இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: முட்கொம்பன் பகுதியில் நேற்று புதன்கிழமை காலை முதல் மாலை வரை சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் 20 படையினர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர். இதேநேரம், அக்கராயன் கோணாவில் பகுதியில் முன்நகர்வை மேற்கொண்ட சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று முற்பகல் 10:00 மணிக்கு செறிவான எறிகணை மற்றும் கனரக சூட்டாதரவுடன் படையினர் முன்நகர்வுத் தாக்குதலை நடத்தினர். இம்முன்நகர்வுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் தீவிரமாக நடத்தினர். இதில் 12 படையினர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்தனர். கடந்த ஏழு நாட்களில் இப்பகுதியில் நடைபெற்ற மூன்றாவது பெரும்மோதல் இது என்று விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர். http://www.puthinam.com/full.php?22ImUcc3oV24dB1e202AOU4d3YcU0ag6D2e2HMC3b34Aoe
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக