சனி, 3 ஜனவரி, 2009

நீங்களெல்லாம் மனிதர்களா? உங்கள் சகோதரன் படும் துயரத்தை கேட்டும் அமைதியாக இருக்கும் நீங்கள் மனிதர்களாக இருக்க முடியுமா?


       "உயிரினங்களில் மனிதனுக்கு மட்டும்தான் சிரிக்கத் தெரியும் என்கிறார்கள்.

       ஆனால் மனிதனின் முகவரி சிரிப்பில் இல்லை கண்ணீரில் இருக்கிறது."

சக மனிதனின் துன்பத்திற்காகக் கண்ணீர் வடிப்பவனே தன்னை மனிதன் என்று நிரூபித்துக் கொள்கிறான்.

சக மனிதரின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொள்வது சமூகப் பண்பாடு.

இன்பத்தில் பங்கு கொள்ள எல்லோரும் வருவார்கள் ஏனெனில் அது பயனுள்ளது.

 துன்பத்தில் பங்கு கொள்வதுதான் உயர்ந்த பண்பாடு.


புன்னகையில் பங்கு கொள்ள வருபனல்லன், கண்ணீரை பகிர்ந்துகொள்ள வருபவனே உண்மையான நண்பன்.

 இந்த உலகம் வாழ்வது விண் மழையால் அல்ல, கண் மழையால்!

மனிதனுக்கு மட்டும்தான் சிரிக்கத் தெரியும். உண்மைதான்.

ஆனால், சக மனிதனின் துயரம் கண்டு சிலர் சிரிக்கிறார்களே அவர்களை மனிதர்கள் என்று சொல்ல முடியுமா?

துன்பத்திலும் பணக்கார துன்பம்,ஏழைத் துன்பம் என்று பேதம் பாராட்டுகிறார்களே!

பணக்காரன் துன்பத்தில் பங்கு கொள்ள வரும் ஏழையின் துன்பத்தை ஏளனம் செய்கிறதே!(வலிந்து ஆதரவு தரும் இந்தியம் பேசும் பொறுக்கி நாய்கள் தமிழர்களை வஞ்சிக்கிறார்களே- மகிழ்நன்)



இந்த மனிதர்கள் எவ்வளவு கொடூரனமானவர்கள்! பிறர் அழுவதை பார்த்து சிரிப்பவர்கள், தாம் சிரிப்பதற்காக பிறரை அழ வைப்பவர்கள், மற்றவர்கள் கண்ணீரை வார்த்து தங்கள் புன்னகைகளை வளர்ப்பவர்கள், இப்படியும் சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள்.

மலர் தோட்டத்து பூக்களையும்...பனித்துளியையும் பார்த்த கவிஞர் அர்ஷ் மல்ஸியானி இப்படித்தான் எண்ணினார்,

பூக்களும் பனித்துளியும்....புன்னகை கண்ணீரும்.... மலர்த் தோட்டத்தில் மனித நாடகம் அரங்கேறிக் கொண்டிருந்தது.

 

பனித்துளியின் துக்கத்தை விசாரிக்கப்

பூவனத்தில் யார் இருக்கிறார்கள்?

பாவம்! இந்த ஏழை அழுதால்

அரும்புகள் சிரிக்கின்றன.

                                              -         அப்துல் ரகுமானின்

                                     மகரந்த சிறகு நூலிருந்து