கடலூர், ஏப். 24-
மாவட்ட ஆட்சியர் பூஜைக்கு வருவதாகக் கூறி கோவில் அர்ச்சகரிடம் இரண்டாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஒருவர் ஓடிய தால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மஞ்சைநகர் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே வினைதீர்த்த விநாயகர் கோவில் உள்ளது. இதன் அர்ச்சகர் அறிவழகன். 45 வயதுள்ள டிப்டாப் ஆசாமி அங்கே வந்தார். அவர் அர்ச்சகரிடம் அங்கன்வாடி பணியாளராக நான் இருக்கிறேன். நாங்கள் 40 பேர் சேர்ந்து விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்புப் பூஜை செய்ய உள்ளோம். இதற்கு வாங்க வேண்டிய பொருள்களின் பட்டியலும் இரண்டாயிரம் ரூபாயும் கொடுங்கள். மாவட்ட ஆட்சியர் இதில் கலந்து கொள்கிறார். பொருள்களை வாங்கி வந்து கோயிலில் வைத்து விட்டு நான் பணத்தை எடுத்து வந்து தருகிறேன் என்று கூறினார்.
பணத்தை வாங்கிச் சென்றவர் திரும்பி வராததால் அர்ச்சகர் புலம்பத் தொடங்கினார். பூஜை செய்ய வந்தவர் அர்ச்சகரிடம் பணம் கேட்ட போதே, உனக்கு வேண்டுமானால் நீயே உனது பணத்தைக் கொண்டு பொருள்கள் வாங்கி வா என்று அர்ச்சகர் சொல்லி பணம் கொடுக்க மறுத்திருக்கவேண்டும். விநாயகர் பொம்மை நன்மை செய்யும் என்று நம்புவதைப் போலவே வழிப்போக்கன் சொன்னதையும் நம்பிவிட்டார் போலும்! எத்தனுக்கு எத்தன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக