திங்கள், 8 டிசம்பர், 2014

கீதை புனித நூலா?





கீதை புனித நூலா?
=================
கீதையில் கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு கீதா உபதேசம் செய்தானாம்...அதுவும் சண்டைக்கு நடுவுல.....அந்த புத்தகத்த இந்துக்கள்னு சொல்ற பெரும்பாலானவஙக பார்த்திருக்க கூட மாட்டாங்க...அப்படியே பார்த்திருந்தாலும் ஒருமுறை கூட படிச்சிருக்கா மாட்டாய்ங்க... இவ்வளவு பெரிய உரையாடலை சண்டைக்கு நடுவுல செஞ்சிட்டிருக்க முடியுமா? அப்படி செஞ்சிட்டிருந்தா அவன் லூசுப்பயலா இருக்க மாட்டானா? ஆனா, அதுதான் கீதா உபதேஷமாம்...

கீதா சரி சூழலை விட்டுட்டு உள்ளடக்கத்துக்குள்ள போலாம்னு பார்த்தா? அங்கேயும் பைத்தியக்காரத்தனம்...

அர்ஜூனன் தன் குடும்பத்தினரை கொன்னா....வர்ணாசிரம கட்டுப்பாடு சிதைஞ்சிடுமே...சாதிக்கலப்பு ஏற்பட்டுமேனு கவலைப்பட்டானாம்...அதை கிருஷ்ணன்கிட்ட சொன்னானாம்..
நீ ஏன் அதுக்கெல்லாம் பயப்படுறே, நான் அவங்களை ஏற்கனவே கொன்னுட்டேன்...நீ கொல்றதா நினைச்சு அகந்தையா திரியாதே...போ..போய் கொல்லுனு தைரியம் கொடுத்தானாம்...அப்படி தைரியம் கொடுக்கிறதுக்குதான் பெரிய உருவம் எடுத்து கண்கட்டி வித்தை காமிச்சானாம்….உடனே, பாஞ்சாலியை அடகு வச்சு ஆடுன கும்பலின் தலைமை தளபதி அர்ஜூனனும் அவங்க சகோதரர்களை சீவு, சீவுன்னு சீவிட்டானாம்…

இந்த கப்சா கதை எங்கே இருந்து எதற்கு எதிராக உருவாக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள புத்தனோட கதை இருக்கு…

புத்தரோட ஊருக்கும், பக்கத்து ஊருக்கும் காவிரி போல நீர்சிக்கல் வருது….பக்கத்து ஊரின் மீது போர் தொடுக்க புத்தரோட ஊர்காரங்க சொல்றாங்க…புத்தர் நீருக்காக போரெல்லாம் வேண்டாம், பேச்சுவார்த்தையின் மூலமே பிரச்சினையின் தீர்க்கணுங்கிறாரு…ஒத்த முடிவை எட்ட முடியாத போது வாக்கெடுப்பு நடக்குது, புத்தருடைய வாதம் தோத்துப் போகவே, அவர் காட்டுக்கு அனுப்பப்படுறார்….அதற்கு பிறகு புத்தர் சனாதன தருமத்திற்கு எதிராக தன்னுடைய கருத்து யுத்தத்தை தொடர்ந்தார், அதின் சனாதன தருமம் பெரிய வீழ்ச்சியை சந்திச்சது…

புத்தரோட கருத்துகள் செல்வாக்கு செலுத்தி வந்த சமூகத்துல, புத்தரோட கருத்த வீழ்த்த நுட்பமாக உருவாக்கப்பட்டதுதான் இந்த கீதை…

இந்த காப்பியடிச்சு, கூடவே நஞ்சு கலந்த புத்தகத்த சுஷ்மா சுவராஜ்ங்கிற அம்மணி புனித நூலாக்கணுங்குது…..

அந்த புனித நூல பெண்கள் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள்னு சொல்றதை தெரிஞ்சுதான் சொல்லுதா, இல்ல தெரிஞ்சே சொல்லுதாங்கிறது அந்த அம்மணிதான் சொல்லணும்…

அப்புறம் கீதைக்கு சொம்படிக்கிற சூத்திர பசங்க உள்ளிட்ட பெருமைக்குரியர்கள்..சூத்திரர்கள் என்றால் தாசி மக்கள் என்று கீதை சொல்வதையும், கீதை அர்ஜூனனுக்கு சொல்லப்படுவதற்கு முன்பாக மனுவுக்கு சொல்லப்பட்டதாக கிருஷ்ணன் சொல்வதையும் நினைவில் கொள்ளல் வேண்டும்..
கீதைல கிருஷ்ணன் நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேங்குறாரு…அதை நானே நினைச்சாலும் மாத்த முடியாதுங்கிறாரு…..தமிழ்நாட்டுல கஷ்டப்படுற பிராமணர்கள் கிரிக்கெட்ல, வங்கில, இன்னும் பல பன்னாட்டு நிறுவனங்கள்ல, கிரிக்கெட்ல கோலோச்சுவதற்காக கிருஷ்ணன் படைச்சாரோ?
வர்ணம் சாதி இல்லீங்க…அது வேறங்க பலர் சொல்லலாம்…குணத்தின் அடிப்படையில் அது மாறக்கூடியதுன்னு சொல்லலாம்..

எங்கய்யா மாறுச்சு….
-------------------------
கட்சிக்கு கட்சி தாவும் எஸ்.வி.சேகரை பிராமணனா இருக்க தகுதியில்லன்னு யாராவது தகுதிநீக்கம் பண்ணாங்களா?
சாராய கம்பெனிகளின் உயர்மட்ட பொறுப்பிலிருந்து ப்ரோக்கர் வேலை பார்க்கும் சோ.ராமசாமியையோ, அகில உலக ப்ரோக்கர் சு.சாமியையோ இதுவரைக்கும் தகுதி நீக்கம் பண்றேன்னு ஒத்த இந்து அமைப்பு இதுவரைக்கும் சொல்லிருக்கா?

வர்ணத்த படைக்கிறதோட நிக்காம, அவனவன் சுவதருமத்தை செய்யணும்னு சொல்றதுக்கு பெயர் என்ன? பிராமணனுக்கு சுயதர்மம் என்ன? சூத்திரனுக்கு சுயதர்மம் என்ன?

சுரண்டி திங்கிறதுக்கும், கொலை பண்றதுக்கும், ஏமாத்தி பொழைக்கிறதுக்கு ஐடியா கொடுக்கிற நூல்தான் புனித நூல்னா….அந்த நூலை அறுக்கிறதுதானே உழைக்கும் மக்களின் கடமையாக இருக்க முடியும்…

--------------------------------------------------------------------
அல்லது கீதையின் உபதேசத்தின் படி,

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அதுவே நன்றாகவே நடக்கிறதுன்னு இருந்தீங்கனா?

நாம விளங்கவேமாட்டோம்…..நம் அடிமைத்தனத்திலிருந்து நாம் மீளவே முடியாது?

கருத்துகள் இல்லை: