எங்கள் சோகம், நாளை பதில் சொல்லும்
தம் மகனுக்கு முதுகில் காயம்பட்டால் அவனுக்கு பால் சுரந்த முலையறுத்து எறிவேன் என்றாலாம் ஒரு தமிழ்த்தாய்,
நீங்கள் முதுகில் குத்துகிறீர்களே, எதை அறுத்து எரிவது
எங்கள் சாவின் விளிம்பிலும் உங்களுக்கு இரக்கம் இல்லை,
உங்கள் நாவின் விளிம்பிலும் உண்மை இல்லை.
துரோகம்! துரோகம்!!
நாங்கள் உயிருக்காக அழுகிறோம், உரிமைக்காக அழுகிறோம்,
நீங்கள் ஓட்டுக்காக அழுகிறீர்கள்
எங்கள் இனமானம் குப்புற விழுந்து கிடக்கிறது, மண்டியிடச் சொல்கிறான் எதிரி. எங்கள் இனத்தலைவனாம் நீ, முதல் ஆளாக மண்டியிட்டுக் கிடக்கிறாய்
எம் உறவுகளின் உரிமைகளை முகம்காண முடியாத அளவு பேரினவாதம் சிதைத்துக் கொண்டிருக்கிறது, முகம் காணாதவர் போல் இருக்கிறது உலகம், நடிக்கிறது எம்மிடம்.
என் தம்பி அடிபட்டு கிடக்கிறான் என்னால் தங்க முடியவில்லை,
ஆனால், துரோகியும், எதிரியும் அவ்வலியை உணர வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது தவறுதான் என்று இன்றுவரை உள்ளத்திற்கு புரிய மாட்டேன் என்கிறது.
நாய்களே உங்களை நோக்கியே மீண்டும் கோரிக்கை வைத்து உங்கள் வீட்டுவாசலிலல்லவா கூடி அழுகிறது எம் இனம்
எம் தாய்மார்களின் மார்பில் வெடிவாசனை, கண்களில் கண்ணீர், கருப்பையில் வெடிகுண்டு.
எந்த இனமும் காணாத துயரம் நாங்கள் கண்டோம், கண்டு கொண்டிருக்கிறொம்.
துரோகிகளே!எங்களிடம் அழ கண்ணீர் இல்லை, நாங்கள் அழுதால் கண்ணீரை சேமித்து அதையும் பையிலிட்டு, விற்று காசாகவோ, ஓட்டாகவோ தின்று விடுவீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக