இந்தியா என்று சொல்லப்படும் என்று சொல்லப்படும் முதலாளித்துவ கட்டமைப்பை பிரதானமாக கொண்ட அரசில், ஜனநாயகம் என்றும் மக்களாட்சி என்றும் ஒரு அமைப்பு இருப்பதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது அதன்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் மக்களை ஆளுமாம், அதுவும் மக்களுக்காக ஆளுமாம், அது மக்களுடைய அரசாக இருக்குமாம். அப்படியா என்று வியப்போடு யாரும் கேட்டு விடாதீர்கள். அப்படித்தான் நடப்பதாக இங்குள்ள அதிகார வர்க்கம் பிரச்சாரம் செய்கிறது.
மக்களை ஆள தகுதி படைத்த பூரண யோக்கிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க, அதன் பொருட்டு தேர்தலையும் நேர்மையாக நடத்த(என்னா பித்தலாட்டம்?) சுயேச்சையான அமைப்பு(!!!!) என்று சொல்லப்படுகிற தேர்தல் ஆணையம் நடத்துமாம்...நடத்தி......என்ன இழுவை இன்னும் படிங்க......அந்த பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்குமாம்....
தேர்தல் முறையை சுறுக்கமா புரிஞ்சுக்கணுமா?
பார்த்தசாரதி(கக்கா கட்சியின் சார்பாகவும்), ஹரிஹரண்(மூத்திரம் கட்சியின் சார்பாகவும்), திருமலை(விட்டை கட்சியின் சார்பாகவும்) போட்டியிடுகின்றனர் என்று வைத்துக் கொள்ளுங்கள்...
அதற்கு இவர்கள் தேர்தல் ஆணையத்திடம் டெபாசிட் கட்டி மனுதாக்கல் செய்ய வேண்டும்..
சுயே..ச்சை அமைப்பான தேர்தல் ஆணையம், இவர்களின் சொத்து கணக்கு உள்ளிட்ட கொடுக்கப்பட்ட விபரங்களை Under the table-ஆகவோ, Upper the Table-ஒ வைத்து நீண்ட ஆய்வு நடத்தி, போட்டியிட அனுமதி வழங்கும்...
இந்த கம்முனாட்டி, மன்னிக்கவும் மதிப்பிற்குரிய வேட்பாளர்களும் தமது பிரச்சாரத்தை தொடங்குவர்.....அண்டா தரேன்( ஜெயிச்சு வந்தா தண்ணி தரமாட்டானுங்க), மிக்சி தரேன்( ஒழுங்கா மின்சாரம் வராது) னு திறந்தவெளி வேனிலேயே பயணம் செய்து, இருக்கின்ற தேர்தல் ஆணைய கண்காணிப்பின் முன்னிலையிலேயே வாக்களித்தால் லஞ்சம் தருவேன் என்று மைக்கை முழுங்குவார்கள்...ஆனால், தேர்தலுக்கு முன் பணம் வழங்குவதை மட்டும் குற்றமாக கருதி, பணமே கிடைக்காத இடத்தில் மட்டும் தேடுதல் வேட்டையை தீவிரமாக நடத்துவார்கள்...
பிரச்சாரம் முடிந்து தேர்தலும் நடக்கும்...
பார்த்தசாரதி(கக்கா கட்சியின் சார்பாக)-4 வாக்குகளும், ஹரிஹரண்(மூத்திரம் கட்சியின் சார்பாகவும்) - 3 வாக்குகளும், திருமலை(விட்டை கட்சியின் சார்பாகவும்) - 2 வாக்குகளும் பெற்றிருப்பர்...
உடனே பார்த்தசாரதி வெற்றி பெற்றதாக அறிவிக்க படுவார்..கூர்ந்து கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும் வெளிப்படையாக தெரியும் ஒரு உண்மை...
பார்த்தசாரதிக்கு எதிராக மக்கள் அளித்த வாக்கின் எண்ணிக்கை 5, ஆதரவாக விழுந்தது 4... ஆனால், இந்த தேர்தல் முறையில் எதிராக வாக்களித்த மக்களின் மனநிலை முற்றாக நிராகரிக்கப்படுகிறது.
இந்த லட்சணத்திலான தேர்தல் முறையில்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வென்றார்.( நமக்குத்தான் வெக்கமே இல்லை, அதை ஏத்துக்க வேற செஞ்சோம்..)
இதே காங்கிரசு அமைச்சரவை கடந்த தேர்தலில் மன்மோகன் என்னும் அமெரிக்க அடிவருடியை, அடிவருடின்ன உடனே தப்ப நினைச்சுடாதீங்க..குழந்தைங்க கால்ல வருடி விடறது இல்லையா? காதலி கால்ல வருடி விடறத இல்லையா? அதை மாதிரி அன்பா வருடி விட்டிருப்பார்னு புரிஞ்சுக்கோங்க...நல்லா இருக்குல்ல இப்படி புரிஞ்சுக்கிறதுக்கு......
எங்க விட்டேன்...ஆங்..அந்த மன்மோகனை பிரதமர் வேட்பாளரா அறிவிச்சு போட்டியிட்டாங்க.....வென்றார்கள்..... இதே சகல வல்லமை படைத்த தேர்தல் முறையின் படி..
இப்ப என்னடான்னா......
கழுதை இந்திய நாட்டின் பிரதமராகும் நேரம் கனிந்திருக்கிறது என்று திக்விஜய்சிங் கூறியிருக்கிறார்...
ஏன் கழுதை ஆனா ஒத்துக்க மாட்டீங்களோ.....மக்களாட்சியில் இதெல்லாம் சகஜம்தானே..ஐந்தாண்டுக்கு ஒரு முறை வாக்களித்ததோடு உங்களிடம் கருத்து கேட்பது முடிந்துவிட்டதே.....இனி உங்ககிட்ட என்ன மசிறுக்கு கேட்கணும்..நாடாளுமன்றத்தில் தமக்கு இருக்கும் பலத்தை வைத்து.....இனி கழுதையை கூட பிரதமர் ஆக்குவாங்க...கம்முனு கிடக்கணும்...
கழுதையோட பெயர் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படறீங்களா? யோவ் கழுதை எப்படியா பிரதமர் ஆகும்னு நீங்க கேக்குற கேள்வி எனக்கு புரியுது...
கழுதைக்கு பதிலா...இந்திய நாட்டின் ஒரே விடிவெள்ளி, நம்பிக்கை நட்சத்திரம் ராகுல்தான் பிரதமராகும் தகுதியோடு இருக்கிறாராம்...
நான் பாமரன். நடக்கும் தீமை கண்டு கொதிக்கும் உள்ளம் இருந்தும், தடுக்கும் திராணியற்று போயிருக்கும் சமூகத்தின் ஒரு உறுப்பினன். தன் இனத்தை சார்ந்த ஒரு பெருங்கூட்டம் கொல்லப்பட்டும் ஒன்றும் செய்யமுடியாமல், உருவாகாத இந்திய போலி தேசியத்திடம் பிச்சை கேட்டு நிற்கும் பழம் பெருமை வாய்ந்த இந்நாள் தலைமுறையின் ஒரு பாமரன். பேசும் மொழியால் தமிழன் நான், கொள்கையின் வழியால் பெரியாரியல் மாணவன் நான். மற்றபடி சொல்வதற்கோ, பேசுதற்கோ ஏதுமில்லை என்னை பற்றி.
என்னை பற்றி பேசவா,எழுதத் தொடங்கினேன்.எம் நிலை பற்றி பேசத்தானே பேச/எழுதத் தொடங்கினேன். ஆனால், நம் நிலை பேசும் நிலையில் இல்லை, பேசினால் நாம் வெளியில் இல்லை. காலம், காலமாக மக்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்திய பார்ப்பன நச்சு பாம்புகளைவிடக் கொடிய பெரியாரை கொச்சைப்படுத்தும் திராவிட பாம்புகள்தான் நம்மை ஆளும் வர்க்கம். பெரியாரை உள்வாங்கிக் கொள்ளுங்கள், அவர் தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும்.............., அவ்வளவுதான் அவரை பற்றி அவர் வழியில் பேச முடியும். சொன்ன கடவுள் மறுப்பை பேசக்கூடாது, அவர் பேசிய தன்மதிப்பு கொண்ட, சுயநிர்ணய உரிமைக் கொண்ட தேசியம் பற்றி பேசக் கூடாது. பேசினால்............
சரி பேசத்தான் கூடாது,எழுதினால்
தமிழர்களின் தலைவர் என்று தமிழர்களிடம் சொல்லாமலேயே தலைவராகிப்போன தலைவர் கலைஞர்,
மிகவும் நல்லவர்...........அவருடைய குடும்பத்திற்கு,
சமதர்மம் பேணுபவர்...............அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பாரபட்சமில்லாமல் எழுதி வச்சிட்டு இருக்காரே,
எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்.........தன் குடும்பத்திற்காக காங்கிரசு கொடுக்கும் குடைச்சல் அத்தனையையும் தாங்கி கொண்டவர்,
மிகவும் அன்புள்ளம் கொண்டவர் தமிழர்கள் வீட்டில் கருமாதி விழுந்தாலும், அடுப்பெறிய வேண்டும், வாய்க்கரிசி வேண்டும் என்று அக்கறையோடு பிச்சை எடுத்து பிச்சை போட்டுருக்காரே,
பெண்ணுரிமை பேணுபவர்......சோனியா என்னும் தனிப்பெண்ணின் ஒரே கணவனை கொன்றதாக சந்தேகத்திற்கிடமாக சந்தேகப்படப்படும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவாக இருக்கும் பெரும்பாலானஈழத்தமிழ் கூட்டம் அழித்தொழிக்கப்பட வேண்டும், பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க தாமதமானாலும் பரவாயில்லை , சோனியாவில் ஹீல்ஸ், பிளாஸ்டிக் செருப்பில் தைத்த குண்டூசியை உடனடியாக எடுக்கப்பட வேண்டும், அதை புரிந்து கொள்ளாத ஆணாதிக்க தமிழர்களை புரிந்து கொள்ளாமல் தவிர்த்து, தமிழர்களை மைய-அரசை புரிந்து கொள்ள தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறாரே. பெண்ணின் உள்ளுணர்வை புரிந்து கொண்டுள்ளாரே.
கலையார்வம் இன்னும் கலையாதவர்....
இறப்பு என்பது ஒரு முறைதான், அது இன்று வந்தால் என்ன? நாளை வந்தால் என்ன? என்று ஈழத்தமிழர்கள் கொத்து குண்டுகளுக்கு பலியாகி கொண்டிருக்கும் பொழுது சொன்னதை வைத்து தமிழர்கள் கருணாநிதி ஏதோ தன் உயிரை பற்றித்தான் சொல்கிறார் என்று நினைத்தனர். வயதான பின்னாவது உண்மையான தமிழுணர்வோடு பேசுகிறார்,என்று தமக்குள் கதைத்துக் கொண்டனர். ஆனால், அத்துனை பேரையும் ஏமாற்றும் விதமாக தான் சொன்ன வசனம் ஈழத்தமிழர்களின் உயிரைப்பற்றிதான் என்பதை புரியாமல் இருக்கும் தமிழர்களிடம் இப்பொழுதும் ஓட்டு வாங்க கிளம்பிவிட்டாரே? ஒரு மாத மருத்துவமனை இடுப்பு(நடிப்பு) சிகிச்சை முடிந்து.
என்ன தமிழ்நாட்டில் இவர் மட்டும் தான் நல்லவரா?
எதிர்கட்சித் தலைவர் செயலலிதா என்ன குறைந்தவரா? அவர் அரக்கிக்கு அரக்கி, வீராதி வீர, வீர பராக்கிரம சூரி? திராவிடத்தின் பரிணாம கோளாரில் எம்ஜிஆர் என்னும் நடிகரால் ஒரு பெரிய திராவிட கட்சியின் தலைவி, தன்னை பாப்பத்தி என்று அறிவித்துக் கொண்ட பின்பும் பார்ப்பன அடிவருடிகளின், கொள்கை அடிவருடிகளின், ஓட்டு பொறுக்கிகளின் தலைவி, பெரியார் பார்ப்பன ஆதிக்கத்துக்கு அடித்த ஆப்புக்கெல்லாம் ஆப்படிக்கும் விதமாக நாளும் பாப்பத்தி காலில் விழ திராவிடர்களை காத்தி நிற்க வைக்க பார்ப்பன சாதுர்யம். என ஆரியர்களின் இனசொறிக்கு(வெறிக்கு) அருமருந்து என கொள்கை பிளம்பாக இருக்கும் செயலலிதா.
இன்றும் தமிழ்நாட்டில் செல்வி என்னும் பட்டத்தோடு வலம் வரும் இவர், திமிரோடு சிறிது கூட மனிதாபிமானம் இல்லாமல், போர் நடக்கும் இடங்களில் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்ற அரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்தவர். ஒரு கண்டுபிடிப்போடு நிற்காமல் ,இங்கு தமிழுணர்வு சாதிக்கு பின்னாலும், பணத்திற்கு பின்னாலும் இலகுவாக ஒழிந்து கொள்ளும் என்ற பழைய இவருடைய கண்டுபிடிப்புக்கு உரிமம் வாங்கும் விதமாக ஓட்டுப்பொறுக்க ஈழத்தமிழர்களுக்கு பணம் பொறுக்கி, அதற்கு வைகோ, தா. பாண்டியன் போன்றவர்களை ஒத்து ஊத, பக்க மேளம் அடிக்க வைத்து ஒரு உண்ணாவிரத நாடகத்தையும் (பழைய நடிப்பு திறமை கைகொடுத்திருக்கும்!) நடத்தி முடித்திருக்கிறார்(டேக் எத்தனை?)
புயல் வருது விலகுங்க, அக்காவோட தம்பி வர்ராறு வழி விடுங்க!
அடுத்தது வைகைபுயல் வடிவேலு, மன்னிக்கவும் வைகோ. அவர்கள். இவர் தமிழின துரோகத்தை, தமிழின எதிரியோடு இருந்து கண்டுபிடிப்பார், பின்னர் கண்டிப்பார். என்னை ஜெயலலிதா கைது செய்ததில்லை,என்பது போல் பேசும் இவர், கைது செய்ததை மறக்க “அது போன ஆட்சி, நான் சொல்றது இந்த மைனாரிட்டி கருணாநிதி ஆட்சி.” கருணாநிதி ஆட்சியில கருணாநிதி அரசுதான் கைது செய்யும், ஜெயலலிதா கைது செய்ய முடியாது.” என்பது ஏன் இந்த கொள்கை புயலுக்கு புரியவில்லை,” என்பதுதான் நம்மால் கண்டுபிடிக்க முடியாதது.
அடுத்தது மருத்துவர் ஐயா தமிழ்க்குடி தாங்கி (இராமதாசு),
இவரது ஊடகம்தான் ஈழம் குறித்த செய்திகளை தமிழ்நாட்டில் பெருமளவில் உண்மையாக தெரிவித்தது. அதில் மிகவும் உரிமையோடும், கடமையோடு பாராட்டுகிற அதே வேளையில், எந்த அரசு தமிழக மக்களை கொன்று குருதி குடிக்க ஆவலோடு உதவி செய்து வருகிறதோ, அந்த அரசில் அமைச்சராக தமது மகனை அமைச்சராக வைத்துக் கொண்டு, யாரை எதிர்த்து போலியாக உருவாக்கப்பட்டுள்ள இந்தியா என்னும் நாட்டில் விரும்பியோ/ விரும்பாமலோ குடிமகனாக இருந்து கொண்டு யாருக்கு எதிராக போராடுகிறீர்கள். சோனியாவை எதிர்க்கமாட்டாமல், கலைஞரை மட்டும் எதிர்த்து கொண்டு, காங்கிரசை எதிர்க்காமல் இலங்கை தமிழரை காப்பாற்ற அமைப்பை யாருக்கு எதிராக உருவாக்கியிருக்கிறீர்கள்.
அதோடு, உங்கள் தமிழுணர்வு சாதியுணர்வை தமிழர்கள் மத்தியில் மழுங்கடிக்க உதவுமென்றால என்னை போன்ற இன்றைய தலை முறை இளைஞர்கள் கண்டிப்பாக குரல் கொடுப்போம். சாதி ஒழிப்பை இனியாவது, ஈழப்பிரச்சினைக்கு பிறகாவது, நீங்கள் சார்ந்ததாக இந்த சமூகம் கருதும் வன்னிய சமூகத்தாரிடம் கொண்டு செல்லும் வழியை விரைவில் சென்றடையுங்கள், இதை நீங்கள் செய்வீர்களேயானால் தமிழ் இனம் ஈழத்தில் மட்டுமல்ல, இங்கும் விடுதலை பெறும்.
தமிழக தலைவர்களே உங்களை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கோடு இதை நான் எழுதவில்லை,மாறாக நீங்கள் விமர்சிக்கும் படியாக அயோக்கியத்தனம் செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதனால் எழுதப்பட்டது.
நீங்கள் எடுக்கும் முன்னெடுப்பை தவறு கூறுவதற்காக அல்ல இது, தயவு கூர்ந்து தமிழக மக்களுக்காக சிந்திக்க தொடங்குங்கள். மைய அரசை மையப்படுத்தி சிந்திப்பதை தவிர்த்தாலே, தமிழர்களை மையப்படுத்தி சிந்தித்தாலே, மைய அரசு நம் காலில் விழும், ஆனால் நாம் கண்டிப்பாக காலில் விழும் நிலை வந்திருக்காது. மைய அரசில் அமைச்சர் பதவி கனவு கண்டிப்பாக நம் சுய உரிமைக்கான சிந்தனையை மழுங்கடித்திருக்கிறது.
தயவு கூர்ந்து, அரசியலிலிருந்து அரசியல் சாராமல் தமிழின எழுச்சிக்காக குரல் கொடுக்க முன்வாருங்கள், இங்கு விமர்சனத்தில் திருமா சேர்க்கப்படாதது, அவருடைய இன்றைய நிலைதான் காரணம் நாளை, இந்த அரசியல் காய்நகர்த்தலால் அவரும் வந்து சேரலாம்.
தமிழர்கள் யாரும் திமுகவையோ, அதிமுகவையோ விரும்பவில்லை, காங்கிரசை கணக்கிலேயே எடுத்துக் கொள்ள வில்லை. ஒரு மாற்றை தேடுகிறது ஒரு பாமர தமிழரின் உள்ளம். இவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களுக்கு மாத்தை தேடுகிறது, விளக்கு மாத்தை தேடுகிறது.
இனத்துரோகம், செய்பவர்கள் வருங்கால இளைஞர்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
அரசியல்வாதிகளிடம் இந்த கோரிக்கை தவறானதுதான், இருந்தாலும்
நீங்கள் களைகளாக இருக்காதீர்கள், களைஎடுப்பவர்களாக மாறுங்கள், தமிழனின் வாழ்வுநிலை, சிந்திக்கும் திசை மாறும்.
தமிழர்களே! தேர்தலில் இவர்கள் எல்லோரையும்தான் விரட்டியடிக்க வேண்டும், ஆனால், விரட்டமுடியாதபடி வித்தியாசமாய், துரத்தும் முன்னே அவர்களே கைகோர்த்து ஓடத் தொடங்கியுள்ளனர். ஓடும் வரை ஓடட்டும், நாம் காத்திருந்து கண்டிப்பாக இந்த புல்லுருவிகளை ஓட வைப்போம்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சை 'அதிகபட்சமானது', 'தேவையற்றது' என்று கூறியுள்ள இந்தியா, ஏராளமான மக்கள் கொல்லப்பட்ட அத்தாக்குதலை கண்டித்துள்ளது.இஸ்ரேல் நாட்டின் தென் பகுதி மீது ஹமாஸ் போராளிகள் (இஸ்ரேலைப் பொறுத்தவரை பயங்கரவாதிகள்) நடத்திய ராக்கெட் தாக்குதலில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக கடந்த சனிக்கிழமை முதல் காசா பகுதி மீது இஸ்ரேலிய விமானங்கள் சரமாரியாக பறந்து குண்டு வீசி வருகின்றன.
இதில் 300க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலைக் கண்டித்துத்தான் திங்கட்கிழமை மாலை நமது அயலுறவு அமைச்சகம் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், 'காசாப் பகுதியில் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திவரும் இராணுவ நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும் என்று இந்திய அரசு எதிர்பார்க்கிறது. இத்தாக்குதலில் அளவிற்கு அதிகமான இராணுவ பலம் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளது மட்டுமின்றி, வன்முறையும் பெருகிவருவது ஏமாற்றமளிக்கிறது.
இப்படிப்பட்ட தேவைக்கும் அதிகமான படைப்பலம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது தேவையற்றது, கண்டனத்திற்குரியது. காசா பகுதி மீது நடத்தப்பட்டுவரும் இஸ்ரேலின் தாக்குதல், வன்முறையைத் தொடரவே வழிவகுக்கும் என்பது மட்டுமின்றி, அமைதி முயற்சிகளை தடம்புரளச் செய்துவிடும் என்பதால் அதிகபட்ச கட்டுப்பாட்டை (இஸ்ரேல்) கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய அரசு கேட்டுக்கொள்கிறது' என்று கூறப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை இந்திய அரசு கண்டித்திருப்பது நியாயமானது, அதனை இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். பாலஸ்தீனப் பிரச்சனையிலும், அது தொடர்பாக நமது நாடு கொண்டுள்ள நிலைப்பாட்டையும் அறிந்த எவருக்கும் அந்த அறிக்கையின் ஒவ்வொரு வாக்கியத்திலும் முரண்பாடு ஏற்படுவதற்கு இடமில்லை.
காசா பகுதியில் இருந்த இஸ்ரேலின் தென் பகுதி மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதற்காக, அங்குள்ள 'பயங்கரவாதி'களின் இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு இஸ்ரேல் நடத்திவரும் கொலை வெறித் தாக்குதலை நியாயம் என்று (இன்றுள்ள) அமெரிக்க அரசைத் தவிர வேறு எந்த நாட்டு அரசும் ஏற்காது.
அத்தாக்குதலில் 300க்கும் அதிகமான அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதையடுத்து இந்தக் கண்டன அறிக்கையை இந்தியாவின் அயலுறவு அமைச்சகம் விடுத்துள்ளது. நமது கேள்வியெல்லாம், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் இதேபோன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத்தானே இன்றும் இலங்கையில் தமிழர்கள் மீதும் சிறிலங்க விமானப் படை நடத்திவருகிறது?
சிறிலங்க விமானப் படை தாக்குதல் நடத்திய பிறகு அந்நாட்டு இராணுவம் எறிகணைகளை வீசியும், பல்குழல் பிரங்கிகளைச் சுட்டும் தாக்குகிறது. இது நீண்ட காலமாக நடந்து வருகிறதே? அதைக் கண்டித்து இந்திய அயலுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை கூட இதுவரை அளிக்காதது ஏன்? கடந்த 25 ஆண்டுகளாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஈழத்தில் இப்படிப்பட்ட தாக்குதல் நடந்துவருகிறதே.
இடையில் 2002 முதல் 2005 ஆம் ஆண்டுவரை போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலம் தவிர, சிறிலங்க விமானப் படை விமானங்கள் தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திக்கொண்டுதானே இருக்கின்றன? 2005ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராக ராஜபக்ச பதவியேற்றதற்குப் பிறகு திட்டமிட்டு துவக்கப்பட்ட தாக்குதல் இந்த ஆண்டில் கண்மூடித்தனமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான், கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாட்டிலிருந்து டெல்லிக்கு 'போரை நிறுத்துங்கள்' என்று தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதம் இருந்து தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்துமாறு சிறிலங்க அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
அதன்பிறகு, அக்டோபர் 14ஆம் தேதி (இடையில் அக்.06ஆம் தேதி ஆளும் தி.மு.க. கட்சி சார்பாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிற்கு அனுப்பியது, அதனை மயிலை மாங்கொல்லை கூட்டத்தில் விளக்கி முதலமைச்சர் கருணாநிதி பேசினார்) தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தமிழர்கள் மீது சிறிலங்க இராணுவம் நடத்திவரும் தாக்குதலை நிறுத்துமாறு சிறிலங்க அரசை வலியுறுத்த வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தலைவராக உள்ள சோனியா காந்திக்கும் அனுப்பப்பட்டது.
அதனைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், சிறிலங்க அரசுடன் பேசுவோம் என்றுதான் கூறினாரே தவிர, சிறிலங்க அரசிடம் பேசி தாக்குதலை நிறுத்துமாறு கூறுவோம் என்ற எந்த உறுதிமொழியையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. தமிழர்கள் மீதான தாக்குதலும் நிறுத்தப்படவில்லை. அதன்பிறகு, டெல்லி வந்த சிறிலங்க அதிபரின் ஆலோசகரான ஃபசில் ராஜபக்சவிடமும் மத்திய அரசு பேசியதற்குப் பின்னரும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை.
மாறாக, மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களால் கதிகலங்கி நிறுத்தியிருந்த விமானப்படைத் தாக்குதலை சிறிலங்கா மீண்டும் துவக்கியது. அப்படியென்றால் அர்த்தமென்ன? தாக்குதலை நிறுத்து என்று சிறிலங்காவிடம் மத்திய அரசு வலியுறுத்தவில்லை என்பதுதானே? இதனை எந்த விதத்திலும் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுக்கவில்லை.
'போர் நிறுத்தம் செய்யுமாறு அண்டை நாட்டை நாம் வலியுறுத்த முடியாது, அது அந்நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக ஆகிவிடும்' என்று தமிழக முதல்வரிடம் (செய்தியாளர்களிடமும்தான்) மிக டெக்னிகலாக பேசிவிட்டு மத்திய அரசிற்கு ஆதரவு தொடரும் என்ற உறுதிமொழியை பெற்றுக்கொண்டு பறந்தார்.
தமிழக முதல்வரும், பிரணாப் குழப்பியதை பெரிதாக எடுத்துக்கொண்டு, தன் பங்கிற்கு ஒரு விளக்கம் அளித்தார். ஆனால், அங்கு ஈழத்திலோ தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. தமிழக முதலமைச்சர் தலைமையில் டெல்லிக்கு சென்று பிரதமரைச் சந்தித்து தமிழர்கள் மீதான போர் நிறுத்தப்பட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியபோது கூட, நமது தலைவர்கள் பேசியதையெல்லாம் ஒரு சிலையைப் போல அசையாமல் கேட்டுக்கொண்டிருந்தாராம் நமது பிரதமர்.
தமிழக முதல்வர் குறுக்கிட்டு, அயலுறவு அமைச்சரை சிறிலங்காவிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டதை மட்டும் ஒப்புக்கொண்டு பதில் பேசியுள்ளார். ஆனால் இதுவரை பிரணாப் சிறிலங்கா செல்வது உறுதி செய்யப்படவில்லை.
அமைச்சர் பிரணாப் முகர்ஜி சிறிலங்கா சென்று அதிபர் ராஜபக்சாவை சந்தித்துப் பேசினால் அடுத்த நிமிடம் சிறிலங்h இராணுவம் தாக்குதலை நிறுத்துவிடாது என்பது இங்கேயும் தெரியும், அங்கேயும் தெரியும். ஏனென்றால் தமிழர் பிரச்சனையில் நமது மத்திய அரசிற்கும், சிறிலங்கா அரசிற்கும் ஒரு 'நல்ல புரிந்துணர்வு' உள்ளது விவரம் தெரிந்த தமிழர்களுக்குப் புரியாததல்ல.
அதனால்தான், இன்று வரை சிறிலங்கா அரசை, அதன் தமிழர் ஒழிப்புக் கொள்கையை, தமிழர்களுக்கு எதிராக அது நடத்திவரும் இராணுவ ரிதியிலான இன ஒடுக்கலை எதிர்க்கவில்லை. எதிர்த்து ஒரு அறிக்கை கூட விடுக்கவில்லை. காசாவில் உள்ள 'இலக்குகளை' குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் அங்கேயுள்ள அப்பாவி மக்களை கொல்கிறது என்பதை உணர்ந்து அறிக்கை அளிக்கும் அயலுறவு அமைச்சகத்திற்கு, அதேபோல விடுதலைப் புலிகளின் 'இலக்குகளை'க் குறிவைத்து அந்நாட்டு விமானப்படை நடத்தும் தாக்குதலில் எத்தனை ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெரியாதா என்ன? தெரியும்.
பிறகு ஏன் கண்டிக்கவில்லை? காரணம், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி கொண்டுள்ள 'பார்வை'. அதுதான் நமது அயலுறவு அமைச்சகத்தை வழிநடத்துகிறது. எங்கெல்லாம் மனித உரிமை மீறப்படுகிறதோ அதனையெல்லாம் எதிர்த்துக் கண்டிக்கும் ஒரு ஜனநாயக அரசாகத்தான் இந்தியா இருந்துவருகிறது. அப்படிப்பட்ட கொள்கையை ஒட்டியே நமது அயலுறவு அமைச்சகத்தின் செயற்பாடும் இருந்து வருகிறது.
ஆனால், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மட்டும், அது காங்கிரஸ் கட்சியின் தற்குறித்தனமான பார்வையால் வழிநடத்தப்படுகிறது. அதனால்தான், 'இந்த ஒரு ஆண்டில் மட்டும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் மீது 700 முறை விமானத் தாக்குதல் நடத்தியுள்ளோம். அந்தத் தாக்குதல்களில் சில சமயங்களில் 500 கி.கி. எடையுள்ள குண்டுகள் பல வீசப்பட்டுள்ளன' என்று அந்நாட்டு இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரா பேசியதற்குப் பின்னரும், மத்திய அரசு அதனைக் கண்டிக்கவில்லை.
அது தமிழர்களை விட சிங்களவர்களையும், சிங்கள அரசையுமே நட்பாகக் கருதுகிறது. அந்தத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது என்று எத்தனை முறை தமிழ்நாட்டின் தலைவர்கள் வலியுறுத்தினாலும், அது காங்கிரஸ் கட்சிக்கு விளையாட்டாகவே தெரிகிறது. 2004ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தனர். தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும், புதுவை மக்களவைத் தொகுதியிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியே வெற்றி பெற்றது.
அந்த 40 மக்களவை உறுப்பினர்களின் பலத்தால் மத்தியில் ஒரு கூட்டணி அரசை ஏற்படுத்தும்போது, தி.மு.க. தலைவர் கருணாநிதி தங்கியிருந்த இடத்திற்கே வந்த அவரைச் சந்தித்துப்பேசி சிக்கலின்றி ஆட்சியமைக்க வழிகேட்டவர், இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்காக, தமிழ்நாட்டின் தலைவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து விடுக்கும் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் வேடிக்கைப் பார்ப்பது அப்பட்டமான துரோகமல்லவா?
தமிழக மக்களுக்கு இதெல்லாம் புரியாதா? அங்கே பாலஸ்தீனர்களை இஸ்ரேல் குண்டு வீசி அழிக்கிறது. அதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது. இங்கு ஈழத் தமிழர்கள் மீது குண்டு வீசி கொன்றொழிக்கிறது சிங்கள அரசு. அதற்கு மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆதரவளிக்கிறது. உதவுகிறது.
இதனை தமிழர்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளார்கள். அரசியல் சித்து வேலைகள் மக்களுக்குப் புரியாது என்று காங்கிரஸ் கட்சி நினைத்துக் கொண்டிருக்கிறது. அது உண்மையல்ல. தமிழக மக்கள் சிந்திக்கக் கூடியவர்கள். 2004ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் அரசு ஏற்பட அனைத்துத் தொகுதிகளிலும் தமிழக மக்கள் ஏகோபித்த ஆதரவளித்தார்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தமிழினத்திற்கு துரோகம் இழைத்துவரும் காங்கிரஸ் கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் தமிழக மக்கள் தூக்கி எறிவார்கள்.