திங்கள், 30 ஏப்ரல், 2012

நாட்டை காக்கும் மயிரான்கள்...

தொழில்துறை மந்திரி பிரபுல் பட்டேல்.....அம்பானி ஏன் பணக்காரன் ஆனார்..எப்படி ஆனார்னு சிந்திச்சு பதில் கொடுங்க...இல்ல கொடுக்காம எக்கேடும் கெட்டு போங்க


மராத்தியர்களுக்காக போராடும் "பெருமகன்" பால்தாக்கரே குடும்பம்..ஒருவேளை அம்பானியை மராத்தியரென்று நம்பி விட்டதோ


மேலே சிவசேனையில் தலைவர் உத்தவர் தாக்கரேவின் மனைவி, கீழே அவர் மகன்.

பி.கு: பெருமகன் மட்டம் நம்மாளுகிட்ட கடன் வாங்குனதுதான்
Her son and head of Yuva Sena, Aditya Thackeray smiles at the camera.


நன்றி: என்.டி.டி.வி

சனி, 14 ஏப்ரல், 2012

அம்பேத்கரின் கொலை - ஆர்.எஸ்.எஸ் திட்டம்

இப்போது அம்பேத்கர் மீது ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு புதிய பக்தி வந்திருக்கிறது! நான் இந்துவாக பிறந்தாலும் ஒரு இந்துவாக சாக மாட்டேன் என்று பிரகடனப்படுத்திவிட்டு தனது தொண்டர்களுடன் இந்து மதத்திற்கு முழுக்கு போட்டுவிட்டு புத்தநெறியில் இணைந்தவர் டாக்டர் அம்பேத்கர்.

புத்தநெறியை கடுமையாக எதிர்த்தவர்கள் ஆர்.எஸ்எஸ் காரர்கள்

இந்து மதத்தின் சாதி அமைப்பை புத்தமதம் தகர்த்துவிட்டது; சாதி அமைப்பு தகர்ந்து போனதால்தான் வடகிழக்கு மாநிலங்களில் முஸ்லீம் மதம் செல்வாக்குப் பெற்றுவிட்டது.என்று கோல்வால்கள் தனது Bunch of Thoughts நூலில் குறிப்பிடுகிறார்.

இப்போது நான் இந்தியாவில் மிகவும் வெறுக்கப்படுகிற மனிதனாக இருக்கிறேன். என்னை இந்துக்களின் எதிரி என்கிறார்கள். இந்த நாட்டின் மிகப்பெரிய எதிரி என்கிறார்கள் என்று டாக்டர் அம்பேத்கர் அவ்ர்களே மனம் குமுறிச் சொன்னார். (ஆதாரம்: தனஞ்செய்கீர் எழுதிய Ambedkar, Life and Mission நூலில் Page 195) அப்படிப்பட்ட டாக்டர் அம்பேத்கர் அவர்களையே தீர்த்துக்கட்டும் ஒரு சதிமுயற்சி நடந்திருக்கிறது.

அம்பேத்கரின் நெருங்கிய நண்பரும் இந்திய குடியரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பெல்காமைச்சார்ந்த டி.ஏ. காட்டி (D.A,Katti ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறார். 2-2-1980 ல் பெங்களூரில் அம்பேத்கர் கல்லூரியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அவர் பேசினார். அவர் தெரிவித்த விவரம் இதுதான்:

வீர சவர்க்கரின் தம்பி பாபா சவர்க்கார் நாசிக் பீட ஜகத் குருவிடம் , தமக்கு 500 ரூபாய் பணம் தர வேண்டும் என்று கேட்டார். அந்த பணம் அம்பேத்கரின் சமையல்காரருக்கு லஞ்சமாகத்தர கேட்க்கப்பட்ட பணம்! அதாவது அம்பேத்கர் உணவில் விஷம் கலந்து கொடுத்து, சாகடிக்க அவரது சமையல்கார்ரிடம் ரூ.500 லஞ்சம் கொடுக்க பாபா சவர்க்கார் ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆனால், சங்கராச்சாரி இதற்கு பணம் தர மறுத்துவிட்டார். இத்தகவலை பிரபல மராத்திய எழுத்தாளர் நாடக ஆசிரியரான பி.கே. அட்ரே (P.K.Atre) அவர் நடத்திய மராத்தா என்ற மராத்திய நாளிதழில் வெளியிட்டார்.

காந்தியார் கொலையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த வீர சவார்க்காரின் தம்பி, பாபா சவார்க்கார் ஆர்.எஸ்.எஸ் ஐ துவக்கிய ஐவர் குழுவில் ஒருவரான சித்பவன் பார்ப்பனர் ஆவார்.

(தலித் வாய்ஸ் 16-04-1982 இதழில் இருந்து இத்தகவல் எடுக்கப்பட்டுள்ளது)

அதுமட்டுமல்ல கோயில் நுழைவுப் போராட்டம், நடத்தியபோது அம்பேத்காரை கொல்ல ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டது என்ற தகவலையும் டி.ஏ. காட்டி தனது உரையில் வெளியிட்டிருக்கிறார். இந்த சதிகாரர்கள் கூட்டம்தான் இன்றைக்கு அம்பேத்காருக்கு விழா எடுத்துக் கொண்டிருக்கிறது.

அன்றைக்கு காங்கிரஸ் கட்சியிலே முன்னணியிலே இருந்த பல தேசியத் தலைவர்களின் படங்களை எல்லாம் தங்கள் பூட்ஸ்களுக்குள்ளே மறைத்து வைத்துக் கொண்டு அந்தப் படங்களை அவ்வப்போது துப்பாக்கியால் சுட்டு இவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள் என்ற தகவலை காந்தியாரின் உதவியாளராக இருந்து காந்தியார் வாழ்க்கை சரித்திரத்தை எழுதிய பியாரிலால் தனது நூலில் குறிப்பிடுகிறார்!

அந்தக் காலங்களில் மட்டுமல்ல; இந்தக் காலத்திலும் கூட இவர்களின் தீர்த்துக் கட்டும் சதிவேலை முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

நூல்: ஆர்.எஸ்.எஸ் ஒரு அபாயம்- விடுதலை ராஜேந்திரன்


வெள்ளி, 9 மார்ச், 2012

என் பள்ளி நினைவுகள் - 1


மும்பை தமிழ் மாணவர்களுக்கு சரியான பள்ளி என்று ஒன்றை குறிப்பிட வேண்டுமென்றால், அது கண்டிப்பாக தாராவி 90 அடி சாலையில் அமைந்துள்ள “காமரசர் உயர்நிலைப்பள்ளி” தான். 1 ஆம் வகுப்பு முதல் 4 ஆம் வகுப்பு தமிழ்வழிக் கல்வியும், 5 ஆம் வகுப்பு ஆங்கிலவழிக் கல்வியும் அங்கே கற்பிக்க படுகிறது. சரியான வழிகாட்டுதல் உள்ள மாணவர்கள், தமிழ் உள்பட நான்கு மொழிகளை சரளமாக பேசக் கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொடுக்கும் பெரும்பாலான ஆசிரியர்கள் நாகர்கோவில் பகுதியை சார்ந்தவர்கள் ஆகையால் குழந்தைகளுக்கு கூட நாகர்கோவில் வட்டார வழக்கு தொற்றிக் கொள்ளும், ஆங்கிலவழிக் கல்வியும் கூட நாகர்கோவில் வட்டார வழக்கில்தான் எமக்கு கற்பிக்க படும். ஆங்கிலத்தையும், பிற பாடங்களையும் எழுத்து வடிவிலோ, மனப்பாடம் செய்யும் பொழுதிலோ ஆங்கிலத்தில்தான் நாங்கள் மேற்கொள்ள இயலும் என்றாலும், நாங்கள் பாடங்களை புரிந்து கொண்டது என்னவோ தமிழில்தான்.


ஆசிரியர்களின் பேச்சு வழக்கு சில வேளைகளில் என்னை போன்ற திருநெல்வேலி வட்டார மாணவர்களின் வீட்டில் கூட எதிர்ப்பை ஈட்டும்.

“எம்மா அவிய வந்துட்டாவலா” என்று வீட்டில் பேசினால், ஏய் என்ன பேச்சு பேசுற, வாந்தவிய, போனாவியன்னு....அவிய, பொறியன்னுகிட்டு...ஒழுங்கா பேசுல” என்று திட்டு விழும்.


“எலா படிச்சுட்டு வந்தியாலா”, “எலா நீ உருப்படவே மாட்டாலா”, எலா சோவாரி “நீயெல்லாம் ஏம்லா பள்ளிக்கூடத்துக்கு வாரலா” போன்றுதான் நாங்கள் அடிக்கடி ஆசிரியர்களிடம் வசைகளை வாங்கிக் கொள்வோம். சில ஆசிரியர்கள் படிக்காத மாணவர்களிடத்தில் கொஞ்சம் கூடுதலாக சினம் கொள்ளும் நேரத்தில், “ஏலா நாப்பெய உள்ளா”(நாய் பய புள்ள) என்றெல்லாம் கூட திட்டுவார்கள். அப்படியான ஆசிரியர்களில் இன்றும் என்னுடைய பள்ளி தோழர்கள் சந்திக்கும் பொழுதில் இன்றும் நினைவிலிருப்பவர்களில் முக்கியமான ஆசிரியர் “முத்துவேல்” எமது கணக்கு ஆசிரியர். நான் தான் வகுப்பின் லீடர் ஆகையால்.....பள்ளிக்கு மாணவர்களை அடிக்கும் பிரம்பு கம்பு, கரும்பலகையில் எழுதப்படுவதை அழிக்கும் டஸ்டர் போன்றவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்று பள்ளிக்கு மீண்டும் மறுநாள் எடுத்து வரும் வேலை எனது. பல நாட்களில் பள்ளிக்கு கிளம்பும் அவசரத்தில் மறந்து வந்துவிடுவேன்..


“எலா, நீயெல்லாம் ஒரு லீடர், சோப்ளாங்கி, சோப்ளாங்கி....வேற எந்த க்ளாஸ்லயாவது போய் ஸ்டிக் வாங்கிட்டு வாலா.....ஏய் லீடர் go and get the stick i say”


என்று வகுப்பிலிருந்து விரட்டி விடுவார். நானும் பள்ளி வளாகம் முழுக்க சுற்றி விட்டு அவரது வகுப்பு நேரம் முடியும் நேரத்திற்கு எதையாவது குச்சியை பொறுக்கிக் கொண்டு வருவேன்...அவரும் ரெண்டு மாணவரை அடித்து விட்டு சென்று விடுவார்..


அப்படி என் பள்ளி தோழர்கள் இன்றும் சந்தித்தும் நினைவூட்டிச் சிரித்துக் கொள்ளும் இரண்டு சம்பவங்களை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.


நான் அப்பொழுது 9 ஆம் வகுப்பு படித்து வந்தேன். காலை 7 மணிக்கே வகுப்பு, முதல் வகுப்பே முத்துவேல் சாருடைய வகுப்புதான்.


வகுப்பில் நுழைந்தவுடன் சேட்டை செய்து கொண்டிருந்த நாங்கள் எல்லோரும் அவர், அவர் இருக்கைக்கு சென்றோம். ஆசிரியர் தன்னுடைய இருக்கைக்கு அருகே இருந்த மேசையில் சாய்ந்து கொண்டு நின்றார். மொத்த வகுப்பும் அமைதியாக

“தோஸ் ஹூ ஹவ் நாட் டன் த ஹோம் வர்க் ஸ்டாண்ட் அப்” என்றார்.

(those who have not done the home work, stand up)

வகுப்பில் யாருமே எழவில்லை.

மீண்டும்

“தோஸ் ஹூ ஹவ் நாட் டன் த ஹோம் வர்க் ஸ்டாண்ட் அப்” என்றார்.

மொத்த வகுப்பில் யாருமே எழல்லை.

முதல் வரிசையில் அமர்ந்திருந்த “முத்து” என்ற மாணவனின் நோட்டை கையில் தூக்கிக் கொண்டு “ஹோம் வர்க் எங்கல” என்றார்.

அவனும் புன்முறுவலுடன் “ சார் நோட்,,,,” என்று அவர் கையிலிருந்த நோட்டை வாங்கி....ஏதோ அவன் செய்துவிட்டு வந்த வீட்டுப்பாடம் நோட்டிலிருந்து காணாமல் போய் விட்டது போல நடித்தான்.

கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.

மீண்டும், “தோஸ் ஹூ ஹவ் நாட் டன் த ஹோம் வர்க் ஸ்டாண்ட் அப்” என்றார்.

மொத்த வகுப்பும் எழுந்து நின்றது.

நானும், வசந்த மேரி என்ற பெண்ணும் மட்டும் எழ வில்லை. ஏனென்றால், நாங்கள் இருவரும் லீடர்...எங்களை பெரும்பாலும் ஆசிரியர்கள் சோதிப்பதில்லை என்ற திமிரில் எழ வில்லை. ஆனால், நாங்கள் இருவருமே வீட்டுப்பாடம் அன்று செய்யவில்லை என்பது வேறு செய்தி.

என்னை நோக்கி “ ஏய், லீடர் ஸ்டிக் எங்கலே, where is the stick” என்றார்.

நான் பம்மி, பம்மி எழுந்தேன்......

“சோப்ளாங்கி, சோப்ளாங்கி நீயெல்லாம் ஒரு லீடர்,,,,போலே போய் ஸ்டிக் வாங்கிட்டு வா”


நான் நேரடியாக தலைமை ஆசிரியரின் அறைக்கு சென்று அவரிடம் கெஞ்சி குச்சியை வாங்கி வந்தேன்.

கம்பை வாங்கியவருக்கு என்னை நினைவு வந்திருக்குமோ தெரியாது.

ஆனால், கண்டிப்பாக அந்த நிகழ்வுதான் நினைவு வந்திருக்கும்.

(சும்மா ஒரு Flash back னு நினைச்சுக்கோங்க.....)

ஒரு நாள் முத்துவேல் சார், வகுப்பில் கணக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார், கரும்பலகையில் மும்முரமாக sin, cos, tan, cot, sec, cosec என்று எழுதிக் கொண்டிருந்தார். கடைசி இருக்கையில் இருந்த ஒரு மாணவன் எழுந்து, “ஏலே முத்து” என்றான். ஆசிரியரும், முதல் இருக்கையில் இருந்த முத்து இருவரும் திரும்பினர்.

ஆசிரியர், “என்னலே” என்றார்

“சார், பென்சில் சார்” என்றான் கடைசி இருக்கை மாணவன்.

மீண்டும் அந்த துடுக்கு பையன் அதே போல செய்ய, ஆசிரியர் திரும்பி “ இப்ப என்னலே, என்க... ”ரப்பர் சார்” என்றான். இவனுக்கு முத்துனு பெயர் இருக்கிறதுனாலதானே இந்த பயலுக நம்மை பெயர் சொல்லி அழைத்து எகத்தாளம் செய்கிறார்கள் என்று அவன் மேல் வஞ்சம் வைத்தாரோ என்னவோ...

(Flash Back முடிஞ்சது)

ஸ்டிக்கை கையில் வைத்திருந்தவர், முத்துவை அடித்து, அடித்தே....

முதல் வரிசையில் இருந்து கடைசி இருக்கை வரை கொண்டு வந்துவிட்டார்.

அவனும் எவ்ளோதான் அடி வாங்குவான்....

“சார், என்ன சார் அடிச்சிட்டே இருக்கீங்க......சும்மா....” என கம்பை பிடுங்கி வீசி எறிந்தான்.

ஆசிரியருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை... அப்படியே நடந்து சென்று...தம் மேசையில் சாய்ந்து கொண்டு.....

“ Students எல்லாம் ரவுடிகளாயிட்டானுங்க...ஹோம் வர்க் செய்யாம வந்ததுக்கு சார் அடிச்சா...சார் திருப்பி அடிப்பானுவ....படிங்க....இல்லன்னா படிக்காம நாசமா போங்க” என்று சொல்லி விட்டு வகுப்பை விட்டு வெளியேறிவிட்டார்

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

மலத்திற்கு சமானம் இந்நாட்டின் விடுதலை...

நல்லதொரு இரவுப்பொழுது, மும்பையின் கொட்டும் மழை...நாங்கள் அதை பேய் மழை என்று கூட கூறுவோம்..பல வேளைகளில் மழையின் பொழுதே மின்சாரம் துண்டிக்கப்படும்....அந்த குளிரில், வழக்கமான அச்சமூட்டும் பேய்களின் குரலும் சில நேரங்களில் இடிவழியாக கேட்கும்...நான் காதை பொத்திக் கொண்டு, போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு உறங்க முயற்சி செய்வேன்...சிறிய அறையில் நான் என் இரு தங்கைகள்,என் தகப்பன், தாய் என ஐந்து பேர்....கிராமத்தின் சமையற்கட்டு அளவு கூட இல்லாத வீடு...நானும் தங்கைகளும் அருகருகே பேய்க்கு பயந்து, காலிலிருந்து போர்வை விலகிவிடாதபடி...நெருக்கி படுத்துக் கொள்வோம். போர்வையை வைத்து உடலை மூடிக் கொண்டால் பேய் வராது என்றொரு நம்பிக்கை எனக்கும், என் தங்கைகளுக்கும்..



தலையில் தீச்சட்டியோடு ஒரு பேய், கருப்புடை அணிந்திருக்கிறது( அப்படித்தானே படத்தில காண்பிச்சானுங்க)...என்னை துரத்திக் கொண்டே ஓடிவருகிறது, நானும் என்னால் இயன்ற அளவு ஓடிக் கொண்டேயிருந்தேன்...ஒரு கட்டத்தில் தனது மந்திர சக்தியால் நேரடியாக தன் கையை நீட்டி என் தோளை தொட்டே விட்டது. ஆ..ஆ..என்று நான் அலறி எழ..."என்னடா எந்திரி..எந்திரி...வீட்டுக்குள்ளே தண்ணி வந்துடுச்சு.."தூக்கம் கண்ணை சுழற்றிக் கொண்டு நின்றது.தண்ணீர் காலை நனைத்த சுகத்தில் மீண்டும் நான் தூங்க சென்றேன்...வீட்டிற்குள் உறங்கும் வேளையில் மூலையில் ஒதுக்கி வைக்கும் கட்டிலை விரித்துவிட்டு..என் அப்பனும், ஆத்தாளும்...என்னையும்,என் தங்கைகளையும் கட்டிலில் அமரவைத்து உறங்கச் சொன்னார்கள்...அப்பொழுதுதான் மெல்ல உறக்கம் கலைந்தது..வீடெல்லாம் மலம்....மிதக்கும் வெளியாக மழைநீர் கலந்த சாக்கடை நீர்...கடந்த சில ஆண்டுகள் முன்புவரை...நாங்கள் வசித்த சாலில்(தெருவில்) இதே நிலையில்...இரவெல்லாம் விழித்து, உறங்கி, விழித்து, உறங்கி நான் விழித்திருக்க...தண்ணீர் வந்து வீட்டிற்குள் கொட்ட கொட்ட இறைத்து இறைத்து வெளியே தண்ணீரை வெளியேற்ற முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்...அள்ளி தெளித்த தண்ணீர் கண்டிப்பாக சில, பல மலத்துளிகளை அவர்தம் உடலில் தெளித்திருக்கும்..


இந்த அனுபவத்தை என்றுமே அனுபவத்திராத சோனியா காந்தி, மன்மோகன் சிங், ஜெயா, கருணா உள்ளிட்ட மேன்மைமிகு தலைவர்கள்(த்தூ.............) எனக்கு வாழ்த்து செய்தி சொல்லுதுங்க...நானும் வெட்கங்கெட்டத்தனமான மலத்திற்கு சமானமான இந்நாட்டின் விடுதலையை கொண்டாடணுமாம்..

===================================================================

இன்னும் ஒடுக்கப்பட்ட சகோதரர்களை மலமள்ள 100% இட ஒதுக்கீடு செய்து வைத்திருக்கும் இந்த கேடுகெட்ட இந்தியாவின் விடுதலையை மலத்திற்கு ஒப்பிடாமல் எதோடு ஒப்பிடுவது..