வியாழன், 26 ஆகஸ்ட், 2010

பூணூல் தத்துவத்தின் மீதான பாசமும்...பூணூல்களின் மீதான கோபமும்

சாதிவாரியாக மக்கள் தமது பாட்டன், முப்பாட்டன் சாதியின் பெயரால் செய்து வந்த தொழிலை தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக செய்ய வேண்டும், என்பதுதானே...அதைத்தானே இந்து மத அவதார யோக்கியன்(?) கண்ணன் தன் கீதையில் சுவதருமம் என்று கூறுகிறான். அந்த தரும்ம் அழியும் போதுதான் தான் மீண்டும் தோன்றுவேன்என்று கீதையில்யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத। அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ... யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்। பரித்ராணாய ஸாதூநாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்।தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே என்று மிரட்டுகிறான். அதே கண்ணனின் தரகர்களிடம்தான் இப்பொழுது கருத்து யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

பெரியாருக்கே அல்வா கொடுத்துவிட்டு, ஈரோட்டு பகுத்தறிவு பேரொளியை மங்கலாக்கிய பார்ப்பனீய கூட்டாளிகளின் அதே பார்ப்பன குரல்... தமிழகத்திலிருந்து மீண்டும். கிளம்பியிருக்கிறது ஒன்று கிண்டல், மற்றொன்று வேண்டுகோள்

முதலில் கிண்டல்

கலைஞர் தொடங்கி பேரன் வரையிலான திரைத்துறை ஆதிக்கத்தை குறித்தது...வந்தது ஒரு பார்ப்பன இதழில்..

““கலைஞர் வரலாற்றிலேயே முதன் முறையாக - கலைஞர் கதை வசனத்தில் - கலைஞர் பேரன் தயாரிப்பில் - கலைஞர் பேரன் இயக்கத்தில் - கலைஞர் பேரன் நடித்த - புத்தம் புதிய திரைக்காவியம் - கலைஞர் டி.வி. யில் மிக விரைவில் காணத் தவறாதீர்கள்

இந்த கிண்டல் கலைஞரை மிகவும் பாதித்து விட்டதாம்……

விடுவாரா கலைஞர்….புலம்பி தீர்த்து விட்டார்…..அவரின் புலம்பலின் விரிவான சுறுக்கம்

““என்ன; கலைஞருக்கு மகன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு பேரன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு பேத்தி இருக்கக் கூடாதா? அவர்கள் திரைப் படத்துறையிலே ஈடுபடக் கூடாதா? வேறு யாருக்கும் வாரிசுகள் இருந்து, அவர்கள் அந்தந்த துறையிலே ஈடுபட்டதே கிடையாதா? நான் உதாரணத்திற்காக சொல்கிறேன். இங்கேயுள்ள நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் மகள்கள், மருமகன் தனுஷ் ஆகியோர் இல்லையா? அந்தக் குடும்பத்திலே ரஜினி மட்டும் தான் நடிக்கலாமா? தனுஷ் நடிக்கக் கூடாதா?”

இதைத்தானே சுவதருமம் என்கிறது பார்ப்பன தத்துவம்….அதை தமிழகத்து குல்லுக பட்டர் ராஜாஜி, அதாவது கலைஞர் கூட்டத்தின் முதல் கூட்டாளி குலக்கல்வி திட்டமென அறிவித்தார்...பெரியார் மற்றும் சில தமிழக தலைவர்களின் எதிர்ப்புக்கு பிறகு கைவிடப்பட்டது..

ஆனால், இதே கலைஞர் தமது இயக்க மேடைகளில் படத்தில் மட்டும் பெரியாரை வைத்துக் கொண்டு, தம் குடும்பம் அரசியலில் மட்டும்தானா கொள்ளையடிக்க வேண்டும், வாரிசு வாரிசாய்

சினிமாவில் கொள்ளையடிக்க உரிமையில்லையா? என்று மனுதரும காவலர் என்ற உரிமையோடு கேட்கிறார்…(மக்கள் தலைவர் சு.சாமிக்காக சூத்திர வழக்கறிஞர்களை அடித்து நொறுக்கியது நினைவில் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல..)

பூணூல் கூட்டத்திற்கோ இந்நேரத்தில் வேறு சிந்தனை நூலறியா, பூணூலறியா வடிவரசி மம்மி ஜெயலலிதாதான் சுரண்ட வேண்டும். அந்த அம்மா எவ்வளவு வெளிப்படையா ஆர்லிக்சு மட்டும்தான்(அழுத்தம் எமது) திருடலைன்னு சொல்றாங்க….தமிழகத்து பிஜேபியின் தலைவராக, மன்னிக்கவும், அ.தி.மு.கவின் தலைவியாகவும் இருக்கிறார். அப்படியிருக்க மிக மிக என்று 100க்கு மிகாமல் போட்டுக் கொள்ளும் தலைவனை கொண்ட அமைப்பு எப்படி சுரண்டலாம்…..

தெற்காசிய முதலாளித்துவத்தின் புனைபெயரான பார்ப்பனீயத்தை காப்பாற்றா விட்டால் கண்ணன் என்னும் Play Boy கடவுள் வந்து அவதாரம் எடுத்து ஜகத்தை அழிச்சுடுவாரோயில்லையோ……

ஏதோ கலைஞர் ஈரோட்டு நினைப்பில் தமிழர் தலைவர்(எத்தனை பேருடா கிளம்பிருக்கீங்க?) வீரமணி எழுதிய கீதையின் மறுபக்கம் நூலை ராமகோபாலனுக்கே கொடுத்தார்..அதற்கு பரிகாரமாய்த்தான் வைத்தியநாதனையும், இந்து ராமையும் அழைத்து அழைத்து செம்மொழி மாநாடு நடத்தி விட்டாரே? இன்னும் ஏன் இந்த பார்ப்பனர்களுக்கு தன் மீது கோபம் தொடர்கிறது என்பதுதான் கலைஞரின் உள்மன ஆதங்கம்..

(செம்மொழி‍ - காரணப் பெயர்

செல்லும் இடமெல்லாம்
செருப்படி
வாங்கி
சிவப்பாய் குருதி வழியும்
உதடுகளால்
பேசப் படுவதால்
பாவலர் அறிவுமதி)

பார்ப்பனீயம் உட்பட அனைவரது கருத்துக்களையும் அரவணைத்துச் செல்லும் கருணாநிதியின் இந்த உயர்ந்த அரசியல் பண்பை பார்ப்பன பத்திரிக்கைகள் புரிந்து கொண்டார்களா? நன்றி கெட்டவர்கள்...மீண்டும் அவர்களின் பார்ப்பன பாசம் ஜெயலலிதாவை நோக்கி திரும்பி போக வைத்து விட்டதே என்ற வருத்தம்தான் தமிழக கருணாவை வாட்டி வதைக்கிறது

(பொறுக்கி தின்பதற்கு பெயர் இந்நாட்டில் அரசியல் பண்பு, கூட்டணி தருமம்)

ஆனால் , இதற்கெல்லாம் அசந்திடுவோமா என "சுரண்டல் பார்ப்பனீயத்தின் சொத்து, ஐந்தாண்டுக்கு மேல் உமக்கு ஜால்ரா தட்ட முடியாது" என்று புரட்சி முழக்கத்தோடு கிளம்பிற்று காண் சிங்க சமஸ்கிருத கூட்டம்(நன்றி: செம்மொழி மாநாடு).

பூணூல் தத்துவம் பாசம் வெற்றி பெறுகிறதா? அல்லது பூணூல் வெற்றி பெறுகிறதா என்று பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும்அதுவரை மானாட மயிலாட பார்ட்-5..

தமிழ் வாழ்க!!!

கருத்துகள் இல்லை: