ஈ.பி.டி.பி.யின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா- இலங்கையில் இப்போது சமூக நலத்துறை அமைச்சர் 1986-ல் சென்னையில் இவர் தங்கியிருந்தபோது, பொது மக்களிடம் ஏற்பட்ட தகராறில் இவர் துப்பாக்கியால் சுட்டபோது ஒருவர் இறந்தார். நான்கு அப்பாவி பொது மக்கள் காயமடைந்தனர். சென்னை சூழைமேட்டில் இந்த சம்பவம் நட்ந்தது. அப்போது அவர் மீதும், அவரது ஆதரவாளர்கள் 9 பேர் மீதும் தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்தது. வழக்கு இப்போதும் நிலுவையில் இருக்கிறது. ஆனாலும் இந்திய உளவு நிறுவனத்தின் முழு ஆதரவோடு செயல்பட்டு வருகிறார்.
இதே டக்ளஸ்தான் சென்னையில் 10 வயது பையனைக் கடத்திப் போய் ரூ.7லட்சம் பணம் கேட்டார் என்று ஒரு வழக்கு கீழ்பாக்கம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது பின்னர் இவர் 1989-ல் சென்னையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஓராண்டு கழித்து விடுதலை செய்யப்பட்டார். இவரை விடுதலை செய்ய வைத்து , அதன் பிறகு இந்திய இராணுவ விமானத்தில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட வைத்தது- இந்திய உளவு நிறுவனமாகிய ‘ரா’ தான் என்று ‘டெகல்கா’ வார ஏடு(ஜூலை 1,2006)எழுதியுள்ளது(Sources say,it ‘R&AW’ which Air lifted Deavanda to Jaffna on an Indian army helicopter to pit him against LTTE)
நன்றி :
பக்கம்:58
ஈழப்பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி
ஆசிரியர்: விடுதலை க.இராசேந்திரன்.
முதல் பதிப்பு:2007
1 கருத்து:
தோழர் இதையும் சேர்த்து கொள்ளுங்கள்
http://www.tehelka.com/story_main18.asp?filename=Ne070106Militant_SR.asp#
கருத்துரையிடுக