடிக்கும் மட மக்களின் நிலையை நினைத்து சினம் வருவதற்கு பதிலாக பரிதாபம்தான் மேலோங்குகிறது,
சிலர் இயேசு அழைக்கிறார் என்று பிரச்சாரம் செய்து, இவன் அழைத்து நோய் தீர்க்கிறேன் என்று பொய் விளம்பரம் செய்து கூட்ட்த்தை கூட்டி அதையும் தொலைக்காட்சி வாயிலாக விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்கள், இயேசு எங்களை அழைத்த்து எஙகளுக்கு கேட்கவில்லையே உனக்கு மட்டும் எப்படி கேட்டது என்று கேட்க துப்பில்லை இந்த மக்களுக்கு
அப்படி முடிந்தால் நேர்மையோடு சொல்கிறேன், நான் என்னுடைய பகுத்தறிவு பிரச்சாரத்தை விடுத்து இயேசு விளம்பரத்திற்காக, பிரச்சாரத்திற்காக, ஊழியத்திற்காக நடிக்க(நம்புவது எப்படி?) தயார்.
| நாம் சந்திக்கும் கடவுள் நம்பிக்கை கொண்ட தோழர்களில் பலர் அறிவியல் ஆய்வுகளின் மூலம் கடவுளை கண்டறிய இயலாது, அவர் இதற்கெல்லாம் புலப்படாதவர். ஆனால் இப்படி சொல்லும் நண்பர்கள் இயேசு பூமிக்கு வந்தார் என்ற கதையை நம்புவார்கள், சிவன் பூமிக்கு வந்தான் என்று கதையளந்தால் நம்புவார்கள், அல்லா குரானை அனுப்புனாருன்னு அளந்தா நம்புவார்கள். இவர்கள் எல்லாம் இப்பொழுது எங்கே என்றால்? கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார், ஆனால் தெரியமாட்டார். அது உனக்கு எப்படி தெரியும் என்றால் பேந்த பேந்த விழிப்பர். கடவுள் கருத்தில் மட்டும் அறிவியல் ஆய்வை மறுப்பவர்கள், அறிவியல் ஆய்வால் பிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை ஒதுக்கத் தயாரா? வண்டிகளை, விமானங்களை, கணிணியை ஒதுக்க முடியுமா? இவை அத்தனையும் அறிவியலின் பிள்ளைகள்தானே, ஆய்வின் தரவிறக்கம்தானே? வேண்டுதலுக்கே திரும்ப வருவோம், வேண்டுதல் நிறைவேற்றப்படுதலின் மேல் உள்ள நம்பிக்கை என்பது நிகழ்வுகளை பொருத்தி பார்ப்பதோடு மட்டுமல்லாமல், நிறைவேறாத வேண்டுதலை லாவகமாக மறப்பதும்தான். எடுத்துக்காட்டுக்கு, ஒரு குறிப்பிட்ட நோயிலிருந்து மீழுவது 5 விழுக்காடுதான் சாத்தியம் என்று வைத்து கொள்வோம், அந்நோயினால் 20 பேர் பாதிக்கபட்டிருக்கிறார்கள், 20 பேரும் வேண்டுகிறார்கள் என்று வைத்து கொள்வோம் (அல்லது) பிறர் அவர்களுக்காக வேண்டுகிறார்கள் என்றே வைத்து கொள்வோம். இவர்கள் அத்தனை பேரும் மத்தேயு 21:21, மாற்கு 11:24. யோவான் 14:12-14, மத்தேயு 18:19, ஜேம்ஸ் 5:15-16 படித்து விட்டு சிரத்தையோடு வேண்டினார்கள் என்று கருதுவோம். இந்த வேண்டுதலுக்கு பிறகும் கண்டிப்பாக 20 பேரில் 19 பேர் மடிந்து போவர். உயிர்பிழைத்த அந்த ஒருவன் தான் வேண்டுதலால் பிழைத்ததாக நம்புவான், கடவுள் வேண்டுதலுக்கு பதிலழித்தாக நம்புவான், அதை அவன் பிரச்சாரமும் செய்வான், இதை கேட்டு இன்னும் 20 பேர் வேண்டுவார்கள் இந்த சங்கிலி தொடரும். ஆனால் , 19 பேர் மடிந்து போனார்களே இவர்களை பற்றி எந்த நம்பிக்கையாளரும் வினா எழுப்புவதில்லை, எந்த பத்திரிக்கையும் வேண்டுதலுக்கு பிறகும் 19 பேர் மடிந்தார்கள் என்ற செய்தியை வெளியிடுவதுமில்லை. இப்படி நம்பி தானும் அறிவால் தானும் பிறர் அறிவையும் மழுங்கடிப்பது முட்டாள்தனமில்லாமல் வேறென்ன? நன்றி: http://godisimaginary.com/ |
வெள்ளி, 11 ஜூலை, 2008
கடவுள் கற்பனை-1
வழிமுறை1:
யார் கேட்டாலும் கிடைக்குமென்றால்
1) இந்து மத நம்பிக்கையுள்ளவன் கேட்டால் கிடைக்குமா?
2) இஸ்லாமிய மத நம்பிக்கையுள்ளவன் கேட்டால் கிடைக்குமா? அல்லது
3) கிருஸ்து மீது நம்பிக்கை கொண்டால்தான் கிடைக்குமா? என்ற கேள்வி எழாமலில்லை.
யார் கேட்டு நடக்கின்றதோ இல்லையோ ஒரு சுயநலமில்லாமல் இருக்கும் ஒருவனுடைய வேண்டுகோள் ஏற்க பட வேண்டுமாயில்லையா? அப்படியிருக்கையில் உலகிலுள்ள புற்று நோயாளிகளை குணபடுத்தி தாரும் என கடவுளை வேண்டுவதும் ஏற்கப்பட்டு தீர்க்க படவேண்டுமாயில்லையா? ஆனால் அப்படி எதுவும் நடந்து விடாது.
“ கடுகளவேனும் நம்பிக்கையிருந்தால் இம்மலையை “ இங்கிருந்து அங்கே நகர்ந்து செல்” என்று கூறினால் இம்மலையும் நகரும். "
“நான் உங்களுக்கு உண்மையாக சொல்லுகிறேன், நீங்களும் விசுவாசத்துடன் சந்தேகிக்காமலும் இருந்தால், நான் இம்மரத்திற்கு செய்த்து போலவே உங்களாலும் செய்ய இயலும். மேலும் அதிகமாக சாதிக்க இயலும். இம்மலையை போய் ‘கடலில் விழு’ என்று நீங்கள் விசுவாசத்துடன் கூறினால் அது நடக்கும். நீங்கள் நம்பிக்கையோடு வேண்டுவது எதுவும் கிடைக்கும். “
“ உங்கள் வேண்டுதலின் போது கடவுளிடம் உங்கள் தேவைகளை கேளுங்கள், அவை கிடைக்கப்பெற்றன் என நம்புங்கள், அவை கண்டிப்பாக உங்களுக்கு உரியதாகும். “
கடவுளே சொல்லிவிட்டார், “ வேண்டுதலை அடைந்துவிட்ட்டோம் என நம்பினால், அது கண்டிப்பாக உங்களுடையது” இது உண்மையானால் புற்று நோய் எல்லோருக்கும் தீர வேண்டும் இல்லை கடவுள் பொய் சொல்லியிருக்க வேண்டும்.
வெள்ளி, 4 ஜூலை, 2008
ஒரு மத(ல)ம் போக்க இன்னொரு மத(ல)ம் தீர்வாகுமா?
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று நாம் பெருமை பேசிக்கொள்வதுண்டு. விருந்தோம்பல் பண்பே தமிழனின் தலையாய பண்பு என்று சில நேரம் சிலிர்த்து கொள்வதுமுண்டு. ஆனால், வந்தவனையெல்லாம் வாழவிட்டுவிட்டு இழித்தவாய்த் தனமாக கீழே விழுந்து கிடக்கும் தமிழனின் இழிநிலை பற்றி பேச ஏனோ தயக்கம் நிலவுகிறது இச்சமூகத்தில். தமிழ்நாட்டை பொருத்தவரை ரவுடி தலைவன், பொறுக்கி தலைவன், சாதி-மத வெறியன் தலைவன், பெண்ணுடன் திரையில் சல்லாபம் புரிபவன் தலைவன். ஆனால், சாதி வெறியை பற்றி கேள்வி கேட்பவனை,எதிர்த்து நிற்பவனை சாதித்தலைவன் என்றோ, கடவுளை கொண்டு பிழைப்பு நட்த்துப்பவனை கேள்வி கேட்பவனை நாத்திகன் என்றோ, மத விரோதி என்றோ ஒதுக்கி வைத்து தன் பிழைப்புக்கு பாதிப்பு வராமல் பழையச் சதிக்கூட்ட்த்தின் சதி இன்றுவரை நீளுகிறது, பழைய சதி இன்றும் தொடர்கிறது.
அமைதிப்படை திரைப்படத்தில் மணிவண்ணன், சத்யராஜ் பேசுவதாக ஒரு உரையாடல் வரும் மணிவண்ணன் கூறுவார் “சீட்டு பணம் குடுத்து வாங்கிடுவே! வோட்டு ஜன்ங்கள்ள போடணும்.” சத்யராஜ் சொல்லுவார்,” நாமதான் ஒண்ணுமே பண்ணலையப்பா.” மணிவண்ணன் இப்படியாக பதிலளிப்பார், “ஆமா! ஏதாவது செஞ்சாதானே மக்கள் ஓட்டு போடுவாங்க.”
இதேபோல மக்களை பற்றி சிந்திக்காத, மக்களுக்கு ஏதும் செய்யாதவனெல்லாம் தலைவன். இதை பற்றி கேள்வி கேட்பவனெல்லாம் தீவிரவாதி. எடுத்துகாட்டுக்கு விஜயகாந்தை எடுத்துக் கொள்வோம், இவர் நடிகையின் தொப்புளில் பம்பரம் விட்டவர், பம்பரம் விட்டவரிடம் சமூக அக்கறை எதிர்பார்ப்பது முட்டாள்தனமில்லையா? இது போன்ற உளவியல் கொள்ளையில் ஈடுபடுபவர் எப்படி நாட்டில் நடக்கும் கொள்ளைகளை தீர்ப்பார். இது போதாதென்று நடிகையின் தொப்புளில் தேங்கியிருக்கும் நீரை உறிஞ்சி குடித்தவர் இன்னொரு கட்சி ஆரம்பித்து சமத்துவம் பேசுகிறார்.எப்படி அம்பேத்கரையும், முத்துராமலிங்கம் படங்களை விளம்பரங்களில் போட்டு(?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?).
இதில் இன்னொரு கழிசடையும் நடிகரும் சேர்ந்திருக்கிறார்(ன்) முத்துராமலிங்கம் சமத்துவம் விரும்பினாராம், அவர் எல்லா மதங்களும் சாதியையும் மதித்தாராம்.(பின் ஏன் முத்துராமலிங்கத்தை பின்பற்றுபவர்கள் சாதியக்கொடுமை ஏனோ புரிகிறார்கள்? முத்துராமலிங்கம் சொன்னது காதில் விழ வில்லையோ?) தேசியமும் தெய்வீகமும் இரண்டு கண்கள் என்றாராம். அவரின் பட்த்தைஒ கொடியில் பதிப்பது தங்களுக்கு தாங்களே மதிப்பு செய்வதாகுமாம். இதில் எந்த கண்ணை கொண்டு முதுகுளத்தூரில் நடந்த கொடுமையை பார்த்து கொண்டிருந்தார் அல்ல்து எந்த கண்ணை கொண்டு கண்ணசைத்து தூபம் போட்டுக் கொண்டிருந்தார்.எறையூரில், உத்தபுரத்தில் தீண்டாமை இந்த நடிகருடைய கண் எங்கிருந்த்தாம்?
(இந்த நடிகர் பற்றி ஆனந்த விகடன் பத்திரிக்கை ஒரு செய்தி வெளியிட்டுள்ளது, இவர் சொன்னாராம்,
கண்ணால் கண்டால் கடவுள் என்றால் குருடனுக்கு கடவுள் எப்படி புலப்படுவார்? நான் கேட்கிறேன் குருடனைவிடு, கண் தெரியும் நீ, எப்புலனை கொண்டு கடவுள் உணர்ந்தாய்? குருடனை பற்றி கவலைப்படுபவரே, உன் தத்துவப்படி குருடனை படைத்த்து யார்?)
இப்படி வெந்தது, வேகாதது, அரைவேக்காடு என எல்லாவனையும் ஆழ விட்டதின் விழைவு நம் மண்ணில் நாம் இன்று அடிமை!
பார்ப்பான் வந்தான் நம்மை சூத்திரன் என்று சொன்னான், நீ எனக்கு தொண்டு செய்யவே படைக்கப்பட்டேன்னான். அதற்கு எதிர்ப்பு சில அறிவாளிகளிடமிருந்து கிளம்பியது, கேள்வி கேட்க துவங்கினர், கேள்வி கேட்க கற்று கொடுத்தனர். கேள்விகள் தொடர்நத்தும் உடனேயே கிருஷ்ணன் சொல்றான்னு கிதையை காண்பித்து கடவுளே சொல்லிட்டாரு நீ சூத்திரன்னு அதனாலே நீ எனக்கு தொண்டு செய்தே சாவது உன் பிறப்பு கடமைன்னு அரசன் மூலமாக நடைமுறை படுத்தினான். எதிர்த்தவனை கழுவேற்றினான். ராமன் சூத்திர சம்பூகனை கொன்ன கதை, நந்தனை தீயிலுட்டு கொழுத்தியதை கதை என நம் சூத்திரத்தனமையை நியாயப்படுத்தி பல கதைகள் சொல்லி வழிபாட்டு உரிமையை பறிச்சான். நாம் கீழ்ச்சாதியாக பிறந்தது நம் குற்றம் என நம்ப வைத்தான். முற்பிறவியின் என்று எண்ண வைத்தான்.
பார்ப்பான் வந்து அறிவை தின்றான், நம் உழைப்பை தின்றான், நாம் நம் இனத்தவர்களை பட்டினி போட்டு, உழைத்து அவனுக்கு கொடுத்து நம் விருந்தோம்பல் பண்பை மெச்சி கொண்டே இருந்து விட்டோம். கற்சிலை(கடவுள்) என்ற தபால் பெட்டி வாயிலாக பார்ப்பானுக்கு உணவு, உடை, இருப்பிடம் என அனைத்தையும் அழித்து நம் தோழர்களை சேரியில் தள்ளிவிட்டோம். பார்ப்பான் செய்தது சூழ்ச்சி என்றால் நம் இனத்தவர்கள் செய்தது துரோகம். பார்ப்பான் நம்மவர்களில் சிலரை நீ இத்தனை பேருக்கு மேல் சாதி என்று சாத்திர சூத்திரம் காண்பிக்க, நம்மவர்களும் எலும்புத்துண்டுக்கு அலையும் நாய் போல சாதிப் பெருமை பேசி, நம் உறவுகளை சாதிவெறி பிடித்து தன் கோர பற்களால் கடித்து குதறி வருகின்றனர் இன்று வரையில்.............!
பார்ப்பனீயத்தின் கொடுமை தாங்காமல் சிலர் தங்களை இடமாற்றம்(மன மாற்றமல்ல) செய்து கொண்டனர். கிருஸ்துவர்களாக, இஸ்லாமியர்களாக மாறினர். ஆனால், இன்றைய நிலை என்ன? கிருஸ்துவர்கள் இயேசுவு பிறந்த கொட்டகையின் பக்கத்துக்கு கொட்டகையிலிருந்து பார்த்தவர்கள் போல பீற்றி கொள்(ல்)கின்றனர். இஸ்லாமியர்கள் ஏதோ பாபரின் பேரன் போல பெருமை கொள்(ல்)கின்றனர். மதமாற்றத்தை விட மனமாற்றம் பெரிய சமூக மாற்றத்தை தரும் என்பதை உணர மறுக்கின்றனர்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆண்டவர் இயேசு இம்மக்களின் பாவங்களை கழுவ அனுப்பி வைத்தார் என்று நம்பும் கிருஸ்துவர்கள், தமிழர்கள் சாதிச் சாக்கடையில் மூச்சு திணறி கொண்டிருந்த பொழுது இஸ்ரவேலில் என்ன செய்து கொண்டிருந்தார். சிலுவைக்காக காத்துக்கொண்டிருந்தாரா என்ன? தமிழர்களை சாதியக் கொடுமையால் தினம்-தினம் சிலுவையில் அடித்த்து போன்ற கொடுமைகள் நடந்த்தே(நடக்கின்றதே). பாவங்கள் போக்க வந்தவருக்கு எங்கள் வலி தெரியவில்லையோ?
அல்லா நபிகளை அனுப்பி வைத்தார், அவர்தான் கடைசித்தூதர், இதற்கு முன் வந்த ஈசா நபியும் கடவுளின் தூதர் என்று நம்பும் இஸ்லாமியர்களே! 400 ஆண்டுகள் இடைவெளியில் இரண்டு தூதர்களை அரபு பிரதேசத்தை நோக்கி அனுப்பிய உங்கள் அல்லா, சாதியச் சாக்கடையிலிருந்து எழ எமக்கு ஒரு தூதரை ஏன் அனுப்பவில்லை என்ற கேள்வி எழுமா? இல்லையா?
நாங்கள் பெருந்திரளாக அடிபட்டு, உதைப்பட்டு, சொரணைக்கெட்டு கிடந்த காலத்தில் பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் வராவிட்டால் எங்கள் நிலை என்ன? இன்று கிருஸ்துவர்கள் பயன்படுத்தும் பைபிளை பாருங்கள், ஒரே சமஸ்கிருத வாடை, கிருஸ்துவர்கள் மத்தியில் சாதிப்பற்று(இதற்கு எறையூர் போன்ற கிராமங்கள் எடுத்துக்காட்டு), இந்நிலையில் கிருஸ்துவத்தை, இன்னொரு இந்து முகம் என்றுதானே சொல்லத்தூண்டும். கிருஸ்துவர்கள் எத்தனைபேர் தம் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுகின்றனர். அதென்ன? ஆல்பர்ட் நாடார், அந்தோணி பறையர். பார்ப்பன மதம் எங்கள் மொழியையும், பண்பாட்டையும் எப்படி சீரழித்த்தோ அதே போலத்தானே நீங்களும் வரிந்து கட்டி கொண்டு செய்கிறீர்கள். உங்கள் கோயிலில் வெகுவாக பயன்படுத்தப்படும் ஞானஸ்நானம், ஸ்தோத்தரம், பிரத்ர், இவையெல்லாம் தமிழா? நாங்கள் உங்கள் கிருஸ்துவ மத்த்தையும் இன்னொரு பண்பாட்டு படையெடுப்பாகத் தானே கருத முடியும். இவற்றில் பல இஸ்லாமியர்களுக்கும் பொருந்தும், இவர்கள் மத மறுப்பு திருமணம் என்றால் குதிக்காமல் இருப்பார்களா? தமிழ் பெயர்களை சூட்டுவார்களா? இவை நீடித்தால் கிருஸ்துவன் இருப்பான், இஸ்லாமியன் இருப்பான், இந்து இருப்பான், தமிழன் மட்டும் இருக்க மாட்டான்.
செவ்வாய், 29 ஜனவரி, 2008
மனிதம் போதும், கடவுளும் வேண்டாம்,சாதியும் வேண்டாம்,மதமும் வேண்டாம்.

1) உலகை படைத்தது கடவுள் எனில், கடவுளை படைத்தது யார்?
2) நடமாடும் மனிதனுக்கு ஒண்ட குடிசையில்லை, ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?
3) குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்?
4) கடவுளர் படை இருக்க,எல்லையில் காவற்படையினர் ஏன்?
5) எல்லாம் வல்ல கடவுளின் கோயிலுக்கு பூட்டும், காவலும் ஏன்?
6) எல்லாமே அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும் எவன் செயல்?
7) ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளி-தொழிலாளி,ஏழை-பணக்காரன், பார்ப்பான்-சூத்திரன் என்ற ஏற்றத்தாழ்வு எதற்கு?
8) பல அவதாரங்கள் எடுத்த கடவுள், தேவதூதர்கள் அனுப்பிய கடவுள், இன்றைய சூழலில், தீவிரவாதத்திற்கு எதிராக், லஞ்சத்திற்கு எதிராக அவதாரம் எடுப்பதோ, தூதர்களை அனுப்புவதில்லையே ஏன்?
9) அவனின்றி ஓரணுவும் அசையாது எனில், கோயில் சிலை களவு போவதேன், மக்கள் வாகனங்களில் எரிபொருள் நிரப்புவது ஏன்?
10) கடவுள் தேர் மனிதனால் இழுக்கபடுவது ஏன்?
11) அன்பே உருவான கடவுளுக்கு ஆயுதங்கள் எதற்கு?
12) குழந்தைகள் கட்டுப்பாடுக்கு பிறகு கடவுளால் குழந்தை படைக்க முடிவதில்லையே ஏன்?
13) கடவுள் தூணிலும் இருப்பான் எனில் மலத்தில் இருப்பானா?
14) ஆண்டவன் ஆணா? பெண்ணா?
15) கடவுளுக்கு பெண்டாட்டி பிள்ளை எதற்கு?
16) திருமணம் சுவர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது எனில் காதலும், கள்ளக் காதலும் எஙகு நிச்சயிக்கப்படுகிறது?
17) விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்று சொல்பவர்கள் நோய் வந்தால், மருத்துவரிடம் செல்வது ஏன்?
18) தீங்கு என்பது சாத்தானின் செயல்கள் என்று கூறுபவர்கள், மக்களுக்கு தீங்கு செய்யும் அந்த சாத்தானை கடவுளால் ஏன் கொல்வ இயலவில்லை என்று ஏன் சிந்திப்பதில்லை?
19) தனக்காக சுயநலத்தோடு பிரார்திக்கும் பக்தர்கள், இலங்கையில் நம் உறவுகள் கொல்லப்படாமல் இருப்பதற்குஎனோ பிரார்திப்பதில்லை?
20) சரசுதியை வணங்கும் இந்நாட்டில் தற்குறிகள் இருப்பது ஏன்?
21) இலட்சுமியை வணங்கும் இந்நாட்டில் வறுமை இன்னும் பரவ்லாக இருப்பது ஏனோ?மாறாக இவர்களை வணங்காத அமேரிக்கா,ரஸ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் கல்வித்துறையிலும், பொருளாதாரத்தில் முன்னேறியிருப்பது ஏனோ?
22) ஆத்திகனை படைத்தது கடவுள் என்றால், நாத்திகனை படைத்தது யார்?
23) கடவுள்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்றால், கடவுள் இல்லை என்று சொல்வதற்கும் அவன்தான் காரணமோ?
24) திருச்செந்தூரில் முருகன் இருந்த்தால் சுனாமி இல்லை என்று கூறும் பக்தர்களே, சென்னையில் ஓம் சக்தி இருந்தும் சுனாமி வந்தாது ஏனோ?
25) கடவுளுக்கு பெயர் வைத்தவன் யார்?
26) மதச்சண்டைகள், சாதிச்சண்டைகள் பெருகி கொண்டிருக்கும் இந்நேரத்தில் கடவுள் மக்கள் முன் தோன்றி நான் மதங்களுக்கும், சாதிக்கும் அப்பாற்பட்டவன் என்று இச்சச்சர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமல்லவா?
27) மயிரை-மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கை, கால்களை ஏன் வெட்டி காணிக்கை செலுத்துவதில்லை?
28) திருப்புகளைப் பாடபாட வாய் மணக்கும் என்று கூறும் பக்தர்கள் பல் விளக்காமல் இருப்பார்களா?
29) பிள்ளையார் போல பிள்ளை பிறந்தால், கொஞ்சுவீர்களா? அஞ்சுவீர்களா?
30) மணத்திற்கு மனம் பாராமல், சாதி பார்க்கும் பெற்றோர்களே, மருத்துவமனை இரத்த-தேவைக்கு ஏனோ சாதி பார்ப்பதில்லை?
31) கடவுள் படங்களை நாத்திகர்கள் எரித்தால் கூச்சல் போடும் பக்தர்கள், சாமி படம் போட்ட பட்டாசை கொழுத்தலாமா?
32) நோய் கடவுளின் தண்டனை என்றால், நோய்க்கு மருந்து கொடுக்கும் மருத்துவர் கடவுள் எதிரியா?
33) பெண் சாமிக்கு ஆண் பூசாரி சேலை கட்டலாமா?
34) ஐயப்பன் கோயிலில் பெண் நுழைந்தால் தீட்டு என்றால், பெண் மூலம் பிறந்த ஆண் தீட்டில்லையா?
35) கடவுளுக்கு வருடம் ஒரு கல்யாணம் செய்து வைக்கும் பக்தர்களே, இதுவரை அந்த கடவுளர்க்கு பிறந்த குழந்தைகள் எத்தனையோ?
36) பெண்ணின் உடம்பில் இருந்து பிறந்த அழுக்குருண்டை (பிள்ளையார்) எப்படி கடவுளாக முடியும்?
37) தன் உடம்பில் உள்ள அழுக்கை வைத்து குழந்தை செய்யும் அளவுக்கு அளுக்கு இருந்ததென்றால் எத்தனை நாள் குளிக்காமல் இருந்தாளாம் அந்த க்டவுள்?
38) கன்னிக்கு பிறந்தவன் கடவுள் என்றால்? கிருஸ்துவர்கள் கர்ணனையும், இந்துக்கள் இயேசுவையும் கடவுளாக ஏற்று கொள்ளத் தயாரா?
39) பூணூல் போடுபவன் மேல் சாதி என்றால், பஞ்சு தயாரிப்பவனும், நூல் நூற்பவனும் அவனைவிட மேல்ச் சாதியில்லையா?
40) பக்தனே நீ கை வைக்காமல் கற்(கடவுள்) சிலை ஒரு அடி நகருமா?
41) பிள்ளை பெறுவதற்கு அரசமரம் சுற்றும் பெண்களே, பிள்ளை வேண்டாம் என்பதற்கு எந்த மரம் சற்றுவீர்கள்?
42) ஐயப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழக கடவுள்களையும், கோயில்களையும் என்ன செய்யலாம்?
43) நாற்பத்தோரு நாட்கள் நல்லவர்களாக் நடிக்கும் ஐயப்ப பக்தர்கள், பிற நாட்கள் ஏனோ ஒழுக்கதோடு இருப்பதில்லை? உங்கள் ஐயப்பனும் தட்டி கேட்பதில்லை?
44) தீக்குண்டம் மிதிப்பவர்கள் அதில் படுத்து உருண்டு காட்டுவார்களா?
45) பச்சை இரத்தம் குடிக்கும் காட்டுமிராண்டி சாமியார்கள், பாலிடாயில் குடித்து காட்டுவார்களா?
46) சாமியாடுபவர்கள் மின்சாரம் பாயும் கம்பியை தொடத்தயாரா?
47) அம்மை நோயை தடிப்பது ஆத்தாளா? மருத்துவமனையா?
48) பக்தனே நீ கை வைக்காமல் உன் கடவுள் ஒரு அடி நகருமா?
49) அன்று பேசிய, நடமாடிய கடவுள் இன்று நடமாடுவதில்லையே ஏன்?
50) பக்தியுள்ளவன் படிக்காமல் பாஸ் ஆவானா?
51) கோபியர் கொஞ்சிய கண்ணன் இன்று பிறந்தால் எத்தனை பக்தியுள்ள பெண்கள் தயார்?
52) தூதர்களை அனுப்பிய கடவுள் தானே வருவதில்லையே ஏன்?
53) இயற்கை கடவுளின் அற்புதம் என்றால் ஏழ்மையும்,ஊனமும் அவன் செயல் இல்லையா?
54) ஆடு கோழி ஆகிய மிருகங்களை கடவுளுக்கு பலியிடும் பக்தர்கள் ஏனோ புலி, சிங்கங்களை பலியிடுவதில்லை.
55) விழியால், புலனால் அறிய முடியாதவன் கடவுள் என்றால் கடவுள் உண்டென்று நீ எதை கொண்டு நம்புகிறாய்.
56) இயற்கை என்னும் அற்புதத்தால் நம்புகிறாய் என்றால்! செயற்கை அற்புதங்களான அறிவியல் கண்டுபிடுப்புகளை கடவுள் ஏனோ படைக்கவில்லை?
57) சோதிடம் உண்மையென்றால் காவல்துறை எதற்கு?
58) விதி உண்மையென்றால் நோயை தடுக்கும் மருத்துவம் எதற்கு?
59) சோதிடம் பார்த்து செய்யப்படும் திருமணங்கள் மணவிலக்கு கோருவதில்லையா?
60) தமிழன் வறுமையில், சாதியில் வாடி கொண்டிருந்த நேரம் இயேசு தமிழகத்தில் ஏனொ அவதரிக்க வில்லைச
61) கடவுள் தன் தூதனை ஏற்கனவே அரபுப் பிரதேசத்திற்கு அனுப்பியிருக்க அடுத்த தூதனை சாதி பிரச்சனையில் தவித்து நம் மக்களை விடுவிக்க ஏன் அனுப்ப வில்லை.
செவ்வாய், 6 நவம்பர், 2007
" இந்த உலகுக்கு கடவுளைவிட மனிதம் உள்ள மனிதனே தேவை"
கர்த்தர் கொலை, கொள்ளை செய்யத் தூண்டியதோடல்லாமல், கொள்ளையடிக்கபட்ட பொருள்களை(பெண்களோடு சேர்த்து) தானும் பங்கு போட்டு கொண்டாராம். அப்படியிருக்க அவர் மகனாகிய(இயேசுவை) மட்டும் கர்த்தர் உலக அமைதிக்காக எப்படி அனுப்பியிருப்பார்.
ஆதாரம் இதோ:
எண்ணாகமம் 31 அதிகாரம், 2ஆம் வசனம்: கர்த்த்ர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்குவாயாக; அதன் பின்பு உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார்.
எண்ணாகமம் 31 அதிகாரம், 17-18 ஆம் வசனம்: குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷம் யோகத்தை அறிந்த எல்லா பெண்களையும் கொன்று போடுங்கள். கன்னி பெண்களை உங்களுக்காக விட்டு வையுங்கள்.
எண்ணாகமம் 31ஆம் அதிகாரம் 35-40ஆம் வசனம்: முப்பத்தீராயிரம் கன்னி பெண்களில் (பதினாறாயிரம் பேரில்) 32 பேர் கர்த்தர் எடுத்துக் கொண்டாராம்.
கிருஸ்தவ மதத்தின் அடிப்படை நம்பிக்கையே கர்த்தரின் கன்னி பிறப்பு, மற்றும் இயேசு ம்ரித்து உயிர்த்தெழுதல். ஆனால் இவற்றை வெறும் பக்தி கண்ணோட்டத்தோடு பார்க்காமல், பகுத்தறிந்தால் இவை கட்டுக்கதை என்பது தெரிய வரும்.
ஆணுடைய துணையில்லாமல் பெண் பிள்ளை பெறுவது போன்ற பல கதைகள் அக்காலங்களில் யூத, ரோமனிய,கிரேக்க புராண கதைகளிலும், இந்து புராணங்களிலும் உணடு, உதாரணமாக, இந்து புராணங்களில் கர்ணன் என்ற பாத்திரம் ஆண் துணையில்லாமல் சூரியனுடன் கூடி ஒரு பெண் குழந்தை பெற்றதாகக் கூறப்படுகிறது. இதை நம்புவது எவ்வளவு மடத்தனமாகுமோ அதுபோலவே கன்னிக்கு இயேசு பிறந்தார் என்று நம்புவது.
விஞ்ஞான உலகத்தில் மனிதன் எதை-எதையோ கண்டு பிடித்துக் கொண்டிருக்க இன்னுமா? கடவுள் என்னும் கருத்தை மேம்படுத்த ஒரு நல்ல காரணம் தெரியவில்லை?
கடவுளின் கன்னி பிறப்பை நம்புவோரே,எந்த கன்னியாவது தான் பரிசுத்த ஆவியானாலே கருத்தரித்தேன் என்று சொன்னால் யாரேனும் நம்பத் தயாரா?
இனி அவர் மரித்தலிலும், உயிர்த் தெழுவதிலும் உள்ள குளறுபடிகள்
இயேசு பிறந்த நாட்டின் வழக்கப்படி ஒவ்வொரு பண்டிகை சமயத்திலும்,
மக்கள் எந்த குற்றவாளியை விடுதலை செய்யச் சொல்லி வேண்டிக் கொள்கிறார்களோ அந்த குற்றவாளியை விடுதலை செய்வார்கள்.
யாரை விடுதலை செய்ய வேண்டும்? இயேசுவையா? பரபாஸையா? என்று
பிலாத்து(அதிகாரி) மக்களிடம் கேட்டதற்கு மக்கள் " பரபாஸையே விடுதலை செய்யுங்கள, இயேசுவை சிலுவையில் அறையுங்கள. இயேசுவினுடைய இரத்தபழி எங்கள் மீதும், எங்கள் பிள்ளைகள் மீதும் விழட்டும்."என்றார்கள்.
பிலாத்துவும் பரபஸை விடுதலை செய்துவிட்டு இயேசுவை வாரினால் அடித்து, சிலுவையில் அறையச் செய்யவும் ஒப்புக் கொண்டான்.( மத்தேயு: அதிகாரம்:24, வசனம்:15)
இயேசுவுக்கு ஆதரவாக பிலாத்துவும்,பிலாத்துவின் மனைவியும்
பிலாத்து கூறுகிறான் "இந்த நீதிமானுடைய இரத்தபழிக்கு நான் குற்றமற்றவன்." (மத்தேயு 27ஆம் அதிகாரம், 24 வசனம்)
மேலும், பிலாத்துவின் மனைவி, பிலாத்துவிடம் ஆள் அனுப்பி, இயேசுவை ஒன்றும் செய்யாமலிருக்கும்படி கூறியிருக்கிறாள், (மத்தேயு 27ஆம் அதிகாரம், 19 வசனம்)
ஆக, பிலாத்துவுக்கும், அவன் மனைவிக்கும் இயேசுவைக் கொல்ல கொஞ்சம் கூட விருப்பம் இல்லைஎன்பது தெளிவாகிறது.
இயேசு உண்மையிலே மரித்தாரா?
இயேசு ஏலீ ஏலீ என்று ம்கா சத்தமாய் கூப்பிட்டு ஆவியை விட்டார்.(மததேயு: அதிகாரம் 27, வசனம் 50)
பிதாவே! உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.(லூக்கா:23,வசனம்:46).
இயேசு காடியை வாங்கியபின்பு, முடிந்தது,என்று சொல்லி தலையை சாய்த்து, ஆவியை ஒப்புக் கொடுத்தார். (யோவான்:19, வசனம் 30)
இயேசு அறையப்பட்டபோதும், அதன் பின்பும் காட்சிகளை பார்த்ததாகக் கூறப்படும் சுவிஷேகர்களின் காதுகளில், இயேசு ஆவியை விடும்போது கூறிய வார்த்தைகள் ஒரே மாதிரியாகத்தானே விழுந்திருக்க வேண்டும்? பின் வேறுவேறாகக் கூறுகிறார்கள். இயேசு எப்படி வேறுவேறாக சத்தம் போட்டு மரித்தார்.
இயேசுவைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சி
சிலுவையில் அறையப்பட்டவர்கள் இறக்காமல் இருக்கும் பட்சத்தில் கால்களை முறித்து கொல்வது வழக்கமாக இருந்தது.
ஓய்வு நாளில் சிலுவையில் உடல்கள் இல்லாதபடிச் செய்வதற்காக யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய் அவர்களுடைய காலெலும்பகளை முறிப்பதற்கும், உடல்களை அப்புறப்படுத்துவதற்கும் பிலாத்துவினடத்திலே உத்தரவு கேட்டனர்( யோவான்:அதிகாரம் 19, வசனம் 31)
இது இருக்க, இயேசுவோடு அறையப்பட்ட மற்ற இருவருடைய கால்களும் முறிக்கப் பட்டனவாம். இயேசு மட்டும் முன்னரே மரித்துவிட்டாராம், ஆதலால், அவருடைய கால்கள் மட்டும் முறிக்க படவில்லையாம்,
மரித்த இயேசுவின் விலாவிலே ஈட்டியால் குத்தினபொழுது ரத்தமும் தண்ணிரும் வெளிப்பட்டதாம். (யோவான்:அதிகாரம் 19, வசனம் 34)
மரித்தவருடைய உடலில்தான் இரத்த ஓட்டம் நின்றிருக்குமே, பின் எப்படி இது சாத்தியமாகும்.
இதோடு மட்டுமல்லாமல், மரித்த இயேசுவின் உடலை யோசோப்பு பிலாத்துவினிடத்திலே கேட்க எந்த விசாரணையும் இல்லாமல் பிலாத்து இயேசுவின் உடலை யோசோப்பிடம் கொடுக்க உத்தரவிட்டான்.
மரித்தாரா என்று கூட ஒழுங்கான ஆய்வு செய்யாமல், கால்களை முறிக்காமல் யோசோப்பிடம் ஒப்படைத்தது. இயேசுவை காப்பாற்றுவதற்காகத்தான் என்றே கருதத் தூண்டுகிறது.
இயேசு என்ற ஒருவரை அடக்கம் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கல்லறை இரண்டு மூன்று பேர் உள்ளே இருக்க கூடிய அளவில் இருந்திருக்கிறதே ஏன்?
நிக்கொதேமு என்பவன் வெள்ளை போளம், கருப்பு போளம் போன்ற மருந்து வகைகளை முன்கூட்டியே கொண்டுவந்திருந்ததையும் பார்க்கும் பொழுது (யோவான்:அதிகாரம்19, வசனம்:39)
இயேசுவை அடக்கம் பண்ணுகிற பாவனையில் கல்லறைக்குள் கொண்டு சென்று காப்பாற்ற முயற்சியே தவிர வேறொன்றும் இல்லை.
உடல்நிலை சரியானபின்பு உயிர்த்தெழுந்த்தாக கதை அழந்திருக்க வேண்டும்.
இயேசு சீடர்களை ரகசியமாகச் சந்தித்தல்,ஏன்?
இயேசுவை எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சம் ஆகும் படிக்குச் செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்து தம் நலம் விரும்பிகளை மட்டும் சந்தித்தது ஏன்?( அப்போஸ்தலர் நடபடிகள் 10-41) கள்ளத்தனமாக காப்பாற்றப்பட்ட இயேசு பொது மக்கள் மத்தியில் நடமாடினால், மீண்டும் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தால்தான் சீடர்களை மட்டும் அவர் தனிமையில் சந்தித்திருக்கக் கூடும்.
அனைத்து மக்களின் பாவத்தை கழுவ வந்தவர், ஒருமுறை எல்லோர் முன்பும் தோன்றி மக்களுக்கு விளக்கி இருக்கக் கூடாதா? இது பாவங்கள் பெருகாமல் பார்த்திருக்குமே.
இன்னும் மதச்சண்டைகள் நடந்து கொண்டிருக்க விடுதலை எப்படி கிடைக்கும். மனிதச் சிந்தனைக்கு கட்டாகவே மதங்கள் இருக்கின்றன. விடுதலை பெற விரும்புவர்கள் மதத்திலிருந்து வெளியேறுங்கள். மனிதனாய் வாழ முடிவெடுங்கள்.
பாவங்கள் பெருகி கடைசி காலத்தில் கர்த்தர் வந்து கடைசி தீர்ப்பு வழங்குவார் என்று பொய் நம்பிக்கை கொள்ளாமல், பாவங்களே நடைபெறாமல் இருக்க சுயவிழிப்புணர்வே தேவை? கடவுள் நம்மை ஆசிர்வதிப்பார் என்பதற்காக நல்லது செய்யாமல் , இயல்பாகவே நல்லது செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.
கடவுள் ஒருவேளை இருந்தால் அவர் கண்டிப்பாக தன்னை துதிப்பதற்காக நேர, பண விரயத்தை விரும்ப மாட்டார். கடவுள் விரும்பியாக இருப்பதை விட்டுவிட்டு, மனிதம் போற்றி கடவுளே உங்களை விரும்புபவராக மாறுங்கள்.
" இந்த உலகுக்கு கடவுளைவிட ம்னிதம் உள்ள மனிதனே தேவை"