செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

காரல் மார்க்ஸின் ஒழுக்கத்தை ஆய்வு செய்வோருக்காக…..


லென்ஹென் டெமூத் என்ற பெண்ணோடு மார்க்ஸ் தொடர்ந்து அவதூறு செய்யப்படுகிறார்...பொதுவுடமை குறித்து பேசும்பொழுது, மார்க்ஸ் மட்டும் யோக்கியரா என்று கேட்கிறார்கள்.....
மார்க்ஸ் குறித்தோ ஹெலன் டெமூத் குறித்தோ ஜென்னியைவிட வேறு எவரின் சான்றிதழ் தேவை..

1861 மார்ச் 11 அன்று லூயிசா வெய்டெமையாருக்கு ஜென்னி எழுதிய கடிதம் இது, இதை வாசித்தால் டெமுத் மீது ஜென்னிக்கு இருந்த அன்பும், நம்பிக்கையும் தெளிவாக புலப்படும்.

குடும்ப பணிகளைப் பொறுத்தவரையில் ஹெலென்(டெமுத்) உறுதியாகவும், மனப்பூர்வமாகவும் என்றும் போலவே பணியாற்றி வருகிறாள். அவளைப் பற்றி உங்கள் கணவரிடம் கேளுங்கள். எனக்கு அவள் எத்தகைய பொக்கிஷமாக இருக்கிறாள் என்பது பற்றி அவர் கூறுவார். பதினாறு ஆண்டுகளாக வாழ்விலும், தாழ்விலும் அவள் எங்களுடன் இருந்து வருகிறாள்.”

இவரோடுதான் மார்க்ஸை இணைத்து பேசுகிறார்கள். அதற்கு சுட்டிக்காட்டப்படும் மேற்கோள்களில் ஒன்று மார்க்ஸின் கடிதம், மற்றொன்று ஜென்னியின் கடிதம்.

மார்க்ஸின் அந்த கடிதம் மார்ச் மாதம் 31ம் தேதியன்று எங்கெல்சுக்கு எழுதப்பட்டது. அதில் ‘ஒரு மர்மம்என்று அவர் குறிப்பிடுகிறார். அது குறித்து விரிவாக எழுதுவதாக கூறியிருந்தாலும், பின்னர் அது குறித்து எழுதவில்லை. ஏப்ரல் 20 முதல் 26 வரை தனது அருமை நண்பருடன் அவர் இருந்தார்.

ஜென்னியின் கடிதமாக மேற்கோள் காட்டப்படும் கடிதம் கீழ்க்கண்டவாறு பேசுகிறது

1851 கோடைக்கால துவக்கத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. எங்களது தொல்லைகளும், பிறருடைய தொல்லைகளும் அதிகரிக்க இது காரணமாக இருந்த போதிலும் இதை பற்றி இங்கு விபரமாக எடுத்துக் கூறவிரும்பவில்லை.”

1851 இல் எழுதப்பட்ட ஜென்னியின் கடிதம் டெமுத் மீதான கோபம் அல்லது மார்க்ஸ் மீதான சந்தேகத்தில் எழுதப்பட்டிருந்தால், 1861 இல் எழுதப்பட்ட கடிதம் டெமுத் மீது அத்தனை அன்பை வெளிப்படுத்தியிருக்குமா?

1851 இல் வீட்டில் ”ஒரு நிகழ்ச்சிஎன்று ஜென்னி குறிப்பிடுகிறார், அதே ஆண்டு மார்ச் மாதம் மார்க்ஸ் ஒரு கடிதத்தில் “மர்மம்என்று குறிப்பிடுகிறார்.

ஆனால், 1848 இல் மார்க்ஸ் ஜென்னி குறித்து சொன்னவைதான் கீழ்க்கண்டவை
ஜென்னி செய்த ஒரே குற்றம் பிரஷ்யாவின் ஒரு பிரபு குடும்பத்தில் பிறந்திருந்தும், தனது கணவனுடைய ஜனநாயக சிந்தனைகளை பகிர்ந்து கொண்டிருந்ததுதான்.”

ஜென்னியின் பிரியத்துக்குரியவராகவே இறுதிவரை ஹெலன் லெமூட் இருந்திருக்கிறார்...சுதந்திர காதல் போன்ற விவாதங்கள் போன்றவை ஜென்னிக்கு அதிர்ச்சி தரும் கருத்துக்களாகவே இருந்திருக்கின்றன..அப்படியிருக்க, லெமூட்டின் மீது சந்தேகம் இருந்திருந்தால் கடைசிவரை லெமூட்டின் மீது அன்பு கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறதா?

அதேவேளையில், ஜென்னி சிந்திக்க தெரியாத பெண்ணும் அல்ல...

மார்க்ஸின் எழுத்துகளை பிரதி எடுப்பதில் ஜென்னியும், லெமூட்டும் இணைந்தே பணி புரிந்திருக்கின்றனர்..

மார்க்ஸின் எழுத்துக்களில் ஏங்கல்ஸ் போலவே ஜென்னிக்கும், லெமூட்டுக்கும் பகுதி அளவில் பங்கு இருக்கவே செய்திருக்கிறது. அவர்களின் பங்கை அங்கீகரிக்காமல் நினைவு கூராமல் கடந்து போகும் போக்கு இருக்குமாயின், அவர்களின் பங்கையும் இணைத்து போற்ற வேண்டியது நமது கடமை அவ்வளவே...

லெமூட்டை தன் குடும்பத்தில் ஒருவராகவே பார்த்திருக்கிறார் ஜென்னி..ஜென்னியின் கோரிக்கையின் பெயரில் அவரின் குடும்ப கல்லறையில்தான் லெமூட்டின் உடல் புதைக்கப்பட்டிருக்கிறது..

மார்க்ஸின் மரணத்திற்கு பிறகு தனது மரணம் ஏங்கல்ஸின் பணிகளில் பங்கெடுத்திருக்கிறார் லெமூட்..ஒருவகையில் மார்க்ஸ், ஏங்கல்ஸின் பணிகளில் லெமூட்டின் பங்கும் இருந்திருக்கிறது.. ஏங்கல்ஸோடு லெமூட்டை இணைத்து பேசியவர்களும் இருந்திருக்கிறார்கள்...
தன்னுடைய குழந்தையின் தந்தை யாரென்று அறிவிக்க வேண்டியது லெமூட்தானேயன்றி...கட்டாயம் அறிவித்தேயாக வேண்டும் என்று கோருவது..ஆதிக்கமல்லாமல் வேறென்ன?
லெமூட்டின் குழந்தைக்கு யார் தந்தை என்ற ஆராய்ச்சியும்...தேவையற்ற ஒன்றென்றே தோன்றுகிறது...

அறிவிப்பதும், அறிவிக்காமல் இருப்பதும்...அது அந்த பெண்ணின் உரிமை,
=======================================
மார்க்ஸ் புனிதமானவர் என்ற பிம்பத்தை கட்டமைப்பதோ அல்லது காதலுக்கு புனிதம் கற்பிப்பதற்காகவோ இதை எழுதவில்லை. ஏற்கனவே அறிவிலேயே பிறந்து, அறிவிலேயே குளித்து, அறிவிலேயே உண்டு, உறங்கும் அறிவுஜீவிகள் இது குறித்து பேசியிருப்பார்கள். எழுதியிருப்பார்கள். அறிவார்ந்தோர் நமக்கு கொஞ்சம் அறிவு பிச்சையிட்டு, நான் தவறு செய்திருப்பின், தேவையற்று தொகுத்திருப்பின் எனக்கு கற்று கொடுங்கள் கற்றுக் கொள்கிறேன்..

இதை மார்க்ஸ் - அருணன் அவரது நூலை வாசித்தபடியே, இணையத்திலும் சில தரவுகளை சரிபார்த்து எழுதினேன்...மேலும் தரவுகளை படித்து முடிந்தால் Update செய்து கொள்கிறேன்...கற்றுக் கொள்கிறேன் நன்றி....

தொடர்புடைய இணைப்புகள்:
http://de.wikipedia.org/wiki/Helene_Demuth



ஹெலன் டெமூத்:மேலும் ஆதாரங்கள்



கருத்துகள் இல்லை: