செவ்வாய், 4 நவம்பர், 2008

மாங்குளம் நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 10 படையினர் பலி

[திங்கட்கிழமை, 03 நவம்பர் 2008, 10:48 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
மாங்குளம் நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

வன்னிவிளாங்குளத்திலிருந்து மாங்குளம் நோக்கி சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 12:00 மணியளவில் முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.

பிற்பகல் 5:00 மணியளவில் படையினரின் முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

இதில் 10 படையினர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர் என களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


http://www.puthinam.com/full.php?201VoA20eUcY42eacA4y3bdC6D74dc71e3cc4YmI3d42mOA3a03QMH3e

கருத்துகள் இல்லை: