“மணியம்மை ஏதோ சின்னப்பெண்
அல்ல. 31 வயது ஆகிறது. திருமணத்தை வெறுத்து இயக்கத் தொண்டில் ஈடுபட்டு வருகிற பெண்.
அதற்கு 14 வயதில் திருமணம் நடந்திருந்தால், இப்போது பேரக்குழந்தைகள்கூட இருந்திருக்கலாம்.
மணியம்மை திருமணம் செய்து கொள்ள இஷ்டப்படாததை அவர் தந்தையாரே ஏற்றுக்கொண்டு, திருமணம்
செய்யாமல் வைத்திருந்தார்.
ஆகவே, இந்தத் திருமணம், பொருத்தமற்றதோ, அல்லது மணியம்மையை ஏமாற்றும் திருமணமோ அல்ல. மணியம்மை உள்பட யாருக்கும் எந்தவிதமான நிர்ப்பந்தமோ, கஷ்டமோ, துன்பமோ கொடுக்கப்பட்ட திருமணமும் அல்ல. இயக்கத்துக்காக, முன்பெல்லாம் அலைந்ததுபோல் இப்போது என்னால் அலைய உடல் நலம் இடம் கொடுக்கவில்லை. ”
“என்னைப்போல பொறுப்பு எடுத்துக்கொள்ள தக்க ஆள் யார் இருக்கிறார்கள்? எனக்கு நம்பிக்கை உள்ளவர் கிடைக்கவில்லை. ஆதலால் எனக்கு ஒரு வாரிசு ஏற்படுத்தி விட்டுப் போகவேண்டும். இந்தத் திருமணம், சட்டப்படிக்கான பெயரே தவிர, காரியப்படி, எனக்கு வாரிசுதான்.”
பெரியார் ஏன் மணியம்மையை திருமணம் முடித்தார்? அவர் விருப்பத்தின் பெயரில் முடித்தார், தேவை கருதி முடித்தார். அந்த தேவை என்ன என்பதை மேற்கண்ட பெரியாரின் வரிகளே கூறும். அது வெறும் பாலியல் தேவை என்பதாக புரிந்து கொள்பவன், அன்பு என்பது என்னவென்று அறியாத முட்டாளத்தான் இருக்க முடியும்.
மூத்திர சட்டியை தூக்கி சுமந்து கொண்டு இந்த சமூகத்தின் நன்மை கருதி உழைத்த தந்தை பெரியாரை இன்னும் கூடுதல் அக்கறையோடு கவனித்துக் கொண்ட மணியம்மையை பெரியார் தம் வாரிசாக அறிவித்துக் கொள்ள அன்று இருந்த ஒரே வாய்ப்பாக கையெழுத்திட்டு திருமணம் என்னும் ஏற்பாட்டை செய்து கொண்டார்.
மேலும், இந்த விசயத்தில் சந்தேக அரிப்பெடுத்து திரிபவர்கள் தயவு கூர்ந்து பெரியார் – மணியம்மை திருமணம் தொடர்பாக வந்துள்ள நூலை வாங்கி படியுங்கள்.
இன்று குமுதம் இதழ் வழக்கமான தனது ஊடக தருமத்தை அதாவது சமூகத்தில் நிலவும் ஊடக தருமத்தை நிலைநாட்டும் பொருட்டு ஒரு அட்டைப்படத்தை வெளியிட்டிருக்கிறது.
குஷ்பூவையும் மணியம்மையையும் ஒப்பிட்டு ஒரு அட்டைப்படம். இந்த வக்கிரபுத்தியின் ஊடாக இரண்டு விசயத்தை சாதித்திருக்கிறது ஒன்று மணியம்மையை இழிவுப்படுத்தியிருப்பது, இன்னொன்று குஷ்பூவை இழிவுப்படுத்தியிருப்பது.
மணியம்மை தன்னுடைய இள வயது முதலே இயக்கத்திற்காக தன்னை ஒப்புக் கொடுத்தவர், தன்னுடைய அடிப்படை சுக துக்கங்களை இழந்து வாழ்ந்தவர். குஷ்பூவை பொறுத்தவரை சமூக வாழ்க்கைக்காக தன்னை அர்பணித்துக் கொண்டவரல்ல. இந்த ஒப்பீட்டை செய்யும் அயோக்கியதனமான எண்ணம் ஒருவேளை இந்துமத கடவுள் படங்கள் பொறித்த சேலை அணிந்தாரென்ற காரணத்திற்காகவும் இருக்கலாம்.
ஆனால், குஷ்பூவிற்கு இப்பொழுதுதான் சமூக அக்கறை வந்தது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார். குஷ்பூவின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படியிருப்பினும் அது குறித்து நமக்கு கவலையில்லை. அது தேவையுமில்லாத ஒன்று. அவர் நமக்கு அறியப்பட்டது எல்லாம் ஒரு நடிகை என்ற முறையிலும், சமீப காலங்களில் திமுகவின் பேச்சாளர் என்ற முறையிலும்தான். அந்த எல்லையை தாண்டிய விமர்சனம் என்பது அயோக்கியத்தனமானது.
குஷ்பூ இன்று ட்வீட்டரில், இந்தியாவில் பெண்களுக்கு ஒரு மதிப்பான இடத்தை உருவாக்கி கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக கூறியிருக்கிறார், இத்தனை ஆண்டுகால கலை உலக வாழ்க்கையில் அப்படியான பாத்திரங்கள் எதையும் திரை உலகம் அவருக்கு வழங்கியதுமில்லை, அவரும் பெண்ணின் மதிப்பை உறுதிப்படுத்தும் கதாபாத்திரத்தைதான் ஏற்று நடிப்பேன் என்று கட்டாயமாக தன் கலை வாழ்க்கையில் ஈடுபடவில்லை.
இத்தனை ஆண்டுகாலமாக இல்லாமல் இன்றென்ன அக்கறை? என்ற தொனியில் இந்த கேள்வியை கேட்கவில்லை, இத்தனை ஆண்டுகால செயல்பாடுகளை சுயவிமர்சனம் செய்து கொண்டு, தன்னையும் சுயவிமர்சனம் செய்து கொண்டாலொழிய அவரின் “ இந்தியாவில் பெண்களுக்கான சரியான இடமென்பதை உறுதிப்படுத்தும் போராட்டம்.” நியாயமானதாக இருக்காது. அதோடு, இன்றும், திரை உலகம் பெண்களை சித்தரிக்கும் பாங்கு குறித்தும் அவருக்கு ஏதும் கண்டனங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கருணாநிதியோடு குஷ்பூவை ஜோடி சேர்க்கும் குமுதம் பத்திரிக்கைக்கு எதற்கு இந்த ……வேலை? குஷ்பூவை விமர்சிக்கும் அறிவுநாணயமுள்ள பிரச்சினை ஏதுமில்லையா? இதுதானா பிரச்சினை, பாலியல் ரீதியாக பெண்ணை தரம்தாழ்த்தி அவதூறு செய்வதுதான் தொடர்ச்சியாக இந்த சமூகம் கையாண்டு வரும் ஆயுதம். குஷ்பூவே கூறுவது போல அவர் ஒரு தாய், மனைவி.
அவரது சுற்றத்திற்கும், அவருக்கும் ஏற்படுத்தப்படும் மன உளைச்சல் குறித்து இந்த கழிசடை ஊடகத்திற்குத்தான் அக்கறையில்லையென்றால், இந்த பிரச்சினையில் குளிர்காய, இதோ வாய்ப்பென்று ஜல்லியடிக்க கிளம்பியிருப்பவர்கள், என்ன மசிரு விடுதலையை சாத்தியப்படுத்த போகிறார்களோ தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக