செவ்வாய், 29 ஜனவரி, 2008

மனிதம் போதும், கடவுளும் வேண்டாம்,சாதியும் வேண்டாம்,மதமும் வேண்டாம்.


பக்தர்கள் சிந்தனைக்கு!!!!
1) உலகை படைத்தது கடவுள் எனில், கடவுளை படைத்தது யார்?
2) நடமாடும் மனிதனுக்கு ஒண்ட குடிசையில்லை, ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?
3) குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்?
4) கடவுளர் படை இருக்க,எல்லையில் காவற்படையினர் ஏன்?
5) எல்லாம் வல்ல கடவுளின் கோயிலுக்கு பூட்டும், காவலும் ஏன்?
6) எல்லாமே அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும் எவன் செயல்?
7) ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளி-தொழிலாளி,ஏழை-பணக்காரன், பார்ப்பான்-சூத்திரன் என்ற ஏற்றத்தாழ்வு எதற்கு?
8) பல அவதாரங்கள் எடுத்த கடவுள், தேவதூதர்கள் அனுப்பிய கடவுள், இன்றைய சூழலில், தீவிரவாதத்திற்கு எதிராக், லஞ்சத்திற்கு எதிராக அவதாரம் எடுப்பதோ, தூதர்களை அனுப்புவதில்லையே ஏன்?
9) அவனின்றி ஓரணுவும் அசையாது எனில், கோயில் சிலை களவு போவதேன், மக்கள் வாகனங்களில் எரிபொருள் நிரப்புவது ஏன்?
10) கடவுள் தேர் மனிதனால் இழுக்கபடுவது ஏன்?
11) அன்பே உருவான கடவுளுக்கு ஆயுதங்கள் எதற்கு?
12) குழந்தைகள் கட்டுப்பாடுக்கு பிறகு கடவுளால் குழந்தை படைக்க முடிவதில்லையே ஏன்?
13) கடவுள் தூணிலும் இருப்பான் எனில் மலத்தில் இருப்பானா?
14) ஆண்டவன் ஆணா? பெண்ணா?
15) கடவுளுக்கு பெண்டாட்டி பிள்ளை எதற்கு?
16) திருமணம் சுவர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது எனில் காதலும், கள்ளக் காதலும் எஙகு நிச்சயிக்கப்படுகிறது?
17) விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்று சொல்பவர்கள் நோய் வந்தால், மருத்துவரிடம் செல்வது ஏன்?
18) தீங்கு என்பது சாத்தானின் செயல்கள் என்று கூறுபவர்கள், மக்களுக்கு தீங்கு செய்யும் அந்த சாத்தானை கடவுளால் ஏன் கொல்வ இயலவில்லை என்று ஏன் சிந்திப்பதில்லை?
19) தனக்காக சுயநலத்தோடு பிரார்திக்கும் பக்தர்கள், இலங்கையில் நம் உறவுகள் கொல்லப்படாமல் இருப்பதற்குஎனோ பிரார்திப்பதில்லை?
20) சரசுதியை வணங்கும் இந்நாட்டில் தற்குறிகள் இருப்பது ஏன்?
21) இலட்சுமியை வணங்கும் இந்நாட்டில் வறுமை இன்னும் பரவ்லாக இருப்பது ஏனோ?மாறாக இவர்களை வணங்காத அமேரிக்கா,ரஸ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் கல்வித்துறையிலும், பொருளாதாரத்தில் முன்னேறியிருப்பது ஏனோ?
22) ஆத்திகனை படைத்தது கடவுள் என்றால், நாத்திகனை படைத்தது யார்?
23) கடவுள்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்றால், கடவுள் இல்லை என்று சொல்வதற்கும் அவன்தான் காரணமோ?
24) திருச்செந்தூரில் முருகன் இருந்த்தால் சுனாமி இல்லை என்று கூறும் பக்தர்களே, சென்னையில் ஓம் சக்தி இருந்தும் சுனாமி வந்தாது ஏனோ?
25) கடவுளுக்கு பெயர் வைத்தவன் யார்?
26) மதச்சண்டைகள், சாதிச்சண்டைகள் பெருகி கொண்டிருக்கும் இந்நேரத்தில் கடவுள் மக்கள் முன் தோன்றி நான் மதங்களுக்கும், சாதிக்கும் அப்பாற்பட்டவன் என்று இச்சச்சர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமல்லவா?
27) மயிரை-மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கை, கால்களை ஏன் வெட்டி காணிக்கை செலுத்துவதில்லை?
28) திருப்புகளைப் பாடபாட வாய் மணக்கும் என்று கூறும் பக்தர்கள் பல் விளக்காமல் இருப்பார்களா?
29) பிள்ளையார் போல பிள்ளை பிறந்தால், கொஞ்சுவீர்களா? அஞ்சுவீர்களா?
30) மணத்திற்கு மனம் பாராமல், சாதி பார்க்கும் பெற்றோர்களே, மருத்துவமனை இரத்த-தேவைக்கு ஏனோ சாதி பார்ப்பதில்லை?
31) கடவுள் படங்களை நாத்திகர்கள் எரித்தால் கூச்சல் போடும் பக்தர்கள், சாமி படம் போட்ட பட்டாசை கொழுத்தலாமா?
32) நோய் கடவுளின் தண்டனை என்றால், நோய்க்கு மருந்து கொடுக்கும் மருத்துவர் கடவுள் எதிரியா?
33) பெண் சாமிக்கு ஆண் பூசாரி சேலை கட்டலாமா?
34) ஐயப்பன் கோயிலில் பெண் நுழைந்தால் தீட்டு என்றால், பெண் மூலம் பிறந்த ஆண் தீட்டில்லையா?
35) கடவுளுக்கு வருடம் ஒரு கல்யாணம் செய்து வைக்கும் பக்தர்களே, இதுவரை அந்த கடவுளர்க்கு பிறந்த குழந்தைகள் எத்தனையோ?
36) பெண்ணின் உடம்பில் இருந்து பிறந்த அழுக்குருண்டை (பிள்ளையார்) எப்படி கடவுளாக முடியும்?
37) தன் உடம்பில் உள்ள அழுக்கை வைத்து குழந்தை செய்யும் அளவுக்கு அளுக்கு இருந்ததென்றால் எத்தனை நாள் குளிக்காமல் இருந்தாளாம் அந்த க்டவுள்?
38) கன்னிக்கு பிறந்தவன் கடவுள் என்றால்? கிருஸ்துவர்கள் கர்ணனையும், இந்துக்கள் இயேசுவையும் கடவுளாக ஏற்று கொள்ளத் தயாரா?
39) பூணூல் போடுபவன் மேல் சாதி என்றால், பஞ்சு தயாரிப்பவனும், நூல் நூற்பவனும் அவனைவிட மேல்ச் சாதியில்லையா?
40) பக்தனே நீ கை வைக்காமல் கற்(கடவுள்) சிலை ஒரு அடி நகருமா?
41) பிள்ளை பெறுவதற்கு அரசமரம் சுற்றும் பெண்களே, பிள்ளை வேண்டாம் என்பதற்கு எந்த மரம் சற்றுவீர்கள்?
42) ஐயப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழக கடவுள்களையும், கோயில்களையும் என்ன செய்யலாம்?
43) நாற்பத்தோரு நாட்கள் நல்லவர்களாக் நடிக்கும் ஐயப்ப பக்தர்கள், பிற நாட்கள் ஏனோ ஒழுக்கதோடு இருப்பதில்லை? உங்கள் ஐயப்பனும் தட்டி கேட்பதில்லை?
44) தீக்குண்டம் மிதிப்பவர்கள் அதில் படுத்து உருண்டு காட்டுவார்களா?
45) பச்சை இரத்தம் குடிக்கும் காட்டுமிராண்டி சாமியார்கள், பாலிடாயில் குடித்து காட்டுவார்களா?
46) சாமியாடுபவர்கள் மின்சாரம் பாயும் கம்பியை தொடத்தயாரா?
47) அம்மை நோயை தடிப்பது ஆத்தாளா? மருத்துவமனையா?
48) பக்தனே நீ கை வைக்காமல் உன் கடவுள் ஒரு அடி நகருமா?
49) அன்று பேசிய, நடமாடிய கடவுள் இன்று நடமாடுவதில்லையே ஏன்?
50) பக்தியுள்ளவன் படிக்காமல் பாஸ் ஆவானா?
51) கோபியர் கொஞ்சிய கண்ணன் இன்று பிறந்தால் எத்தனை பக்தியுள்ள பெண்கள் தயார்?
52) தூதர்களை அனுப்பிய கடவுள் தானே வருவதில்லையே ஏன்?
53) இயற்கை கடவுளின் அற்புதம் என்றால் ஏழ்மையும்,ஊனமும் அவன் செயல் இல்லையா?
54) ஆடு கோழி ஆகிய மிருகங்களை கடவுளுக்கு பலியிடும் பக்தர்கள் ஏனோ புலி, சிங்கங்களை பலியிடுவதில்லை.
55) விழியால், புலனால் அறிய முடியாதவன் கடவுள் என்றால் கடவுள் உண்டென்று நீ எதை கொண்டு நம்புகிறாய்.
56) இயற்கை என்னும் அற்புதத்தால் நம்புகிறாய் என்றால்! செயற்கை அற்புதங்களான அறிவியல் கண்டுபிடுப்புகளை கடவுள் ஏனோ படைக்கவில்லை?
57) சோதிடம் உண்மையென்றால் காவல்துறை எதற்கு?
58) விதி உண்மையென்றால் நோயை தடுக்கும் மருத்துவம் எதற்கு?
59) சோதிடம் பார்த்து செய்யப்படும் திருமணங்கள் மணவிலக்கு கோருவதில்லையா?
60) தமிழன் வறுமையில், சாதியில் வாடி கொண்டிருந்த நேரம் இயேசு தமிழகத்தில் ஏனொ அவதரிக்க வில்லைச
61) கடவுள் தன் தூதனை ஏற்கனவே அரபுப் பிரதேசத்திற்கு அனுப்பியிருக்க அடுத்த தூதனை சாதி பிரச்சனையில் தவித்து நம் மக்களை விடுவிக்க ஏன் அனுப்ப வில்லை.