சிறீலங்கா பொருளாதாரம் மிக மோசமான நிலையை நோக்கிச் செல்வதாக அனைத்துலக நாணயநிதியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது. இந்த அறிக்கையில்:
25 வருடங்களுக்கு மேலாக நடைபெறும் மோதல்களால் பொருளாதாரம் மிக மோசன நிலையை நோக்கிச் செல்கின்றது. 2008ம் ஆண்டு சிறீலங்காவின் பணவீக்கம் 23.9 விழுக்காட்டினை எட்டியுள்ளது.
நாயணத்தின் பெறுமதியை அதிகரித்தமை, நேர்த்தியான வரவு - செலவு பாதீட்டை பேணாமை, வெளிநாடுகளுடைய கடன்களில் தங்கியிருப்பது போன்ற காரணிகளால் தற்போது அதன் பொருளாதாரம் மோசமான நிலையை நோக்கி சென்றுள்ளது.
பொருளாதாரத்தின் சமமற்ற தன்மை, உயர் பணவீக்கம், வெளிநாட்டுக் கடன் நிதி தொடர்பான அழுத்தம் போன்றவற்றால் இலங்கையின் பொருளாதார பாதிக்கும் அச்சம் காணப்படுகின்றது.
சிறீலங்காவின் பணவீக்கம் ஒக்டோபர் மாதத்தில் 23.4 வீதமாகக் காணப்பட்டது. பொதுச் செலவுகளைக் குறைக்குமாறும், உட்கட்டுமான நிதிக்கு மில்லியன் ரூபா செலவு செலவு செய்வது குறித்தும் நாணய நிதியம் ஏற்கனவே இலங்கைக்கு அறிவுரை வழங்கியிருந்தது.
இந்த நிலையில் இலங்கை மத்திய வங்கி இருவருடங்களுக்கு 200 மில்லின் டொலர்களைப் பெறுவதில் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றது. வெளிநாட்டு வணிக வங்கிகளிடம் இருந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவது குறித்தும் பேச்சுகளை நடத்தி வருகின்றது அனைத்துலக நாணய நிதியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
http://www.pathivu.com/news/388/34//d,view.aspx
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக