பெருங்கதையாதடல் எதையுமே பெரியார் உருவாக்கவில்லை என எப்படி சொல்வது, பகுத்தறிவு என்ற பெருங்கதையாடலை அவர் முன் வைக்கவில்லையா? என்ற கேள்வி எழலாம்.
" பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்கு மட்டும்தான் பகுத்தறிவு உண்டு. இதில் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறானோ, அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்." (ஆனைமுத்து தொகுப்பு பக்: 129(௧௨௯))
என்று பகுத்தறிவின் புகழ் பாடியவர் அவர். பகுத்தறிவாளர் கழகங்களை அமைப்பது திராவிட கழக செயல்பாடிகளில் ஒன்றாக இருந்தது. ஆனால், மதத்தின் ஆட்சி என்பதற்கு பதிலாக பகுத்தறிவுப் பார்வை என்ற அளவில்தான் அவரது சொல்லாடல்கள் அமைந்தன.
தமை காட்டுமிராண்டிமொழி என அவர் சொன்னதுகூட இந்த பொருளில்தான் மதத்திலிருந்து பிரிக்கபடாதது என்கிற வகையில் தமிழ், பகுத்தறிவில் தாழ்ந்த நிலையில் உள்ளது.எனவே அது காட்டுமிராண்டி மொழி அவ்வளவுதான்.
எல்லா பிரச்சனைகளுக்கும் எல்லா மக்களுக்கும் எல்லாக் காலங்களுங்களுக்குமான முரணற்ற தீர்வாக அவர் பகுத்தறிவு உட்பட எதையும் முன்வைக்கவில்லை. முற்றுண்மையான வரையறைகளை உருவாக்குதல், முழுமையான கோட்பாடு உருவாக்கங்களைச் செய்தல் என்பதற்கு அவர் தொடர்ச்சியாக எதிராகவே இருந்தார். அவர கட்ட விழிப்பிற்கு பகுத்தறிவும் தப்பவில்லை. பகுத்தறிவு மற்றும் மனித ஜீவிகள் குறித்த அவரது கீழ்க்கண்ட மதிப்பீடுகள் இதனை தெளிவாக்கும்.
" ஆகாரம் நித்திரை, ஆண்-பெண் சேர்க்கை ஆகீய தேவைகளில் மற்ற ஜீவன்கலிடம் உல்ள தேவைகளே மனிதனிடமும் காணப்படுகின்றன. இன்னும் பேசப்போனால் மற்ற ஜீவன்களிடையே அதிகமாகவும் காணப்படுகின்றன. அதிருப்தி என்ற கெட்ட குணம் மனிதனிடமே அதிகமாக இருக்கிறது. வேலை என்ற கெட்ட குணமும் மனிதனுக்கே அதிகமாக உண்டு. தன் இனத்தை அடிமைப்படுத்தி அதை கொடுமைப்படுத்தி வாழும் கெட்ட குணமும் மனித ஜீவனிடத்திலே அதிகமாக இருந்து வருகின்றது. தனக்கு புரியாததையும் நம்புதல், பேசுதல், நம்பச் செய்தல் முதலிய மூடதன்மை குணம் மனித ஜீவனிடத்திலே அதிகமாய் இருந்த்த் வருகிறது... இது போன்ற எத்தனையோ கெட்ட குணங்கள் மனித ஜீவன் தனது பகுத்தறிவின் பயனாகவே உடையதாகவே இருக்கிறது ஆகையால் பகுத்தறிவின் மேன்மையால் மனித ஜீவன் சிறந்தத் என்று எப்படி கூற முடியும்." (ஆனைமுத்து தொகுப்பு பக்: 1132-33 )
என்று கேட்பவர் மற்றோரிடத்தில்,
தன்பிள்ளை , குட்டி, பேத்து பிதிர் ஆகிய சந்ததிகளை பற்றிய முட்டாள்தன்மான கவலை பகுத்தறிவுள்ள மனிதனுக்குதான் இருக்கிறதேயொழிய பகுத்தறிவில்லாதவைகளுக்கு இல்லை....பகுத்தறிவில்லாத எந்த உயிரும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை; தன் இனத்தை கீழ்மைபடுத்தி வாழ்வதில்லை; தன் இனத்தில் உழைப்பிலேயே வாழ்வதில்லை; தன் இனத்தின் மீது சவாரி செய்வதில்லை.
பகுத்தறிவுள்ள மனிதன் தன் இனத்தை கீழ்மைபடுத்துகிறான். வாகனமாய் பயன்படுத்துகிறான். சோம்பேறியாய் இருந்து தன் இனத்தின் உழைப்பிலேயே வாழ்கிறான். பாடுபட ஒரு கூட்டமாகவும் , பயன் அனுபவிக்க இன்னொரு கூட்டமாகவும் பிரிந்து வாழ்கிறான்.
எடுத்துக்காட்டுக்கு நாய், கழுதை,பன்றி என்கிற இழிவான மிருகக்கூட்டத்தில் பார்ப்பன சாதி, பறைசாதி, நாயுடுசாதி, முதலிசாதி என்கிற பிரிவுகள் கிடையா. ஆனால் மனித வர்க்கத்தில்தான் தன் இனத்தையே பிரித்து இழிவுப்படுத்துகிறான்
மனிதன் மீது மனிதன் சவாரி செய்கிறான், மனிதன் உழைப்பை மனிதன் கொள்ளை கொள்கிறான், மனிதன் மனிதன் வஞ்சிக்கிறான், பகுத்தறிவின் பயன் இதுவாக இருக்கும்பொழுது மனிதன் நேர்மையானவன் என்று எப்படி சொல்ல முடியும்" ஆனைமுத்து தொகுப்பு பக்:1115)என்று வினவுகிறார்.
மனித ஏற்றத் தாழ்வுகள் பகுத்தறிவின் மூலமே நியாயப்படுத்தப்படுகின்றன. பகுத்தறிவின் ஆட்சி நடைபெறுகிற மேலை நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல, வரலாற்றில் ஏற்றத்தாழ்வுகளையும், அதிகாரங்களைடும், சுரண்டல்களையும் நியாயப்படுத்துகிற காரியத்தை அறிவும், தர்க்கமும் சிறப்பாகவே செய்து வருகின்றன. அறிவின் வன்முறையைப் பெரியார் விளங்காதவரல்லர்.
-பெரியார்? அ.மார்க்ஸ் நூலிருந்து
வெளியீடு: பயணி வெளியீட்டகம், 6/114வது குறுக்குத்தெரு, வெள்ளாளத் தேனாம்பேட்டை, சென்னை-86. செல்:(9445124576)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக