சனி, 26 செப்டம்பர், 2009

நியுயார்க்கிலிருந்து மிரட்டல்

உலகத்தமிழ் மாநாட்டிற்கு நியுயார்க் தமிழ்ச்சங்கம் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், தங்களுடைய கருத்தை மின்னஞ்சல்(nytamilsangham@gmail.com) மூலமாகவோ, தொலைப்பேசி((718)-969-1310)) மூலமாகவோ கருத்தை பதிவு செய்யுமாறு மின்னஞ்சல் ஒன்று எனக்கு வந்தது.

கூடவே இந்த இணைப்பும் சேர்ந்தே வந்தது.

http://www.facebook.com/n/?inbox/readmessage.php&t=1144658613759&mid=124459eG26ac0379G2a26b64G0

நானும் என்னுடைய மின்னஞ்சல் முகவரியிலிருந்து அந்த மின்னஞ்சல் முகவரிக்கும் கீழ்க்கண்டவாறு செப்.23 ஆம் தேதி

உங்களின் உலகத்தமிழ் மாநாட்டிற்கான ஆதரவுக்கு நன்றி...........

இப்படியே மாநாடு நடத்தி தமிழர்களுக்கு இருக்கும் மீதி உணர்வுகளையும் அழித்து விடுங்கள்....

உங்கள் வரலாற்று துரோகங்களுக்கு உளப்பூர்வமான நன்றி

--

அன்பும் ,பகுத்தறிவுடனும்.

மகிழ்நன்.

+919769137032

தாராவி, மும்பை

http://periyaryouth.blogspot.com

http://makizhnan.wordpress.com

http://kayalmakizhnan.blogspot.com

http://scientifictamil.blogspot.com

http://vizhithezhuiyakkam.blogspot.com

நேற்று அதிகாலை செப்.2509 ஆம் தேதி அன்று இந்திய நேரப்படி காலை 7:32 மணிக்கு +6146545155 என்ற எண்ணிலிருந்து 06:58 விநாடிகள் ஒரே மிரட்டல்.

சொற்கள் அத்தனையும் முழுமையாக நினைவிலில்லை,ஏனென்றால் நான் அதை ஒரு பொருட்டாக மதிக்க வில்லை. ஆனால், ஒருச்சில நினைவில் இருக்கின்றன....அவற்றை தோழர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

சைபர் கிரைமில் உள்ளே தள்ளிடுவேன்.

மும்பை கமிசனரை எனக்கு தெரியும்

புலி ஆதரவாளர்னு முத்திரை குத்திடுவேன்.

அஞ்சு வருஷம் உள்ளே தள்ளிடுவேன்.

உன்னை காப்பாத்த பெரியாரும் வரமாட்டார், வீரமணியும் வரமாட்டார்.

கருணாநிதி மேல அவ்வளவு கோபம் இருந்தால், குண்ட கட்டிக்கிட்டு விழுந்து அவரை கொல்ல வேண்டியதுதானே.

பார்ப்பான், பார்ப்பான்னு திட்டி எழுதிறியே உங்க ஆட்கள்தானே ஆட்சியிலே இருக்கிறாங்க, ஏன் இலங்கை மக்களை காப்பாத்த முடியலை.

இவ்வளவையும் கேட்டுவிட்டு நான் கூறியதை...

உங்கள் கோபம் தணிவதற்காகத்தான் இவ்வளவும் கேட்டுக் கொண்டேன், உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள். நான் வீரமணி ஆதரவாளர்னு யார் சொன்னா....?”

எவ்வளவு நகைச்சுவை பார்த்தீர்களா?பார்ப்பான்னு நான் என்றோ திட்டி எழுதியதை நினைவில் வைத்து, பார்ப்பான் என்றே குறிப்பிடாது எழுதிய மின்னஞ்சலில் கிடைத்த எண்ணில் தொடர்பு கொண்டு மிரட்டுவது என்ன துணிவு, அறிவுடமை? பார்ப்பனீயத்தை கடைப்பிடிக்காதவனுக்கு பார்ப்பான் என்ற சொல் ஏன் குத்தி குடைய வேண்டும். பார்ப்பனீயத்தை அப்படித்தான் கடைபிடிப்பேன் என்றால் , நானும் அப்படித்தான் இன்னும் உறுதியோடு பார்ப்பான் என்றே எழுதுவேன். பார்ப்பனீயம் வீழும் வரை எழுதுவேன், களமாடுவேன்.

அதோடு புலி ஆதரவாளர் என்று முத்திரை குத்தி உள்ளே தள்ளி விடுவானாம், நான் புலி ஆதரவாளர் என்று இவருக்கு எப்படி தெரியும், நான் ஈழத்தமிழ் மக்களை ஆதரிக்கிறேன், அவர்கள் புலிகளை ஆதரித்தால் நான் என்ன செய்வது. A=B=C மாதிரி ஆகின்றது, நான் என் செய்வது.

எம் சகோதரர்கள் தானாகவா ஆயுதமேந்த தொடங்கினார்களா என்ன ? ஆயுதமேந்த வைக்கப்பட்டார்கள், சிங்கள இன வெறியால் ஆயுதமேந்த வைக்கப்பட்டார்கள்.என் சகோதரர்கள் சொந்த நாட்டில் உரிமையோடு மகிழ்ச்சியோடு இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்காகத்தான் ஆயுதமேந்தினார்கள். தம் வாழ்வின் அமைதிக்காகத்தான் ஆயுமேந்தினார்கள். புலிகள் தவறிழைத்திருக்கலாம் ஆனால் அதை சுட்டிக்காட்ட இந்திய வல்லாதிக்கத்திற்கு தகுதி கிடையாது.

இன்னும் குறிப்பாக எந்த பார்ப்பன பண்டாரத்தின் வழித்தோன்றல்களுக்கும் தகுதி கிடையாது. பார்ப்பன வழித்தோன்றல்கள் தங்கள் முன்னோர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது செய்த கொடுமைகளை வரலாற்றின் பக்கங்களில் புரட்டி பார்த்து தெரிந்து கொண்டால் தாங்கள் செய்த பிழையின் தன்மையும் கணமும் புரிய வரும். இன்றும் இடஒதுக்கீட்டினை தங்களின் முன்னோர்கள் செய்த தவற்றை திருத்தி கொள்ளும் வாய்ப்பாக பார்க்காமல் இடஒதுக்கீட்டை பார்ப்பன பண்டாரங்கள் புலிகளை பற்றியோ ஈழத்தை பற்றியோ விமர்சிக்க தகுதியற்றவர்கள்...

புலிகளின் சகோதரர்கள், ஈழத்து உறவுகள் விமர்சிக்கட்டும் அவர்களுக்கு உரிமையிருக்கிறது...தின்று கொழுத்த கூட்டம் கண்டிப்பாக விமர்சிக்க கூடாது

இங்கு ஆட்சி செய்பவன் எல்லாம் ஊரை அடித்து உலையில் போடும் கொள்ளைக்காரர்கள். இவர்கள் தாம் மடிந்தாலும் திருந்த போவதில்லை. அப்படியிருக்க புலிகளை மட்டுமல்ல, சாக்கடையில் ஓடும் எலியை கூட இவர்கள் விமர்சித்தால் பொறுத்துக் கொள்ளாது.

எம் சகோதரர்களை நாங்கள் விமர்சிப்போம், அவர்களிடம் பிழைகள் இருந்தால் நாங்கள் திருத்துவோம், முடிந்தால் மென்மையாக, இல்லையென்றால் உரிமையோடு வன்மையாக சொல்வோம். எங்களுக்கு எவனும் கற்றுத்தர தேவையில்லை. மிரட்டுபுவர்கள் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக இருக்கும் சு...........சாமியையும், சோ.......சாமியையும் மிரட்டட்டும்....

நாங்கள் பெரியார் விதைத்த விதைகள், இம்மண்ணுக்காக மக்களுக்காக போராட களம் வந்து விட்டோம்,. இந்த சிறு பிள்ளைத்தனமாக அழுமூஞ்சி மிரட்டல்களுக்கு அடிபணியமாட்டோம். மாறாக, மிரட்டல்கள் எங்களை கூர்தீட்டும். எங்களை பொருத்தவரை நாங்கள் மனிதர்கள் புலிகள் இல்லை, தமிழர்களுக்காக ஈழத்தில் தீரத்தோடு போராடிய இயக்கங்களுள் முதன்மையான இயக்கம் விடுதலைப்புலிகள் இயக்கம். அந்த இயக்கதில் மனிதர்கள் இருந்தார்கள், தங்களுடைய வாழ்வை தியாகம் செய்து தம் மண்ணுக்காக போராடினார்கள்.

முதலில் விமர்சிக்கப்பட வேண்டியவன் சிங்களவன், பின்னர்தான் புலிகள். அடித்தவனுக்கு அடிவாங்கியவனுக்கு அடிப்படை வேறுபாடு உண்டல்லவா?”

சேகுவேரா கூறியது போல உலகத்தில் எங்கு அநீதி நிகழ்ந்தாலும், என் உள்ளம் துடிக்கும்,ஏனென்றால் நான் சே வின் தோழன்.

சிறை என்னை நான்கு சுவற்றுக்குள் கைது செய்யலாம், வரலாறு என்னை விடுதலை செய்யும்(பிடல் காஸ்ட்ரோ), என் கருத்தை விடுதலை செய்யும்.

புலிகளை ஆதரிக்கிறேனா? என்றால் ஆதரிக்கவில்லை, பாதுகாக்க வில்லை என்றால்தான் அது குற்றம். ஏனென்றால், அது இந்தியாவின் தேசிய விலங்கு.

எழுத்துப் பிழைகள் இருக்கலாம், இருந்தால் மன்னிக்கவும் அவசரத்தில்எழுதியது

புதன், 23 செப்டம்பர், 2009

கொலை வாளினை எடடா! தமிழா!

மையத்தில் பேராய காங்கிரசு கட்சியின் ஆட்சி, மாநிலத்தில் பெரியாரின் கொள்கைகளுக்கு காயடிக்கும், மக்களை தேர்ந்த ஏமாளிகளாக்கும் திமுகவின் ஆட்சி. மக்களுக்கு இலவசங்களை கொடுத்து, இனத்தை காட்டிக் கொடுத்து, வடநாட்டு பனியாக்களிடம் தமிழனின் வாழ்வுரிமையை பறித்து கொடுத்து, லஞ்சத்தை கூட்டிக்கொடுக்கும் கூட்டத்திடம் இனமானத்தை விட்டுக்கொடுத்து.............கொலைக்கார காங்கிரசின் கையிடம் கள்ள மௌனத்தோடு கள்ள உறவு கொண்டு மீண்டும் வருகிறது அதே கூட்டம், ஒட்டுச்சேர்க்க............

தமிழர்கள் முட்டாள்கள் ரொம்ப நல்லவர்கள்,எவ்வளவு அடித்தாலும் வலிக்காதது போல நடிப்பார்கள்.........என்ற ரீதியில் உலகத் தமிழ் மாநாடு.....இன்றைய சூழ்நிலையில் அந்த மாநாட்டை நிறுத்த முடியாவிட்டாலும்......தோழர்களே உங்கள் கோபத்தை தணித்து கொள்ளாதீர்கள்....பாவேந்தனின் வரிகளில் இருக்கும் செஞ்சினத்தை சிந்தைக்கு ஏற்றுங்கள். நாளை நம் நாள் என்று கனியும் வரை இளைஞர்களிடம் உங்கள் நியாயமான சினத்தை பரப்புங்கள்...........

வலியோர் சிலர் எளியோர் தமை

வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்

நிலையாம் எனும் நினைவா?

உலகாள உனது தாய்மிக

உயிர்வாதை யடைகிறாள்;

உதவாதினி ஒரு தாமதம் உடனே

விழி தமிழா!

கலையேவளர்! தொழில் மேவிடு!

கவிதைபுணை தமிழா!

கடலேநிகர் படை சேர்கடு

விடநேர்கரு விகள் சேர்!

நிலமேஉழு! நவதானிய

நிறையூதியம் அடைவாய்;

நீதிநூல்விளை! உயிர் நூல் உரை

நிசநூல் மிக வரைவாய்!

அலைமாகடல் நிலம் வானிலும்

அணி மாளிகை ரதமே

அவைஏறிடும் விதமேயுன

ததிகரம் நிறுவுவாய்!

கொலைவாளினை எடடாமிகு

கொடியோர்செயல் அறவே

குகைவாழ் ஒரு புலியே உயர்

குணமேவிய தமிழா!

தலையாகிய அறமேபுரி

சரிநீதி யுதவுவாய்!

சமமேபொருள் ஜனநாயகம்

எனவே முரசரைவாய்!

இலையே உண விலையே கதி

இலையே எனும் எளிமை

இனிமேலிலை எனவே முர

சறைவாய் முரசறைவாய்!

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

கலைஞரின் துதிபாடி கவிஞர்களே இந்த கவிஞனையும் கொஞ்சம் படித்து பாருங்கள்

சோவியத்தில் வாழ்ந்த பாரதிதாசன்

தமிழகத்தில் எப்படி ஒரு புரட்சி கவிஞன் பாரதிதாசன் தோன்றித் தமிழ்தேச பற்றை ஊட்டினானோ, அது போல் ருசியப்ப்பெரிய நாட்டின் எங்கோ ஒரு மூலையில் இருந்த தாஜிக்கிஸ்தான் பகுதியில் அவார் என்னும் கிளைமொழியின் பெருமையைப் பாடிய பாவலன்தான் ரசூல் கம்ஸா தோவ்

அவன் ருஷ்ய தேசியம் பாடவில்லை. அவன் தன் தாய்மண் பற்றினை ஆவேசம் மிகுந்த சொற்களைக் கொண்டு கவிக்கனலை தோற்றுவித்தான். அவன் தன் தாய்நாட்டுக்காக பாடியதால் ருஷ்ய தேசியம் அவனை வெறுக்கவில்லை, மாறாக அவனை புகழ்ந்தது, அரசே அவனது வெளியீடுகளை வெளியிட்டது. அவனை வெறும் கவிஞனாக மட்டும் கருதாது. தாஜிக்கிஸ்தான் அரசாங்கம் நிர்வாகத்தில் பங்கு கொள்ள வைத்தது. தாஜிக்கிஸ்தான் இந்தியா, சினா போன்ற கிழக்கத்திய பண்பாட்டுடன் தொடர்பு கொண்டது. இம்மாநிலத்தில் (அல்ல நாட்டில்) பல மொழிகளில் வழங்கி வந்தன. அவற்றுள் ஒன்றே அவார் மொழி! அந்த மொழிக்கு உரிமையவனே ரசூல் காம்தோவ்.

அவன் எழுதுகிறான்....

ஓ..என் அருமை மிகு அவார் மொழியே!

நான் வாழ்வுக்கும் சாவுக்கும்

இடையில் தொங்கி திணறும்போது

உலகத்து மருந்துகள்

என்னை காப்பாற்றாது!

உலக மருத்துவரும் காப்பாற்ற மாட்டார்கள்!

ஆனால், அவார் மொழியே!

உன் இனிமை சொல்லே

என்னை காப்பாற்றும்!

அவன் மேலும் தொடர்கிறான்; பாடுகிறான்;

உலகின் பிற மொழிகளுக்கு

எத்தனையோ சிறப்புகள் இருக்கலாம்!

ஆனால்-

அவைகளில் நான் வாய்விட்டுப் பாடமுடியாது!

எம்மொழி வீழும் நாள், நாளை என்றால்,

இன்றே சாவு எனக்கு வரட்டும்!

பின்னர் சாவு அங்கே போகட்டும்!

பாவேந்தர் பாரதிதாசன் எமை நத்துவாய் என எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடேன்! தமிழை பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்.என்று வஞ்சினம் கூறியதைப் போல், ரசூல் கூறுகிறான்.

சுதந்திர தாஜிக்கிஸ்தானே!எழில் மலர்கள்

பூத்துக் குலுங்கும் நாடே!

நீ என் முகம்!

எப்பகைவனும் உன் மீது கைவைக்க விடமாட்டேன்.

உன்னை இழிவாக வசைபாடினும்

நான் தாங்கிக் கொள்வேன்.

எனது தாஜிக்கிஸ்தானை ஒரு இழி சொல் தொட விடமாட்டேன்.

நீ என் காதலி!

நீ என் சபதம்!

நீயே என் வழிபாட்டு குரியை!

உன் இறந்த, நிகழும் எதிர்காலங்கள் எல்லாம்

என்னோடே!

அதை யாரும் பிரிக்கவியலாது!

பாவேந்தனை போல் மொழி, நாடு பற்றிக் கோபுரத்தில் ஏறிக் குரல் கொடுத்தவன் ரசூல். அவன் தன் இனம் பற்றிப் பாடுகிறான்.

நான் அவார் இனத்தவன்!

நான் கண் திறந்தேன்!

அவார் மக்களைப் பார்த்தேன்

அவார் பேசும் மொழியைக் கேட்டேன்!

என் தாய் அவார் மொழித் தாலாட்டுப்

பாடினார்!

பார்த்தும், கேட்டும், நுகர்ந்ததும்

அவார் அல்லவா? இது என் சொத்து!

ஆம், நான் ஒரு அவார்?

உணர்ச்சிப் பிழம்பாய் வாழ்ந்த ரசூல் தன் தாய்மொழி விரிந்து பரவவில்லையே என்று கவலை கொள்ளவில்லை. இலக்கண, இலக்கியங்கள் நிறைய இல்லையே என்று வருந்தவில்லை.

எனது இதயம் எப்பொழுதும்

என் மொழி பற்றியே எண்ணுகிறது!

பொதுச்சட்ட மன்றில்

(பாராளுமன்றத்தில் தமிழுக்கு இடமில்லாதது போல முழங்கும் வாய்ப்பு இல்லாவிட்டாலும் போல)....அதுவே என் உயர்மொழி!என்கிறான்

பெல்ஜியத்தில் நடந்த உலகக் கவிஞர்கள் மாநாட்டிற்கு ரசூல் செல்கிறார். அங்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்துள்ள கவிஞர்கள், தங்கள் தங்கள் பண்பாடு பற்றிக் கூறினர். ஒரே ஒரு கவிஞன் கனவான்களை! நீங்கள் பல தேசங்களிலிருந்து வருகிறீர்கள். நீங்கள் பல மக்களின் பிரதிநிதிகள்! ஆனால் நான் எந்நாட்டின் பிரதிநிதி அல்லன். நான் கவிதையின் பிரதிநிதி. எல்லா நாடுகளின் பிரதிநிதி! நானே கவிதை...என்று கூறிய கவிஞனைக் கட்டித் தழுவினார்கள்! ரசூலைப் பாராட்டியப் பெருமைப்படுத்தினர். தனது சொந்த மண்ணிற்குப் பிரதிநிதியாக முடியாதவன், இந்தப் பூமிக்குப் பிரதிநிதியாக முடியாது என்றான் கம்சதோவ்!

அவன் மேலும் கூறுகிறான்,

ஒருவன் நாட்டில் குடியேறி

அங்குள்ள பெண்ணை மணந்து வாழலாம்!

தாய் மண்ணில் தாய் இருக்கலாம்!

மனைவியின் தாய் தாயாவாளா?

தாஜிக்கிஸ்தான் அவார் நாட்டில் மொழிப்பற்று எப்படி ஓங்கி வளர்ந்துள்ளது,என்பதை ரசூல் ஒரு நிகழ்ச்சியால் விவரிக்கிறார் பாருங்கள்.

ரசூல் வெளிநாடு சென்றிருந்தார். அங்கே தன் அவார் இனத்து நண்பன் ஒருவனை அவனது இல்லத்தில் சந்திக்கச் சென்றார். பிறகு நாடு திரும்புகிறார். ரசூலைப் பார்க்கவும். தன் மகனின் நலம் விசாரிக்கவும் பெற்ற தாய் வருகிறார்

ரசூல் கூறினார். அவனது வளமிக்க வாழ்வு பற்றியும், செழுமை மிக்க தோற்றம் பற்றியும்,

அந்த தாய் ரசூல் நிறுத்துஎன்றாள்.

ஏன்?என்றாள் ரசூல்.

அவார் இனத்தவனாகிய என் மகன், உன்னுடன் அவார் மொழியில் பேசினானா? என்று கேட்டாள்.

இல்லை, வேறு மொழியில்!என்றான்.

உடனே அந்தத்தாய், நான் பெற்று வளர்த்த மகன், நான் சொல்லித் தந்த அவார் மொழியை மறக்க முடியாது. ஆகவெ என் மகனாக அவன் இருக்க முடியாது,என்று கூறி விட்டுக் கறுப்புத் துணியால் முக்காடிட்டு, ரசூல்! என் மகன் இறந்து வெகு நாளாயிற்றுஎன்றாள்.

இத்தகைய தாய்மார்களே, புறநானாற்றுத் தாயர் ஆவார்.

நினைத்துப் பாருங்கள்.

தமிழகத் தருதலைகள் பல வெளிநாடுகளில் குடியேறி, நாகரீகத் திமிரால் தமிழையே மறந்தும், பேசுவதற்கு நாணப்பட்டும் இருப்பதை.

அவார்த் தாயின் உணர்வை நம் தாயர்கள் பெறுக!!

அதோடு உணர்வுள்ள நல்ல படைப்பாளிகளையும் பிள்ளைகளையும் பெறுக!!!