சாதிகள் இடையே சண்டையடி
நல்ல சமத்துவ போர் வந்ததடி
மங்கிய வீரன் பொங்கி எழுந்து
ஆயுதம் ஏந்தியே வாரானடி
போர் ஆயுதம் ஏந்தியம் வாரானடி
சிவனும் மீண்டு எழுந்தானோ?
அந்த முருக பெருமான் வந்தானோ?
முத்தமிழ் தந்த மூத்த தமிழன்
நக்கீரன் வாயை திறந்தானோ?
மதுரை வீரன் வந்தானோ?
நல்ல மயக்கும் மொழியில் தந்தானோ?
காவேரி சோழன், காத்தவராயன்
கண்களை திறந்து கொண்டானோ?
அழகன் சுடலை மாடனோ?
ஆயுதம் ஏந்திய அழகனோ?
கட்டை விரலை தந்திட மறுத்த
ஏகலைவன் வந்தானோ?
புது ஏகலைவன் வந்தானோ>?
சாதிய கனல்கள் அழியட்டும்
காதலர் பூங்கா மலரட்டும்
சாதிகள் இல்லா சங்கத் தமிழ் தந்த உலகம்
மீண்டும் உதிக்கட்டும்
தமிழ் உலகம் மீண்டும் உதிக்கட்டும்
அம்பேத்கர் போட்ட விதைகளாம்
அந்த அறிஞன் வளர்த்த செடிகளாம்
ஆலம், அரசம் நிழல்கள் தந்திட
வானம் தொட்டு வளர்ந்தோம்
நீல வானம் தொட்டு வளர்ந்தோம்.......
இருள் நீக்க வளர்ந்தோம்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக