செவ்வாய், 11 நவம்பர், 2008

ராசபக்சே உருவப்பட எரிப்பு

திருவள்ளுவர் நற்பணி இயக்கத்தின் தலைமையில் மும்பையில் தாராவி பகுதியிலுள்ள தாத்தா இரட்டைமலை சீனிவாசன் சதுக்கத்தில் ராசபக்சே உருவப்பட எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

இதன் விபரம் வருமாறு,

இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்தும் , அப்பாவி தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து தமிழகத்தில் எழுந்த இன உணர்வலை மும்பை தமிழர்களையும் தொற்றிக் கொண்டது. இத்தருணத்தில் தங்களுடையஎதிர்ப்பை வெளிப்படுத்தும் படியாக இன வெறியன் ராசபக்சே உருவப்படஎரிப்பு போராட்டம் தமிழ் ஆர்வலர்களால் நடத்தப்பட்டது.இந்நிகழ்வு ஞாயிற்று கிழமை(09/11/2008) அன்று 9:30 மணியளவில் நடந்தது

 இப்போராட்டத்தில் திருவள்ளுவர் நற்பணி இயக்கம், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள்,தமிழ் காப்போம் அமைப்பு, தென்னிந்திய முஸ்லிம் சங்கம், மும்பை தமிழ் ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.








1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

வணக்கம் வாழ்த்துக்கள் நண்பரே. தமிழுணர்வு பெரியாரிய நிகழ்ச்சிகளை எமது மின்னஞ்சலுக்கும் அனுப்பவும்.

நன்றி

periyaarpaasarai@gmail.com