வியாழன், 5 பிப்ரவரி, 2009

இந்திய உளவு நிறுவனங்களின் சதி பற்றி கருணாநிதி-மீள்பிரசுரம்

ரா உளவு நிறுவனம் தான் இந்த குழப்பங்களை உருவாக்குகிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் மாநில அரசுக்குமிடையே மோதலை உருவாக்குவதே ராவின் நோக்கமாக இருக்கிறது, எனவே இதில் பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஈழத்தமிழ் குழுக்களிடையே கடந்த காலங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கியதற்கு ரா தான் காரணமாக இருந்தது. இப்போது அதே வேலையை மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும், இடையே செய்து கொண்டிருக்கிறது


Sri Karunanithi, on 8th May 1990, on the floor of the assembly is reported to have accused the Research and Analysis Wing(RAW) of trying to create a rift between the Center and the State appealed to the Prime Minister to take appropriate action. He alleged that the RAW which was responsible in the past for creating Divisions among various Tamil Groups of Srilanka was doing the same between the Centre and the State”

(ஆதாரம்: ஜெயின் ஆணைய அறிக்கை)


என்று வெளிப்படையாக குற்றம் சாட்டினார், தமிழகத்தின் முதல்வர் ஒருவராலேயே சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்து இது!


தமிழக முதல்வர் கலைஞர் கருணநிதி தெரிவித்த அச்சப்படி அதற்குபிறகுதான் தமிழ்நாட்டில் பத்நாபா படுகொலையும், சகோதர யுத்தங்களும் தொடர்ந்தன.


உளவு நிறுவனங்களின் பார்ப்பன சதித் திட்டம் உருவானது. இதற்கு தளம் அமைத்துத் தந்தது ரா உளவு நிறுவனம் தான்!


உளவு நிறுவன மிரட்டலுக்கு திமுக பணிய மறுத்தது. உடனே ஜெயலலிதா, சுப்ரமணியசாமி,எம்.கே.நாராயணன் என்று உளவு நிறுவன பார்ப்பன சக்திகள் தீட்டிய திட்டத்தின்படி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.


அதே உளவு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் 2007-லும் தனது திருவிளையாடல்களை துவக்கி இருக்கிறது.


உளவு நிறுவனங்களோடு கடந்த காலங்களில் கசப்பான அனுபவங்களை சந்தித்து, அவர்களின் சூழ்ச்சி பொறிகளை தெளிவாக புரிந்து வைத்துள்ள திமுக ஆட்சி, பொய்மை பிரச்சாரத்துக்கு துணை போய் விடக்கூடாதுஎன்பதே நமது வேண்டுகோள்.

நன்றி :

ஈழப்பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி(பக்கம்:64-65)

ஆசிரியர்: விடுதலை க.இராசேந்திரன்.

வெளியீடு:பெரியார் திராவிடர் கழகம்

முதல் பதிப்பு:௨00௭(2007)


இந்த நேரத்தில் கருணாநிதிக்கு நினைவுப்படுத்தபட வேண்டிய (பாவம் மறந்து போயிருப்பார்).

சரி அவருக்குதன் உடல் நிலை சரியில்லையே, அவருடைய மகன் அழகிரியும், மு.க.ஸ்டாலினும் படிக்கட்டும், அல்லது இது நூல்களை தகவல் உள்ள தாள்களை தங்களுடைய பிறந்த நாள் கொண்டாட்டதில் கேக் பரிமாறட்டும்.


ஆதலால், மீள்பிரசுரம்

புதன், 28 ஜனவரி, 2009

தமிழன் அழிக்கப்பட வேண்டியவன்தானா......?

தமிழன் என்பவன் யார்? என்றால்

* கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடியின் வழித்தோன்றல்

* உலக மொழிகளிலேயே தற்போது வழக்கில் உள்ள மொழிகளுள் தொன்மையான மொழிக்கு இன்றைய உரிமையாளன்.

* உலகுக்கே பொதுமறைத் தந்த வள்ளுவனுக்கு உறவுக்காரன்.

இப்படி பல பெருமைகளுக்கு உரிமைக்காரன், இதில் இன்றைய நிலையை குறிப்புக்கு சேர்த்து கொள்வோமா என்றால் ..

* பதவி வெறிப்பிடித்த அரசியல் ஓநாய்களுக்கு உறவுக்காரன்.

* தம் உறவையே, சாதியின் பெயரால் தீண்டத்தகாதவனாக்கும் கொடுமைக்காரன்.

* மதத்தின் பெயரால் பிரிந்து கிடக்கும் இளித்தவாயன்.

* நல்லதொரு தலைவனை தேர்ந்தெடுக்க திறமையற்ற/திராணியற்ற கூட்டத்தின் உறுப்பினன்.

* எதிரிக்காக போடும் எலும்புக்காகசேலைக்குள்ளும்/ கோவணத்துக்குள்ளும் ஒழிந்து காவல் கிடக்கும் நாய் போன்றவன்.

* தம் இனம் அழிக்கப்படுகிறதே என்ற கவலையுள்ள அக்கறையோடு வீட்டில் மட்டும் பேசிக்கொள்ளும் பெருங்கூட்டத்தில் ஒருவன்.

* உரிமைக்கு போராடும் இயக்கங்களை கேலி செய்யும் ஈனப்பிறவிகளில் ஒருவன்.

எனப்பெருமைகளை ஆவலோடும் , சிறுமைகளை வருத்தததோடும் பேசிக்கொண்டாலும்,எனது குருதிப்பாசம் தமிழன் அழிவை பார்த்து வருந்தத்தான் செய்கிறது.எனக்கு நாட்டுப்பற்றோ, மொழிப்பற்றோ கிடையாது, மானுடப்பற்று மட்டுமே உண்டு. தமிழின அழிவு அவன் பேசும் மொழியின் பொருட்டுதான் நிகழ்கிறது, இனப்பகையின் வஞ்சகத்தால்தான் நிகழ்கிறது, அவன் பேசும் மொழியும் நான் பேசும் மொழியும் ஒன்று, தமிழை தாய் மொழியாகக் கொண்டு வளர்ந்த என்னை போன்ற மனிதன் நாளும் சாவின் விளிம்பில் போராடிக் கொண்டிருக்கிறான்,என்பதை நினைக்கும் போதுதான் வருத்தம் கோபமாக வழிந்தோடுகிறது. சில நேரங்களில் பதிவுகளாக, சொற்களாக வெளிப்படுகிறது. ஏன்? உன் இனத்திற்காக உயிரை துச்சமென மதித்து களத்தில் இறங்கி போராட வேண்டியதுதானே,என்று கூட சிலர் கேட்கலாம், ஆனால், இங்கு உயிர் விட்டாலும் மானுடபற்று/இனப்பற்று கொழுந்துவிட்டு எரியுமா?

மிகப்பெரும்பான்மையான சாத்தியக்கூறுகள் என் மானுடப்பற்றோடு கூடிய இந்த இனஎழுச்சி வேட்கை என் சிதைத் தீயிலேயே எரிந்து விடும் என்ற அச்சத்தையே ஏற்படுத்துகிறது.

தமிழனின் இக்கால இந்த இக்கட்டான சூழலில் தமிழன் திராணியோடும், தமக்கு இந்த நாட்டில் இழைக்கப்படும் துரோகங்களையும் கண்டு பெருங்கோபத்தோடும் பொங்கியெழாமல் செய்தவன் யார்? என்று கேள்விகள் கேட்டு மற்றவனை கைநீட்டினாலும், தமிழர்களே உங்களை ஒருமுறை சுய ஆய்வு செய்து கொள்ளுங்கள். நீங்கள் தானே அந்த ஒற்றுமை சீர்குலைவுக்கு காரணம்? நாங்கள் எப்படி காரணம் என்று நீங்கள் வியக்க மாட்டீர்கள் என்றே கருதுகிறேன்.

சிங்களன் தமிழனை கொல்லுகிறான் அது இனப்பகை, இனவெறி என்று நாம் வகுத்து அவனை விமர்சித்து எதிர்த்தாலும், தோழர்களே எத்தனை ஆண்டுகளாக அறிவே இல்லாமல் உங்கள் சகோதரர்களை சேரியில் தள்ளி ஒதுக்கி அவர்களை தீண்டத்தகாதவர்களாய் மனிதனிலும் கீழாய் நடத்தினீர்கள். காலம், காலமாக அடிமைப்பட்டவனுக்குதான் விடுதலையின் பெருமைத்தெரியும், அதேரீதியில் அங்கே இலங்கையில் வாழும் தமிழனுக்கு ஆதரவு தெரிவிக்க அவனுக்கு மட்டும்தானே உரிமையுண்டு, உங்களுக்கு (தங்கள் மேல் சாதியாக கருதிக் கொள்பவர்களுக்கு) , காலம் காலமாக அடிமைப்படுத்தியர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது.

இந்த விமர்சனம் நீங்கள் ஏன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறீர்கள்?என்ற தொனியில் எழுந்ததல்ல,

நீங்கள் ஏன் முழுமையான மனிதனாக இல்லை. நீங்கள் மனித பண்புகளோடு/ அன்புள்ளத்தோடு இருந்தால், நீங்கள் தமிழனாக இல்லாவிட்டால் கூட மன்னித்துவிடலாம். ஆனால், சக மனிதனின் துயரத்தை கண்டு இரங்கும் மனிதனாக இல்லாமல், சக மனிதனை துனுபுறுத்தும் ஒரு மனித உருவில் திரியும் விலங்காக இருந்தால் மன்னிக்க இயலாதுஎன்பதை தெரிவிக்கத்தான்.

தன்னோடு வாழும் மனிதனை துன்புறுத்திக் கொண்டே, தொலைவில் வாழும் மனிதனின் துன்பத்திற்காக வாடுவது, ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவது போல்தானே உள்ளது.

ஒரு எடுத்துக்காட்டு இப்படி வைத்துக் கொள்வோம், அங்குள்ள அனைத்து தமிழர்களையும் தமிழகத்தில் குடியமர்த்தி விடுவோம், நீங்கள் (சாதி பின்னால் திரியும்) அத்தனை பேரும் அவர்களிடம் சாதி பாகுபாடு இல்லாமல் திருமண வைத்துக் கொள்ளத்தயாரா? இந்த கேள்விக்கு பெரும்பான்மையான தன்னை தமிழனாக அடையாளப்படுத்திக் கொள்ளும் பலரிடமும் கள்ள-அமைதியே பதிலாக வரும். இது இன்றைய உண்மை நிலை மிகவும் வருத்தத்தோடு, உரத்து சொல்ல கூடியதுதான். ஆகவே, தமிழர்களே தயவு கூர்ந்து திருந்துங்கள், இன்றில்லையேல் என்று திருந்த போகிறீர்கள்.

இவ்வளவும் விமர்சிக்கும் நான் ஒரு தமிழனாக இருக்கிறேனா? மனிதனாக இருக்கிறேனா?என்றெல்லாம் உங்கள் உள்ளத்தில் கேட்கும் கேள்வி என் காதில் விழத்தான் செய்கிறது. அப்படி ஒரு கேள்வி எழுமானால் அதற்குமுன் உங்களை மனிதர்களாக இந்த சமூகத்தில் நிறுவிவிட்டு உங்கள் கேள்வியை வெளியிடவும். அதற்குமுன் அந்த கேள்வி கேட்க அவசரப்பட்டால், “ அவன் மட்டும் மலம் தின்னலாமா? நான் தின்னக்கூடாதா என்ற கேள்வியைப் போல் ஆகிவிடும்.

உனக்கு ஈழத்தமிழன் குறித்த கவலையில்லையா ? என்று கேட்பீர்களானால், கண்டிப்பாக இருக்கிறது, உள்ளம் பதைபதைத்துக் கொண்டு, வருத்தத்தில் துடித்துக் கொண்டு இருக்கிறது,

ஈழத்தமிழனின் சாவின் விளிம்பில் இருக்கிறானே? ஆனால், இங்கு தேர்தல் ஓட்டுகளுக்காக, சாதிக்காக, மதத்திற்காக அடித்து கொண்டு சாகிறார்களே.... என்ற ஆதங்கத்தோடு இவ்வளவையும் கொட்டி தீர்த்திருக்கிறேன்.

தயவு கூர்ந்து உடனடி தன்னாய்வை மேற்கொள்ளுங்கள், இல்லையென்றால் அழிய வேண்டியது ஈழத்தமிழனல்ல, முதலில் பெரும் மக்கள் தொகை கொண்ட தாயகத்தமிழன்தான்.

சாதியின் பின்னால் ஒழித்து வைத்துக் கொண்டு தமிழர்கள் போல் நாடகமாடும் நீங்கள் மனிதத்தின் பொருட்டு உறுதியாக அழிக்கப்பட வேண்டியவர்கள்.......................

சனி, 24 ஜனவரி, 2009

(சுயமரியாதையுள்ள) தமிழர்களுடைய வீட்டிலும் கருப்பு கொடி ஏற்றுவோம்.-இந்தியாவின் குடியரசு தின விழா


26 சனவரி, 1950 இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டது. அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் சாதி ஒழிக்கப்படாமல், போனால் போகட்டும் என்பதுபோல் தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. (சாதி ஒழிக்கப்பட்டால் இந்து மதத்திற்கு இங்கு வேலை என்று நினைத்திருப்பார்களோ என்னவோ?) . இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டபிறகும் இதை பற்றியெல்லாம் பேசி பழமைவாதியாக இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்பீர்களானால், நீங்கள் நானும் அடிமையாக உருவாக்கப்பட்டு


இன்று இந்த நாட்டின் அதிகாரப்பூர்வ அடிமைகளாக திரிவதற்கு இவைதான் காரணிகள் என்று சொல்லத் தோன்றுகிறது.

இன்று பேச்சுரிமை இருப்பதாக கூறப்படும் இந்தியாவின் நிலை என்ன?எந்த உரிமையாக இருந்தாலும் அரசுக்கு ஒடுக்குவதற்கு உரிமை உள்ளது என்பதுதானே நிலை!


ஈழத்தில் தமிழன் என்பதற்காகவே கொல்லப்படுகிறான், நான் தமிழன் என்பதினாலேயே என்னுள்ளம் துடிக்கிறது குரல் கொடுக்கிறேன்.


இல்லை, இல்லை நீ தமிழன்என்பதற்காக குரல் கொடுக்கக் கூடாது. இப்படி நீ குரல் கொடுத்தால் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும்.


இந்தியாவை தூண்டாடும் முயற்சியாக கருதப்படும், கைது நடவடிக்கைகள் ஏற்படும், உங்கள் குரலை ஒடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவோம், என்றெல்லாம் அரசு பொறுக்கித்திண்ணிகள் குரல் கொடுக்கிறார்கள்.


சரி நான் குரல் கொடுக்கவில்லை? இந்திய அரசே நீ என்ன செய்யப்போகிறாய்? என்றால், கொஞ்சம் பொறுத்திரு, அங்கே இருக்கும் உன் தமிழன உறவுகளின் மொத்த உயிரையும் சிங்கள பேரினவாதம் விரைவில் துடைத்தெரிய நாங்கள் உதவி புரிகிறோம், அவர்கள் அங்கு உயிரோடு போராடிக் கொண்டிருந்தால்தானே நீ குரல் கொடுப்பாய், உனக்கு அந்த பிரச்சினையை நாங்கள் வைக்கமாட்டோம் , நீ வெகு காலம் துடித்து கொண்டிருக்க வேண்டாம் என்பது போல் இந்திய அரசு கொக்கறிக்கிறது, இங்குள்ள அரசியல்வாத, பிழைப்புவாத தமிழர்கள் இந்திய வல்லாதிக்கத்துக்கு அச்சப்பட்டு, தமிழர்களை காட்டிக் கொடுக்கிறார்கள், அவன்(இந்திய பார்ப்பன, பனியா வடநாட்டுக் கும்பல்) குண்டுகளை கூட்டிக் கொடுக்கிறான்.


இவையெல்லாம் பார்த்து கொண்டு தமிழன் அமைதியாகவே இருக்க வேண்டும்,ஏனென்றால்

இந்தியா ஒரு மாபெரும் குடியரசு!

வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு!!

சரி அப்படி என்னதான் வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறது இந்தியா?


  • பல்வேறு சாதிகளாக, பிரிந்து கிடந்தாலும், மொழி, இன வேற்றுமைகள் இருந்தாலும் தீண்டாமைக் கொடுமைகளை தொடர்ந்து மாநில வேற்றுமைகள் இன்றி கடைபிடித்து வருகிறது.

    இந்த ஒடுக்குமுறைகளை ஒடுக்குவதற்கு துப்பில்லாமல் இந்த வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் ஒற்றுமை குலைக்கலாமா, நாம்.


  • கர்நாடகம், ஆந்திரா, கேரளம் போன்ற மாநிலங்கள் மொழிவாரியாக வெவ்வேறு மாநிலங்களாக வேறுபட்டு இருந்தாலும், ஒற்றுமையோடு தமிழகத்துக்கு குடிக்க நீர் தரமாட்டோம் என்ற வேற்றுமையில் ஒற்றுமையை பின்பற்றுகிறதே!

    இந்த ஒற்றுமையை பேணி காக்க உயர்நீதிமன்ற தீர்ப்பை கூட அமல்படுத்தாமல் திராணியற்று கிடக்கும் இந்திய அரசின் ஒற்றுமையை (அப்)பாவி தமிழர்களே குலைக்கலாமா?
  • இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழகம் மட்டும் வருந்தும் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக ஒற்றுமையாக மௌனம் காக்கும் வேற்று மாநில மக்களின் ஒற்றுமையை குலைக்கலாமா, தமிழர்களே?


தமிழனின் உணர்வு புரியாத நாடு தமிழனின் நாடுதான். ஏனென்றால், அப்படித்தான் தாளில்/சட்டபுத்தகத்தில் வரையறுக்கப்பட்டுவிட்டது, அப்படியிருக்க நீங்கள் இந்திய வல்லாதிக்க நாட்டை எதிர்க்கலாமா?


தமிழர்களே உங்களுக்கு ஒற்றுமையுணர்வு இல்லை, இந்தியா வல்லரசு நாடாக கனவு கண்டு கொண்டிருக்கும்பொழுது, நீங்கள் சாதாரண உங்கள் அற்ப தமிழ் உயிர்ளுக்காக குரல் கொடுக்கிறீர்களே இது எந்த விதத்தில் நியாயம், இந்தியாவின் வெளியுறவு/உள்ளுறவு கொள்கையே தமிழனின் எச்சில் இலைக்கு சமானமாக மதிப்பதுதான், இதை புரிந்து கொள்ளாமல் இந்திய வல்லரசு நாட்டை எதிர்க்கிறீர்களே?


சரி இந்தியா வல்லராசும் லட்சணத்தை கீழ் வரும் கட்டுரையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் வீட்டில் என்ன கொடி ஏற்ற வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.



.

செய்தி ரசம்

Related Article:

19% இந்தியர்கள் வாழ்க்கையை ஒட்டுவது வெறும் 12 ரூபாயில்..!!!
India grows so does the Inflation - Don’t talk about Indians!!!
India is First always!!! The record breaking Three seconds

================================================
"59 ஆண்டு கால குடியரசு தினத்தின் யோக்கியதை" - ஓட்டுக்கட்சிகளின் சாதனை
நன்றி: இரும்பு

பட்டினியால் வாடும் மக்களின் தன்மையை அளவிடும் சர்வதேச அளவிலான குறியீட்டெண்ணின் அடிப்படையில் இந்தியா எத்தியோப்பாவை விடத் தாழ்ந்து போயுள்ளது. சீனா (47 வது இடம்), பாகிஸ்தானை விடவும் (88ஆவது இடம்) இந்தியா (94 ஆவது இடம்) மிகவும் பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
..
மகப்பேற்றின்போது போதிய மருத்துவ வசதி இன்மையால் இறந்து போகும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு 1.17 லட்சம்.

வயது வந்த இந்தியர்களில் 48.5% பேர்கள் ஊட்டச்சத்துக்குறைவானவர்கள். 3 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 47! பேருக்கு வயதுக்கேற்ற உயரமில்லை. 15.5% பேர்களுக்கு உயரத்துக்கேற்ற எடை இல்லை என்பதெல்லாம் ஆய்வுகளில் தெரியவந்தவை.

1997 முதல் 2005 வரை இந்தியா முழுவதும் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

மராட்டியம், கருநாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் 89,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

32 ஆயிரம் பேர்கள் தற்கொலை செய்து கொண்ட மராட்டிய மாநிலத்தில் தான் 4 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் 25 ஆயிரம் பேர் வாழும் மாநகரமான மும்பை உள்ளது என்பது வேதனை கலந்த உண்மை.

விவசாயத்துக்கு 1990-இல் வங்கிகள் வழங்கிய கடன் 13.8 சதவீதமாக இருந்தது. அதே வங்கிகள் 2001 - -2 நிதியாண்டில் வழங்கிய கடனோ 7.2 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில் இருந்தே, ஆட்சியாளர்களுக்கு விவசாயத்தின் மீதுள்ள அக்கறை தெளிவாகப் புரியும்.

விவசாயத்தைப் படிப்படியாய் தலைமுழுகி விடுவது என்ற அடிப்படையில், 1991-இல் விவசாயத் துறையில் அரசு செய்த முதலீடு 3.4 சதவிதமாக இருந்த நிலைமை மாறி, அதை 2001-ல் 1.3 சதவிதமாகச் சுருக்கி, விவசாயிக்கு சுருக்குக் கயிற்றைத் திரித்துத் தந்தது.

உடல் உழைப்புக்கு அவசியமாகத் தேவைப்படும் புரதத்தை வழங்கும் பருப்பின் நுகர்வோ 15.2 கிலோவில் இருந்து 10.6 கிலோவாகச் சரிந்துள்ளது.

உலக அளவில் நாளொன்றுக்கு தனிநபர் உண்ணும் உணவின் கலோரி மதிப்பு 3206. ஆனால் இந்திய மக்களின் ஏழைகளான 30 சதவிதம் பேர் உண்பதோ வெறும் 1626 கலோரிதான் என்றால், இந்திய ஏழைகளின் வாழ்க்கை என்பதே ஏதோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதுதானே பொருள்?

இந்திய மக்களில் 91 கோடி பேர்களின் தினசரி வருமானம் 80 ரூபாய்க்கும் கீழே என்றும், அந்தக் கொஞ்ச நஞ்ச பணத்துக்குள் உணவு, வீட்டு வாடகை, மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்படியான அவல் நிலைக்குத் தள்ளி உள்ளது என்றும் உலக வங்கியே குறிப்பிடுகிறது.

ஆனால் அதே நேரத்தில், நாட்டில் உள்ள 10 சதவீதப் பணக்கார்கள் இந்நாட்டின் 52 சதவீத சொத்துக்களையும் வளங்களையும் அனுபவிக்கின்றனர். அடித்தட்டில் இருக்கும் 10 சத ஏழைகள் அனுபவிக்கும் வளங்களோ வெறும் 0.21 சதமாகச் சுருங்கி உள்ளது.

110 கோடி இந்திய மக்களில் வெறும் ஒரு லட்சம் பேரை மட்டும் கோடீஸ்வர்களாக்கி, பல பத்து கோடிப்பேரை ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுபவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

டிசம்பர் "புதிய ஜனநாயகம்"
"உழைத்தவர் மெலிந்தனர் வலித்தவர் கொழித்தனர்" கட்டுரையில் இருந்து


திங்கள், 19 ஜனவரி, 2009

மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களுக்கு,

இன்றைய சிக்கலான சூழலில் தமிழுணர்வோடு மின்னஞ்சல்தான் எழுத முடிகிறது. தமிழுணர்வு என்பது கையாலாகத்தனத்துக்கு ஒரு எடுத்துக்காட்டோ? என்று கூட தோன்றுகிறது. தமிழன் யார்? தமிழனின் பழமை/ பெருமை என்ன? இதற்கு முன் நடந்த பிரச்சினைகள் என்ன? நீங்கள் என்ன சாதித்தீர்கள்? என்ன செய்யவில்லை? மற்றவர்கள் என்ன சாதித்தார்கள்? என்ன துரோகம் செய்தார்கள்? என்றெல்லாம் பட்டியலிட்டு காட்டி ஒருவரை ஒருவர் விமர்சித்து நம் துயரை மேலும் துயராக்க விரும்பவில்லை. அல்லது பட்டியலிடுவதற்கு எனக்கு போதிய அறிவோ, என்னிடம் தகவலோ இல்லை என்று கூட நினைத்து கொள்ளலாம்.

ஆனால்,

இந்திய வல்லாதிக்கம் திட்டமிட்டு தமிழர்களின் உணர்வுகளை கொச்சைபடுத்தி விட்டது, கோரிக்கைகளை உதாசினப்படுத்திவிட்டது என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்திருக்கிறான். நீங்களும் உங்களுடைய ஏமாற்றம் என்ற ஒற்றைச்சொல்லில் அதை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

எம்மை பொருத்தவரை போராளிகளும் தமிழர்களே! அவர்கள் போராளிகளாக தூண்டிய சிங்கள இனவெறிதான் தமிழின நீதிமன்றத்தில் குற்றவாளி. இத்தனை ஆண்டுகாலமாக கொடுமைகளை இழைத்துவிட்டு, இப்பொழுது உரிமைக்கு போராட வந்தவர்களையும் அழிப்பது என்பது சிங்கள இனவெறியின் வெற்றிதானே தவிர வேறில்லை. இதற்கு இந்திய அரசு துணைபோவதுஎன்பது தமிழர்களை இளித்தவாயர்கள் என்று கருதுவதுதானேயன்றி வேறென்ன இருக்க முடியும்? தமிழர்கள் இந்திய/பார்ப்பன வல்லாதிக்கத்திற்கு கட்டுபட்டு மொழியை, பண்பாட்டை தன்னடையாளத்தை இழந்தது போதாதா? உயிரையும் இழக்க வேண்டுமா,என்ன? ஈழத்தமிழன் என் சகோதரன் அதை எத்தனை வல்லாதிக்கம் வந்தாலும் மறைத்துவிட முடியாது. எத்தனை பார்ப்பன வந்தேறி கூட்டம் அறிக்கை விட்டாலும் அழிக்க இயலாது.

இத்தனை வலிதோய்ந்த சொறகளுக்குள்ளும் இருப்பது கீழுள்ளவைதான்

ஈழத்தமிழனுக்கு செய்யும் துரோகம் என்பது ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் செய்யும் துரோகம், அவர்கள்தான் தமிழின் பெருமை, தமிழை உலகுக்கு எடுத்து சொன்னவர்கள், என்னை பொருத்தவரை இந்தியன் என்று சொல்லி கொள்வதில் பெருமைப்பட்டதில்லை, ஆனால் எதிர்க்கவில்லை. ஆனால், இது தொடருமானால் அதுவும் நிகழ வாய்ப்புண்டு என்பதை நீங்கள் அறியாதது அல்ல. இது என்னுடைய சொந்த குரல் மட்டுமல்ல உணர்வுள்ள ஒவ்வொரு தமிழர்களின் கண்ணில் வழியும் கண்ணீரில் உள்ளது, சொற்களாக வெளிப்பட்டுவிடாமல் பாதுகாப்பது உங்கள் கடமை. திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிடும் பொழுது சொன்ன காரணங்கள் தீர்க்கபடாமல் இருப்பதாக கூறினார். ஆனால், இன்றைய நிலையில் காரணங்கள் கூடிக்கொண்டே இருக்கின்றன துரோக பட்டியலில்

இறுதியாக ஒன்றே ஒன்று,

நீங்கள் தமிழர்களின் முதல்வர், இந்திய துணைக்கண்டத்தில் ஏதோ ஒரு பகுதியை நிர்வகிக்கும் நிர்வாகி அல்ல. தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்.