வியாழன், 14 மே, 2009

பாரிய இன அழிப்புக்கு முன்பான சிங்கள இனவெறியின் பொய் பிரச்சாரம்.

சிங்கள பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் கீழ்க்கண்ட இணைப்பில்

http://www.defence.lk/new.asp?fname=20090514_09



நச்சு எரி குண்டுகளை புலிகள் மக்களின் மீது பயன்படுத்த போவதாகவும், இதனால் பாரிய மனித அவலம் ஏற்பட போவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. இது பொய் பிரச்சாரம் என்று விளங்கிக் கொள்ள கீழ்கண்ட செய்திகளை பொருத்திப் பாருங்கள்.


முதலில் இந்த படங்களை பாருங்கள்,


இனத்திற்காக போராடும் போராளிகளை, சிங்கள இனவெறி எம் இனத்தை சொல்லொண்ணா கொடுமைகளை ஆளாக்கி, எம் இனத்திற்கு போராட களத்திற்கு எம் சகோதரர்களை இழுத்து நச்சு குண்டு வீசிக் கொன்றிருக்கும் காட்சியை பாருங்கள்




இந்நிகழ்வு நடப்பதற்கு முன்பு 3 மார்ச் 2009 அன்று சிங்கள பாதுக்காப்பு அமைச்சு ஆங்கில இணையதளம் கீழ்க்கண்ட இணைப்பில் புலிகள் நச்சுக்குண்டு மக்கள்மேல் பயன்படுத்த வைத்திருப்பதாகவும், அதில் சிலவற்றை கைப்பற்றியதாகவும்

கீழ்க்கண்ட இணைப்பில் கூறியுள்ளது. படங்கள் வேறு வெளியிட்டிருக்கிறது.

http://www.defence.lk/new.asp?fname=20090312_05 (3/13/2009 8:45:57 AM)


கீழ்க்கண்டவை அந்த படங்கள்



இந்த செய்திக்கு பிறகு முற்றுகையில் இருந்த போராளிகளிடம் நேரடியாக சண்டையிட்டு வெல்ல முடியாத சிங்கள இராணுவம், நச்சுக்குண்டுகளை வீசிக் கொன்றுள்ளது.

எப்படியாவது, விடுதலைக்காக போராடும் உணர்வை முற்று முழுதாக அழித்திட வேண்டும் என்று முனைப்பு காட்டும் இனவெறி, அதற்காக நச்சுக் குண்டுகளையும் பயன்படுத்தவும் தயங்காது என்பது வெளிப்படை.

இது தொடர்பான செய்தி தமிழ்வின் இணையதளத்தில் கீழ்க்கண்ட இணைப்பில் உள்ளது.

http://www.tamilwin.com/view.php?2bdwC951b0achJpWOe0ec4GYjp20cc375Ls024d332Wv934b30nTQcE4d4eSQG5jcd0ebTf2cude

[திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2009, 12:06.34 PM GMT +05:30 ]


மீண்டும் சிங்களவன் புழுகுகிறான், நம் மக்களை கொன்று குவிக்கத்தான் இந்த பிரச்சாரம் என்று எமக்கு ஐயம் வருகிறது, மக்களே விழிப்போடு இருங்கள்.



கருத்துகள் இல்லை: