மும்பையில் விடுதலை சிறுத்தைகள் சார்பாக அண்ணல் அம்பேத்கர் அவர்களில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நானும் என் தோழர்களை அழைத்துக்கொண்டு உரை எழுச்சியோடு இருக்கும் என்று எதிர்நோக்கி காத்திருந்தோம். எழுச்சியோடு என்றால் என்ன?
1) தன்னிலை மறந்த தாழ்த்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயம் பற்றி
2) மற்றவர்களைவிட தாழ்த்தப்பட்டவர்கள் அதிகளவில் சாதி ஒழிப்பில் ஈடுபட வேண்டியதன் கட்டாயம்.
3) எம்மதம் நம்மை தாழ்த்தி, நம் அடையாளங்களை அழித்து நம் தனித்துவத்தை ஒழித்த்தோ, அம்மத சூழ்ச்சியிலிருந்து வெளிவர வேண்டிய கட்டாயம். இந்துத்தவத்திலிருந்து விடுபட்டு வரவேண்டிய நிர்பந்தம்
4)பகுத்தறிவின் தேவை.
5) நமக்காக பாடுபட்ட மாபெரும் தலைவர்களாகிய அம்பேத்கர் போற்றிய பெரியார், பெரியார் மதித்த அம்பேத்கர் பற்றிய குறிப்புகள்.
6) சாமியார்களிடம் ஏமாந்து திரிவதால், நம் அகச்சூழல் மற்றும் நம் புறச்சூழல் பாதிக்கபடுவது குறித்து.
7) பகுத்தறிவின் தேவை.
8) போராட வேண்டிய சூழல்.
9) வாழ்க்கை முறை மேம்பட அரசியல் அதிகாரம்.
10) தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ளேயே நாம் காட்டும் பாகுபாட்டை ஒழிப்பது
முதலான கருத்துக்களை முழங்குவார் என்று எதிர்பார்த்தோம். அதை திருமாவிடம் தெரிவிப்பதற்காக நாங்கள் பிரதி எடுத்துக் கொண்டு வந்திருந்த துண்டுபிரசுரமும், அத்தோடு சேர்த்து நாங்களும் ஒரு காகித்த்தில் மேற்சொன்ன கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டு மேடையில் அமர்ந்திருந்த ஒரு தோழரிடம் கொடுத்தோம். அதை அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழரிடம் கொடுத்தார். அந்த தோழரோ அதை படித்து பார்த்துவிட்டு படித்து பார்த்துவிட்டு தன் சட்டைபையில் வைத்து கொண்டார். (பிறகு நானே நேரடியாக சென்று அந்த தாள்களின் இன்னொரு பிரதியை திருமாவிடம் கொடுத்துவிட்டு வந்தேன்,என்பது இன்னொரு செய்தி)
இது எப்படிபட்ட சூழல்! தோழர் திருமா சிந்தித்து பார்க்க வேண்டும். தங்களோடு களம் நின்று சாதி ஒழிக்க ஆயத்தாமாய் இருக்கும் என் போன்ற தோழர்களின் கருத்துக்கள் கூட திருமா வரை போக்க்கூட அனுமதிக்கமுடியாத இந்த மாதிரியான கொள்கை அரவேக்காட்டுகளை வைத்துக்கொண்டு நாம் எதை அடையப் போகிறோம். இது ஒரு எடுத்துக்காட்டுதான். ஆனால், இதே போன்று பலர் எல்லா இயக்கத்திலும் இருக்க வாய்ப்புண்டு என்றாலும். சாதி ஒழிப்பு, சமத்துவம் பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இவர்கள் களைகள்,. இவர்கள் கண்டிப்பாக களையப்பட வேண்டியர்கள், அல்லது திருத்தபட வேண்டியர்கள்.
தோழர் திருமா பேசும் போது குறிப்பிட்டார், “எந்த சமூகம் தங்கள் தலைமை யாரென சரியாக தேர்ந்தெடுக்கவில்லையோ அது உருப்படவே செய்யாது” என்று. உண்மை. ஆனால், ஒரு நல்ல தலைமையின் கீழ் கொள்கை-பிடிப்பு, கொள்கை தெளிவில்லாதவர்கள் இருப்பார்களேயானால், அந்த தலைமையின் மேலான நோக்கமே சிதைக்கப்படக்கூடிய அதிகப்படியான வாய்ப்புண்டு என்பதை தோழர் திருமா மறந்து விடக்கூடாது.
நம் மக்கள் அரசியல் படுத்தபட வேண்டும், அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று திருமா கூறினார். கண்டிப்பாக நடக்க வேண்டும். ஆனால், மக்களை அதிகாரத்திற்கு கொண்டுவரும் முன் அவர்களை களப்போராளிகள் கொண்டு பிரச்சாரத்தின் மூலம் கொள்கையில் செம்மை படுத்த வேண்டும். தெரிந்த எதிரிகளை விட நமக்கு தெரியாத துரோகிகள் பலர் உண்டு,என்பதை மறந்து விடக்கூடாது. எத்தனை தாழ்த்தபட்டவன் ஆர்.எஸ்.எஸுக்கு ஆதரவாக செயல்படுகிறான். கொள்கை தெளிவு பெற்று எழாத வரை, திரளாத வரை உரிமை பெற்றாலும், நம் தோழர்கள் தொலைத்து விடுவார்களேயன்றி வேறென்ன செய்வார்கள். அரசியலில் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும், சரிதான். இந்துத்வம் தலைக்கு ஏறியவர்களையும் கட்சியில் சேர்ப்பது, நம் முன்னேற்றதுக்கு நாமே போட்ட தடையாக போய் முடிய வாய்ப்புள்ளதல்லவா?
இந்துத்வத்திற்கு அடிபணிபவன் விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் அடிப்படை உறுப்பினராக கூட வாய்ப்பு கிடையாது. விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சார்ந்தவன் மதபண்டிகளில் கலந்து வாழ்த்து தெரிவிக்க கூடாது. மாறாக நம் இனத்திற்கு தேவையான கருத்துக்களை எங்கும் தெரிவிக்க தயங்க்க்கூடாது. அதற்காக மற்ற மதங்களில் சேரலாம் என்பது பொருளல்ல.மற்ற மதங்கள் இந்து மத்த்தின் அளவு கொடுமை படுத்தவில்லை அவ்வளவுதான்
“அறிவாளி அடுத்தவன் தவற்றிலிருந்து தன்னை திருத்தி கொள்வான்
முட்டாள் தன் தவற்றிலிருந்து திருந்துவான்.”
இந்துத்தவம் நம் பல்லாயிரம் ஆண்டுகளாக கொடுமை படுத்தியிருக்கிறது ஆதலால் நம் முதல் எதிரி இந்துத்தவத்தை கடைபிடிப்பவன். மற்ற மதங்களை பார்ப்போமானால் உலக வரலாற்றில் இரத்தம் அதிகம் சிந்தியதற்கு காரணமே மதங்கள்தான்(அது யூத மதமாகட்டும், அல்லது அதனின்று தோன்றிய கிருஸ்துவ இஸ்லாமிய மதமாகட்டும், இஸ்லாமிய மதங்களாகட்டும், அல்லது புத்தமதமாகட்டும்). ஆனால் நம் தோழர்களை விநாயகர் சதுர்த்தியை ஆண்டுக்கணக்காக கொண்டாடுகிறார்கள். தோழர் திருமா இது நம் தோழர்களை திசை திருப்ப இந்து மத அமைப்புகள் செய்யும் சூழ்ச்சி என்பதை அறிந்து இதை எப்படியாவது தடுத்து நிறுத்த திட்டங்கள் தீட்ட வேண்டும்
நாம் நம்மை செம்மை படுத்திக்கொண்டு மனிதனாக மாற வேண்டும் என்றால் மதங்கள் விட்டொழிக்க வேண்டும் என்று தோழர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டனா? அவன் அம்பேதகர் ஆளுப்பா! பெரியார் பேரன்யா! என்ற நிலை வருமளவு நம் தோழர்கள் கற்க வேண்டும். சிந்திக்க வேண்டும். அதற்கு விடுதலை சிறுத்தைகள் மட்டுமல்ல அனைத்து தமிழ் அமைப்புகளும் பாடுபட வேண்டும்.
குறிப்பு: திருமாவுக்கு சிந்திக்க கற்று தர வேண்டியதில்லை, ஆனால் இந்த அரசியிலில் உள்ள உளவியல் ரீதியிலான பிரச்சினைகளில், சில விடுபட்டு போக வாய்ப்புண்டு. நம் தோழர்கள், கொள்கை தெளிவில்லாமல் சிறுத்தைகள் என்று அழைத்த உடனேயே விசிலடித்து ஆர்ப்பரிக்கும் விசில் குஞ்சுகளாக மாறிவிடக்கூடாது. தோழர்களை கொள்கை தெளிவுபடுத்த வேண்டும். அதற்கு கொள்கை உடன்பாடு உள்ளவர்களை தலைவர்களாக நியமிக்க வேண்டும். கொள்கை தெளிவுள்ளவர்க்ளுக்கு பதவி ஒரு பொருட்டாக இருக்காது என்றே கருதுகிறேன்.
புதன், 7 மே, 2008
திருமா மற்றும் விடுதலை சிறுத்தைகளுக்கு
செவ்வாய், 29 ஜனவரி, 2008
மனிதம் போதும், கடவுளும் வேண்டாம்,சாதியும் வேண்டாம்,மதமும் வேண்டாம்.

1) உலகை படைத்தது கடவுள் எனில், கடவுளை படைத்தது யார்?
2) நடமாடும் மனிதனுக்கு ஒண்ட குடிசையில்லை, ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?
3) குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்?
4) கடவுளர் படை இருக்க,எல்லையில் காவற்படையினர் ஏன்?
5) எல்லாம் வல்ல கடவுளின் கோயிலுக்கு பூட்டும், காவலும் ஏன்?
6) எல்லாமே அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும் எவன் செயல்?
7) ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளி-தொழிலாளி,ஏழை-பணக்காரன், பார்ப்பான்-சூத்திரன் என்ற ஏற்றத்தாழ்வு எதற்கு?
8) பல அவதாரங்கள் எடுத்த கடவுள், தேவதூதர்கள் அனுப்பிய கடவுள், இன்றைய சூழலில், தீவிரவாதத்திற்கு எதிராக், லஞ்சத்திற்கு எதிராக அவதாரம் எடுப்பதோ, தூதர்களை அனுப்புவதில்லையே ஏன்?
9) அவனின்றி ஓரணுவும் அசையாது எனில், கோயில் சிலை களவு போவதேன், மக்கள் வாகனங்களில் எரிபொருள் நிரப்புவது ஏன்?
10) கடவுள் தேர் மனிதனால் இழுக்கபடுவது ஏன்?
11) அன்பே உருவான கடவுளுக்கு ஆயுதங்கள் எதற்கு?
12) குழந்தைகள் கட்டுப்பாடுக்கு பிறகு கடவுளால் குழந்தை படைக்க முடிவதில்லையே ஏன்?
13) கடவுள் தூணிலும் இருப்பான் எனில் மலத்தில் இருப்பானா?
14) ஆண்டவன் ஆணா? பெண்ணா?
15) கடவுளுக்கு பெண்டாட்டி பிள்ளை எதற்கு?
16) திருமணம் சுவர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது எனில் காதலும், கள்ளக் காதலும் எஙகு நிச்சயிக்கப்படுகிறது?
17) விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்று சொல்பவர்கள் நோய் வந்தால், மருத்துவரிடம் செல்வது ஏன்?
18) தீங்கு என்பது சாத்தானின் செயல்கள் என்று கூறுபவர்கள், மக்களுக்கு தீங்கு செய்யும் அந்த சாத்தானை கடவுளால் ஏன் கொல்வ இயலவில்லை என்று ஏன் சிந்திப்பதில்லை?
19) தனக்காக சுயநலத்தோடு பிரார்திக்கும் பக்தர்கள், இலங்கையில் நம் உறவுகள் கொல்லப்படாமல் இருப்பதற்குஎனோ பிரார்திப்பதில்லை?
20) சரசுதியை வணங்கும் இந்நாட்டில் தற்குறிகள் இருப்பது ஏன்?
21) இலட்சுமியை வணங்கும் இந்நாட்டில் வறுமை இன்னும் பரவ்லாக இருப்பது ஏனோ?மாறாக இவர்களை வணங்காத அமேரிக்கா,ரஸ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் கல்வித்துறையிலும், பொருளாதாரத்தில் முன்னேறியிருப்பது ஏனோ?
22) ஆத்திகனை படைத்தது கடவுள் என்றால், நாத்திகனை படைத்தது யார்?
23) கடவுள்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்றால், கடவுள் இல்லை என்று சொல்வதற்கும் அவன்தான் காரணமோ?
24) திருச்செந்தூரில் முருகன் இருந்த்தால் சுனாமி இல்லை என்று கூறும் பக்தர்களே, சென்னையில் ஓம் சக்தி இருந்தும் சுனாமி வந்தாது ஏனோ?
25) கடவுளுக்கு பெயர் வைத்தவன் யார்?
26) மதச்சண்டைகள், சாதிச்சண்டைகள் பெருகி கொண்டிருக்கும் இந்நேரத்தில் கடவுள் மக்கள் முன் தோன்றி நான் மதங்களுக்கும், சாதிக்கும் அப்பாற்பட்டவன் என்று இச்சச்சர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமல்லவா?
27) மயிரை-மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கை, கால்களை ஏன் வெட்டி காணிக்கை செலுத்துவதில்லை?
28) திருப்புகளைப் பாடபாட வாய் மணக்கும் என்று கூறும் பக்தர்கள் பல் விளக்காமல் இருப்பார்களா?
29) பிள்ளையார் போல பிள்ளை பிறந்தால், கொஞ்சுவீர்களா? அஞ்சுவீர்களா?
30) மணத்திற்கு மனம் பாராமல், சாதி பார்க்கும் பெற்றோர்களே, மருத்துவமனை இரத்த-தேவைக்கு ஏனோ சாதி பார்ப்பதில்லை?
31) கடவுள் படங்களை நாத்திகர்கள் எரித்தால் கூச்சல் போடும் பக்தர்கள், சாமி படம் போட்ட பட்டாசை கொழுத்தலாமா?
32) நோய் கடவுளின் தண்டனை என்றால், நோய்க்கு மருந்து கொடுக்கும் மருத்துவர் கடவுள் எதிரியா?
33) பெண் சாமிக்கு ஆண் பூசாரி சேலை கட்டலாமா?
34) ஐயப்பன் கோயிலில் பெண் நுழைந்தால் தீட்டு என்றால், பெண் மூலம் பிறந்த ஆண் தீட்டில்லையா?
35) கடவுளுக்கு வருடம் ஒரு கல்யாணம் செய்து வைக்கும் பக்தர்களே, இதுவரை அந்த கடவுளர்க்கு பிறந்த குழந்தைகள் எத்தனையோ?
36) பெண்ணின் உடம்பில் இருந்து பிறந்த அழுக்குருண்டை (பிள்ளையார்) எப்படி கடவுளாக முடியும்?
37) தன் உடம்பில் உள்ள அழுக்கை வைத்து குழந்தை செய்யும் அளவுக்கு அளுக்கு இருந்ததென்றால் எத்தனை நாள் குளிக்காமல் இருந்தாளாம் அந்த க்டவுள்?
38) கன்னிக்கு பிறந்தவன் கடவுள் என்றால்? கிருஸ்துவர்கள் கர்ணனையும், இந்துக்கள் இயேசுவையும் கடவுளாக ஏற்று கொள்ளத் தயாரா?
39) பூணூல் போடுபவன் மேல் சாதி என்றால், பஞ்சு தயாரிப்பவனும், நூல் நூற்பவனும் அவனைவிட மேல்ச் சாதியில்லையா?
40) பக்தனே நீ கை வைக்காமல் கற்(கடவுள்) சிலை ஒரு அடி நகருமா?
41) பிள்ளை பெறுவதற்கு அரசமரம் சுற்றும் பெண்களே, பிள்ளை வேண்டாம் என்பதற்கு எந்த மரம் சற்றுவீர்கள்?
42) ஐயப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழக கடவுள்களையும், கோயில்களையும் என்ன செய்யலாம்?
43) நாற்பத்தோரு நாட்கள் நல்லவர்களாக் நடிக்கும் ஐயப்ப பக்தர்கள், பிற நாட்கள் ஏனோ ஒழுக்கதோடு இருப்பதில்லை? உங்கள் ஐயப்பனும் தட்டி கேட்பதில்லை?
44) தீக்குண்டம் மிதிப்பவர்கள் அதில் படுத்து உருண்டு காட்டுவார்களா?
45) பச்சை இரத்தம் குடிக்கும் காட்டுமிராண்டி சாமியார்கள், பாலிடாயில் குடித்து காட்டுவார்களா?
46) சாமியாடுபவர்கள் மின்சாரம் பாயும் கம்பியை தொடத்தயாரா?
47) அம்மை நோயை தடிப்பது ஆத்தாளா? மருத்துவமனையா?
48) பக்தனே நீ கை வைக்காமல் உன் கடவுள் ஒரு அடி நகருமா?
49) அன்று பேசிய, நடமாடிய கடவுள் இன்று நடமாடுவதில்லையே ஏன்?
50) பக்தியுள்ளவன் படிக்காமல் பாஸ் ஆவானா?
51) கோபியர் கொஞ்சிய கண்ணன் இன்று பிறந்தால் எத்தனை பக்தியுள்ள பெண்கள் தயார்?
52) தூதர்களை அனுப்பிய கடவுள் தானே வருவதில்லையே ஏன்?
53) இயற்கை கடவுளின் அற்புதம் என்றால் ஏழ்மையும்,ஊனமும் அவன் செயல் இல்லையா?
54) ஆடு கோழி ஆகிய மிருகங்களை கடவுளுக்கு பலியிடும் பக்தர்கள் ஏனோ புலி, சிங்கங்களை பலியிடுவதில்லை.
55) விழியால், புலனால் அறிய முடியாதவன் கடவுள் என்றால் கடவுள் உண்டென்று நீ எதை கொண்டு நம்புகிறாய்.
56) இயற்கை என்னும் அற்புதத்தால் நம்புகிறாய் என்றால்! செயற்கை அற்புதங்களான அறிவியல் கண்டுபிடுப்புகளை கடவுள் ஏனோ படைக்கவில்லை?
57) சோதிடம் உண்மையென்றால் காவல்துறை எதற்கு?
58) விதி உண்மையென்றால் நோயை தடுக்கும் மருத்துவம் எதற்கு?
59) சோதிடம் பார்த்து செய்யப்படும் திருமணங்கள் மணவிலக்கு கோருவதில்லையா?
60) தமிழன் வறுமையில், சாதியில் வாடி கொண்டிருந்த நேரம் இயேசு தமிழகத்தில் ஏனொ அவதரிக்க வில்லைச
61) கடவுள் தன் தூதனை ஏற்கனவே அரபுப் பிரதேசத்திற்கு அனுப்பியிருக்க அடுத்த தூதனை சாதி பிரச்சனையில் தவித்து நம் மக்களை விடுவிக்க ஏன் அனுப்ப வில்லை.
செவ்வாய், 11 டிசம்பர், 2007
சனி, 8 டிசம்பர், 2007
கடவுள் பற்றி காமராசர் - அதிகம் அறியப்படாத செய்தி- சொன்னவர் திரு. சீர்காழி பெ. எத்திராஜ் (முன்னாள் மேலவை உறுப்பினர்)
தலைவர் காமராசர் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் வந்த நேரத்தில் ஒரு கிராமத்தின் பாழடைந்த கோயிலைப் பார்த் தார். அந்தக் கோயில் பழம்பெருமை வாய்ந்தது. ஆனாலும், சிதிலமடைந்து கிடந்தது. சுற்றுப்புற மதில்கள் உடைந்து பிரகாரம் திறந்து கிடந்தது. அங்கங்கே ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. கோயில் கோபுரத்திலெல் லாம் மரம், செடி, கொடிகள் வளர்ந்து கிடந்தன. கோயில் குருக்கள் எப்போதாவது வந்து பூஜை செய்து மணியடிப்பார்.சற்றும் எதிர்பாராமல் தலைவர் கோயிலுக்குள்ளே போய்விட்டார். சுற்றியிருந்த நாங்களனைவரும் அவருடன் சென்றோம். நான் கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திகன். இது தலைவருக்கும் தெரியும். தலைவர் கோயில் வாசலில் இருந்த கல்வெட்டுகளை யெல்லாம் பார்த்தார். புதராக மண்டிக்கிடந்த சாசனங்களையெல்லாம் துடைத்துவிட்டுப் பார்த்தார். பலிபீடம், கொடிமரம், நந்தி இவைகளிடமெல்லாம் போய் நின்று உற்றுக் கவனித்தார். இவரது ஒவ்வொரு செய்கையும் கட்சிக்காரர்களுக்கு வியப்பாயிருந்தது. கோயிலுக்கு வந்து உள்ளே சாமி கும்பிடப்போகாமல், எது எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறாரே என்று மற்றவர்கள் பேசிக் கொண்டனர்.ஆனால், எனக்கு அவரைப்பற்றி நன்றாகத் தெரியும்,
கோயில்களில் கொடுக்கும் பிரசாதங்களை வாங் கிக் கொள்வார். விபூதி பூசிவிட்டால் மறுக்கமாட்டார். பரிவட்டமும் கட்டிக் கொள்வார். தீபா ராதனையைத் தொட்டுக் கொள் வார். கோயிலை விட்டு வெளியில் வந்த மறு நிமிடமே பழம், தேங் காய் மூடி, மாலைகளை யார் பக் கத்திலிருக்கிறார்களோ அவர்களிடம் கொடுத்துவிடுவார்... விபூதி, குங்குமத்தை வீட்டுக்கு எடுத்துப் போகமாட்டார். பையில் பத்திரப் படுத்தவும் மாட்டார். அதற்குப் பெரிய முக்கியத்துவமும் கொடுக்க மாட்டார். கேட்டால், “கோயில்ல செய்ற மரியாதையை வாங்கிக்கணும் அதுதான் மனுஷ நாகரி கம். குருக்கள், அறங்காவலர், ஊர் ஜனங்க மனசு புண்படக் கூடாதில் லியா.... அதுக்கு மேல அதில ஒண்ணுமில்லே...!” என்பார்.தலைவர்
இந்தக் கோயிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்தக் கோயிலின் குருக்களும், அறங்காவலரும் வந்துவிட்டனர். பிரகாரத்தைச் சுற்றிவந்த தலைவர், குருக்களைப் பார்த்து,
“இந்தக் கோயிலக்கட்டி எவ்வளவு காலமாச்சு...?” என்றார்.
குருக்களும், நிருவாகிகளும் பதில் சொல்ல முடியாமல் விழித்தனர்.
“ஏன்ய்யா... குருக்கள்.... நீங்க எவ் வளவு காலமா இந்தக் கோயிலுக்கு மணியடிச்சிகிட்டு இருக்கீங்க.... இந்தக் கோயில பத்தின ‘தல வரலாறே’ உங்களுக்குத் தெரி யாதா...? எந்த வருஷத்து வண்டி? எத்தனை கிலோமீட்டருக்கு எவ்வளவு பெட்ரோல் ஆகும்னு தெரியாம, ஒரு டிரைவர் அந்தக் காரை ஓட்டலாமான்னேன்?” என்று காமராசர் ஆரம்பித்ததும் குருக்கள் உள்பட எல் லோரும் ஆடிப்போனார்கள்.
தலைவரே மேலும் தொடர்ந்தார். இந்தக் கோயிலக் கட்டி எண்ணூத்து எழுபது வருஷத்துக்கு மேலாகுது. சோழமாதேவி தானமா கொடுத்த “இறையிலி” நிலங்கள்தான் இந்தக் கோயில சுத்தி இருக்குது. இந்த ஊரும், இந்தத் தாலுக்காவுமே இந்தக் கோயில் சொத்துதான். அதிலே ருந்து வர்ற வருமானத்துலதான் சாமிக்குப் பூஜை, புனஸ்காரமெல்லாம் பண்ணணும். குத்தகைதாரர் கள் அளக்கிற பகுதி நெல்லை வாங்கித்தான் சாமியாடிகளுக்கும், தேவரடியார்களுக்கும், பூக்குடலைத் தூக்குறவங்களுக்கும் சம்பளம் போடணும். சாமி நெலத்த விவசாயம் பண்ணிச் சாப்பிட்டுக் கிட்டிருக்கிற ஒருத்தனும் ஒரு பிடி நெல்லைக்கூட கோயிலுக்கு அளக்கலப் போலிருக்கு... அதனாலதான் சாமி இருட்டில கிடக்குன்னேன்.. !” என்று காம ராசர் பேசப்பேச அத்தனை பேரும் அதிர்ந்து போய் நின்றனர். அந்தக் கோயில் சொத்தைச் சாப் பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த ‘பெருச்சாளிகள்’ பலரும் அங்கே நின்று கொண்டிருந்தனர்.தங்கள் அடிமடியிலேயே கை வைக்கிறாரே என்று அந்தக் குத்தகைதாரர்கள் நடுங்கிப் போயிருக்கக்கூடும். இதற்குள் குருக்கள்மார் சிலர் வந்து, ‘பிரசாதம், பொங்கல், வடையெல்லாம் தயாரா இருக்கு...!’ என்று ஆரம்பித்தனர்.“சாமியை இருட்டில போட் டுட்டு ஆசாமியெல்லாம் சாப்பிட்டு கிட்டிருக்கீங்க. பொங்கல், வடையையெல்லாம் ஏழை ஜனங் களுக்கு, சேரிப் பிள்ளைகளுக்குக் கூப்பிட்டுக் கொடுங்க...!” என்று சொல்லிவிட்டு வேகமாகத் தலைவர் கோயிலை விட்டு வெளியே வந்துவிட்டார். அறங்காவலர் குழு திகைத்துப் போய் நின்றது.தலைவர் அடுத்த ஊர் நிகழ்ச் சிக்குப் போவதற்காகக் காரில் ஏறினார். நானும் அவரோடு பயணம் செய்தேன். “கடவுள்பற்றி காமராசர் என்ன நினைக்கிறார்... பூஜை, வழிபாடு, நேம, நைவேத்தி யங்கள் பற்றி அவரது கருத்து என்ன?” என்பதையெல்லாம் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் நெடுநாளைய அவா. இதுதான் சரியான வாய்ப்பு என்று எண்ணி நான் தலைவரிடம் மெல்ல ஆரம்பித்தேன்.
“கடவுள்னு ஒருத்தர் இருக் கார்னு உங்களுக்கு நம்பிக்கை உண்டா...?”
“இருக்கு, இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்றது நல்ல காரியமா இருந்தா போதும். பக்தனா இருக்கறதை விட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண் ணிகிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா...?” என்றார்.
நான், “கடவுள் விஷயத்துல நேரு கொள்கையும், உங்க கொள்கையும் ஒண்ணாயிருக்கும் போலிருக்கே...” என்று ஆரம்பிக்கவும்.
அவரே, “ஆதிஸ்டு(Athiest)ன்னு” சொல்றீயா...? நேரு ரெண்டப் பத்தியும் கவலப்படாதவர்தான். ஆனா... மனிதனை முன்னேற்ற ணும். சமூகம் வளரும்ணும்கிறதுல அவர் கவனமாயிருந்தார்.. அதுக்கு மதமோ, கடவுளோ தடையாயி ருந்தா அதைத் தூக்கிக் குப்பை யில போடணும்கிற அளவுக்கு அவர் தீவிரவாதி. எப்படி யோசிச் சிப் பார்த்தாலும், சாதாரண மனிதனைக் கை தூக்கி விடணும்கிற தத்தானே எல்லா மதமும் சொல்லுது. சமுதாயத்துல பேதம் போகணும்... ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாதுங்கிறதத்தானே மகான்கள் சொல்றாங்க. ஆனா, இன்னிக்கு நம்ம மதங்கள் அதப்பத்திக் கவலைப்படுதான்னேன்..? அவன் தலையைத் தடவியாவது, எவனை அழிச்சாவது தான் முன்னேற ணும்னுதானே ஒவ்வொரு மடாதிபதியும் நினைக்கிறான்... இதுக்குக் கடவுள் சம்மதப்படுறாரா...?” என்று கேட்டார்.
நான் உடனே, “அப்படியானா ஆண்டவன்னு ஒருத்தர் இல்லேன்னுதான் நீங்களும் நினைக் கிறீங்களா...? இருந்திருந்தா இந்த அயோக் கியத் தனத்தையெல்லாம் ஒழிச்சிருப்பாரே...! தன்னோட எல்லா பிள்ளைகளையும் மேல் ஜாதி, கீழ் ஜாதின்னு படைச்சிருக்க மாட்டாரே...?” என்றேன்.
“மேல் ஜாதி, கீழ் ஜாதியெல்லாம் இடையிலே வந்த திருட்டுப் பயலுக பண்ணினதுன்னேன். சுரண்டித் திங்கிறதுக்காகச் சோம்பேறிப் பசங்க பண் ணின ஏற்பாடுன்னேன். எல்லாரும் ஆயா வவுத்துல பத்து மாசம் இருந்து தானே பொறக்கிறான். அதுலே என்ன பிராமணன் சூத்திரன்...? ரொம்ப அயோக்கியத்தனம்...!” என்றார் காமராசர்.
எனக்குள் பெருமையும், பூரிப்பும் பிடிபட வில்லை. காமராசரைக் கட்டிப் பிடித்து ஆலிங்கனம் செய்ய வேண்டும் போலிருந்தது. இவருக்குள் இவ்வளவு சிந்தனை ஊற்றா.....? இத்தனை கம்பீரமா? அடங்காத சீற்றமா? ஆத்திர நெருப்பா? அவர் பேசப்பேச நான் வானுக்கும், பூமிக்குமாய்க் குதித்தேன்.“நீங்கள் ஏன் உங்களை ஒரு முழு நாத்திகராய் அறிவித்துக் கொள்ள வில்லை...?” என்று கேட்டேன்.
“நான் ஒரு சமுதாயத் தொண்டன். நாத்திகவாதி - ஆத்திகவாதி எல்லா ருக்கும் சேவை செய்றவன். எனக்கு எதிரே வர்றவனை “மனுஷன்”னுதான் பாக்குறேனேதவிர அவனை பிராமணன், சூத்திரன்னு பாக்குறதில்லே.... அப்படி எவனும் என்கிட்டே பேசிகிட்டு வரவும் முடியாது. நாத்திகவாதம்கிறது ஒரு தனி மனிதக்கொள்கை. அரசியல்வாதி பொதுவானவன். ஒரு கோயிலை நிருவாகம் பண்ண நிதி கொடுக்க வேண்டியது, அரசியல் வாதியோட கடமை. அந்தக் கோயில்லே ஆறுகால பூஜை ஒழுங்கா நடக்குதா.. விளக்கு எரியுதான்னு பாக்க வேண்டியது, “கவர்ன்(Govern)” பண்றவனோட வேலை.
“நான் நாத்திகவாதி. எனவே கோயிலை இடிப்பேன்”னு எவனும் சொல்லமுடியாது. கம்யூனிச சமுதாயத் திலேயே கோயிலும், பூஜையும் இருக்கே...! தனிப்பட்ட முறை யில நான் கோவில், பூஜை, புனஸ்காரம்னு பைத்தியம் பிடிச்சி அலையிறதில்ல. மனிதனோட அன்றாடக் கடமைகள்தான் முக்கியம்னு நெனைக்கிறவன்...”
என்று மிகத் தெளிவாகப் பேசினார்.“அப்படியானா, நீங்க பூஜை, பிரார்த்தனை யெல்லாம் பண்றதில்லையா...?” எனக் கேட்டேன்.
“அதெல்லாம் வேலை, வெட்டி யில்லாதவன் பண்றதுன்னேன். அடுத்த வேளை சோத்துக்கில்லாதவன், கடன் வாங்கி ஊர், ஊரா ‘ஷேத்ராடனம்’ போறான்... எந்தக் கடவுள் வந்து ‘நீ ஏண்டா என்னப் பாக்க வரலைன்னு இவன் கிட்டே கோவிச்சுகிட்டான்....?’ அபி ஷேகம் பண்றதுக்காக கொடம், கொடமாப் பாலை வாங்கி வீணாக்குறானே மடையன்.... அந் தப் பாலை நாலு பிள்ளைங்க கிட்டே கொடுத்தா, அதுங்க புஷ்டியாவாவது வளருமால்லியா...?”“பதினெட்டு வருஷமா மலைக்குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனுக் குப் பி.ஹெச்.டியா கொடுக்கிறாங்க...? பதினெட்டு வருஷமா கடன்காரனா இருக்கான்னு அர்த் தம். பணம் படைச்சவன் போடுற பக்தி வேஷம், ‘சோஷியல் ஸ்டேடஸ்(Social Status)’க்காக. நாலு பேர் தன்னைப் பக்திமான், பெரிய மனுஷன்னு பாராட்டணும்கிறதுக்காக. ஒரு அனாதை இல்லத்துக்கோ, முதி யோர் இல்லத்துக்கோ கொடுக் கலாமில்லியா....” ஊருக்கு நூறு சாமி... வேளைக்கு நூறு பூஜைன் னா.... மனுஷன் என்னிக்கு உருப்ப டறது...? நாட்டுல வேலையில்லாத் திண்டாட்டம்..... வறுமை - சுகா தாரக்கேடு.... ஏற்றத் தாழ்வு இத்த னையையும் வச்சிகிட்டு பூஜை என்ன வேண்டிக்கிடக்கு.... பூஜைன் னேன்.....? ஆயிரக்கணக்கான இந்த ‘சாமிகள்’ இதப்பாத்துகிட்டு ஏன் பேசாம இருக்குன்னேன்...?”
தலைவர் போடு, போடு என்று போட்டுக் கொண்டு வந்தார். அவருக்குள் ஆயிரம் இங்கர் சாலை, பெரியாரை நான் கண் டெடுத்தேன்.
“அப்படியானா.... நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா.... இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக் கிறீங்களா....?” என்று கேட்டேன்.அவர் கொஞ்சம் கூடத் தாம திக்காமல்... “லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித் திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம் பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அநத வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்தும் கடவுளாக்கிட் டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா...? “அரேபியாவிலே இருக்கிறவன் ‘அல்லா’ன்னான். ஜெருசலத்தல இருக்கிறவன் ‘கர்த்தர்’னான் அதிலேயும் சில பேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு ‘டெனாமினே ஷன்’ உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக் கினி பகவான், ருத்ரன், வாயு பக வான்னு நூறு சாமியச் சொன் னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடி மக்களான திராவிடர்கள், காத்தவ ராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்....? அவனவனும் அவனவன் இஷ்டத் துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உரு வான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான்... காங்கிர° - கம்யூ னி°ட் - தி.மு.க. மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி. யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான்... மதம் மனித னுக்குச் சோறு போடுமா...? அவன் கஷ்டங்களப் போக்குமா...? இந் தக் குறைந்த பட்ச அறிவுகூட வேண்டாமா மனுஷனுக்கு...? உல கத்துல இருக்கிற ஒவ்வொரு மத மும், நீ பெரிசா... நான் பெரி சான்னு மோதிகிட்டு ரத்தம் சிந் துதே...! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே....! இப்படியெல்லாம அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்...?” தலை வர் தெளிந்த நீரோடை மாதிரி பேசிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்த மான முடிவை அவர் வைத்திருப்ப தைப் பார்த்து நான் வியந் தேன்.“நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே... அதை ஏத் துக்கிறீங்க போலிருக்கே...?” என்று வினாத் தொடுத்தேன்.தலைவர் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்.
“டேய்... கிறுக்கா... நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்....? ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன். அதையெல்லாம் நம்மாளு கடவு ளாக்கிட்டேன்னேன்....! இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் ‘கட்அவுட்’ வைக்கிறானில்லையா... அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப் பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான். அந்தப் புத்தங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள எடுத்துக்கணும். ஆசாமிய விட்டுபுடணும்.”....காலப்போக்குல என்னாச்சுன்னா.. லட்சக் கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும் பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி. அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க களவாணிப் பசங்க.... புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம ஜனங்கள அடிமையா ஆக்கிவச்சிருக் கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான். நவ ராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூஜை பண்றான். விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை ஜனங்களையும், பாமர ஜனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான். நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல... எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல... புதுசு கட்டுனதுமில்ல... பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம சலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்...” என்று விளக்கினார்.
“மதம் என்பதே மனிதனுக்கு அபின்...!” அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத் தோணுதே...?” என்று ஒரு கேள்வியைப் போட்டேன்.
தலைவர், “நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத் துக்குத் தேவையில்ல... பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா...? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக் கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம்; ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலா மில்லையா? அதையெல்லாம் செய்ய மாட்டான். ‘சாமிக்குத்தம்’ வந்திடும்னு பயந்துகிட்டு செய் வான். மதம் மனிதனை பயமுறுத் தியே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்....” என்றார்.
“கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா...? அதிலேருந்து எப்போ விலகுனீங்க...?” இது நான்.
“சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூஜை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930-க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுகிட் டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும், போயும் கடவுள் தலை முடியத்தானா கேக்குறாரு... எல்லாம் ‘பார்பர் ஷாப்(Barber Shop)’காரன் ‘செட்-அப்’ அப்புடீன்னு சிந்திச்சேன். விட்டுட்டேன். ஆனா, சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலை யில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா...?” என்று கேட்டுவிட்டு விழுந்து, விழுந்து சிரித்தார்.
“அப்படியானா... மனிதர் களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே... அதப்பத்தி....?” என்று கேட்டேன்.
“அடுத்த மனுஷன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை. இதுல நாம சரியா இருந்தா... தெய்வம்னு ஒண்ணு இருந்தா அது நம்ம வாழ்த்தும்னேன்...!”
காமராசர் என்கிற அந்த மனிதாபிமானி என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார். சட்டென்று காரை நிறுத்து கிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லா மல் நடந்துபோன சிறுவர்களைப் பார்த்து, “ஏன் பள்ளிக்கூடம் போகலியா...?” என்கிறார். அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்தது விடுகிறது.
இந்த அறிய செய்திக்கு நன்றி.