வியாழன், 16 ஏப்ரல், 2009

தமிழர்களின் எதிரிகளாகிய தமிழர்கள்?-1

நாங்கள் விரும்பியோ, விரும்பாமலோ எம்மைப் போராட சிங்களதேசம் பணித்து விட்டது. 30 ஆண்டுகளாக போராடி இறுதி லட்சியமாம் தமிழீழத்தை அடையும் நேரம் வந்திருக்கும்வேளை, நீங்கள் போராட்டத்தை விடப்போகின்றீர்களா?

உங்கள் விடிவிற்காக நீங்கள்தான் போராட வேண்டும். நீங்கள் போராடாவிட்டால் உங்களுக்காக யார் போராடுவது? வன்னியில் இருக்கும் 2,50,000 பேரில் 50,000 பேர் போராட வலுவில்லாமல் இருக்கிறீர்களா? சிந்தித்துப் பாருங்கள் 50,000 இளைஞர், யுவதிகள் போராட்டத்தில் இணைந்து போராடினால் சிங்கள் இராணுவம் வந்த இடம் தெரியாமல் பறந்துவிடும்.

அன்பிற்குரிய தம்பி, தங்கை, அக்கா, அண்ணா உறவுகளே! போராட்டத்திற்கு வயதெல்லை கிடையாது. வயது பார்த்தா இராணுவம் உங்களை கொல்கின்றது. 1990 ஆம் ஆண்டு 14 வயதில் நான் போராட புறப்பட்டேன். காரணம் இடப்பெயர்வு, பாடசாலை இல்லை. நாம் நிம்மதியாக எமக்கென்று ஒரு நாடு வேண்டும் என்பதால். நீங்களும் அதேபோல்தான் நினைப்பீர்கள்.

உங்களது வலியை நேரில் தினம், தினம் கண்டு வெதும்பிக் குமுறுவதுபோல் இன்னொன்றையும் நினைத்து குமுறுகிறது உள்ளம். நீங்கள் தாங்குகின்ற வலியை உங்களது வயதில் நான் தாங்க வில்லை. அப்படியிருந்தும் என்னைப் போராட ஊந்தியது(அடிமைச் சூழல்). ஆனால், நீங்கள் எவ்வளவோ வலியை ஏற்படுத்திய சிங்கள இராணுவத்திற்கு எதிராகப் போராட ஏன் இன்னும் கிளர்ந்தெழாமல் இருக்கின்றீர்கள் என்பதை நினைக்க நினைக்க மனம் வெதும்புகின்றது.

சிங்கள் இராணுவம் ஏற்படுத்திய வலி காணாதா?

இன்னும் வலியை ஏற்படுத்தினால்தான் நீங்கள் போராடுவீர்களா?

மேற்கணட சொற்கள் வான்புலி ரூபன் கொழும்பில் தாக்குதல் நடத்தி தன்னை அழித்துக் கொள்ளும் முன் வன்னி மக்களுக்காக எழுதியது.

இந்த சொற்களுக்கு பொதிந்திருக்கும் வலி நம் உள்ளத்தை ஆழமாக தைக்கிறது. ஆனால், இனவெறி ஆதிக்கத்திலிருந்து விடுபட தமக்குள் விடுதலை உணர்வை, தமக்காக மட்டுமில்லாமல் தம் மக்களுக்காக போராடும் போராளிகளை பேரினவாதம் மட்டுமல்ல, அறிவுலக மேதைகள் என்று தம்மை பறைசாற்றிக் கொள்பவர்கள்

மக்களை பலிகடா ஆக்குகிறார்கள், மனித கேடயமாக பயன்படுத்துகிறார்கள்.என்று கொச்சைப்படுத்தி தம் இருப்பை பதிவு செய்து கொள்கிறார்கள்.

அவர்கள் தமக்கு தெரிந்த வகையில் போராடுகிறார்கள், அவர்கள் ஒன்றும் பல்வேறு நாட்டின் தொழில்நுட்ப, பொருளாதார உதவியுடன் போராட வரவில்லை. தமக்கும், தம் அன்பானவர்களுக்கும் இழைக்கப்பட்ட துன்பங்களில் ஆழமான உள்ளத்தின் அழுத்தத்தினால் போராட வந்தார்கள். இவர்களின் போராட்டம் இறுதி இலக்கை அடைவதை விரும்பாத வல்லரசுகள் இவர்களின் போராட்டத்தை தடுக்க இவர்களுக்கே பயிற்சி கொடுத்து போராளிகளுக்குள்ளேயே மோதவிட்டார்கள். இந்திய வல்லாதிக்கத்தின் சதிகார உளவுக்கும்பல் போராளிகளுக்கு சண்டை மூட்டி பார்த்தது ,சண்டையில் மிஞ்சியவர்கள் புலிகள்.

இவற்றை எழுதுவதற்கு எமக்குள்ள தகுதி, நாம் மனிதனாக இருக்க முனைவதும், இனத்தின் மீது கொண்ட பற்றுதலுமே காரணம். போராட்டத்திற்கான கரு தோன்றிய, சிங்கள இனவெறி அடக்குமுறையின் தொடக்கத்தில் என் பெற்றோர்கள் பிறந்திருக்கவில்லை, புலிகள் மற்றும் இன்னபிற ஆயுதம் தாங்கிய போராளிகள் பிறந்த பொழுது நானும் பிறந்திருக்கவில்லை, ஆனாலும் சிங்கள இனவெறி தொடர்ந்து கொல்கிறது, நான் பதின்பருவம் கடந்த பின்னும் கொல்கிறது.

புலியாக இருப்பவன் யார்? என் சகோதரன்.

இயல்பான மனிதர்களின் வாழ்வின் மெனுணர்வுகள், பாசம், இளைப்பாற உறவு, துன்பம் பகிர்ந்து கொள்ள நண்பன் என அடிப்படை தேவைகள் அடங்கிய ஆழ்ந்த விருப்பங்களை தொலைத்து, தம்மை மறந்து தம் இனத்திற்காக, தம் இனத்தின் விடியலுக்காக, அடுத்த தலைமுறைக்காக போராட முனைந்த ஒருவனை உலகம் வல்லாதிக்கங்கள் அழிக்க முனைந்தாலும், அறிவு ஜீவிகள் மாற்று பிரச்சாரங்களை செய்தாலும், உள்ளம் ஏனோ வெறுக்க மறுக்கிறது.

நாம் இங்கே எழுத முனைந்தது புலிகள் மீது ரசிக மனோபாவம் கொண்டல்ல மாறாக அங்கு புலிகளாக அங்கே போராடுபவர்கள் எம்மை போன்ற மனிதர்கள், எம் இனவழி சகோதரர்கள் என்ற ஆழ்ந்த அன்பின் காரணமாக........ சிங்கள் பேரினவாதத்திலிருந்து புலிகள் மட்டும்தான் உருவாக முடியுமா? வேறு யாராகவும் உருவாகியிருக்க முடியாதா?என்று சிலர் கேள்வி கேட்கின்றனர். அடிபட்டு, மிதிபட்டு தனக்கென சிங்கள் பேரினவாதம் பச்சைகுத்திய சொந்த காயங்களின் வடுகளோடு போராட வந்தவர்கள்தாம் புலிகள். புலிகள் என்ற அமைப்பு உருவான உடன் சிங்கள் பேரினவாதம் தலைதூக்க வில்லை, சிங்கள பேரினவாதம் தலைதூக்கியதால்தான் போராளிகள் தோன்றினார்கள், அவர்களில் ஒரு பிரிவினர் புலிகள்.

அடிப்பவனை, காயப்படுத்துபவனை, கொடுமைப்படுத்துபவனை எதிர்த்து தற்காத்து கொள்ள போராடுபவனை நோக்கி அறிவுரைக் கூறுவதும்.

இல்லை! இல்லை!! இப்படி போராடக் கூடாது, இப்படித்தான் போராட வேண்டும், என்று போராட்டத்தில் கலந்து கொள்ளாதவன் பேசக்கூடாது இல்லையா.

அதோடு , இழவு வீட்டில் போய் இறந்தவரின் உடலுக்கு அருகே அமர்ந்து கொண்டு அவரின் உறவுகளிடம், இறந்தவரை பற்றி குறை கூறுவது,எந்தளவு காயப்படுத்துமோ, அந்தளவு காயப்படுத்துகிறது, புலிகள் மீதான இன்றைய விமர்சன தொகுப்புகள். புலிகளை விமர்சியுங்கள், மறுக்க வில்லை, ஆனால், இது தருணமில்லை.

பாலஸ்தீனத்தில் அந்நிய ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்த போதெல்லாம் ஒதுங்கியே இருந்த யூதன், தப்பித்து வேறு நாட்டிற்கு தன் உயிர் காக்க நாடோடிகளாக திரிந்த யூதன் உலக வல்லாதிக்கத்தின் துணை கொண்டு , இரண்டாம் உலகப் போருக்கு பிறகு 1948 இல் தன்னுடைய புராண(பழைய) தொடர்பு , நம்பிக்கையை மையப்படுத்தி இஸ்ரேல் என்னும் தேசம் அமைத்தான்

அந்நிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டங்களில் கைகொடுக்காமல், நம் வியர்வையால், உழைப்பால் கட்டிக்காத்த மண்ணை, சூழ்ச்சியால் நம்மை வஞ்சித்து நாடு மட்டும் பிடுங்கிக் கொள்ள இவனுக்கு(யூதனுக்கு) என்ன உரிமை உண்டு? என்ற பாலஸ்தீனியர்களின் நெருடல் தானே இன்று வரை பாலஸ்தீனத்தில் விடுதலை போராட்டமாக தொடர்கிறது.

அதேபோல, புலிகளை விமர்சித்து விட்டு தமிழர்களை கொன்றொழிக்கும் பேரினவாதத்திடம் கை கோர்த்து நிற்கும் கருணா வகையறா கோஷ்டிகளும், புலிகள்-கருணா கோஷ்டி என பாரபட்சம் இல்லாமல் திட்டி தீர்க்கும், விமர்சிக்கும் கோஷ்டிகளும், களத்தில் நின்று தாம் விரும்பும் மாற்றத்திற்கு போராடாமல், தமக்கு தெரிந்த வகையில் போராடும் புலிகளை மட்டும் விமர்சிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது.

மக்களை மந்தைகளாக்கி விட்டனர் புலிகள், தமக்காக தாமே போராட மக்களை அனுமதிக்க வில்லை

என்றெல்லாம் உண்மையான அக்கறையோடோ (அல்லது) உள்ளார்ந்த சூழ்ச்சியோடோ விமர்சிக்கும் தோழர்கள், மேற்குறிப்பிட்ட மடலில் வான்புலி ரூபன் அழைத்தது போல மக்களை தற்போதைய சூழலின் படி புலிகளோடு சேர்ந்து போராடத்தானே மக்களை தயார்ப்படுத்தியிருக்க வேண்டும். அதற்கான பிரச்சாரத்தைதானே இன்று இந்த மாற்று சிந்தையானளர்கள் செய்ய வேண்டும்.

மாறாக புலிகள் அழிந்துவிட்டால் மக்கள புரட்சிகர பாதையில் பயணித்து தானே போராடி தம் விடுதலையை வென்றெடுத்துவிடுவார்கள், பேரினவாதம் அழிந்து ஒழிந்து போகும் என்பதைப் போல மாயையை ஏற்படுத்துவது எந்த வகையிலான நியாயம். (நம் மக்கள் ஏற்கனவே மத, சாதி பிரிவுகளின் மந்தைகளாகத்தான் உள்ளனர்)

புலிகள் அமைப்பில் கொள்கை ரீதியாக சரியான கட்டமைப்பு இல்லையென்றால், அது நம் பிள்ளைகள் போராடும் களம், நம் பிள்ளைகள் உருவாக்கிய அமைப்பு என்றுஅங்கு தாமே முன்வந்து உண்மையான உணர்விருந்தால் இன்னின்ன திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று திருத்தங்கள் கூறியிருக்க வேண்டும். திருத்தங்களுக்காக போராடியிருக்க வேண்டும். புலிகள் பற்றி அவ்வளவாக தெரியாவிட்டாலும், புலிகளின் இராணுவ ஆற்றலை சரியாக பயன்படுத்தியிருக்க வேண்டிய கடமை, அறிவுஜீவிகளுக்குத்தானே உள்ளது.

ஆண்டன் பாலசிங்கம் சரியில்லை, பிரபாகரன் சரியில்லை, சரி நீங்கள் தலைமையேற்றிருக்க வேண்டியதுதானே.

பெரியார்

என்னைவிட தகுதியான நபர்கள் யாரும் இந்த பணிக்காக தம்மை அர்பணிக்க முன்வராததால், நான் இந்த சமூக சீர்திருத்த பணியை மேற்கொண்டிருக்கிறேன், அந்த பணியை வேறு யாரவது தகுதியான செய்ய முன்வந்தால், நான் அவர்களுக்கு விட்டுக் கொடுக்க தயாராயிருக்கிறேன்.

என்று கூறியதாகப் படித்தேன். அதே போல, பிரபாகரன் சரியில்லாத தலைவர், என்றால் அறிவுஜீவிகள், போராட்டக் களம் கண்டு சிங்கள பேரினவாதத்தின் ஆணிவேரை பிடுங்கியிருக்க வேண்டியதுதானே.

பாலஸ்தீனத்தில் அறிவாளிகள் அடங்கிய ஹமாஸ் இயக்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் யாசர் அராஃபத்தின் பி.எல்.எஃப்போடு வேறுபட்டிருந்தாலும், அவருடைய இயக்கத்தை முழுமையாக நிராகரிக்க வில்லை, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. யாசர் அரபத்துக்கு இஸ்ரேல் நாட்டினால் ஆபத்து என்ற போது, அவரை காப்பாற்ற முன்முயற்சி எடுத்தவர்கள் பிஎல்எஃப் போராளிகள், மற்றும் ஹமாஸ் இயத்தவர்கள்...........

நமக்கான போராட்டத்தை நீ போராடக்கூடாது, நாம்தான் போராட வேண்டும் என்றால், முதலில் நாம் உருப்படியாக போராடத் தயாராக வேண்டும், அதுவரை, போராடுபவர்களை விமர்சிக்கலாம், கொச்சைப்படுத்த துணியக் கூடாது. அதுவரை,எழுத்து ரீதியிலான புரட்சி ஒன்றுக்கும் உதவாது, நான் எழுதும் இந்த கட்டுரையும் இதற்குள் அடங்கும்.

இது வளர்ந்தும், வளராத கருத்து மொட்டின், சமூக போராளியாக உருவெடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கும், மொட்டின் உள்ளத்தின் ஆதங்கங்கள் மட்டுமே. திருத்தங்கள் இருந்தால் உடனே தெரிவிக்கவும் ,திருந்திக் கொள்ள தயாராக இருக்கிறேன்.ஏனென்றால், என்னை பண்படுத்துவதும் அறிவுஜீவிகளின் கடமை என்று நினைக்கிறேன்.

அதோடு, துரோகிகளும் துரோகங்களும், கருணா...க்கள் வடிவிலும், மக்களின் அலட்சியத்திலும், தன்னார்வ மிகுந்த விருப்பத்தாலும் நிறைந்து கிடக்கிறது. அடுத்த பதிவில் பட்டியலை கொட்டி தொலைக்கிறேன்.

அடுத்து, சமூகத்திற்குள்ளே நமக்கு எதிராக இருக்கும் எதிரிகளான சாதி, மத, அரசியல் பிரிவினைகள், முதலாலித்துவ சிந்தனைகள் நிரம்பி வழியும் தமிழர்கள் குறித்து.

திங்கள், 13 ஏப்ரல், 2009

தமிழக கூ(ஓ)ட்டுக் களவாணிகள்

பிரபாகரனை கைது செய்ய வேண்டும் - ஜெயலலிதா

கைது செய்தால், மரியாதையோடு நடத்த வேண்டும் - கருணாநிதி

என்ன கொள்கை ஒற்றுமை பார்த்தீர்களா?

ஜெயலலிதா முன் மொழிகிறார், கருணா-நிதி வழிமொழிகிறார்.

தாய்த்தமிழகத்தின் தமிழர்களை கொள்ளையடித்தது போதாதென்று, ஈழத்தமிழனின் ரத்தமும் சதையும் கேட்கிறது இந்த ஓட்டுப் பொறுக்கிகளுக்கு.

வாக்குச்சாவடிக்கு போக மறவாதீர்!

ஆனால், உங்கள் வாக்கை இவர்களுக்கும், இவர்களுடைய கூட்டுக் களவாணிகளுக்கும் அளிக்க கண்டிப்பாக கவனமாக மறந்து விடுங்கள்.

மறக்காமல், 49 O வை முன்னிருத்துங்கள், தகவலை அறிந்து கொண்டு, உங்களது ஓட்டுப் போட மறுக்கும் உரிமையாவது நிலைநாட்டுங்கள்.

எதிர்ப்புக்காட்டாமல் எறும்புகூட மடிவதில்லை, நாம் மனிதர் என்று கூறிக்கொள்கிறோம்.

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!

வியாழன், 9 ஏப்ரல், 2009

உங்கள் கவனத்திற்கு ஈழத்தில் மனித பேரவலம் நிகழப் போகிறது.

அவசரமாக விடுதலைப்புலிகளின் வேவுப்பிரிவினர் இத்தகவலை அறிவித்திருக்கின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் கடற்கரையோர பிரதேசத்தில் எழு(07) குழிதோண்டும் (வைக்கோ இயந்திரம் நின்று பாரிய குழிகள் தோண்டப்படுகின்றது. அக்குழிகளில் பாதுகாப்பு வலையத்தில் இருக்கின்ற அப்பாவி மக்கள் மீது இந்தியா கொடுத்த நச்சுவாயுவை வீசி கொண்றுவிட்டு இக்குழிகளி ல் போடும் திட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.. இப் பணியில் ஈடுபடுவதற்கென தென்பகுதியில் இருந்து ஊர்காவற்படையினர் அலம்பில் பிரதேசத்தில் வந்து நிலை கொண்டுள்ளனர். அவர்களிற்கு ஒவ்வொரு நாளும் காலை, மாலை முகமூடி(மாஸ்க்) அணிவிக்கப்பட்டு கடற்கரையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.


இரவு வேளை வேவுப்பணியில் போராளிகள் ஈடுபட்டிருந்த போது அங்கு நின்ற ஊர்காவற்படையினரின் உரைகளில் இருந்து இத்தகவல் மேலும் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

இவ் கொடூரத்தை அரங்கேற்றுவதற்காகவே வன்னியில் சுமார் அறுபதினாயிரம் மக்கள் மட்டும் உள்ளனர் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. உண்மையில் முல்லைத்தீவு அரச அதிபரின் கணக்குப்படி வன்னியில் உள்ள மக்கள்; தொகை இரண்டு லட்சத்துக்கும் மேல் என்று உத்தியோகப10ர்வமாக அறிவித்திருக்கின்றார்.


எனவே உடனடியாக சர்வதேசசமூகமும், புலம்பெயர் தமிழர்களும், குறிப்பாக தழிழக தலைவர்கள் இவ்விடயத்தில் ஒற்றுமையாக தலையிட்டு இங்கு நடக்கப்போகின்ற பாரிய மனித அவலத்தை தடுத்து நிறுத்துங்கள்.. இல்லையேல் ஒரு வரலாற்றுத் தமிழினம் பூண்டோடு அழிந்து விடும். இந்த நாகரிகமான புதிய நுற்றாண்டில் இப்படியொரு அவலம் தமிழனுக்கும், மனிதகுலத்திற்கும்.


தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எதிரிக்கு சந்தர்ப்பமாகவும், தழிழனுக்கு மரண இடியாகவும் அமையப்போகின்றது.

வியாழன், 12 மார்ச், 2009

தேர்தலில் யாரையெல்லாம் விரட்டியடிக்க வேண்டும்- ஒரு பாமரத்தமிழனின் சினம்

நான் பாமரன். நடக்கும் தீமை கண்டு கொதிக்கும் உள்ளம் இருந்தும், தடுக்கும் திராணியற்று போயிருக்கும் சமூகத்தின் ஒரு உறுப்பினன். தன் இனத்தை சார்ந்த ஒரு பெருங்கூட்டம் கொல்லப்பட்டும் ஒன்றும் செய்யமுடியாமல், உருவாகாத இந்திய போலி தேசியத்திடம் பிச்சை கேட்டு நிற்கும் பழம் பெருமை வாய்ந்த இந்நாள் தலைமுறையின் ஒரு பாமரன். பேசும் மொழியால் தமிழன் நான், கொள்கையின் வழியால் பெரியாரியல் மாணவன் நான். மற்றபடி சொல்வதற்கோ, பேசுதற்கோ ஏதுமில்லை என்னை பற்றி.

என்னை பற்றி பேசவா,எழுதத் தொடங்கினேன்.எம் நிலை பற்றி பேசத்தானே பேச/எழுதத் தொடங்கினேன். ஆனால், நம் நிலை பேசும் நிலையில் இல்லை, பேசினால் நாம் வெளியில் இல்லை. காலம், காலமாக மக்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்திய பார்ப்பன நச்சு பாம்புகளைவிடக் கொடிய பெரியாரை கொச்சைப்படுத்தும் திராவிட பாம்புகள்தான் நம்மை ஆளும் வர்க்கம். பெரியாரை உள்வாங்கிக் கொள்ளுங்கள், அவர் தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும்.............., அவ்வளவுதான் அவரை பற்றி அவர் வழியில் பேச முடியும். சொன்ன கடவுள் மறுப்பை பேசக்கூடாது, அவர் பேசிய தன்மதிப்பு கொண்ட, சுயநிர்ணய உரிமைக் கொண்ட தேசியம் பற்றி பேசக் கூடாது. பேசினால்............

சரி பேசத்தான் கூடாது,எழுதினால்

தமிழர்களின் தலைவர் என்று தமிழர்களிடம் சொல்லாமலேயே தலைவராகிப்போன தலைவர் கலைஞர்,

மிகவும் நல்லவர்...........அவருடைய குடும்பத்திற்கு,

சமதர்மம் பேணுபவர்...............அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பாரபட்சமில்லாமல் எழுதி வச்சிட்டு இருக்காரே,

எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்.........தன் குடும்பத்திற்காக காங்கிரசு கொடுக்கும் குடைச்சல் அத்தனையையும் தாங்கி கொண்டவர்,

மிகவும் அன்புள்ளம் கொண்டவர் தமிழர்கள் வீட்டில் கருமாதி விழுந்தாலும், அடுப்பெறிய வேண்டும், வாய்க்கரிசி வேண்டும் என்று அக்கறையோடு பிச்சை எடுத்து பிச்சை போட்டுருக்காரே,

பெண்ணுரிமை பேணுபவர்......சோனியா என்னும் தனிப்பெண்ணின் ஒரே கணவனை கொன்றதாக சந்தேகத்திற்கிடமாக சந்தேகப்படப்படும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவாக இருக்கும் பெரும்பாலான ஈழத்தமிழ் கூட்டம் அழித்தொழிக்கப்பட வேண்டும், பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க தாமதமானாலும் பரவாயில்லை , சோனியாவில் ஹீல்ஸ், பிளாஸ்டிக் செருப்பில் தைத்த குண்டூசியை உடனடியாக எடுக்கப்பட வேண்டும், அதை புரிந்து கொள்ளாத ஆணாதிக்க தமிழர்களை புரிந்து கொள்ளாமல் தவிர்த்து, தமிழர்களை மைய-அரசை புரிந்து கொள்ள தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறாரே. பெண்ணின் உள்ளுணர்வை புரிந்து கொண்டுள்ளாரே.

கலையார்வம் இன்னும் கலையாதவர்....

இறப்பு என்பது ஒரு முறைதான், அது இன்று வந்தால் என்ன? நாளை வந்தால் என்ன? என்று ஈழத்தமிழர்கள் கொத்து குண்டுகளுக்கு பலியாகி கொண்டிருக்கும் பொழுது சொன்னதை வைத்து தமிழர்கள் கருணாநிதி ஏதோ தன் உயிரை பற்றித்தான் சொல்கிறார் என்று நினைத்தனர். வயதான பின்னாவது உண்மையான தமிழுணர்வோடு பேசுகிறார்,என்று தமக்குள் கதைத்துக் கொண்டனர். ஆனால், அத்துனை பேரையும் ஏமாற்றும் விதமாக தான் சொன்ன வசனம் ஈழத்தமிழர்களின் உயிரைப்பற்றிதான் என்பதை புரியாமல் இருக்கும் தமிழர்களிடம் இப்பொழுதும் ஓட்டு வாங்க கிளம்பிவிட்டாரே? ஒரு மாத மருத்துவமனை இடுப்பு(நடிப்பு) சிகிச்சை முடிந்து.

என்ன தமிழ்நாட்டில் இவர் மட்டும் தான் நல்லவரா?

எதிர்கட்சித் தலைவர் செயலலிதா என்ன குறைந்தவரா? அவர் அரக்கிக்கு அரக்கி, வீராதி வீர, வீர பராக்கிரம சூரி? திராவிடத்தின் பரிணாம கோளாரில் எம்ஜிஆர் என்னும் நடிகரால் ஒரு பெரிய திராவிட கட்சியின் தலைவி, தன்னை பாப்பத்தி என்று அறிவித்துக் கொண்ட பின்பும் பார்ப்பன அடிவருடிகளின், கொள்கை அடிவருடிகளின், ஓட்டு பொறுக்கிகளின் தலைவி, பெரியார் பார்ப்பன ஆதிக்கத்துக்கு அடித்த ஆப்புக்கெல்லாம் ஆப்படிக்கும் விதமாக நாளும் பாப்பத்தி காலில் விழ திராவிடர்களை காத்தி நிற்க வைக்க பார்ப்பன சாதுர்யம். என ஆரியர்களின் இனசொறிக்கு(வெறிக்கு) அருமருந்து என கொள்கை பிளம்பாக இருக்கும் செயலலிதா.

இன்றும் தமிழ்நாட்டில் செல்வி என்னும் பட்டத்தோடு வலம் வரும் இவர், திமிரோடு சிறிது கூட மனிதாபிமானம் இல்லாமல், போர் நடக்கும் இடங்களில் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்ற அரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்தவர். ஒரு கண்டுபிடிப்போடு நிற்காமல் ,இங்கு தமிழுணர்வு சாதிக்கு பின்னாலும், பணத்திற்கு பின்னாலும் இலகுவாக ஒழிந்து கொள்ளும் என்ற பழைய இவருடைய கண்டுபிடிப்புக்கு உரிமம் வாங்கும் விதமாக ஓட்டுப்பொறுக்க ஈழத்தமிழர்களுக்கு பணம் பொறுக்கி, அதற்கு வைகோ, தா. பாண்டியன் போன்றவர்களை ஒத்து ஊத, பக்க மேளம் அடிக்க வைத்து ஒரு உண்ணாவிரத நாடகத்தையும் (பழைய நடிப்பு திறமை கைகொடுத்திருக்கும்!) நடத்தி முடித்திருக்கிறார்(டேக் எத்தனை?)

புயல் வருது விலகுங்க, அக்காவோட தம்பி வர்ராறு வழி விடுங்க!

அடுத்தது வைகைபுயல் வடிவேலு, மன்னிக்கவும் வைகோ. அவர்கள். இவர் தமிழின துரோகத்தை, தமிழின எதிரியோடு இருந்து கண்டுபிடிப்பார், பின்னர் கண்டிப்பார். என்னை ஜெயலலிதா கைது செய்ததில்லை,என்பது போல் பேசும் இவர், கைது செய்ததை மறக்க அது போன ஆட்சி, நான் சொல்றது இந்த மைனாரிட்டி கருணாநிதி ஆட்சி. கருணாநிதி ஆட்சியில கருணாநிதி அரசுதான் கைது செய்யும், ஜெயலலிதா கைது செய்ய முடியாது. என்பது ஏன் இந்த கொள்கை புயலுக்கு புரியவில்லை, என்பதுதான் நம்மால் கண்டுபிடிக்க முடியாதது.

அடுத்தது மருத்துவர் ஐயா தமிழ்க்குடி தாங்கி (இராமதாசு),

இவரது ஊடகம்தான் ஈழம் குறித்த செய்திகளை தமிழ்நாட்டில் பெருமளவில் உண்மையாக தெரிவித்தது. அதில் மிகவும் உரிமையோடும், கடமையோடு பாராட்டுகிற அதே வேளையில், எந்த அரசு தமிழக மக்களை கொன்று குருதி குடிக்க ஆவலோடு உதவி செய்து வருகிறதோ, அந்த அரசில் அமைச்சராக தமது மகனை அமைச்சராக வைத்துக் கொண்டு, யாரை எதிர்த்து போலியாக உருவாக்கப்பட்டுள்ள இந்தியா என்னும் நாட்டில் விரும்பியோ/ விரும்பாமலோ குடிமகனாக இருந்து கொண்டு யாருக்கு எதிராக போராடுகிறீர்கள். சோனியாவை எதிர்க்கமாட்டாமல், கலைஞரை மட்டும் எதிர்த்து கொண்டு, காங்கிரசை எதிர்க்காமல் இலங்கை தமிழரை காப்பாற்ற அமைப்பை யாருக்கு எதிராக உருவாக்கியிருக்கிறீர்கள்.

அதோடு, உங்கள் தமிழுணர்வு சாதியுணர்வை தமிழர்கள் மத்தியில் மழுங்கடிக்க உதவுமென்றால என்னை போன்ற இன்றைய தலை முறை இளைஞர்கள் கண்டிப்பாக குரல் கொடுப்போம். சாதி ஒழிப்பை இனியாவது, ஈழப்பிரச்சினைக்கு பிறகாவது, நீங்கள் சார்ந்ததாக இந்த சமூகம் கருதும் வன்னிய சமூகத்தாரிடம் கொண்டு செல்லும் வழியை விரைவில் சென்றடையுங்கள், இதை நீங்கள் செய்வீர்களேயானால் தமிழ் இனம் ஈழத்தில் மட்டுமல்ல, இங்கும் விடுதலை பெறும்.

தமிழக தலைவர்களே உங்களை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கோடு இதை நான் எழுதவில்லை,மாறாக நீங்கள் விமர்சிக்கும் படியாக அயோக்கியத்தனம் செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதனால் எழுதப்பட்டது.

நீங்கள் எடுக்கும் முன்னெடுப்பை தவறு கூறுவதற்காக அல்ல இது, தயவு கூர்ந்து தமிழக மக்களுக்காக சிந்திக்க தொடங்குங்கள். மைய அரசை மையப்படுத்தி சிந்திப்பதை தவிர்த்தாலே, தமிழர்களை மையப்படுத்தி சிந்தித்தாலே, மைய அரசு நம் காலில் விழும், ஆனால் நாம் கண்டிப்பாக காலில் விழும் நிலை வந்திருக்காது. மைய அரசில் அமைச்சர் பதவி கனவு கண்டிப்பாக நம் சுய உரிமைக்கான சிந்தனையை மழுங்கடித்திருக்கிறது.

தயவு கூர்ந்து, அரசியலிலிருந்து அரசியல் சாராமல் தமிழின எழுச்சிக்காக குரல் கொடுக்க முன்வாருங்கள், இங்கு விமர்சனத்தில் திருமா சேர்க்கப்படாதது, அவருடைய இன்றைய நிலைதான் காரணம் நாளை, இந்த அரசியல் காய்நகர்த்தலால் அவரும் வந்து சேரலாம்.

தமிழர்கள் யாரும் திமுகவையோ, அதிமுகவையோ விரும்பவில்லை, காங்கிரசை கணக்கிலேயே எடுத்துக் கொள்ள வில்லை. ஒரு மாற்றை தேடுகிறது ஒரு பாமர தமிழரின் உள்ளம். இவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களுக்கு மாத்தை தேடுகிறது, விளக்கு மாத்தை தேடுகிறது.

இனத்துரோகம், செய்பவர்கள் வருங்கால இளைஞர்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அரசியல்வாதிகளிடம் இந்த கோரிக்கை தவறானதுதான், இருந்தாலும்

நீங்கள் களைகளாக இருக்காதீர்கள், களைஎடுப்பவர்களாக மாறுங்கள், தமிழனின் வாழ்வுநிலை, சிந்திக்கும் திசை மாறும்.

தமிழர்களே! தேர்தலில் இவர்கள் எல்லோரையும்தான் விரட்டியடிக்க வேண்டும், ஆனால், விரட்டமுடியாதபடி வித்தியாசமாய், துரத்தும் முன்னே அவர்களே கைகோர்த்து ஓடத் தொடங்கியுள்ளனர். ஓடும் வரை ஓடட்டும், நாம் காத்திருந்து கண்டிப்பாக இந்த புல்லுருவிகளை ஓட வைப்போம்.